Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 9

அத்தியாயம் – 9

ஹோட்டல் சஹாராவின் பார்ட்டி ஹால் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த அலங்கார மின் விளக்கில் மிளிர்ந்தது. மெல்லிய இன்ஸ்ட்மெண்டல் இசையில் நனைந்தது. அங்கே உயர்தர உணவும் பஃபே முறையில் பங்கெடுத்திருந்தது. லேடீஸ் அண்ட் ஜென்ட்டில் மென், கையில் மது அல்லது பழரச கோப்பையும் உதட்டில் புன்னகையுமாக அளவளாவி மகிழ்ந்தார்கள்.

 

இது போன்ற கொண்டாட்ட விருந்துகள் பல மதுராவின் வீட்டிலேயே அரங்கேறியிருக்கின்றன. அவற்றில் அவள் மகிழ்ச்சியோடு பங்கெடுத்தும் இருக்கிறாள். எனவே அந்த சூழிலை அவளுக்கு புதிதல்ல. விருந்துக்கு வந்திருந்தவர்களில் பலர் அவளுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதாலும், பெற்றோர் கூடவே இருந்ததாலும் அந்நிய உணர்வே இல்லாமல் இயல்பாய் இருந்தாள். ஆனால் உள்ளே ஒரு பதட்டமும் எதிர்பார்ப்பும் இருந்தது.

 

அதற்கான காரணம் கைலாஷ். அவளுடைய வருங்கால வாழ்க்கைத் துணை. இருதரப்பு பெற்றோரும் பேசி முடிவு செய்துவிட்டார்கள். புகைப்படமும் பகிர்ந்துகொண்டாயிற்று. அவனுக்கும் அவளை பிடித்திருக்கிறதாம். அவளை பார்ப்பதற்காகத்தான் இந்த விருந்திற்கே வருகிறானாம். அவனிடம் தனக்குள்ள முக்கியத்துவம் அவளை ஆனந்தப்படுத்தியது. உற்சாகத்துடன் அவன் வரவிற்காக காத்திருந்தாள்.

 

“ஹலோ மிஸ்டர் நரேந்திரமூர்த்தி” – புன்னகையுடன் கையை நீட்டினார் ஏர் வாய்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, கல்யாண்.

 

“ஹல்லோ… உங்களைத்தான் எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருந்தேன். யு ஆர் லிட்டில் லேட்” – உற்ச்சாகமாக அவருடைய கையை பிடித்துக் குலுக்கினார்.

 

“ஐம் சாரி ஃபார் தட். மீட் மை வைஃப் அண்ட் மை சன் கைலாஷ்..”

 

“நைஸ் டு மீட் யு” – தோழமையாக புன்னகைத்தார் நரேந்திரமூர்த்தி. தன்னுடைய குடும்பத்தையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மகிழ்ச்சியோடு அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் உள்ளே ஒரு சின்ன வருத்தம் இருந்துக் கொண்டேதான் இருந்தது. அதை அவரால் தவிர்க்கவே முடியவில்லை.

 

சிறு வயதிலிருந்தே தேவ்ராஜின் திறமையைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். வருங்காலத்தில் உயர்ந்த இடத்திற்கு வருவான் என்று அப்போதே ஊகித்திருந்தார். அவர் நினைத்ததைவிட பல மடங்கு உயர்ந்துவிட்டான். தொழில் வட்டத்தில் பெரிய அந்தஸ்த்தையும் மரியாதையையும் சம்பாதித்துவிட்டான். இன்னும் வளர்வான். சமூகத்தில் தனக்கான அடையாளத்தை அழுத்தமாக பதிய செய்யும் வல்லமை அவனிடம் உள்ளது. அதனால்தான் அவனை தன்னுடைய மாப்பிள்ளையாக்கிக்கொள்வதில் பெரும் ஆர்வம் காட்டினார். அவனில் ஒரு அங்கமாக தன் மகளையும் மாற்றிவிட துடித்தார். ஆனால் அது நடக்கவில்லை.

