Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

இதயத்தில் ஒரு யுத்தம் – 8

அத்தியாயம் – 8

மாலை ஆறு மணிக்கு சூர்யா அலுவலகத்திலிருந்து வெளியே வந்தாள். அவள் அவளுக்கு கிடைத்த அதீத மரியாதையில் கலைத்து போயிருந்தாள். அதிபுத்திசாலியான சூர்யாவுக்கே சந்தேகம் வந்துவிட்டது.

‘என்ன… பார்க்குறவன் எல்லாம் இப்படி கும்பிடு போடுரானுங்களே…! நம்பள யாருன்னு நெனச்சு இந்த குனி குனியிரானுங்க….? ஒருவேள நம்பள மாதிரி தெளிவாவும் தைரியமாவும் பேசுற பொண்ணுங்கள பார்த்திருக்கவே மாட்டானுங்களோ…!’ என்று ஏதேதோ சிந்தனை செய்து கொண்டே வெளியே வந்தவளின் கண்ணில் தீரஜ்பிரசாத்தின் கார் பட்டது.

‘ஹேய்… சொன்ன மாதிரியே நம்மள ‘பிக் அப்’ பண்ண வந்துட்டானே இவன்…!’ என்று நினைத்துக் கொண்டு வேகமாக காரை நோக்கி ஓடிவந்தாள்.

“சொன்ன மாதிரியே வந்துட்டீங்களே… வெரி குட்….” என்று சொல்லிக் கொண்டே காரின் கதவை திறந்து அவனருகில் அமர்ந்தாள்.

“வெரி குட் எல்லாம் நீயே வச்சுக்கோ… உன் பேர் என்ன…? அதை முதல்ல சொல்லு… பேரும் தெரியாமல் ஊரும் தெரியாமல் உனக்காக எவ்வளவு நேரமா வெயிட் பண்றது? உன்னை யாரோ தூக்கிகிட்டு போயிட்டாங்கலோன்னு பயந்துட்டேன்…”

“ஹலோ… என்னை யாராலையும் அவ்வளவு சுலபமா தூக்க முடியாது. ஏன்னா…….. நான் சூ…ர்யா… ஹா…ஹா…” அவள் ஜோக் அடித்துவிட்டாளாம்.

அவள் அடித்த ஜோக்கிற்கு சிரிக்கவில்லை என்றாலும் அவள் சிரித்த சிரிப்பை பார்த்து தீரஜ்பிரசாத்திற்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

“ஆமாம்… என்னோட பேர கேட்டீங்களே… உங்க பேர் என்ன…?”

“தீரஜ்….”

“நைஸ் நேம்…”

“உன்ன வாங்க போங்கன்னு சொல்லி கூப்படறது எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு. நமக்குள்ள இனி இந்த ஃபார்மாலிட்டீஸ் வேண்டாம் என்று நினைக்கிறேன்….”

“ஆமாடா தீரஜ்… எனக்கும் உன்ன வாங்க போங்கன்னு நீட்டி முழக்க கஷ்ட்டமாதான் இருக்கு. நாமதான் ஃபிரன்ட்ஸ் ஆகிட்டோமே… நமக்குள்ள இனி என்ன ஃபார்மாலிட்டீஸ்…” அவள் அதீதமாக உரிமை எடுத்துக்கொள்ள…

“என்னது….! டா…வா…!” என்று அவன் வாயை பிளந்தான்.

“என்னடா இதுக்கு போயி இவ்வளவு பெரிய ரியாக்ஷன் குடுக்குற…?”

“ஏய்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்… நான் உன்னைவிட அஞ்சாறு வயதாவது பெரியவனா இருப்பேன்….” அவன் கிட்டத்தட்ட கெஞ்சினான்.

“அதனால என்ன…? ஃபிரண்ட்ஷிப்ல இதல்லாம் ச…க…ஜ…ம…ப்…பா…” அவள் பாவனையுடன் சொன்னாள்.

அவளுடைய பதிலை கேட்டு ஆளானப்பட்ட தீரஜ்பிரசாத்தே அடுத்து என்ன பேசி அவளை சமாளித்து அவளிடமிருந்து மரியாதையை பெறுவது என்று தெரியாமல் விழித்தான்.

“என்னடா… பேச்ச காணும்…?”

கவனமாக கார் ஓட்டிக் கொண்டிருந்த தீரஜ், சூர்யாவின் ‘என்னடா’-வை கேட்டதும் சட்டென திரும்பிப் பார்த்தான்.

