கனல்விழி காதல் – 5
10734
6
அத்தியாயம் – 5
“கிளாப் யுவர் ஹாண்ட்ஸ்… கிளாப் யுவர் ஹாண்ட்ஸ்
லிசன் டு தி மியூசிக் அண்ட் கிளாப் யுவர் ஹாண்ட்ஸ்
ஸ்டாம்ப் யுவர் ஃபீட்… ஸ்டாம்ப் யுவர் ஃபீட்
லிசன் டு தி மியூசிக் அண்ட் ஸ்டாம்ப் யுவர் ஃபீட்” – மதுராவின் தெவிட்டா தேன் குரல் குழந்தையை உற்சாகப்படுத்த, அவள் கைகளையும் கால்களையும் இசைக்கு ஏற்றார் போல் தட்டி தாளம் போட்டாள். அழைப்புமணி ஓசை அவர்களின் ஆரவாரத்தில் குறுக்கிட்டது.
“குட்டிமா… நீ இங்கேயே விளையாடிட்டு இரு. நா போயி யாருன்னு பார்த்துட்டு வந்துடறேன்” – குழந்தையை அவளுடைய அறையிலேயே விட்டுவிட்டு வெளியே வந்து வாசல் கதவைத் திறந்தவள் திகைத்தது நின்றாள். காரணம் அங்கே அவள் கண்டது வாட்ச் மேனோ… வாட்டர் மேனோ அல்ல… மான்ஸ்டர் மேன்!
வாசலை அடைத்துக் கொண்டு நின்றது அந்த ஆறடி உயரம் வளர்ந்த ஆஜானுபாகுவான உருவம். ஹேர் ஜெல் பூசி மேல்நோக்கி சீவப்பட்டிருந்த அடர்ந்த கருங்கேசம் பளபளத்தது. நெற்றி அகன்றிருந்தது. புருவங்கள் அடர்ந்திருந்தன. கத்தி போன்ற கூர்மையான கண்கள் ஆழ துளைத்தன. நீண்ட நேர் நாசி விடைத்திருந்தது. அதன் கீழே நறுக்கு மீசை… அதை நுனியில் முறுக்கி விட்டிருந்தான். அடர்ந்த தாடி அளவாய் நறுக்கிவிடப்பட்டிருந்தது. அழகன்தான்… ஆனால் முரடன். முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கிறதே! – இவன்! இங்கே!! இப்போது!!! – திறந்த வாய் மூடாமல் திகைத்து நின்றவள் கவனத்தை சொடக்குப் போட்டு ஈர்த்தான் தேவ்ராஜ்.
“ஆங்… வாங்க… உள்ள… உள்ள வாங்க” – தடுமாற்றத்துடன் வரவேற்றாள். ஏனிந்த பதட்டமென்று அவளுக்கே விளங்கவில்லை.
“மாயா இல்ல?” என்றபடி உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தான்.
“இல்ல… ஹாஸ்ப்பிட்டல் போயிருக்காங்க”
“ஹாஸ்ப்பிட்டல்? என்ன ஆச்சு?” – புருவம் சுருக்கியவனின் கைகள் தானாக கைபேசியை எடுத்து சகோதரியின் தொடர்பு எண்ணை அழுத்தின.
“வயிறு வலி…” – அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். அவனுடைய கவனம் கைபேசியில் இருந்தது. அழைப்பொலி முழுவதுமாக அடித்து முடிக்கும் வரைக் காத்திருந்தவன், “ப்ச்…” என்று எரிச்சல்பட்டுக் கொண்டே மீண்டும் முயற்சித்தான்.
“கன்சல்டிங்க்ல இருந்தாலும் இருப்பாங்க. ஷி வில் பி ஆல் ரைட்” – மதுராவின் குரல் அவன் செவியை எட்டும் முன், “ஹேய்… மாமூ…” என்று கூச்சலிட்டபடி ஓடிவந்து தாவி கழுத்தைக் கட்டிக் கொண்ட ஆதிரா அவனது முழு கவனத்தையும் ஈர்த்துக் கொண்டாள்.
