Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உன் உயிரென நான் இருப்பேன்-6

உன் உயிரென நான் இருப்பேன்- 6

ஆரவ் ஆதித்யன் அபிநவ் ஆதித்யனின் ஒரே உறவு. அவனது அருமை தம்பி. லண்டனில் எம்.பி.பி.எஸ்(MBBS) முடித்து விட்டு நாளை நாடு திரும்பவுள்ளான். படிப்பில் கெட்டிக்காரன் அதே சமயம் குறும்புக்காரனும் கூட. அபிநவ்வின் குணத்துக்கு முற்றிலும் மாறுபட்டவன் என்றாலும் இருவருக்கும் உள்ளே ஒரே ஒற்றுமை பிடிவாதம். உயர் தரத்தில் சிறந்த முறையில் சித்தியடைந்தவன் இலங்கையிலேயே மருத்துவக் கல்வியை தொடர இருந்தவனை பிடிவாதமாக லண்டனுக்கு அனுப்பி வைத்தான் அபிநவ். அண்ணனின் பிடிவாதம் ஒன்றும் இவன் அறியாததல்ல. அரை மனதாகவே அங்கு சென்றவனை கடந்த 4 வருடங்களாக வெக்கேஷனுக்கு கூட வர விடாமல் தடுத்து வைத்திருந்தான்.

படிப்பை முடித்தவனுக்கு அங்கு இருப்புக் கொள்ளவில்லை. அண்ணனுக்கு சொன்னால் வர அனுமதிக்க மாட்டான் என்பதை அறிந்திருந்தவன் வருவதற்கான ஏற்பாடுகளை செய்து முடித்து விட்டே தன் அண்ணனின் நண்பன் விக்ரமுக்கு அழைப்பெடுத்துக் கூறினான். நாளை அங்கு போவதற்குள் விக்ரம் அண்ணனை சமாளித்து விடுவான் என்ற நம்பிக்கை.

விக்ரம் அபிநவ்வின் உயிர் தோழன். எல்.கே.ஜி முதல் கல்லூரி வரை ஒன்றாக படித்தவர்கள். இருவரது குடும்பங்களுக்கிடையிலும் கூட அதே ஒற்றுமை. 5 வருடங்களுக்கு முன் தந்தை இறந்த போது பெரிதும் உடைந்து அபிநவ். அந் நிலையில் இருந்து அவனை வெளிக்கொணர்ந்து தந்தையின் தொழிலை நடாத்த ஊக்கமளித்தவன் விக்ரமே. இன்று வரை ஒரு குறை கூற முடியாத அளவுக்கு நடத்திக் கொண்டிருக்கிறான்.

அங்கிருந்து வெளியேறிய அபிநவ்விற்கு மனமும் தலையும் சேர்ந்து வலித்தது. அவள் கண் விழித்துப் பார்க்கும் வரை அங்கிருந்து வரும் எண்ணம் இருக்கவில்லை. ஆனால் மயக்கம் தெளிந்த பின் தன்னைப் பார்த்து மேலும் கலவரம் அடையக் கூடும் தன் மேல் கோபம் கொள்ளக் கூடும் என அங்கே நில்லாமல் வந்து விட்டான். மேலும் அந்த இடத்தில் இருந்தால் அவன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கும் என்றெண்ணியவன் விக்ரம் சகிதம் வெளியேறினான்.

“என்ன அபி எவ்வளவு நேரம் காரை ஸ்டார்ட் பண்ணாம இருப்ப?” என்ற விக்ரமின் குரல் அவன் சிந்தனையை கலைக்க காரை ஓட்டுவதில் முனைந்தான்.

விக்ரமுக்கு தெரியாதா தற்போது தன் நண்பன் இருக்கும் மனநிலை என்னவென்று. அவன் உள்ளத்தில் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தது. இன்று பார்ட்டியில் அப்படி என்ன தான் நடந்திருக்கும்? அதை இப்போது கேட்டால் நண்பன் வருந்தக் கூடும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என விட்டு விட்டான்.

ஏற்கனவே பல பிரச்சினைகளில் இருப்பவனுக்கு ஆரவ்வின் வருகை மேலும் எரிச்சலூட்டியது.

“விக்கி.. இப்போ எதுக்கு ஆரவ் இங்கே வரனும்? அதான் அவனுக்கு அங்கேயே அவனோட இன்டர்ன்ஷிப் கண்டினியூ பண்ண சொன்னேன்ல?” என எரிச்சல் மீதூறும் குரலில் கூறினான்.

