கனல்விழி காதல் – 7
10430
12
அத்தியாயம் – 7
‘அடுத்தவாரம் ஹோட்டல் சஹாராவில் ஒரு பார்ட்டி. அப்பாவின் பிசினஸ் நண்பர்கள் குடும்பத்துடன் கெட் டு கெதர். எந்த உடையை உடுத்திக்கொள்வது!’ – குழப்பத்துடன் வார்ட்ராபை குடைந்துக் கொண்டிருந்தாள் மதுரா. இந்த பிரச்சனைக்காகவே இது போன்ற விழாக்களை தவிர்த்துவிடுவது அவள் வழக்கம். ஆனால் இந்த முறை ஏனோ நரேந்திரமூர்த்தி அவளை கட்டாயப்படுத்துகிறார்.
“என்ன பண்ணிட்டு இருக்க மதுரா?” – கையில் இரண்டு பீங்கான் கோப்பைகளோடு உள்ளே வந்தாள் மாயா.
“நெஸ்ட் வீக் ஒரு பார்ட்டி இருக்கு அண்ணி. டிரஸ் ச்சூஸ் பண்ணிட்டு இருக்கேன்”
“நா வேணுன்னா ஹெல்ப் பண்ணட்டுமா?”
“கண்டிப்பா. வாங்க… எந்த டிரஸ் நல்லா இருக்கும்… உங்களோட சாய்ஸ் என்ன சொல்லுங்க”
“அதுக்கு முன்னாடி நீ இந்த கப்பை பிடி”
“என்ன இது? ஓஹ்! ஐஸ் கிரீம்!” என்றபடி ஒரு கப்பை கையில் வாங்கி கொண்டாள்.
“ம்ம்ம்… பட்டர் ஸ்காட்ச். உனக்கு பிடிக்கும்ன்னு கொண்டு வந்தேன்”
“தேங்க்ஸ் அண்ணி” – புன்னகையுடன் மகிழ்ந்து ருசித்தாள்.
“பார்ட்டி எங்க?” – மதுராவோடு சேர்ந்து தானும் ஐஸ் கிரீமை ரசித்தபடி அவளிடம் நட்போடு நெருங்கினாள். மதுரா மிகவும் மகிழ்ந்து போனாள். அன்பும் நட்பும் யாரைத்தான் மகிழ்விக்காது!
“சஹாரால அண்ணி”
தன் கையிலிருந்த கேப்பையை ஓரமாக வைத்துவிட்டு மதுராவின் உடை குவியலில் மூழ்கினாள் மாயா. அனைத்து உடைகளையும் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள்.
“என்ன மதுரா இது? ஒண்ணுமே தேறலையே!”
“ஒண்ணு கூட சரியில்லையா அண்ணி”
“பரவால்லாம இருக்கு. ஆனா சஹாரால பார்ட்டின்னு சொல்ற! இதை எப்படி போட்டுட்டு போவ? ஒண்ணு பண்ணலாம்… ஷோபா கலெக்ஷன்ஸ்ல புதுசா குட்ஸ் வந்திருக்காம். நாம போயி பார்க்கலாம். அப்படியே ட்ரெஸ்ஸுக்கு மேட்சா ஆக்சஸரீஸ், சண்டின்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்துடலாம். ஓகே?”
“நீங்களும் என் கூட ஷாப்பிங் வர போறீங்களா!”
“கண்டிப்பா”
“ஓ! தேங்க் யு…. தேங்க் யு சோ மச்…” – உற்சாகமானாள் மதுரா.
“ஐஸ் கிரீம் பிடிச்சிருக்கா மது?”
“ம்ம்ம்… நல்லா இருக்கு…”
“தேவ் பாய் வாங்கிட்டு வந்தது. அவருக்கும் பட்டர் ஸ்காட்ச் தான் பிடிக்கும். உங்க ரெண்டு பேரோட டேஸ்ட்டும் ஒத்துப் போகுதுல்ல…” – கண்ணடித்து சிரித்தாள். மதுராவின் முகத்திலிருந்த புன்னகை காணாமல் போனது. மாயாவின் சிரிப்பிற்கும் நட்பு பாராட்டலுக்குமான காரணம் விளங்குவது போல் தோன்றியது.
