Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 6

அத்தியாயம் – 6

‘ஒண்ணும் இல்லாத விஷயத்தை பெருசாக்கரதுல இவளை மிஞ்ச யாராலும் முடியாது…’ – உள்ளுக்குள் பொறுமியபடி சோபாவில் வந்து அமர்ந்தாள் பிரபாவதி. உடன் வந்த மாயா சோர்வாக இருப்பது போன்ற பாவனையுடன் தன்னுடைய அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

 

“ஆஷா, குடிக்க தண்ணி கொண்டுவா” – வேலைக்கார பெண்ணிடம் கூறிவிட்டு நன்றாக சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள். அலைச்சல் பாதி… டென்ஷன் பாதி. உண்மையில் சோர்ந்து போனது பிரபாவதிதான்.

 

“ம்மா… ஆர் யு ஓகே? அண்ணிக்கு என்ன ஆச்சு? டாக்டர் என்ன சொன்னாங்க?” – கனிவுடன் தாய்க்கு அருகில் வந்து அமர்ந்தாள்.

 

“ஐம் ஜஸ்ட் டயர்ட்… மாயாவுக்கு ஒண்ணும் இல்ல. நல்லாத்தான் இருக்கா. ஹீட் அதிகமாகி வயிறு வலிச்சிருக்கும்னு சொன்னாங்க. வேற எதுவும் இல்ல. குட்டிமா எங்க?”

 

“தேவ் வந்திருந்தாங்க. குட்டிமாவ வெளியே கூட்டிட்டு போயிருக்காங்க”

 

“தேவ் வந்திருந்தானா!” – ஆச்சர்யப்பட்டாள்.

 

“ம்ம்ம்…”

 

‘திடீர்ன்னு வந்திருக்கான். அதுவும் வீட்ல யாரும் இல்லாதப்போ!’ – சிந்தனையுடன் சுருங்கியது அவள் புருவம்.

 

“ஆஷா எப்போ வந்தா? சீக்கிரம் வந்துட்டாளா?” – பதட்டத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இயல்பாகக் கேட்டாள். ஆனால் தாயின் முகமாற்றத்தை புரிந்து கொண்ட மகள் சங்கடத்துடன், “இல்லம்மா… லேட்டாதான் வந்தா” என்றாள்.

 

சற்றுநேரம் எதுவும் பேசாமல், டீப்பாயில் கிடந்த மேகஸீனை எடுத்து புரட்டிய பிரபாவதி, “தனியாத்தான் இருந்தியா?” என்றாள்.

 

“நானும்… குட்டிமாவும்” – தாயின் குறுக்கு விசாரணையில் மிகவும் சங்கடப்பட்டாள் மதுரா.

 

“என்ன சொன்னான்?”

 

“என்கிட்ட எதுவும் சொல்லல. குட்டிமாவை கூட்டிட்டு உடனே போய்ட்டாங்க” – தாயை திருப்திப்படுத்த துடித்தாள். அவள் மீது எந்த தவறும் இல்லை. ஆனாலும் ஏனோ சங்கடசமாக இருந்தது. தாயின் முகமாற்றத்தை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

பிரபாவதியும் கட்டுப்பெட்டியான பெண்மணி அல்ல. மகளை சுதந்திரமாகத்தான் வளர்ந்தாள். ஆனால் தேவ்ராஜ் வில்லங்கமானவன். குறுக்குவழியில் சாதிப்பவன். இப்போது கூட, மாயாவின் உதவியோடு மதுராவை தனிமையில் சந்திக்க முயன்றிருக்கலாம். மகளை எச்சரிக்க வேண்டியது தாயின் கடமை. மதுராவை ஆழ்ந்துப் பார்த்தாள் பிரபாவதி.

 

“என்னம்மா?” – மலங்க விழித்தாள் மதுரா. மகளின் தலையை அன்போடு வருடிய பிரபாவதி, “அவன் ரொம்ப ஆபத்தானவன். அவனோட நிழல் கூட உம்மேல படக் கூடாது மது” என்றாள். பதில் சொல்லத்தெரியாமல் தாயின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் மகள்.

 

“உலகத்துலேயே அவன்தான் பெரிய ஆளுன்னு உங்க அப்பா நெனச்சுக்கிட்டு இருக்காரு. ஆனா அவன் ஒரு கிரிமினல்… முரடன்… அவன்கிட்டேருந்து எவ்வாவு முடியுமோ அவ்வளவு விலகி இருக்கணும். புரியுதா?”

 

“ஓகே மா…” – உடனே கீழ்படிந்தாள். அவன் இருக்கும் திசை பக்கம் கூட திரும்பக்கூடாது என்று தனக்குள் சங்கல்பம் செய்துகொண்டாள்.