“ எல்லாமே பக்காவா ப்ளான் பண்ணிட்டு சொல்றான் பயபுள்ள. நாலு வருஷமா வெள்ளைக்கார பிகர்ஸ பாரத்து தம்பிக்கு போரடிச்சு போயிருக்கும்டா பாவம் அதான் நம்மூர் வந்து யாரையாவது கரெக்ட் பண்…” என்று காமெடியாக கூறியவனை திரும்பி முறைக்க,

“சாரி மச்சி.. எவ்வளவு நாள் தான் அங்கேயே குப்பை கொட்டிட்டு இருப்பான்.” என்று கூற,

“என்ன விக்கி நீயே இப்படி சொல்ற? உனக்கு தெரியாதா இங்கே என்ன பிரச்சினை போய்கிட்டு இருக்குனு?” என்று சற்று தனிந்த குரலில் விக்ரமை பாராமலே கேட்டான்.

“சரி விட்றா. அதான் அவன் வரேன்னு முடிவே பண்ணிட்டானே. ஏதும் ப்ராப்ளம் வந்தா அப்போ பார்த்துக்கலாம்.” என்று கூலாக கூறியவர் அபிநவ்வின் முகத்தை கூர்ந்து நோக்கியவனுக்கு முகம் தெளிவற்று இருப்பதாகவே தோன்றியது.

அபிநவ்வின் மனம் பல குழப்பங்களையும் கவலைகளையும் சுமந்து கொண்டிருந்தது. அவன் சிந்தை முழுவதும் அவளது மதி முகமே. தன் மனம் கவர்ந்தவளின் கண்களில் வழியும் கண்ணீரை பார்த்தால் எந்த ஆண் மகனுக்குத் தான் தாங்க முடியும்? அந்த கோபத்தில் தான் அவன்றியாமலே வெளிவந்த வார்த்தைகள். அது அவள் மனதில் இந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் அறிந்திருக்கவில்லை. அவளை அந்தக் கோலத்தில் பார்த்த போது அவன் மனம் பட்ட வேதனையை அவன் மட்டுமே அறிவான்.

அவளிடம் அன்றே எல்லாம் சொல்லியிருக்க வேண்டுமோ? காலம் தாழ்த்தியது தவறோ என தோன்றலாயிற்று. இப்படி இருவரும் வெவ்வேறு யோசனைகளில் உழன்று கொண்டிருக்க விக்ரமின் ஃபோன் கிணுகிணுத்தது.

சிறு தயக்கத்துடன் அழைப்பை ஏற்ற விக்கி,
“ஹலோ சொல்லு..”
“…..”
“இப்போ ஒரு ப்ராப்ளமும் இல்லைல?”

“………”

“ம்ம்… ஓகே மோர்னிங் வந்துட்றோம்.”
“…….”
“ கோ ஹோம் சேஃப் .. ஓகே டேக் கேர்.” என அழைப்பை துண்டிக்க அபிநவ் இவனையே பார்த்துக் கொண்டிருப்பது புரிய திரு திருவென விழித்தபடி அமைதியாக இருந்தான்.

“யாருடா ஃபோன்ல? மோர்னிங் வர்ர்…றோம்னு சொன்ன?” என வர்றோம் என்பதை அழுத்தி கேட்க,

‘ஐயோ நம்ம இவனையும் சேர்த்தே வர்றோம்னு சொல்லிட்ம்ல அதான் பயபுள்ள கண்டுபுடிச்சிட்டான்”.. என தலையை சொறிந்து கொண்டே அபிநவ்வின் பக்கம் திரும்பினான்.

“அது.. வந்து… மச்சி நி.ராஷா..டா..” என அவன் வார்த்தைகள் தடுமாறி வெளிவர சடன் பிரேக் இட்டு வண்டியை நிறுத்தியவன் விக்ரமை வித்தியாசமாக நோக்கினான்.

“என்ன நிராஷாவா? அது இனியா ஃபிரண்ட்ல? அவ எப்படி உனக்கு கோல் பண்ற? அவ கூட என்னடா இந்த டைம்ல பேசுன?” என கூர்ந்து நோக்க,

“அது ஒன்னும் இல்லை இனியாவுக்கு மயக்கம் தெளிந்து நார்மலா இருக்கானு சொன்னாடா. அதான்…” என சொல்லி முடிக்குமுன்,

“ஒரு ப்ராப்ளமும் இல்லைல? அவ நல்லா தானே இருக்கா?” என பதற்றமாக வினவியனின் கண்களில் கவலை தெரிந்தது.