அவனை ஆதிக்கம் செய்வதுபோல் யாரும் அவனிடம் பேசிவிட முடியாது. ஆனால் இன்று தலையில் அடித்தது போல் அவள் அவனை பெயர் சொல்லி ‘டா’ போட்டு அழைக்கிறாள். அவனும் அதை ரசிக்கிறான்…

“எங்கிருந்துடி இவ்வளவு பேச கத்துகிட்ட…? வாயை மூடவே மாட்டியா?”

“நீ மட்டும் என்ன…? வடநாட்டுகாரனா இருந்துகிட்டு தமிழ் இந்த போடு போடுற…! நா பேசக் கூடாதா…”

“என் அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவங்க. என் அப்பா மட்டும்தான் வடநாடு. அதனால எனக்கு தமிழ் தெரியிறதுல ஆச்சர்யப்பட ஒன்னும் இல்ல…”

“ஓ… உங்க அப்பா அம்மா காதல் திருமணம் பண்ணிகிட்டவங்களா?”

“ம்ம்ம்….”

“சூப்பர்டா… நீ எப்படி…?”

‘நானும் ஒரு தமிழ்நாட்டு பெண்ணைதான் பார்த்துகிட்டு இருக்கேன்…’ மனதில் நினைத்துக் கொண்டான்.

“டேய்… என்னடா கனவு…”

“ஹாங்… கனவா… அதெல்லாம் ஒன்னும் இல்ல.. ஒரு குட்டி பிசாசுகிட்ட மாட்டிகிட்டேன்…. அவகிட்டேருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு யோசிச்சேன்…”

“காரை சீக்கிரம் ஹாஸ்ட்டல்ல கொண்டு போய் நிறுத்து தப்பிச்சிடலாம்…”
அவளுடைய பேச்சு தீரஜ்பிரசாத்தை உற்சாகப்படுத்தியது.

“உங்க அப்பா என்ன பண்றாரு…?” அவன் அவளுடைய குடும்பத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினான்.

“அவர் ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் ஆஃபீசர்” சூர்யா பெருமையாக சொன்னாள்.

“ஓ… வெரி குட்… என்னவா இருந்தாரு…?” அவன் ஆர்வமாக கேட்டான்.

“கான்ஸ்டபில்….” அப்போதும் அவளுடைய பெருமைக்கு எந்த குறையும் இல்லை.

“ஓ……” தீரஜ்பிரசாத்தின் இந்த ‘ஓ’ கொஞ்சம் நீட்டமாக வந்தது.

“உங்க அப்பா என்ன பண்றாரு?” அவனுடைய ‘ஓ’வில் இருந்த நக்கலை கண்டுபிடிக்காமல், அவனை கேள்விக் கேட்டாள்.

“அவர் பிசினஸ் பண்ணிக்கிட்டு இருந்தார். இப்போ இல்ல… ஒரு விபத்துல அப்பா அம்மா ரெண்டுபேரும் போய்ட்டாங்க…”

“ஓ… சாரி தீரஜ்… இப்போ நீ அவரோட பிசினஸ்சைதான் பார்த்துக்கிட்டு இருக்கியா… கார் எல்லாம் நல்லா ஓடுதா..?”

“கார் நல்லா ஓடுதாவா…?” அவன் புரியாமல் கேட்டான்.

“ஆமாம்… நீ ‘ட்ரவல்ஸ்’ தானே நடத்துற?”

“ஆ… ஆமா..” அவன் தட்டுதடுமாறி பதில் சொன்னான்.

“மாத கடைசில என்னை நீ ஆபீஸ் கொண்டுவந்து விட்டுட்டு திரும்ப கூட்டிகிட்டு போறதுக்கு பணம் செட்டில் பண்ணிவிடுறேன்… ஆட்டோவுக்கு கொடுப்பதை விட நூ….று ரூபாய் அதிகமா தர்றேன் வச்சுக்கோ…” அவள் பெருந்தன்மையுடன் சொன்னாள்.

“நூ….று ரூபாய் அதிகமா கொடுக்க போறியா…. நீ ரொம்ப நல்லவ சூர்யா…! ஆமா நான் ட்ரவல்ஸ் நடத்துறேன்னு எப்படி கன்னுபிடிச்ச?”

“சும்மா ஆட்டோல போயிகிட்டு இருந்தவள ஃப்ரண்ட் புடிச்சு கஸ்டமர் ஆக்கிகிட்டியே… உன்னோட பிசினஸ் டாக்டிஸ் எனக்கு பிடிச்சிருக்கு… ” அவள் அவனை பாராட்டினாள்.