“ஹேய்… மை கியூட் லிட்டில் டால்…! நீ இங்கதான் இருக்கியா…!” – அவளைத் தூக்கி சுற்றி முத்தம் கொஞ்சினான். குழந்தையைக் கண்டதும் சகோதரியை மறந்தேவிட்டான்.
“இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்த உள்ள?”
“டாலி டாலி வெளாடிட்டிருந்தேன்”
“டாலி டாலி?” – புன்னகையுடன் கேட்டான்.
“ம்ம்ம்… ம்ம்ம்…” – கண்களை அழகாக உருட்டினாள். “ஓஹ்…!!! கியூட்டி…!!! யு ஆர் மை டாலி…” – கட்டிப்பிடித்துக் கொஞ்சினான். அவளும் அவனோடு உடும்பாக ஒட்டிக் கொண்டாள்.
அவர்களிருவரும் ஏதோ தனி உலகத்திற்குள் சென்றுவிட்டார்கள். மதுராவின் இருப்பு அவர்களுடைய கருத்திலிருந்து முழுவதுமாய் விலகியது. அவர்களுடைய சந்தோஷக்களிப்பில் பங்கெடுத்துக்கொள்ளவும் முடியாமல், அங்கிருந்து விலகிச்செல்லவும் முடியாமல் தத்தளித்த மதுரா, தனக்கு சம்மந்தமே இல்லாத இடத்தில் நின்றுக் கொண்டிருப்பது போல் உணர்ந்தாள். சொந்த வீட்டிலேயே தன்னை அந்நியமாக உணரவைத்தவன், யாரோ ஒரு வேற்று மனிதன் அல்ல. தன் தாய்மாமன் மகன்தான் என்கிற எண்ணம், அவள் மனத்திலும் இல்லை. ‘அவன் யாரோ…! தூரத்து சொந்தம்…! அண்ணியின் அண்ணன்..! அவ்வளவுதான்…’
இந்த விலகல் இன்றோ நேற்றோ வந்ததல்ல. சிறு வயதிலிருந்தே அவர்களுக்குள் எந்தவிதமான அந்யோயமும் இருந்ததில்லை. அவர்கள் என்றால் தேவ்ராஜ் – மதுரா மட்டும் அல்ல. இரு குடும்பத்து பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் நட்புடன் பழகியதில்லை. ஏன், அதிகம் பார்த்துக் கொண்டது கூட இல்லை. பெண்களுக்குள் இருந்த நட்பின்மையே குழந்தைகளின் விலகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாம். துருவன் – மாயா திருமணத்திற்குப் பிறகு அனைவரும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்திருந்தது. ஆனால் நட்போ… உறவோ… ஒருவர் மனத்திலும் மலரவில்லை. அவர்களுக்குள் இருக்கும் ஒரே பொதுவான விருப்பம்… மகிழ்ச்சி… மனமருந்து எல்லாம் ஆதிரா மட்டும்தான். அவள்தான் அவர்கள் அனைவருக்கும் அச்சாணி.
“மாமூ… ஐகீம் பசி…” – மாமனின் தாடையைப் பிடித்துக் கொஞ்சியது அச்சாணி.
“ஓகே… லெட்ஸ் கோ…” – குழந்தையை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு கிளம்பினான். சட்டென்று பதட்டமடைந்த மதுரா, “எங்க?” என்றாள் உடனடியாக.
“வெளியே…” என்றபடி வாசற்கதவை நோக்கி நடந்தான்.
‘ஸ்… ஸ்… குட்டிமா… நோ…’ – அவன் தோளில் தொங்கி கொண்டிருக்கும் குழந்தையை கிசுகிசுப்பாக அழைத்து சைகைக் காட்டினாள்.