 

சோர்வாக இருந்ததால் பிரபாவதி தன்னுடைய அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். தாய் சொன்ன அறிவுரையையும், அவனுடைய நடத்தையையும் ஒப்பிட்டு சிந்தனை செய்தபடி தன்னுடைய, வார்ட்ராப் எனப்படும் துணிமணிகள் வைக்கும் அலமாரியை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். கைபேசி அவளுடைய சிந்தனையில் குறுக்கிட்டது. யாரென்று பார்த்தாள். மாயாவின் முகம் திரையில் ஒளிர்ந்தது.

 

‘பக்கத்து ரூம்லேருந்து ஃபோனா!’ – தோள்களை குளிக்கியபடி அழைப்பை ஏற்றாள்.

 

“சொல்லுங்க அண்ணி”

 

“தேவ் பாய் கீழ வெயிட் பண்ணறீங்க. நீ போயி குட்டிமாவ தூக்கிட்டு வந்துடறீயா? எனக்கு ரொம்ப கஷ்ட்டமா இருக்கு. பெட்லேருந்து கீழ கூட இறங்க முடியல. ப்ளீஸ்…” – நயமாக பேசினாள்.

 

“ஆனா… நா எப்படி…?” – தடுமாறினாள் மதுரா. அவளை மறுத்துப் பேச வேண்டும். ஆனால் எப்படி? வார்த்தைகளை கோர்க்க முடியாமல் திணறினாள்.

 

“ப்ளீஸ் மது… ”

 

“அண்ணி… நா… எனக்கு… ஹாங்… ஆஷாவை வேணுன்னா அனுப்பட்டுமா? அவ போயி கூட்டிட்டு வந்துடுவா”

 

“ஆஷாவை அனுப்பறீயா! கீழ வெயிட் பண்ணறது என்னோட அண்ணன்…” – கடுமையாக வெளிப்பட்டது அவளுடைய குரல். உடனே பதட்டமடைந்தாள் மதுரா.

 

“ஓகே… நானே போயி கூட்டிட்டு வர்றேன்”

 

“தேவையில்லை மதுரா. நீ உன்னோட வேலையை பாரு. நானே கீழ போயி என்னோட குழந்தையை கூட்டிட்டு வந்துக்கறேன்” – நொடித்துக்கொண்டாள்.

 

“இல்ல அண்ணி… இல்ல… ப்ளீஸ்… நீங்க ரெஸ்ட் எடுங்க… நா… நா பார்த்துக்கறேன்” – அவசரமாக அவளை சமாதானம் செய்துவிட்டு தன்னுடைய அறையிலிருந்து வெளியேறியவள், தாயின் அறையைக் கண்டதும் சற்று தயங்கினாள். அடுத்து அவளுடைய பார்வை மாயாவின் அறையை நோக்கிப் பாய்ந்தது. ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றியவள், ஆஷாவை தன்னோடு அழைத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.

 

மெயின் கேட்டிற்கு வெளியே நேர்த்தியான… அழகான… ஸ்லிம்மான… கருப்பு மெர்சிடிஸ் நின்றுக் கொண்டிருந்தது. கண்ணாடிகளெல்லாம் மூடியிருந்ததால் உள்ளே இருப்பது யாரென்று பார்க்க முடியவில்லை. ஆனால் அது அவனுடைய காராகத்தான் இருக்க வேண்டும்.

 

“நீ போயி குட்டிமாவை தூக்கிட்டு வா…. நா இங்கேயே இருக்கேன்” – கட்டிடத்திற்கு வெளியே வந்து நின்றுக் கொண்டு வேலைக்காரியை மட்டும் அனுப்பினாள்.

 

கேட்டை திறந்து கொண்டு வெளியே வந்த ஆஷா கரை நெருங்கியதும் அவன் கண்ணாடியை இறக்கினான். முகம் கடுகடுவென்றிருந்தது. குழந்தை சீட்டில் சாய்ந்தபடியே உறங்கி கொண்டிருந்தது. பின்பக்கத்து கதவை ‘அன் லாக்’ செய்து, “பின்னாடி இருக்க திங்ஸையெல்லாம் எடுத்துட்டு போ. போயி மாயாவை வர சொல்லு”

 

“மாயா மேம் ரெஸ்ட் எடுக்கறாங்க சார். அவங்களுக்கு உடம்பு சரியில்ல”

 

“குழந்தை தூங்கறா. நீ தூக்கிட்டு போக முடியாது. போயி மாயாவை வர சொல்லு” – சிடுசிடுவென்று எரிந்து விழுந்தான்.