‘புத்தம் புது ஜாகுவார் காரை ட்ராவல்ஸ் பிசினஸ்க்கு யூஸ் பண்ணின முதல் ஆள் நான்தானா…!’ அவன் அவளுடைய புத்திசாலி தனத்தை நினைத்து சிரித்துக் கொண்டான்.

“தேங்க்ஸ்… ரொ…ம்ப கரெக்ட்டா கெஸ் பண்ணியிருக்க…”

“ஹா…… என்னோட கெஸ்ஸிங் தப்பாக முடியுமா…!”

“அது எப்படி தப்பாகும் சூர்யா… நீதான் மகா புத்திசாலியாச்சே…”

“அது உனக்கும் தெரிஞ்சு போச்சா… ?”

“வேற யாருக்கு தெரிஞ்சிடிச்சு…?” அவன் சந்தேகமாக கேட்டான்.

“அதை ஏன் கேட்குற…? ஆபீஸ்ல நான் ஜாய்ன் பண்ணி ரெண்டு நாள்தான் ஆகுது. அதுக்குள்ள என்னோட திறமை எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன். எல்லாரும் ரொம்ப மரியாதை குடுக்குறாங்க… யாருமே சகஜமா பேச மாட்டேங்கிறாங்க… என்னோட திறமைய இனிமே கொஞ்சம் மறச்சு வச்சுக்கணும் என்று முடிவு பண்ணியிருக்கேன்… என்னதான் நம்ம பெரிய அறிவாளியா இருந்தாலும் மத்தவங்க நம்மளோட ஃப்ரீயா பழகனும் பாரு… அதுக்காகத்தான்…” என்று ரகசியம் பேசுவது போல் அவன் காதோரம் சென்று கிசு கிசுப்பாக பேசினாள்.

அவள் பேசிய ரகசிய பேச்சில் அவனுக்கு மூச்சே முட்டிவிட்டது. இன்று இதற்கு மேல் தாங்காது என்று நினைத்தவன் வண்டியை வேகமெடுத்து அடுத்த ஐந்தாவது நிமிடம் அவளுடைய விடுதியின் முன் நிறுத்தினான்.

மாஃப்பியா தலைவனைப் போல் தனக்கென்று ஒரு பெரிய குழுவை வைத்துக் கொண்டு, மதுரா மாவட்டத்தை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் ஆட்டிப்படைக்கும் தீரஜ்பிரசாத், சூர்யாவிற்கு காலையும் மாலையும் டிரைவர் வேலை பார்த்தான். அதையும் அவன் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் செய்தான்.

மாதத்திற்கு ஒரு முறை தன்னுடைய முக்கிய தொழிலான ‘கிருஷ்ணா கெமிக்கல்ஸ்’சை எட்டி பார்ப்பவன், இப்போதெல்லாம் தினமும் கிருஷ்ணா கெமிக்கல்ஸ்சே கதி என்று இருக்கிறான். இந்த மாயம் நிகழ காரணமாக இருந்த சூர்யாவோ அதை உணராமல், அவனுடன் சகஜமாக பழகிக் கொண்டிருந்தாள்.

அன்று இரவு தீரஜ்பிரசாத்திற்கு உறக்கம் பிடிக்கவில்லை. அவன் காதோரம் சூர்யா பேசிய ரகசியம், கிசு கிசுப்பாக அவனுக்கு கேட்டுக் கொண்டே இருந்தது. அந்த அனுபவம் தந்த மயக்கம் அவனை உறங்கவிடாமல் துரத்தியது.

இரவு பன்னிரண்டு மணிக்கு அவனது அறையோடு ஒட்டியிருக்கும் பால்கனியில் கூடை ஊஞ்சலில் அமர்ந்து, சோடியம் விளக்கு வெளிச்சத்தில் தோட்டத்து பூக்களை ரசிக்க முயன்றான். தோட்டத்து பூக்களெல்லாம் சூர்யாவாக மாறி அவனை பார்த்து சிரித்தது… முறைத்தது… போடா… என்றது… வாடா… என்றது… கண் சிமிட்டியது… உதட்டை சுழித்து அழகு காட்டியது… என்னென்னவோ செய்தது….

“சூர்யா… சூர்யா… சூர்யா…” சத்தமாகவே அவள் பெயரை சொல்லி புலம்பினான். அவனுடைய புலம்பல் ஒலி அந்த அறைக்குள்ளேயே காற்றில் கரைந்து மறைந்தது.

 




Comments are closed here.

You cannot copy content of this page