Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல் 39

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 4

அத்தியாயம் – 4

ஜூம் டிவி மற்றும் ஏர் வாய்ஸ் நிறுவனம் இனைந்து வழங்கும் சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியை, இந்த ஆண்டு வழக்கத்தைவிட சிறப்பாக நடத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் நரேந்திரமூர்த்தி. அதன்பொருட்டு நிகழ்ச்சியின் முக்கிய ஸ்பான்சர்ஸ் மற்றும் விளம்பரதாரர்களை, ஹோட்டல் ‘தி ஓபராய்’க்கு இரவு விருந்துடன் கூடிய தொழில் சார்ந்த சந்திப்பிற்கு அழைத்திருந்தார். நிகழ்ச்சி நடக்கவிருக்கும் இடம், நேரம், வரவு செலவு திட்டம், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் கலந்தாலோசிக்கப்பட்டன.

 

தொழில்சார்ந்த பேச்சு வார்த்தைகள் நிறைவுபெற்றவுடன், மதுவையும் உணவையும் மகிழ்வோடு அனுபவித்தபடி, நட்பு ரீதியில் ஒருவருக்கொருவர் உரையாடிக் கொண்டார்கள். அப்படித்தான் ஏர் வாய்ஸ் நிறுவனத்தின் CEO வும் பங்குதாரருமான திரு கல்யாண் நாரேந்திரமூர்த்தியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

 

“பத்து வருஷமா இந்த நிகழ்ச்சி வெற்றிகரமா போகுதுன்னா, அதுக்கு உங்களோட தனிப்பட்ட கவனமும், பங்களிப்பும்தான் காரணம் மிஸ்டர் நரேந்தமூர்த்தி”

 

“தேங்க் யூ… ஆனா உங்கள மாதிரி ஸ்பான்சரர்ஸ் இல்லன்னா எதுவுமே சாத்தியம் இல்ல. உங்க கூட பிசினஸ் பண்ணறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்” – நரேந்திரமூர்த்தி.

 

“நம்மளோட ரிலேஷன்ஷிப் பிசினஸ்ஸை தாண்டி வளரணும்னு விரும்பறேன். வாட் யு திங்க்?”

 

“எனக்கு புரியல…”

 

“எனக்கு ஒரு பையன் இருக்கான். டெலி கமியூனிகேஷன் பட்டதாரி. மாஸ்டர்ஸ் லண்டன்ல முடிச்சிருக்கான். இப்போ ஏர் வாய்ஸ்ல உயர்ந்த இடத்துல இருக்கான். நம்மளோட நட்பு உறவா மாறணும்னு விரும்பறேன். யோசிச்சு சொல்லுங்க” என்று கூறி கைகுலுக்கினார்.

 

அடுத்து வந்த நாட்களில் இதை பற்றி நரேந்திரமூர்த்தி குடும்பத்தாருடன் ஆலோசித்தார். அனைவரும் மகிழ்ந்தார்கள். மாயாவின் மூலம் விஷயத்தை கேள்விப்பட்ட ராஜேஸ்வரி, தன் அண்ணனை சந்தித்துப் பேசினாள்.

 

“தேவ் சரின்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டானான்னுதானே நானும் ஆசைப்படறேன் ராஜி. ஆனா அவன் பிடிகொடுக்கவே மாட்டேங்கிறான். அவனைவிட்டு… உன்னால உறுதி கொடுக்க முடியுமா?” என்று அவளை ஆழ்ந்து நோக்கினார். இராஜேஸ்வரிக்கு பதில் சொல்ல முடியவில்லை.

 

“இதுல நம்ம விருப்பம் ரெண்டாம்பட்சம்தான் ராஜி… வாழ போறவங்கதான் முடிவெடுக்கணும். அதோட மதுரா சின்ன பொண்ணு. ஒரு அப்பாவா, எம்பொன்னொட வாழ்க்கைக்கு சரியான நேரத்துல சரியான முடிவை நா எடுத்தாகணும். எனக்கும் வருத்தம்தான்… ஆனா வேற வழியில்லை… புரிஞ்சுக்க…” என்று கூறி முடித்துவிட்டார்.