“தேவ் பாய் ரொம்ப நல்ல டைப் மது. திறமைசாலி, சின்ன வயசுலேருந்து கஷ்ட்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். கொஞ்சம் கோவம் வரும். ஆனா அருமையான குணம்…” – ஆஹா ஓஹோவென்று அள்ளிவிட்டாள். அனைத்தையும் ஆர்வமாக கேட்பது போல் நடித்துக் கொண்டிருந்தாள் மதுரா. வேறு வழி? யாரையும் புண்படுத்தும் பழக்கமில்லாதவள். அண்ணியின் மனதை காயப்படுத்த மனமில்லாமல் அமைதியாக இருந்தாள். ஆனால் மாயாவின் நோக்கம் அவளுக்கு புரிந்தேயிருந்தது.
***********
பெண்களுக்கான துணிமணிகள் மற்றும் அழகுசாத பொருட்களை விற்கும் ஷோபாஸ் கலெக்ஷன்ஸ் என்னும் அந்த பொட்டிக் ஷாப் மும்பை மேல்தட்டு வர்க்க பெண்களின் மத்தியில் மிகவும் பிரபலமானது. தனித்தன்மை வாய்ந்த அணிமணிகள் வேண்டுமெண்டென்றால் ஷோபாஸ் தான் என்னும் அளவிற்கு பிரபலமானது. அங்குதான் இப்போது மதுராவை அழைத்துக் கொண்டு மாயா வந்திருந்தாள். குழந்தையை உடன் அழைத்து வந்தால், பொருட்களை பொறுமையாக பார்த்து தேர்வு செய்ய முடியாது. எனவே அன்று காலை துருவன் அலுவலகம் செல்லும் போதே, குழந்தையையும் அவனோடு அனுப்பி, தன் தாய் ராஜேஸ்வரியிடம் விட்டுவிடும்படி கூறிவிட்டாள். மதியத்திற்கு மேல் பொறுமையாக கிளம்பி கடைக்கு வந்து, பார்த்துப் பார்த்து பொருட்களை தேர்வு செய்தாள்.
“டைம் ஆச்சு அண்ணி. குட்டிமா வேற காலையிலிருந்து உங்களை விட்டுட்டு தனியா இருக்கா” என்று இரண்டொரு முறை நினைவுபடுத்தினாள் மதுரா. ஆனால் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் கருமமே கண்ணாக மதுராவிற்கு தேவையான சாமான்களை சேகரிப்பதில் மும்மரம் காட்டினாள் மாயா.
சூரியன் மேற்கில் சாயத்துவங்கிவிட்டது. இன்னும் ஓரிரு நாழிகையில் இருட்டிவிடும். “அண்ணி… கிளம்பலாமா?”
“ம்ம்ம்… தலைவலியா இருக்கு. பக்கத்துல ஒரு நல்ல காபி ஷாப் இருக்கு. வா, ஒரு காபி குடிச்சுட்டு போகலாம்” – மதுராவின் பதிலை எதிர்பார்க்காமல் அவளை இழுத்துச் சென்றாள்.
“அண்ணன் ஆஃபீசிலேருந்து வர்றதுக்கு லேட் ஆகுமே! குட்டிமா எப்படி வீட்டுக்கு வருவா?” – இருவரும் ‘த்ரிஷ்னா காபி ரூம்’ எனப்படும் அந்த பிரம்மாண்டமான காபி கடைக்குள் நுழைந்தார்கள்.
“அதை நான் பார்த்துக்கறேன். நீ என்ன சாப்பிடற? ஆர்டர் பண்ணு. நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடறேன்” – மதுராவை கார்னர் டேபிளில் அமரவைத்துவிட்டு தனியாக வந்து தன் அண்ணனை கைபேசியில் தொடர்புகொண்டாள்.
“உனக்கென்ன பைத்தியமா? ஐம் ரியலி பிஸி. என்னால வர முடியாது” – சிடுசிடுத்தான் தேவ்ராஜ்.
“பாய்… ப்ளீஸ்… குட்டிமா காலையிலிருந்து அம்மாகிட்ட இருக்கா. டைம் ஆச்சு. அவளை கொஞ்சம் கூட்டிட்டு வந்து விட்டுடுங்க…”
“யு ஆர் ஜஸ்ட் இம்ப்பாஸிபில் மாயா…” – அலுத்துக்கொண்டான்.
