கனல்விழி காதல் – 10
10516
9
அத்தியாயம் – 10
அன்று ஞாயிற்றுக் கிழமை. வீட்டில் இருந்தாலும் வேலை விடுப்புக் கொடுக்கவில்லை. ஹால் சோபாவில் சொகுசாக சாய்ந்து அமர்ந்தபடி மடிக்கணினியில் மூழ்கியிருந்தான் தேவ்ராஜ். அவன் முகம் கடுகடுவென்றிருந்தது. ஏதோ கோபமாக இருக்கிறன் என்று தெரிந்தது. ஆனால் அதைவிட அதிக கோபத்தோடு அங்கே வந்த ராஜேஸ்வரி,
“இந்த பிரச்னையை வளர்த்துக்கிட்டே போகாத… முடிச்சுக்கோன்னு சொன்னேல்ல தேவ்? கேட்டியா? நம்மளோட சொந்த பிரச்னை, ஊருக்கெல்லாம் பொழுதுபோக்கா ஆயிடிச்சு… என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என்றபடி அவனுக்கு எதிரில் அமர்ந்தாள்.
டிவி சேனல்களை கட்டுப்படுத்திய தேவ்ராஜ் குரூப் சமூக வலைத்தளங்களை மறந்துவிட்டது. இயக்குனர் அரவிந்த் குப்தாவின் வீடியோக்கள் அடுத்தடுத்து வைரலாகி கொண்டிருந்தது. ஆரம்பத்தில் துஷ்மன் படம் சார்ந்த பிரச்சனைகளை மட்டும் பேசியவர், போகப்போக தயாரிப்பாளரின் தனிப்பட்ட வாழ்க்கையையும், அவருடைய மகன் தங்களுக்கு கொடுக்கும் பிரச்சனைகளை பற்றியும் வெளிப்படையாகப் பேச துவங்கிவிட்டார். அதை பார்த்ததும் பதட்டமடைந்த இராஜேஸ்வரி மகனிடம் வந்து குதித்தாள்.
அவனோ வெகு நிதானமாக, “நா என்ன பண்ணிட்டு இருக்கேன்னு எனக்கு நல்லா தெரியும். யு ஜஸ்ட் காம் டௌன்…” என்றான்.
“நா எப்படி அமைதியா இருக்க முடியும் தேவ். என்னோட தனிப்பட்ட விஷயத்தை நீ பப்லிக்கா கொண்டுவந்துட்ட” – எடுத்தெறிந்து பேசினாள். சட்டென்று தாயை நிமிர்ந்து பார்த்த தேவராஜ், “இது உங்களோட தனிப்பட்ட பிரச்சனை மட்டும் இல்லம்மா. எங்க மூணு பேரோட வாழ்க்கையும் இதுல சம்மந்தப்பட்டிருக்கு” என்றான் அழுத்தமாக.
இராஜேஸ்வரிக்கு பதில் சொல்ல முடியவில்லை. ஓரிரு நொடிகள் அமைதியாக இருந்தவள், “பத்து வருஷமா தனியா வாழ்ந்துட்டோம். இந்த வாழ்க்கைக்கு பழகிட்டோம். இனி என்னப்பா… எதுக்கு இதெல்லாம்?” என்றாள் வருத்தத்துடன்.
“நா பழக்கலம்மா… எனக்கு இன்னமும் வலிக்குது” – அமைதியாகக் கூறினான். அவன் மனதிலிருக்கும் வேதனை குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது.
“தேவ்…!” – இராஜேஸ்வரி அதிர்ந்தாள். இவ்வளவு துன்பத்தோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறானா! இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட வெளிப்படுத்தியதில்லையே! கவலையோடு மகனைப் பார்த்தாள்.
“பிலீவ் மீ மா… ஐ கேன் ஹாண்டில் இட்… ஐ ரியலி கேன்…” – ‘நம்புங்கம்மா… என்னால இந்த பிரச்னையை சமாளிக்க முடியும்… நிச்சசயமா முடியும்…’ என்று தாய்க்கு உறுதி கொடுத்துவிட்டு தன்னுடைய வேலையில் ஆழ்ந்தான். மகனின் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்துவிட்டாள் தாய். – இவனை நினைத்து பெருமைப் படுவதா அல்லது இறக்கப்படுவதா! விளங்கவில்லை அவளுக்கு.
“மாமூ… பாட்டி…” – சத்தமிட்டபடி தத்தபுத்தவென்று ஓடி வந்தாள் ஆதிரா. அவளைத் தொடர்ந்து மாயாவும் வந்தாள்.
“ஹேய்… க்யூட்டி…” – கணினியை ஓரம்கட்டிவிட்டு, தன் கண்மணியை கையில் ஏந்தி கொண்டான் தேவ்ராஜ்.
“வாங்க… வாங்க… சின்ன குட்டிமா… பெரிய குட்டிமா… ரெண்டு பெரும் போன் பண்ணாம வந்துடீங்க!” – மகளையும் பேத்தியையும் மகிழ்ச்சியோடு வரவேற்றாள் இராஜேஸ்வரி.