“ மச்சி கூல்டா. சீ இஸ் ஓகே நவ். வன் மன்த் பெட் ரெஸ்ட்ல இருக்கனும். நடக்க முடியாதில்லையா..நீ டென்ஷன் ஆகாம இரு.” என நண்பனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தான் விக்ரம்.

“விக்கி இப்போ போய் பார்த்துட்டு வரலாமா?” என கவலை தோய்ந்த முகத்துடன் கேட்க,

“நோ அபி அவ இப்போ தான் மயக்கம் தெளிந்து இருக்கா டிஸடர்ப் பண்ண வேணாம். காலையில பார்த்துக்கலாம்.” என்றவன் வண்டியை எடுக்குமாறு சைகை செய்ய காரை கிளப்பினான் அபிநவ்.

தன் உயிரானவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை மயக்கம் தெளிந்து கண் விழித்து விட்டாள் என்ற செய்தியை கேட்ட பின்பு தான் அவன் மனம் லேசானது போல் உணர்ந்தான். இருந்தாலும் அவனுள் சிறு அச்சம் தலை தூக்கியது. இனியாவை பற்றிய சிந்தனையில் விக்கியிடம் கேட்டுக் கொண்டிருந்ததை கூட மறந்து போனான்.

அவனோ ‘அப்பாடா தப்பிச்சோம். இனியாவை பத்தி பேசியே இவனை ஈஸியா ஆஃப் செஞ்சிட வேண்டியது தான்” என்று மனதினுள் நினைத்துக் கொண்டவன் அமைதியாக இருந்து விட்டான்.

பனி தூவும் விடியலில் குயில் கூவும் அழகான காலை பலதரப்பட்ட பட்சிகள் இரை தேடிப் பறக்கும் இனிமையான காலைப் பொழுது..

அத்தனை நேரம் அமைதியாக உறங்கிக் கிடந்த வானத்தை அசுரக் கூட்டம் வந்து அசைத்து விட்டது போல் மேகங்கள் சிதறியோட செங்குருதி சிந்தியதுப் போன்று பரபரவென பகவவன் வெளிவரும் இந்தக் காலைப் பொழுதிற்கு மட்டும் எத்தனை முன்னறிவுப்புக்கள்?

இவை யாவும் அறியாதவனாய் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் அபிநவ் ஆதித்யன். நேற்று இரவு தன்னவளைப் பற்றிய சிந்தனையில் இருந்தவனுக்கு உறக்கம் வர மறுத்தது. நீண்ட நேரமாக அவனுள் அரித்துக் கொண்டிருந்த சில கேள்விகள் அவனை தூங்க விடவில்லை. வெகுநேரம் கழித்து அவனறியாமலே தூக்கம் அவனை தழுவிக் கொண்டது.

அன்று காலையிலேயே அபிநவ்வின் வீட்டிற்கு வந்த விக்ரம் அவனை உலுக்கியபடி ,

“டேய் அபி…. ஆரவ்வை வேற பிக் அப் பண்ண போகனும்.என்னடா இப்படி தூங்குற? என அவனை எழுப்ப அவன் அசைவதாய் இல்லை. “ம்ம் அப்போ இனியாவையும் பார்க்க போறதில்லை” என்று தாடைய தடவியபடி கூறியது தான் தாமதம் பட்டென எழுந்து அமர்ந்து விட்டான்.

“ஓ.. சாரிடா ரொம்ப லேட் ஆகிருச்சா ? ஸ்வீட்டிய வேற பார்க்க போகனுமே. டென் மினிட்ஸ்” என்றவன் இவன் பதிலையும் எதிர்பாராது குளியலறைக்குள் புகுந்தான்.

“ஆமா அப்படியே உன்னை பார்க்க ரொம்ப ஆசையா வெயிட் பண்ணிட்டு இருப்பா. அவளே இப்போ உன் மேல கொலை கான்ட்ல இருப்பா.”என முனுமுனுத்தபடி கீழே ஹாலுக்கு வந்தவன்,

“வேலுஅண்ணா டூ கப் காபி ” என்று கூற சமையலறைக்குள் இருந்து வெளியே வந்தார் அபிநவ்வின் வீட்டில் வேலை செய்யும் வேலு.

“எப்போ வந்தீங்க தம்பி? பெரியவரு எழுந்துட்டாரா?” எனக் கேட்க,

“ஆமா அண்ணா பாத்ரூம்ல இருக்கான்” என்றபடி சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியை இயக்கினான்.