 

கனத்துப் போன மனதுடன் வீட்டிற்கு வந்தவள் மகனைத் தேடி மாடிக்குச் சென்றாள். வழக்கம் போலவே தன்னுடைய படுக்கையறையை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் டெரஸில்தான் இருந்தான். அங்கே தொட்டியில் வளரும் குரோட்டன்ஸ் செடிகளின் கிளைகளை சீராக வெட்டிவிட்டுக் கொண்டிருந்தான். அருகே, கையில் ஃபைலுடன் நின்றுக் கொண்டிருந்த செகரட்டரி ரகீம் கான், “சார், மேம்…” என்று ராஜேஸ்வரியின் வரவை தெரியப்படுத்தினான். திரும்பி தாயைப் பார்த்த தேவ்ராஜ் அவள் முகத்திலிருந்த கவலையை உள்வாங்கி கொண்டு, “என்ன ஆச்சு?” என்றான்.

 

சற்று நேரம் எதுவும் பேசாமல் சிந்தனையோடு மகனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், “மதுராவுக்கு வேற மாப்பிள்ளை பார்க்கறாங்க” என்றாள் மெல்ல.

 

“ரியலி?” – ஆச்சரியப்பட்டான். அவன் குரலிலிருந்த போலித்தன்மையை உணர்ந்துக் கொண்ட ராஜேஸ்வரி, “இது விளையாட்டு இல்ல தேவ்” என்றாள் சிறு கோபத்துடன்.

 

“சரி சொல்லுங்க. இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?”

 

“மதுராமேல உனக்கு ஏதாவது விருப்பம் இருந்தா, தேவையில்லாத ஈகோவால அவளை இழந்துடாத” – தாயின் கூற்றைக் கேட்ட அடுத்த நொடி, “வாட்!” என்று அதிர்ந்த தேவராஜ் பிறகு,” ஹா… ஹா…” என்று வாய்விட்டு சிரித்தான்.

 

“ரகீம்… கேட்டியா! ஹா.. ஹா…” – தன்னுடைய உதவியாளனையும் துணைக்கு அழைத்துக் கொண்டான்.

 

சிரிக்கும் மகன்… முறைக்கும் தாய்… ‘இது என்னடா சோதனை!’ – உதடுவரை வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு தலைகுனிந்துக் கொண்டான் ரகீம்.

 

“வாட் யு திங்க் அபௌட் யுவர் நீஸ்? ஹாங்?” – ‘உங்களுடைய சகோதரன் மக்களைப்பற்றி நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று புருவம் உயர்த்தியவனின் கண்களில் இருந்தது இகழ்ச்சியோ! – ராஜேஸ்வரியின் கூர்மையான பார்வை மகனை துளைத்தது.

 

“இளவரசி? தேவதை? இல்லன்னா ஏதாவது மந்திரக்காரியா?” – இப்போது வெளிப்படையாகவே தெரிந்தது அவனுடைய எள்ளல்.

 

“தேவ்?”

 

“பாரதிக்காகத்தான் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனச்சேன். அந்த கல்யாணமே நடக்காதுங்கறப்போ இந்த கல்யாணத்துக்கு எந்த அவசியமும் இல்ல. எங்க வேணுன்னாலும் மாப்பிள்ளை பார்க்கட்டும்… யாரை வேணுன்னாலும் கல்யாணம் பண்ணி கொடுக்கட்டும். ஐ டோன்ட் கேர்…” – அலட்சியமாக தோளை குலுக்கினான்.

 

********************

 

வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள். எந்த தடங்கலும் இல்லாமல் வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கும் மதுராவின் திருமண பேச்சுவார்த்தை அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தாலும், மாயாவின் மன அமைதிக்கு உலை வைத்துவிட்டது. அங்கே தன் தங்கையை அழ வைத்துவிட்டு, இங்கே மதுராவை கொண்டாடுகிறார்களே என்று அவள் உள்ளம் எரிந்தது.