 

“சரி சார்…” – பின்பக்கக் கதவைத் திறந்து, விளையாட்டுப் பொருட்கள் நிறைந்த பைகளை கைக்கொள்ளாமல் அள்ளிக்கொண்டு, மீண்டும் கதவை மூடிவிட்டு மதுராவை நோக்கி வந்தாள் ஆஷா.

 

“மாயா மேம்தான் வரணுமாம் மேம்”

 

“ஏன்?”

 

“குழந்தை தூங்குது”

 

“அதனால என்ன… கொடு…. இந்த பேகையெல்லாம் என்கிட்ட கொடுத்துட்டு நீ போயி குழந்தையை தூக்கிட்டு வா”

 

“இல்ல மேம்… அவர் ரொம்ப கோவமா இருக்கார்” – பயந்தாள் ஆஷா. அவளை சொல்லியும் குற்றமில்லை. என்ன சொன்னான் என்பது கேட்கவில்லை என்றாலும் அவனுடைய கடுகடுத்த முகத்தையும் சிடுசிடுவென்று ஏதோ சொன்னதையும் பார்த்துக் கொண்டுதானே இருந்தாள் மதுரா. எனவே ஓரிரு நொடிகள் யோசித்துவிட்டு, “சரி… ஒரு நிமிஷம் நீ இங்கேயே இரு. நா போயி குட்டிமாவை தூக்கிட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு சென்றாள்.

 

ரேபன் குளிர்கண்ணாடி அணிந்திருந்தவனின் பார்வை சாலையில் நிலைத்திருந்தது. ஸ்டியரிங் வீலை இறுக்கிப்பிடித்திருந்த கைகளும், இறுகியிருந்த தாடையும் அவனுடைய டென்ஷனை எடுத்துக் கூறின. அவள் சற்று நேரம் காத்திருந்தாள். அவனுடைய பார்வை அவள் பக்கம் திரும்பவே இல்லை. அவளுடைய பார்வை ட்ரைவர் சீட்டைவிட்டு பேஸஞ்சர் சீட்டிற்கு இடம் மாறியது. சீட்டில் சாய்ந்து அமர்ந்தபடி மெல்லிய குறட்டையை வெளியேற்றிக் கொண்டிருந்த குழந்தை சீட் பெல்டின் உதவியால் நழுவாமலிருந்தது. கதவை திறக்க முயன்றாள். முடியவில்லை. சென்ட்டர் லாக் போட்டிருக்கிறான்.

 

“குட்டிமா! ஆதிரா குட்டி…” – குழந்தையை எழுப்புவது போல் அவனுடைய கவனத்தை தன் பக்கம் திருப்ப முயன்றாள். சட்டென்று அவள் பக்கம் திரும்பியவன் பயங்கரமாக முறைத்தான். ‘என்ன செய்துவிட்டோம்! இப்படி முறைக்கிறான்!’ – திருதிருவென்று விழித்தாள்.

 

“கண்ணு தெரியாதா உனக்கு?” – அடி குரலில் சீறினான். தெரியாமலென்ன! நன்றாகத் தெரிகிறதே! ஹிட்லர் முறைக்கிறான்! ஏஞ்சல் உறங்குகிறாள்! – நினைப்பதை வெளியே சொல்ல முடியாமல் நின்றாள்.

 

“தூங்கற குழந்தையை எழுப்பற?” என்றான் கட்டுப்படுத்த முடியாத எரிச்சலுடன். சற்று நேரம் அவனையே குறுகுறுவென்று பார்த்த மதுரா, “டோரை அன் லாக் பண்ணுங்க… ப்ளீஸ்…” என்றாள் மெல்லிய குரலில். ஓரிரு நொடிகள் எதுவும் சொல்லாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், பிறகு அவள் சொன்னதை செய்தான். கதவைத் திறந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டவள், திரும்பி நடப்பதற்குள் அசுர வேகத்தில் அங்கிருந்து பறந்தது கார்.

 




10 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sesily Viyagappan says:

    Nice ep


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pons says:

    மிரட்டுறானே…


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      அதுதானே அவனுக்கு வேலை…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya says:

    Super. 👍👍👍


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Priya… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sasi says:

    Awesome story.. we really missed your writing.. Eagarly waiting for the next update


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Sasi… Welcome to Sahaptham… Neenga thodarndhu encourage koduththutte irundhaa naan kandippaa thodarndhu ezhudhuven… 😉

      Happy to see your comments…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    நன்றாக இருந்தது இப்பகுதி .

    நன்றி


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      நன்றி தோழி…

You cannot copy content of this page