சிறிது நேரத்தில் காபியை கொண்டு வேலு ஹாலுக்கு வரவும் அபிநவ் கீழே வரவும் சரியாக இருந்தது.

“குட் மோர்னிங் விச்சு அண்ணா” என அவர் நீட்டிய காபியை வாங்கிக் கொண்டான்.

அபிநவ்வின் சோர்ந்து போன முகத்தை கண்டு கொண்டவர் “என்ன தம்பி மூஞ்செல்லாம் ஒரே வாட்டமா இருக்கு? உடம்பு ஏதும் சரி இல்லையா? தம்பி நைட் சரியா தூங்கலையா?” என கரிசனத்துடன் வினவ ஒன்றும் கூறாமல் சிரித்து வைத்தான்.

“அதெல்லாம் ஒன்னுமில்லை வேலுண்ணா ஐயாவுக்கு மனசுல ஏதோ பண்ணுதாம்”என்று கேலியாக கூறியவனை முறைத்துப் பார்க்க,

“அதான் தம்பி மூஞ்சி இப்படி வாடி யோயிருக்குனு பார்த்தேன். காலா காலத்துல கல்யாணம் பண்ணிக்க அப்பு எல்லாம் சரியா போயிடும். ” என்று அவர் வேறு எதையோ நினைத்துக் கூறியவர் உள்ளே போய் விட்டார்.

விக்கிக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை. “ஆமா ஐயாவுக்கு ஒரு லவ்ஸ் வந்து இந்தப் பாடு பட்றான் இதுல கல்யாணம் பண்ணிக்கிட்டா செத்தான்.” என்று கூறியவன் வாய் விட்டு நகைக்க விக்கியை முறைத்து விட்டு காரை நோக்கி விரைந்தான்.

“அக்கா உனக்கு இப்போ எப்படி இருக்கு” என வருண் அவளை அருகில் வந்தான்.

மெதுவாக எழுந்து அமர்ந்தவள் ,
“ம்ம் இப்போ ஓகேடா. அம்மா எங்கே?” எனக் கேட்க ,

“இப்போ தான் அம்மாவும் அப்பாவும் வீட்டுக்கு போனாங்க. உனக்கு சேன்ஜ் பண்ண டிரஸ் வேணும்ல அதான் போயிருக்காங்க. உனக்கு கால் ரொம்ப வலிக்குதா அக்கா?” என அவளது தலையை வருடியபடி கேட்டவனது கண்களில் தன் மேல் தம்பி வைத்திருக்கும் உண்மை அன்பை கண்டு நெகிழ்ந்து போனாள்.

“இல்லைடா கட்டு போட்டு தானே இருக்காங்க வலிக்காதுடா” என தன் தம்பியின் கண்ணம் கிள்ளி நகைத்தாள்.

“சரிக்கா.. நேத்து என்னதான் நடந்துச்சு? நீயாவது சொல்லேன்.” என வருண் கேட்க அவள் மௌனமாகவே இருந்தாள்.

“அக்காஆஆஆ… என்ன சைலன்டா இருக்க ? இது எப்படி நடந்துச்சு?அபிநவ் சார் கூட ஒன்னுமே சொல்லலையே. பட் உனக்கும் அவருக்கும் தான் ஏதோ…” என்றவன் அவள் மீது ஓர் ஆராயும் பார்வையை செலுத்தினான்.

“அது.. அ.. அபி நைட் இங்கே வந்தாரா?” என மெல்லக் கேட்டாள்.

“என்ன வந்தாரானு கேட்குற.. அவர் தானே உன்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் செஞ்சாரு. இது கூட ஞாபகம் இல்லையா? நைட் வீட்டுக்கு போய் காலையில வரேன்னு சொன்னிரு..பாவம் அக்கா அபிநவ் சார் ரொம்ப துடிச்சு போனாரு தெரியுமா.” என நேற்று இரவு நடந்த அனைத்தையும் கூறினான்.

ஆயினும் முன்தினம் நடந்த நிகழ்வின் தாக்கம் மனதினுள் அப்படியே தான் இருந்தது. அவன் எப்படி தன்னை பார்த்து அப்படி சொல்லலாம்? தன் காதல் பார்வைகளை உணரவே இல்லையா? அவனைப் பற்றி எதுவுமே அறிந்திராத நிலையில் அவன் மேல் நேசம் வைத்தது தன்னுடைய பிழையே என தன்னையே நொந்து கொண்டாள். எவ்வாறாயினும் அவளால் அவனை தவறாக கருத முடியவில்லை..