 

தன் தங்கைப்படும் இன்னல்களை மதுராவும் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தாள். பாரதி திலீப்பை காதலித்துவிட்டாள். ஆனால் மதுரா! அவளும் காதலிக்க வேண்டும். தேவ் பாயை காதலிக்க வேண்டும். அது மட்டும் நடந்துவிட்டால், அவள் பொறியில் சிக்கிய எலிதான். – அவளை சிக்கவைக்க வேண்டும் என்கிற சிந்தனையில் மூளையை கசக்கியவளுக்கு சட்டென்று பொறிதட்டியதது.

 

உடனே தன் மகள் ஆதிராவை அழைத்து அவளிடம் நயமாகப் பேச்சு கொடுத்தாள். குழந்தையின் மனநிலை தான் விரும்பிய பதத்திற்கு வந்ததும், கைபேசியில் தேவ்ராஜை அழைத்து மக்களிடம் கொடுத்தாள்.

 

“சொல்லு மாயா…”

 

“மாமூ…” – கொஞ்சியது குழந்தையின் குரல்.

 

“ஓஹ்! மை க்யூட்டி…! ஹௌ ஆர் யு?” – கறகறக்கும் கடுமையான குரல் இப்போது குழைந்தது.

 

“நாட் குட் மாமூ…” – சோகம்.

 

“நாட் குட்…! ஏன்?”

 

“பசிக்குது…”

 

“பசிக்குதா! மம் சாப்பிடலையா நீ! அம்மா எங்க?”

 

“மம் வேணாம் மாமூ… ஐகீம்தான் வேணும். ஐகீம் பசிக்குது…”

 

“வாட்! ஐகீம் பசி!” என்று ஒரு நொடி வியந்தவன் மறுநொடியே வாய்விட்டு கடகடவென்று சிரித்தான். “ஓஹ்! மை லிட்டில் க்யூட்டி..! யூ ஆர் சோ ஸ்மார்ட்…” என்று கொஞ்சி, “உம்ம்ம்ம்மா” போனிலேயே அழுத்தமாக முத்தம் கொடுத்தான்.

 

“ஐகீம் மாமூ…” – கருமமே கண்ணாக ஐஸ்கிரீம் குறியாகவே இருந்தது குழந்தை.

 

“ஓகே மை டியர்… இன்னும் ஒரு மணிநேரத்துல மாமூ அங்க வர்றேன். உன்ன வெளியே கூட்டிட்டு போறேன். ஆல் ரைட்?”

 

“தேங்க் யூ மாமூ…” – சாதித்துவிட்ட சந்தோஷத்தில் குழந்தை குதிக்க, அதே சந்தோஷத்துடன் மாயாவும் துள்ளினாள்.

 

அடுத்த சில நிமிடங்களில், “கடவுளே..!” என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தாள் மாயா.

 

“என்ன மாயா! என்ன ஆச்சு!” – டிவி பார்த்துக் கொண்டிருந்த ப்ரபாவதியின் கவனம் மருமகளிடம் திரும்பியது.

 

“வயிறு வலிக்குது”

 

“என்ன ஆச்சு திடீர்ன்னு!”

 

“தெரியல. ரெம்ப வலிக்குது.. ஆ… ம்மா…” – அவளுடைய வேதனையைக் கண்டு பிரபாவதிக்கு பதட்டமாகிவிட்டது. “மது…!” என்று மகளை உதவிக்கு அழைத்தாள். அடுத்த நொடியே அவளும் அங்கே வந்துவிட்டாள்.

 

“மாயாவுக்கு வயிறு வலிக்குதாம். ஐஸ் வாட்டர் கொண்டுவா” – மதுரா கொண்டு வந்துக் கொடுத்த ஐஸ் வாட்டர் வைத்தியமோ அல்லது பிரபாவதி முயன்று பார்த்த மற்ற கைவைத்தியங்களோ எதுவுமே பலனளிக்கவில்லை. மாயாவின் துடிப்பும் பிரபாவதியின் பதட்டமும் அதிகமானது.