“திடீர்னு தோணிச்சு கிளம்பிட்டேம்மா…” – தாய்க்கு பதில் சொல்லிவிட்டு “பாய்…” – தமயனிடம் புன்னகைத்துவிட்டு சோபாவில் வந்து அமர்ந்தாள். பரஸ்பர னால விசாரிப்புகள் நடந்தேறின. வேலைக்காரன் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தான். அவர்கள் வந்திருக்கும் விஷயம் கேள்விப்பட்டு பாரதியும் கீழே இறங்கி வந்தாள். குழந்தையை கொஞ்சினாள். அனைவரும் குடும்பமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் மாயா கேட்டாள், “ஏம்மா… உங்க அன்னான் ஆரம்பத்திலிருந்தே இப்படித்தானா… இல்ல என்னோட மாமியாரை கல்யாணம் பண்ணினதுக்குப் பிறகு இப்படி மாறிட்டாரா?”.
பாரதி அவளை சுவாரஸ்யமாகப் பார்க்க, தேவ்ராஜ் வழக்கம் போல் கூலாக குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான். அவர்களுடைய உரையாடலை அவன் கேக்கிறானா இல்லையா என்பதை கூட யாராலும் ஊகிக்க முடியாது.
“ஏன் அப்படி கேக்கற?” – இராஜேஸ்வரி.
“நேத்து ஏதோ பார்ட்டின்னு சொன்னாங்க… மதுராவையும் கூட கூட்டிட்டு போனாங்க”
“சரி… அதுனால என்ன?”
“நானும் இப்படித்தான்… சாதாரண பார்ட்டின்னு நெனச்சுட்டு இருந்தேன். கடைசில பார்த்தா அந்த ஏர் வாய்ஸ் பையன் இல்ல… அவனை பார்க்க கூட்டிட்டு போயிருக்காங்க” – அவள் கூறியதை கேட்டு இராஜேஸ்வரியும் பாரதியும் வாயடைத்துப் போனார்கள். சற்றுநேரம் அவர்கள் எதுவுமே பேசவில்லை. பிறகு பாரதிதான் கேட்டாள், “உன்கிட்ட யாருமே சொல்லலையா?”.
“ம்ஹும்… ஒருத்தர் கூட வாயை திறக்கலை. அங்கிள் ரொம்ப எதார்த்தமானவர்னு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா அவரும் ரொம்ப கன்னிங் டைப்தான்னு இப்போதான் புரிஞ்சுக்கிட்டேன்”
“ஏய்… அப்படியெல்லாம் பேசாத” – மகளை கண்டித்தாள் ராஜேஸ்வரி.
“நீங்கதாம்மா அண்ணன்… அண்ணன் குடும்பம்னு உருகுறீங்க… அவங்க யாருக்கும் உங்கமேலையோ… இல்ல உங்க குடும்பத்துமேலையோ அக்கறையே இல்ல. இருந்திருந்தா இவ்வளவு சீக்கிரம் மதுராவுக்கு வேற மாப்பிள்ளை பார்ப்பார்களா… இல்ல அதை என்கிட்டேருந்து மறைக்கணுன்னுதான் நினைச்சிருப்பாங்களா?”
“என்ன இருந்தாலும் அவர் என்னோட அண்ணன். எனக்கு இருக்கற ரெத்த பாசம் அவருக்கும் இருக்கும். ஒருவேள அவங்க, உனக்கு தெரிய வேண்டாம்னு சொல்லியிருப்பாங்க” என்று பிரபாவதியின் மீது குற்றத்தை திருப்பிவிட்டாள்.
“அவங்களை விடுங்கம்மா… அது நமக்கு தெரிஞ்ச கதை… ஆனா இந்த மதுரா! அவகூட என்கிட்ட சொல்லவே இல்ல” – மாயாவின் குமுறல் முடிவதற்குள் அங்கே குழந்தையின் குரல் இடையிட்டது.
“ச்சோ… மாமூ.. போச்சு…” – வீடியோ கேம்ஸில் ஓடிக் கொண்டிருந்த உருவம் தேவ்ராஜின் கட்டுப்பாட்டிலிருந்து நழுவி அதலபாதாளத்தில் விழ ஆட்டம் முடிந்துவிட்டது.
மாமனின் மடியிலிருந்தபடி விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்த ஆதிரா, “போங்க மாமூ… நீங்க தோத்துடீங்க… இப்போ நா…” என்றபடி அவனிடமிருந்து செல்போனை பிடுங்கி கொண்டது குழந்தை. கொண்டாள். அவளுடைய குறும்புப் பேச்சை ரசிக்கும் மனநிலையில் அங்கே யாரும் இல்லை.
“ஹேய்… அவ ஒண்ணும் உன்கூட க்ளோஸ் இல்லைல… அவ ஏன் சொல்லணும்?” – மனதில் தோன்றிய சந்தேகத்தைக் கேட்டாள் பாரதி.