வருணின் அக்கா என்ற அழைப்பில் சுய உணர்வு பெற்றவள்,

“டேய் வருண்..”
“என்னக்கா?” என்று கேட்டவனை அருகில் வருமாறு சைகை செய்தாள். அவனை நெருங்கி அமர்ந்தவள்,
“அபி… வரலையா?” என அவனைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்த அதே வேளை அறையில் வேறு ஓர் குரல் ஒலிக்க இருவரும் திடுக்கிட்டு திரும்பினர்
“இதோ உன் அபி வந்துட்டேன்..” என்றவன் புன்னகையுடன் அவளை நோக்கி வந்தான்.

“உன் அபி” என்றதில் ஒரு கணம் அவள் மனம் குதூகலித்தாலும் முகம் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இந்த புன்னகையில் தானே அவனிடம் வீழ்ந்தாள். முன்தின நிகழ்வின் பின்னரும் கூட ஏன் அவனை பார்த்து ஓர் இனம் புரியாத தடுமாற்றம்? என குழம்பிப் போனாள்.

“வாங்க அபிநவ் சார்.. அக்கா உங்களை பத்தியே தான் பேசிட்டு இருந்தா.”என அவனிடம் கூற இனியாவுக்கோ ஐயோ என்றிருந்தது.

“அப்படியா..” என்றவனது கண்கள் இனியாவையே பார்த்துக் கொண்டிருக்க இதைபுரிந்து கொண்டவனாய் நாகரிகம் கருதி “ நீங்க பேசிட்டு இருங்க.. அக்கா நான் ஒரு கோல் பண்ணிட்டு வரேன். என அறையை விட்டு வெளியேறினான்.

அவளுக்கோ உள்ளுக்குள் பக்கென்றது. இந்த வருண்… என்றவளுக்கு தம்பியின் மேல் பொல்லாத கோபம் வந்தது. அவன் அருகில் இருந்த நாற்காலியை இழுத்து அமர அவன் தன் பக்கத்தில் அமர்வது பெரும் அவஸ்தையாக இருக்க, “செய்யுறதையும் செஞ்சிட்டு இழிக்கிறதை பாரு.. பார்ட்டியில் கூட இப்படி சிரிச்சே தானே சீ..எழுந்து நகர கூட முடியாதே இப்படி ஆகிருச்சே.. இந்த கால் வேற..” என சங்கடத்தில் நெளிந்து கொணடிருந்தவளுக்கு அவளது இந்த நிலையும் அவன் மேல் கோபத்தையே ஏற்படுத்தியது.

“இனியா.. நான் .” என அவன் பேச்சை தொடங்கும் முன்னரே தன் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டே போனாள்.

“அபி லிஸன்.. நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்லை.. உங்க விளையாட்டுக்கு வேற யாரையாச்சு பார்த்துக்குங்க.. ஏதோ ரெண்டு நாள் பார்த்து பேசினோம் அதுக்காக ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்க ட்ரை பண்ணாதீங்க. உங்களை மாதிரி என்னால இதெல்லாம் அவ்வளவு ஈஸியா எடுத்து என்ன்…ஜோய் பண்ண முடியாது” என என்ஜோயில் ஒரு அழுத்தம் கொடுத்து பேச்சை நிறுத்த,

அவன் பேச்சை தொடர எண்ணியவனாக
“ இனியா நீ என்னை பத்தி சரியா தெரியாம ..” என தொடர்ந்தவனுக்கு இடம் கெடாமல் விட்ட இடத்திலிருந்து மறுபடியும் தொடர கடினப்பட்டு இழுத்துப் பிடித்த பொறுமையுடன் அமைதியாக நின்றான்.

“என்ன நான் உங்களுக்கு? ஹா.. நேற்று நைட் பார்ட்டில உங்களை பத்தி ரொம்ப நல்லா புரிஞ்சுகிட்டேனே. இந்த எண்ணத்துல தான் என்னை பார்க்குறீங்கனு தெரிஞ்சிருந்தா உங்களை அப்பவே அவொயிட் பண்ணி இருப்பேன். உங்களை மாதிரி ஆளுக்கெல்லாம் தேவை உடம்பு மட்..” என்ற மறுகணம் அவனது ஐவிரல்களும் அவள் இடது கண்ணத்தில் பதிந்தன. இதை எதிர்பாராதவள் கண்ணத்தை தாங்கிய வண்ணம் மிரண்டு விழித்தாள்.