‘ஏன்?’ – அதே கிசுகிசுப்புக் குரலில் அவளிடம் கேள்வி கேட்டு கண்களை உருட்டியது அந்த வண்டு.
‘நோ… போகாத… வா…’
‘ஏன்?’
‘ப்ளீஸ்’ – வேறு வழியில்லை. மாயாவிற்கு யார் பதில் சொல்வது.
‘ஏன்?’ – கேட்ட கேள்வியையே திரும்பத்திரும்பக் கேட்டபடி ஹாயாக மாமனின் முதுகில் தொங்கியபடி சென்றுகொண்டே இருந்தாள்.
‘ம்ம்ம்… வாடி…’ – கண்களால் மிரட்டினாள்.
“வரமாட்டேன் போடி…” – சத்தமாக கத்தி காட்டிக் கொடுத்துவிட்டாள் பாதகத்தி.
சட்டென்று திரும்பினான் தேவ்ராஜ். அவளது மூச்சுக்குழல் அடைத்துக் கொண்டது. முகம் சூடாகி சிவந்துவிட்டது. பேந்த பேந்தவென்று விழித்துக் கொண்டு நின்றாள்.
“வாட்ஸ் யுவர் ப்ராப்லம்?” – அதட்டினான்.
“ந… நத்திங்… நத்திங்…” – தோள்களை குலுக்கி, இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொள்ள பிரயத்தனப்பட்டாள்.
ஓரிரு நொடிகள் அவளை ஆழ்ந்துப் பார்த்தவன், “குட்….” என்று பாராட்டிவிட்டு குழந்தையோடு வெளியேறினான்.
அடுத்த நொடியே, ‘உஸ்… புஸ்…’ என்று மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றினாள். எவ்வளவு ஆக்சிஜன் பற்றாக்குறை! கடவுளே! ஓரிரு நிமிடங்கள் நன்றாக மூச்சை இழுத்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், பிறகு கைபேசியில் மாயாவை அழைத்தாள். உடனே அழைப்பு ஏற்கப்பட்டது. அனைத்தையும் ஒப்புவித்தாள். குழந்தை வெளியே சென்றதைப் பற்றி… அதுவும் ஐஸ் கிரீம் சாப்பிடச் சென்றதைப் பற்றி அவள் பெரிதாக அலட்டிக்கொள்ளவே இல்லை. மாறாக தன் அண்ணன் எப்போது வீட்டிற்கு வந்தான், எவ்வளவு நேரம் இருந்தான், என்ன பேசினான் என்பதை தெரிந்துகொள்வதில்தான் குறியாக இருந்தாள். என்னவாயிற்று இவளுக்கு! – மதுராவிற்கு எதுவும் புரியவில்லை.
“தி வீல்ஸ் ஆன் த பஸ் கோ… ரௌண்ட் அண்ட் ரௌண்ட்…
ரௌண்ட் அண்ட் ரௌண்ட்… ரௌண்ட் அண்ட் ரௌண்ட்…
தி வீல்ஸ் ஆன் த பஸ் கோ… ரௌண்ட் அண்ட் ரௌண்ட்…
ஆள் த்ரூ த டௌன்…” – தன்னை மகிழ்விப்பதற்காகவே குழையும் மழலையின் குரல் அவன் செவியில் ஏறவே இல்லை. கண்கள் சாலையிலும், கைகள் ஸ்டியரிங்கிலும் இருந்தாலும் எண்ணங்கள் முழுக்க, “ந… நத்திங்… நத்திங்…” என்று மருண்ட விழிகளை விரித்து, சிவந்த இதழ்களை பிதுக்கி தோள்களை குலுக்கியவளிடமே தேங்கிவிட்டது.
“என்ன சொன்னா?” – குழந்தையின் பாடலில் குறுக்கிட்டான் தேவ்ராஜ். அவனுடைய கேள்வி புரியாமல் பாடலை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தாள் ஆதிரா.