“நீவேற பாரதி… அவ பார்ட்டிக்கு போறான்னு சொல்லி… ட்ரெஸ்… ஆக்சஸரீஸ்… எல்லாம் நானே அவளுக்காக செலெக்ட் பண்ணி வாங்கினேன். பிரின்சஸ் மாதிரி டிரஸ் பண்ணி அனுப்பி வச்சேன். கடைசில பார்த்தா கைலாஷை பார்க்க போயிருக்கா! ஒரு வாரம் முழுக்க அவளுக்காக… அவகூடவே… ரொம்ப க்ளோஸா ஸ்பென்ட் பண்ணினேன். அவ இந்த விஷயத்தை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லல. எவ்வளவு அழுத்தம் தெரியுமா!” – மனம் ஆறவே இல்லை அவளுக்கு.
சற்றுநேரம் யாரும் எதுவும் பேசவில்லை. அவள் சொன்ன விஷயத்தை ஜீரணிக்க அவர்களுக்கு அந்த அவகாசம் தேவைப்பட்டது.
“சரி விடு… அவ சின்ன பொண்ணு. அம்மா என்ன சொல்லிக் கொடுத்ததை அப்படியே கேட்டிருப்பா” – அண்ணன் மகளுக்கு பரிந்து பேசிய இராஜேஸ்வரி, அந்த குற்றத்தை அண்ணன் மனைவியின் தலையில் தூக்கி வைக்கவும் மறக்கவில்லை.
“சின்ன பொண்ணா! அவளா..! அவளோட அப்பாவித்தனமான முகத்தை வச்சு எடை போட்டுடாதீங்கமா. அவ சரியான ஆளு…”
“இதுமாதிரியெல்லாம் நீ பேச கூடாது மாயா. அவ…” – அவள் முடிக்கும் முன்பே மாயா தொடர்ந்தாள். “உங்க அண்ணன் பொண்ணு… அதானே! தெரியும்மா… நீங்களும் மாற மாட்டீங்க. அந்த வீட்ல இருக்கவங்களும் மாற மாட்டாங்க. எப்படியோ போங்க” – எரிச்சல்பட்டாள்.
இராஜேஸ்வரி எதுவும் சொல்லவில்லை. சற்றுநேரம் அமைதியாக அமர்ந்திருந்தவள், “அவளுக்கு பையனை புடிச்சிடுச்சா? கல்யாணம் முடிவாயிடிச்சா?” என்றாள். அவள் குரலில் வருத்தம் தெரிந்தது.
“அவளுக்கு, அவனை புடிச்சதா இல்லையான்னெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா அவனுக்கு இவளை சுத்தமா புடிக்கல. வேண்டான்னு சொல்லிட்டு போயிட்டானாம்…” என்றாள் ஏளனமாக.
“என்னது!” – அதிர்ந்தாள் இராஜேஸ்வரி. உண்மையாகவே அவள் மனம் வருந்தியது. திருமணம் தடைபட்டது ஒருவிதத்தில் அவளுக்கு நன்மையாக தோன்றினாலும், யாரோ ஒருவன் தன் அண்ணன் மகளை நிராகரித்துவிட்டான் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“நீங்க ரொம்ப கவலை படாதீங்கம்மா. அவளுக்கு என்ன விதியோ அதுதான் நடக்கும்” என்று அலட்சியமாக கூறினாள் மாயா. அவள் மனதில் வன்மம் தலைவிரித்தாடியது. தன் தங்கை, மனதில் நினைத்தவனை திருமணம் செய்துகொள்ள முடியாமல் அழுவது போல் அவளும், தேவ்ராஜின் மீது ஆசைப்பட்டுவிட்டு அவனை திருமணம் செய்துகொள்ள முடியாமல் காலமெல்லாம் அழவேண்டும் என்கிற வன்மம்.
9 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Reena thayan says:
Kathaiyoddam Arumai
entha photo yarodathu
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
romba nalla anni
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Ugina…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
நாவல் அவ்வளவு விறுவிறுப்பாக போகின்றது,
இப்போ தேவராஜை வீடியோ கேம் விளையாடச் சொல்லுங்கள் பார்க்கலாம் ,பாதாளத்தில் விழுந்த உருவம் மீண்டும் ஓடி தனது இலக்கை அடையும்,ஏனென்றால் அதுதான் மதுரா திருமண பேச்சுவார்த்தை முறிவடைந்துவிட்டதே,மாயா நல்வங்கள் கிடையாது,இப்போதும் அண்ணனை மதுரா திருமணம் செய்யட்டும் நினைக்காமல் காதலித்து ஏமாந்து போகணும் என்று நினைக்கின்றார்.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
ஹா ஹா… பரவாயில்லை. விளக்கமாக சொல்லாமல் ஒரு சின்ன புள்ளி வைத்தேன். புரிந்துகொண்டு கமெண்ட் போட்டிருக்கிறீர்கள்…. குட்… குட்… எக்ஸாம் ல நீங்க பாஸ்…. எபிசோடை நல்ல படிச்சிருக்கீங்க… 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pons says:
கொடூரம் நித்யா..
ஒரொரு அத்தியாயமும்..பக்..பக்குனு இருக்கு …
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
ஹி ஹி… கொடூரம்! என்னக்கா திகில் நாவல் ரேஞ்சுக்கு சொல்லறீங்க…! 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sasi says:
Thank you.. good going
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Sasi