 

ஆரம்பத்திலிருந்தே அவன் பிடிகொடுக்கவில்லை. திருமணத்திற்கான முன்மொழிதலை இவர் எடுத்துச் செல்லும் பொழுதெல்லாம் ஏதாவது காரணத்தைச் சொல்லி நயமாகத் தட்டிக் கழித்தவன் கடைசியாக பாரதி-திலீப் திருமணத்தைக் காரணம் காட்டி முற்றுப்புள்ளி வைத்துவிட்டான். இப்போதும் அந்த வருத்தம் அவருக்கு இருக்கிறது. எப்போதும் இருக்கும். அவன் வளர வளர அந்த வலி அதிகமாகிக் கொண்டேதான் இருக்கும். ஒரு நீண்ட பெருமூச்சுடன் கைலாஷை பார்த்தார்.

 

தேவ்ராஜ் அளவிற்கு இல்லை என்றாலும் இவனும் நல்ல மாப்பிள்ளைதான். பரவாயில்லை… மனதை தேற்றிக்கொள்ள முயன்றபடி மனைவியை பார்த்தார். அவள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். ஒரு விதத்தில், இந்த வரனை அவர் ஏற்றுக் கொண்டதற்குக் காரணமே பிரபாவதிதான். அவளுடைய அளவுகடந்த ஆர்வம்தான் இந்த வரனை பேசி முடிக்கும் அளவுக்கு அவரை கொண்டு சென்றுவிட்டது. இன்னும் சிலகாலம் தேவ்ராஜிற்காக காத்திருந்திருக்கலாமோ என்று யோசித்தார். ஆனால் காலம் கடந்த யோசனை என்று தன் மனதை உடனே மாற்றிக் கொண்டு மகளை பார்த்தார். அவள் முகத்திலிருந்த சந்தோஷம் அவரை சற்று ஆசுவாசப்படுத்தியது.

 

கைலாஷின் பெற்றோர் கேட்கும் கேள்விகளுக்கு புன்னகையுடன் பதில் சொல்லிக் கொண்டிருந்த மதுரா, சிறு தயக்கத்திற்குப் பிறகு மெல்ல கைலாஷை நிமிர்ந்து பார்த்தாள். நல்ல மொழுமொழுவென்று அழகாக இருந்தான். சாக்கலேட் பாய் என்பார்களே… அது போல் வசீகரமாக இருந்தான். அவள் உள்ளம் மகிழ்ந்தது. அந்த இன்பத்தை அதிகப்படுத்தும் விதமாக, “நா மதுராகிட்ட கொஞ்சம் தனியா பேச விரும்பறேன்” என்றான் கைலாஷ்.

“நிச்சயமா…” – மதுராவின் பெற்றோர் மகிழ்ச்சியோடு சம்மதித்தார்கள். அவனுடைய பெற்றோரிடம் சிறு தயக்கம் தெரிந்ததாகத் தோன்றியது. ஆனால் அது தன்னுடைய பிரம்மையோ என்று அவள் நினைக்கும் அளவிற்கு, “ஹேவ் எ நைஸ் டைம்” என்று அவர்களும் சந்தோஷமாக வாழ்த்தினார்கள். குடும்பத்தினரும் நண்பர்களும் சூழ்ந்திருக்கும் அந்த பெரிய ஹாலிலிருந்து இருவரும் வெளியே வந்தார்கள்.

 

இரவு நேரம் என்றாலும், நிலவொளியோடு போட்டி போட்ட மின்விளக்கின் வெளிச்சம், அந்த பரந்துவிரிந்த புல்வெளியை பகல் போல் மாற்றியிருந்தது. பேச வேண்டும் என்று தனிமையைக் கேட்டு வாங்கியவன், எதுவுமே பேசாமல் அமைதியாக தலைகுனிந்து நின்றான். அவன் ஏதோ யோசனையில் இருப்பது தெரிந்தது. சற்று நேரம் பொறுத்துப் பார்த்த மதுரா, அவன் எதுவும் பேசும் அறிகுறியே தென்படாத நிலையில், “சோ… ஹௌ டூ யு ஃபீல்… அபௌட் திஸ் ப்லேஸ்.. பார்ட்டி..” – ‘இந்த இடம் … கொண்டாட்டம்… இதை பற்றியெல்லாம் நீ எப்படி உணர்கிறாய்?” என்று பேச்சுக்கு கொடுத்தாள்.