“தேவ் பாய்… ப்ளீஸ் …”
“ஐம் சாரி… என்னால முடியாது”
“அவ அழ ஆரம்பிச்சுடுவா”
“அவளை அம்மாட்ட விட்டுட்டு, இவ்வளவு நேரம் நீ வெளியில என்ன பண்ணற?”
“ஷாப்பிங்…” – தங்கையின் பதிலைக் கேட்ட தேவ்ராஜ் மௌனமானான். கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்கிறான் என்று அவளுக்கு புரிந்தது.
“ஓகே… குழந்தையை ட்ரைவரோட அனுப்பி வைங்க… நா அட்ரஸ் அனுப்பறேன்” மெல்லிய குரலில் சொன்னாள்.
“யு ஜஸ்ட் ஷாட் அப் ஓகே…” – கத்தினான். அவள் சட்டென்று போனை காதிலிருந்து அகற்றினாள். ‘ப்ப்பா..!’ – காது ‘ங்கொய்’ என்றது. அமைதியாக இருந்தாள். அவனுடைய கோப பெருமூச்சு போனில் கேட்டது. பேச பயமாக இருந்தது. ஆனாலும் பேசித்தான் ஆக வேண்டும்.
“பாய்… த்ரிஷ்னா காபி ரூம்… நெஸ்ட் டு ஷோபாஸ் கலெக்ஷன்ஸ்…” – தான் இருக்கும் இடத்தை அவனுக்குத் தெரியப்படுத்தினாள். பட்டென்று அழைப்பை துண்டித்துவிட்டான் அவன். ‘வருவானா!’ – யோசித்தாள். வருவானென்றே தோன்றியது. அவனுடைய ஒரே பலவீனம் ஆதிரா… அந்த துருப்புச் சீட்டைதானே இன்றும் பயன்படுத்தியிருக்கிறாள். வேலை செய்யாமல் போய்விடுமா என்ன! புன்சிரிப்போடு ரெஸ்ட்ரூமிலிருந்து வெளியேறினாள் மாயா.
கையிலிருக்கும் காப்பச்சீனோவை சுவைத்தபடி தன்னுடைய கைபேசியை தட்டிக் கொண்டிருந்தாள் மதுரா. அவளுக்கருகே ஷாப்பிங் பைகள் குவிந்திருந்தன. அவளுடைய பார்ட்டிக்கு தேவையான ஆடை, அணிமணிகள், காலணிகள் மற்றும் இதர வகையறாக்களையெல்லாம் வாங்கி குவித்திருந்தாள் மாயா. மதுரா, ‘போதும் போதும்’ என்று தடுத்தும் அவள் கேட்கவில்லை. அவ்வளவு அன்பையும் பொழிந்துவிட்டு, இப்போது தன் அண்ணனை அங்கே வர வைக்கும் வேலையையும் செய்துவிட்டு, ஒன்றும் அறியா பிள்ளை போல் அமைதியாக வந்து அமர்ந்தாள்.
12 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Periyasamy says:
Nice epi
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
HOOOOOO MAYA ORU MATHREE THEETAM PODARAAAAAAA BUT DEVBAIIIIIIIIIIII
PLAN YENNAVUUUUUU
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Hi Ugina… Welcome to Sahaptham…
Dev plan ennanu guess pannunga Ugina…. 🙂
Thanks for the comment…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
மாயா நல்லவங்களா கெட்டவங்களா,மதுராவுக்கு புரிந்துதான் இருக்கின்றது தன் அண்ணியின் எண்ணம் ,அது இப்போ இன்னும் கொஞ்ச நேரத்தில் நிச்சயமாகிவிடும் தேவராஜன் வருகையால்,யாரையும் புண்படுத்தாத மதுராவின் இந்த குணம் பின் நாளில் தான் புண்பட்டு போவதற்கு காரணமாக அமையுமென்று நினைக்கிறேன் .
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
நன்றி தோழி…. //யாரையும் புண்படுத்தாத மதுராவின் குணம்// புண்படுத்துவது தேவ்ராஜின் வழக்கம்… ஹும்ம்ம்… எப்படி சமாளிக்கப்போகிறாள்! – கதையின் ஓட்டத்தில் தெரிந்துக்கொள்ளலாம்…. 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pons says:
சிக்க வைக்கிறாள்.
மாயா மோசம்.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
நன்றி அக்கா… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Priya says:
Maya sema kati. Pavam meithu.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Priya…. 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sasi says:
Thank you for this update… awesome
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Sasi… 🙂