“என்ன ரொம்ப ஒவரா பேசுற? நான் என்ன சொல்ல வரேன்னு கேட்க கூட பொறுமையே இல்லைல? நைட் நான் என்ன சொல்ல வரேன்னு கேட்டிருந்தா இதோ.. என அவளது கால்களை காட்டி

“இதோ.. இந்த நிலைமை உனக்கும் வந்திருக்காது அன்ட் உன் கிட்ட நானும் இப்படி கெஞ்சிட்டு இருந்திருக்க மாட்டேன். ஓகே.. ஒத்துக்குறேன் நான் செஞ்சது தப்பு தான். உன்னை பார்த்து அப்படி பேசி இருக்க கூடாது தான் அது என்னையே அறியாம வந்த வார்த்தை.. மன்னிப்புக் கேட்க எவ்வளவு முயற்சி செஞ்சேன் பட் நீ அதை கேட்கலை உன் பாட்டுக்கு கண்ணை கசக்கிட்டு கோயிட்ட.. மன்னிப்புக் கேட்டு என் மனசை உன் கிட்ட சொல்லிடனும்னு தான் வந்தேன் ஆனால் இப்போ கூட எதையுமே புரிஞ்சிக்காம என்னை காமக்கொடூரன் ரேன்ஜ்க்கு க்ரியேட் பண்ணிட்டல..” என கத்தி தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தான் .

நாற்காலியை விட்டும் எழுந்து விறு விறுவென அறை வாயிலை நோக்கி இரண்டு எட்டு எடுத்து வைத்தவன் மீண்டும் அவளருகில் நெருங்கி வந்து அவள் முகத்தை கைகளில் ஏந்தி அவள் பிறை நுதலில் இதழ் பதிக்க அவளோ மீளாத திகைப்புடன் அப்படியே விழித்துக் கொண்டுஈ இருந்தாள்.

“இனியா .. லிஸன் கேர்ஃபுல்லி.. உன்னை எப்போ பார்த்தேனோ அந்த செக்கனே எனக்கு உன்னை பிடிச்சிருச்சு. உனக்கும் என்னை பிடிச்சிருக்குனு நினைச்சு தான் நான் அப்படி நடந்துகிட்டேன். அது தப்புனா ஐ அம் ரியலி சாரி மா .. ஸ்வீட்டி நீ இங்க இருக்க…” என தன் இதயத்தை தொட்டுக் காட்டியவனின் குரல் சற்றுக் கனிந்திருந்தது. அவனது உயிரானவளோ இவனது ஒவ்வொரு செய்கையிலும் பேச்சிழந்து போனாள்.

மறுபடியும் அதே பழைய குரலில்,
“இப்போ நான் சொன்னதெல்லாம் வெறும் வாய் வார்த்தையில்லை. அது தான் நிஜம்… அதை விட்டுட்டு பழைய ரேடியோ ரிக்கார்டு மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்த அட்டிச்சு பல்லை கில்லை உடைச்சிடுவேன்.. என்ன புரிஞ்சதா ?” என ஏகத்துக்கும் பல்ஸ் எகிற அழுத்தமாக கூறினான்.

சிறிது அமைதியானவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஆழப் பெரு மூச்சொன்றை இழுத்து விட்டவன் தலையை கோதினான். மீண்டும் நெருங்கி வந்து அவள் கண்களை நோக்கி அவள் கண்ணம் வருடி,

“ ஸ்வீட்டி.. ஐ லவ் யூ.. உன்னை இங்கிருந்து லவ் பண்றேன்டீ” என மீண்டும் தன் இதயத்தை தொட்டுக் காட்டிக் கூறினான்.

“ஐ நோ தட் யூ லவ் மீ.. வாட் எவர் நீ என்னை தான் லவ் பண்ணியாகனும்…. ம்ம்.. ஓகே டேக் கேர்” என உறுதியான குரலில் கூறி மீண்டும் அவளது நெற்றியில் இதழ் ஒற்றிச் சென்றான்.

அறை வாயிலில் நின்றிருந்த விக்கியும் வருணும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி ஜர்க்காகி நின்றனர்.

“அடப்பாவி சும்மாவே ஏகப்பட்ட பிரச்சினை.. இதுல இப்படியாடா மிரட்டி லவ்வ சொல்லுவ.. இவனையெல்லாம் ..”என மனதினுள் கருவிக் கொண்டிருந்தான் விக்ரம்.