“என்ன சொன்னா?” – அவன் மீண்டும் கேட்டான்.
“யாரு மாமூ?”
“அவதான்… உன்னோட அத்த….”
“ஓ! அத்தையா! என்னைய கொன்னு சொன்னா. போக வேணா சொன்னா…”
“போக வேணான்னு சொன்னாளா!”
“ம்ம்ம்”
“என்னோடையா!”
“ம்ம்ம்ம்”
“ஏன்?”
“அதான் நானும் கேட்டேன். அவதான் சொல்லவே இல்ல…” – குறைபட்டுக்கொண்டாள்.
‘என்னோட வர வேண்டான்னு தடுத்தாளா!’ – உள்ளுக்குள் ஏதோ புகைந்தது. வைப்ரேஷன் மோடில் கிடந்த கைபேசி கிர் கிர் என்று உறுமியது. அழைப்பது யாரென்று கூட பார்க்காமல் காதிலிருந்த ப்ளூ டூத்தை தட்டி, “ஹலோ” என்றான்.
“எங்க இருக்கீங்க தேவ் பாய்?” – மாயாவின் குரல்.
“நீ எங்க இருக்க?” – எரிந்து விழுந்தான்.
“நா… இங்க… ஹாஸ்பிடல் வந்தேன்”
“சொல்லிட்டு போக வேண்டியதுதானே? நீ வீட்ல இல்லாதப்போ எதுக்கு என்னைய போக சொன்ன?”
“சாரி பாய்… ஏன்? என்ன ஆச்சு?”
“நத்திங்” – கத்தரித்துப் பேசினான்.
“பாய்….”
“சொல்லு”
“ரிட்டன் வரும் போது ஒரு பட்டர் ஸ்காட்ச் பாக்ஸ் வாங்கிட்டு வரணும்”
“வாட்!!!”
“பட்டர் ஸ்காட்ச்…. ப்ளீஸ்…”
“முதல்ல போனை வை…” – பட்டென்று அழைப்பை துண்டித்தான். தாய்க்கும் மகளுக்கும் ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்துக் கொண்டிருக்க அவன் என்ன டெலிவரி பாயா! அவனுடைய தோழிலென்ன! ஆற்றலென்ன! ஆதிக்கமென்ன! ஐஸ் கிரீம் வாங்கிவர வேண்டுமாமே! ஆழ பெருமூச்சுவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
“மாமூ… ஐகீம்…” – சிணுங்கிய சில்வண்டின் பக்கம் அவன் கவனம் திரும்பியது. அக்கணமே கடுகடுத்த முகத்தில் புன்னகை மீண்டது. மழலை செய்த மாயம்!
6 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha khaliq says:
Hi Nithya…nice ud….maya thittapadi rendu perum sandichitangala….renduperum cousins dhaana ennamo anniyargal maadhiri pesuranga….Dev kullayum oru salanam vara aarambichikudu super….but Madhura ku avanai paarthu bayam mattum dhaan….maya ninaichadhuku opposite ah….ini enna nadakum
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pons says:
போ..நித்யா..
மதுவை கஷ்டப்படுத்துவ போல..
உயிரை தொலைத்தேன்..நித்யா ரிடர்ன்ஸ்
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
என்னக்கா…! மம்மி ரிட்டன்ஸ் மாதிரி சொல்லறீங்க! எஸ்… கொஞ்சம் கஷ்ட்டம்… கொஞ்சம் இஷ்ட்டம்… அப்போதானே மேஜிக் நடக்கும்.. 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
தேவ்வின் பார்வை மதுரா மேல் விழணும் என்று திட்டம்போட்டு நடத்திய மலாயாவின் செயல் வெற்றியடைந்துவிட்டது,அடுத்து ?.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
ஹாய் தாட்சயனி,
மிக்க நன்றி… அடுத்த அப்டேட் நாளைக்கு… 😀