 

அவளை நிமிர்ந்து ஓரிரு நொடிகள் ஆழமாகப் பார்த்தவன், “ஐம் சாரி…” என்றான்.

 

அவளுக்கு புரியவில்லை. ‘எதற்காக சாரி கேட்கிறான்!’ – குழப்பத்துடன் பார்த்தாள்.

 

“இந்த பார்ட்டிக்கு வரணுங்கற எண்ணமே எனக்கு இல்ல. உன்ன பார்க்கறதுக்காகத்தான் வந்தேன்” – அவன் சொன்னனதைக் கேட்டதும் தன்னிச்சையாக அவள் முகம் மலர்ந்தது. அதை கவனித்தவன், “உன்ன காயப்படுத்தனுங்கறது என்னோட எண்ணம் இல்ல. ப்ளீஸ் நீ என்னை புரிஞ்சுக்கணும் என்றான்” – மீண்டும் அவள் முகத்தில் குழப்ப ரேகை கூடியது.

 

“எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. நா வேற ஒரு பொண்ண விரும்பறேன்” – அழுத்தமாகச் சொன்னான்.

 

‘என்ன!’ – அதிர்ந்துபோய் விழித்தாள் மதுரா. அதுவரை அவள் எதிரில் நின்று பேசிக்கொண்டிருந்த கைலாஷின் உருவம் மெல்லமெல்ல மறைந்து, தேவ்ராஜின் உருவம் விஸ்வரூபமெடுத்து நின்றது.

 

“வீட்ல எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன். யாரும் கேட்கல. எனக்கு வேற வழியே இல்ல. அதான் உன்னை நேரா பார்த்து சொல்லிடலாம்னு வந்தேன்” – அவன் பேசிய எதுவவும் அவள் காதில் விழவே இல்லை.

 

‘எனக்கு உன் மேல எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல… யு ஆர் ஜஸ்ட் ரியாக்டிங் டூ மச்…’ – தேவ்ராஜின் அலட்சிய குரல் அவளுடைய செவிப்பறையில் வந்து மீண்டும்மீண்டும் மோதி, பூகம்பம் போல் உள்ளே பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. மனம் வலித்தது. உடல் நடுங்கியது. கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.

 

“ஆர் யு ஓகே… மதுரா…” – அவளுடைய தடுமாற்றத்துக்குக் காரணம் தான்தான் என்று தவறாக புரிந்துக் கொண்ட கைலாஷ், அவளை சமாதானம் செய்ய முயன்றான்.

 

அவள் மனதில் சூறாவளி வீசிக் கொண்டிருந்தது. தேவ்ராஜின் நிராகரிப்பு… மறுப்பு… தங்கைக்காக அவளை பேரம் பேசியது… பேரம் படியவில்லை என்றதும் துச்சமாக தூக்கியெறிந்தது… கடைசியாக காரணமே இல்லாமல், அவளை முகத்துக்கு நேராகவே அவமானப்படுத்தியது… அத்தனை நினைவுகளும் அவளை புரட்டிப்போட்டன. இரத்த அழுத்தம் கூடியது.

 

“மதுரா… லுக் அட் மீ… மதுரா…” – அவளை உலுக்கினான். அவள் மெல்ல கண்விழித்துப் பார்த்தாள். கவலையோடு அவளை பார்த்துக் கொண்டிருந்தான் கைலாஷ். ‘அவன்… அவன் எங்கே!’ – குழப்பத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

 

“என்ன ஆச்சு?” – கைலாஷ்.

 

“ந… நத்திங்… நத்திங்…” – தடுமாறினாள்.