இனியாவோ அப்படியே உறைந்து போய் இருக்க அவனது குரலில் தெரிந்த உறுதியில் மலைத்துப் போனாள். ஆனால் அவனும் தன்னை காதலிக்கிறான் என்று தெரிந்த பின் அவளுள் சிறு சந்தோசம் துளிர்விட்டது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் அன்றும் மாறாத பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. அங்கே பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திய அபிநவ் விக்ரமை மாத்திரம் உள்ளே சென்று ஆரவ்வை அழைத்து வருமாறு கூற விக்ரமும் எதுவும் கூறாமல் சென்றான்.

அவளது மனம் நோகும்படி நடந்து கொணடேனோ? அவன் உயிரின் பாதியல்லவா அவள்.. அவன் மனம் அவளையே நினைத்துக் கொண்டிருந்தது. அவளிடம் தன் அடாவடித் தனத்தை காட்டி விட்டோமே என உள்ளுக்குள் மருகினான். தலை வலியும் ஒருங்கே மனமும் சேர்ந்து வலிக்க அப்படியே சீட்டில் சாய்ந்து கொண்டான் அபிநவ்.

ஆரவ் வரும் வழியில் அங்கு வெயிட்டிங் ஏரியாவில் வரிசையாக போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தவன் மொபைலில் யாருடனோ சிரித்து பேசுவதில் பிசியாக இருந்தான்.

கருப்பு நிற ஸ்லிம் ஃபிட் டெனிம் மற்றும் வெள்ளை நிற டீ சர்ட் அணிந்து அதற்கு தோதான சப்பாத்துடன் டீ சர்ட்டில் தன் கூலர்ஸை மாட்டியபடி தன் காதில் ஹெட் செட்டுடன் எஸ்கலேட்டர் வழியாக கூலாக வந்து கொண்டிருந்தான் ஆரவ். எப்போதும் புன்னகைக்கும் முகம் கிட்டத்தட்ட அபிநவ்வின் சாயல் இருப்பதாக தோன்றினாலும் அவனது செயல்கள் அண்ணனுக்கு எதிர் மாறானவை தான். அவன் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. எப்போதாவது சிரிக்கும் அபிநவ் எப்போதுமே சிரித்துக் கொண்டிருக்கும் ஆரவ். இரு வேறு துருவங்கள் என்றே கூறலாம். ஆனால் மாறாத அண்ணன் தம்பி பாசம்.

“ஹாய் விக்கி ப்ரோஓஓ…” என காதருகில் வந்து கத்த அந்த அதிர்வில் அவனது ஃபோன் கை நழுவி கீழே விழ பதற்றத்துடன் கீழே விழுந்த ஃபோனை எடுக்க முற்பட அதை தானே எடுத்துக் கொடுத்தான் ஆரவ்.

“ஹேய் ஆரவ் எப்படி இருக்க?” என அவனை கட்டித் தழுவ,

“என்ன ப்ரோ இவ்வளவு வருஷம் கழிச்சு வரேன். எனக்காக வழி மேல் விழி வைத்து வெயிட் பண்ணிட்டு இருப்பீங்கனு பார்த்தா. நான் வந்தது கூட தெரியாம அப்படி யார் கூட கடலை போட்டுட்டு இருக்கீங்க..” என புருவமுயர்த்தி கேட்டவனது கண்கள் யாரையோ தேடின.

“நத்திங்டா.. அது..” என சிரித்துக் கொண்டே அசடு வழிய நின்றவனின் வயிற்றுக்கு ஒரு பஞ்ச் விட்டு,

“அண்ணன் கூட இருந்து இதெல்லாம் எப்படி ப்ரோ பண்ண முடியும்? ஹாஹாஹா.. என சிரித்துக் கொண்டே,

“விக்கி ப்ரோ எங்கே மை ப்ரோ?” என அவனைப் பார்த்து புன்னகையுடனே கேட்டான்.

“ம்ம்.. அபி கார்ல வெயிட் பண்ணிட்டு இருக்கான். உன்னோட லக்கேஜ்ஸ் எல்லாம் ஓகே தானே.” என்றபடி முன்னோக்கி நடக்க ஆரவ்வும் அவனைத் தொடர்ந்து நடந்தான்.

“ஃபைவ் இயர்ஸ் கழிச்சு வந்து இருக்கேனே தம்பியை பார்க்கனும்னு கொஞ்சமாவது தோனலையா. நான் தான் நம்ம அண்ணனை பார்க்க போறோமேன்னு ஆசையா வந்தேன். இன்னும் அதே உம்முனா மூஞ்சி அண்ணனா தான் இருக்கானா விக்கி ப்ரோ ?” என விக்கியிடம் கேட்டுக் கொண்டே வந்தான்.