 

“மது… அண்ணனுக்கு போன் பண்ணு. சீக்கிரம்…”

 

“இல்ல.. வேண்டாம்… எதுக்கு ஆபீஸ் டைம்ல… வேண்டாம்… ஐ வில் மேனேஜ்…” – வலியோடு வழியாக பேசினாள் மாயா

 

“எப்படி! இவ்வளவு கஷ்ட்டப்படறியே!”

 

“ட்ரைவரை கார் ரெடி பண்ண செல்லுங்க. ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்துடறேன்”

 

“தனியாவா!”

 

“இட்ஸ் ஓகே..”

 

“நோ நோ…. ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணு. நா வர்றேன். மது… டிரைவருக்கு கால் பண்ணி காரை கேட்டுக்கு கொண்டுவர சொல்லு… ஆதிரா எங்க?”

 

“ரூம்ல விளையாடிட்டு இருக்கா…”

 

“ஓகே… குழந்தையை பத்திரமா பார்த்துக்கோ. நா மாயாவோட போயிட்டு வந்துடறேன்” – மகளை அறிவுறுத்தியபடியே உடைமாற்றி தயாராகிவிட்டவள், உடனடியாக மருமகளை அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.

 




7 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha khaliq says:

    Hi Nithya…..Dev ku madhura maela endha abiprayamum illai alachiyam dhaan….adhuvum avan thangaikaga dhaan thirumanam seiranam….evvalavu thimir…..Maya….sariyana sadist…..thangai sandhoshama illaina nathanarum sandoshama iruka koodadha….ennama thittam podra….kudumbame ara crack dhaan pola….thaangal ninaichadhai saadhicharanum adhuku endha level kum poranga…,Dev ku kulandhai aadhira maela ulla pasathai payan paduthi ennama thittam podra….loose….aval thittatula madhura vizhunthuruvala☹️


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pons says:

    என்ன சரவணா இது..
    நித்யா..அரக்கன் வர்றானே..
    என்ன நடக்கும்


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      அரக்கன்… சரியான பெயர்… நன்றி அக்கா… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    மாயாவின் போக்கு சரியில்லையே,தன் தங்கை ஒரு தலையாக காதலித்தார் அதனால் திலீப்பிற்கு வருப்பமின்மையால் திலீப்புடனான திருமணப்பேச்சு தடைப்பட்டது,அதற்காக மதுரைவந்த கொண்டாடுகின்றார்கள் அந்தப்பெண் வருந்தணும்,தேவ்வை கதலிக்க வைத்து பொறியில் மாட்டிய எலி மாதிரி ஆகணும் என்று நினைப்பது கூடாத செயலும் எண்ணமும்.

    நன்றி


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Thadsayani Aravinthan says:

      மாயாவின் போக்கு சரியில்லையே,தன் தங்கை ஒரு தலையாக காதலித்தார்,திலீப்பிற்கு விருப்பமின்மையால் திலீப்புடனான திருமணப்பேச்சு தடைப்பட்டது,அதற்காக மதுவை வீட்டில் கொண்டாடுகின்றார்கள் என்பதற்காக,அந்தப்பெண் வருந்தணும்,தேவ்வை காதலிக்கவைத்து பொறியில் மாட்டிய எலி மாதிரி ஆகணும் என்று நினைப்பது கூடாத செயலும் எண்ணமும்.

      எவ்வளவு எழுத்துப்பிழை மேலே மன்னிக்கவும்,


      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        admin says:

        மிக்க நன்றி தோழி… பிழை இருந்தாலும், சொல்ல வந்த கருத்து புரிந்துவிட்டது… நீங்கள் தொடர்ந்து தளத்திற்கு வந்து கதையை படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்…:)

You cannot copy content of this page