“ஆமாடா அவன் என்னமோ அப்படியே தான் இருக்கான் . ம்ம்.. ஆனா இந்த கொஞ்ச நாளா வேர்ர்ர்ற மாதிரி வந்து பாரு உனக்கே புரியும்.” என சிரித்தபடி பூடகமாக கூற குழம்பிய ஆரவ் சரி போய் தான் பார்ப்போமே என பேசாமல் கார் இருந்த இடம் நோக்கி நடந்தான்.

காருக்கு வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அண்ணனின் மேல் இன்ஸ்டன்டாய் ஒரு கோபம் முளைக்க அருகில் சென்றவன்,

“என்ன அண்ணா நீ இங்கே இப்படி நின்னுட்டு இருக்க? கொஞ்சம் கூட இன்டரெஸ்ட் இல்லாம இருக்க? நான் வந்தது பிடிக்கலையா ?” என தன் கோபத்தை வெளிப்படுத்த அதில் சிந்தனை கலைந்தவன்,

“வா ஆரவ்.. நத்திங்டா .. ஓகே கெட் இன்டூ தி கார்.” என வேறேதும் பேசாது டிரைவர் சீட்டில் அமர மற்ற இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விட்டு பேசாமல் காரில் ஏறி அமர்ந்து கொண்டனர்.

ஆரவ் ஒரு ஆங்கிலப் பாடலை முனுமுனுத்தபடி மொபைலில் புதைந்து போனான். அபிநவ் அமைதியாக வர விக்ரமும் அப்படியே அமைதியாக இருக்க அவனது செல் ஒலிக்க அதை எடுத்துப் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

“ அபி.. வருண் தான் பேசினான். இனியாவை டிஸ்சார்ஜ் பண்ணி இப்போ தான் வீட்டுக்கு போயிக்காங்க.” என அபிநவ்விடம் கூற திரும்பி ஒரு மௌனப் பார்வையை செலுத்தி விட்டு மீண்டும் கார் ஓட்டுவதில் கவனமாக இருந்தான். அதற்கு மேல் வீடு சேரும் வரை யாரும் பேசிக் கொள்ளவில்லை. ஆரவ்வோ ஏதும் அறியாதவனாய் ஃபோனே கதியென வந்தான்.

விக்ரமை அவனது வீட்டில் இறக்கி விட்டு வீடு வந்து சேர இரவாகியது. இரவு உணவை கூட மறுத்து விட்டு அறைக்குள் போன அபிநவ்வின் ஒவ்வொரு செயலும் ஆரவ்வை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது. அவன் ஒன்றும் பெரிதாக பேசிச் சிரிக்கும் ரகமல்ல தான் ஆனால் அண்ணனின் இன்றைய செயல்கள் யாவும் அவன் ஏதோ குழப்பத்தில் ஆழ்ந்துள்ளான் என்பதைக் காட்டிக் கொடுத்தது. இவனிடம் பேசினால் பதில் வராது என்றறிந்தவன் நாளை விக்ரமிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்பதை குறித்துக் கொண்டான்.

அறையில் தன் மஞ்சத்தில் படுத்தவனுக்கு தூக்கம் எங்கோ தூரச் சென்றது. அவனே எதிர்பாராமல் அவளை அடித்தது மனதை உறுத்தியது. அவளது மென்மையான கண்ணமதில் தன் விரல்கள் பதிந்து சிவந்த தோற்றம் அவனை உலுக்கியது. தன் முத்தத் தடங்கள் பதிக்கப்பட வேண்டிய பட்டுக் கண்ணத்தில் தன் விரல் தடங்கள் பதிந்து விட்டதே. மலரிலும் மென்மையான தன் காதலியை காயப்படுத்தியதை எண்ணி வருத்தம் கொண்டான் அக்காதல் மன்னன்.

தன் காதலை அடாவடியாக இயம்பிய பின் அவளது மனம் என்னவென்று தெரியாமல் வந்தவனுக்கு ஒரு பொட்டுக் கண் மூட முடியவில்லை. அவளை இப்போதே பார்க்க வேண்டும் என காதல் கொண்ட அவ்வாண் மனம் துடிக்க நேரத்தையும் பொருட்படுத்தாது நடுநிசியில் அவள் இல்லம் நாடி வந்தவனுக்கு அவள் அறையில் சரியாக மூடப்படாத சாளரங்கள் கூட அவன் காதலுக்கு கை கொடுக்க அறைக்குள் எகிறி குதித்தான்.

தொடரும்..

அன்புடன் அபிநேத்ரா ❤




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rajee Karthi says:

    👏👏👏👏

You cannot copy content of this page