 

“ஐம் ரியலி சாரி…”

 

“இட்ஸ் ஓகே…” – அங்கிருந்து செல்ல எத்தனித்தாள்.

 

“ஐ டிடின்ட் மீன் டு ஹர்ட் யு…” – ‘உன்னை காயப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை’ – அவசரமாகக் கூறினான்.

 

“நோ நோ… நீங்க என்னை காயப்படுத்தல. நா வேற ஒரு நியாபகத்துல… கொஞ்சம் டிஸ்டர்ப் ஆயிட்டேன். வருத்தப்படாதீங்க. ஐ விஷ் யு ஆல் த பெஸ்ட்…” என்று அவனை வாழ்த்திவிட்டு பெற்றோரைத் தேடி வந்தாள்.

 

ஓய்ந்து போய் தனியாக வரும் மகளைக் கண்டதும் பிரபாவதியின் புருவம் சுருங்கியது. அவள் கணவனைப் பார்த்தாள். அவரும் குழப்பத்துடன் மகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். கைலாஷின் பெற்றோரும் கூட சற்று பதட்டமாகத்தான் காணப்பட்டார்கள்.

 

“என்ன ஆச்சு மது? கைலாஷ் எங்க?” – மகள் தங்களிடம் நெருங்கியதும் மெல்ல கேட்டாள் பிரபாவதி. அப்போதுதான் அவளுக்குமே அவனை விட்டுவிட்டு தனியாக வந்துவிட்டோம் என்பது உரைத்தது.

 

“அது… வந்து…” – அவள் என்ன பதில் சொல்வது என்று யோசிப்பதற்குள் அங்கே வந்து சேர்ந்துவிட்டான் கைலாஷ். அவனுடைய முகத்திலும் வாட்டம் தெரிந்தது. யாரும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. பார்ட்டி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில், “என்ன ஆச்சு மது? கைலாஷ் என்ன சொன்னான்?” என்று வாய் திறந்தாள் பிரபாதி.

 

“வேற ஒரு பொண்ண லவ் பண்ணறதா சொன்னான்”

 

“என்ன!”

 

“ம்ம்ம்… அப்படிதான் சொன்னான்” – வறண்டு போயிருந்தது அவள் குரல்.

 

பிரபாவதியின் மனம் வலித்தது. “நீங்க சரியா விசாரிக்கலையா?” – கணவனை குற்றம் சுமத்தியது அவள் பார்வை. இறுகிய முகத்துடன் சாலையில் பார்வையை பதித்திருந்த நரேந்திரமூர்த்தி பதில் சொல்லவில்லை. அவர் கடுங்கோபத்தில் இருக்கிறார் என்பது புரிந்தது.

 




14 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    NICE UD SIS


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Ugina


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    இந்த திருமண மறுப்பின் பின் தேவராஜின் கைங்காரியம் ஏதாவது இருக்குமா,மதுராவுக்கு இனி எங்கே திருமணம் பேசினாலும் மாப்பிள்ளையிடம் இருந்து மறுப்பு வருவது மாதிரி செய்து,கடைசியில் மீண்டும் தன்னை தேடி வரவைத்து தன்னுடைய கெத்தை காட்டுவாரோ .

    நன்றி


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      ஏன் அப்படி நினைக்கறீங்க தாட்சயணி? உண்மையாவே அவன் வேற பொண்ண லவ் பண்ணலாமே! அதோடு தேவ் தான் அவளை பிடிக்கலன்னு சொல்லிட்டானே! வெறுப்பா வேற இருக்கான். அவன் ஏன் மதுராவை கார்னர் பண்ணனும்?


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sasi says:

    Mam plz one more epi..


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      ayyo… Plz ellaam solla venaam Sasi… I’ll Post next epi in one hour… Thank you so much for showing interest on my story… I’m really glad that you are all(all my readers) giving me a great encouraging comments… Thank you so much…


      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Sasi says:

        I always love your writings. I read all your stories except kavio amutho….I am fan of irumbin ithayam.. I was really wondering where is your stories by these years..Glad you are returned with Big Bang of this kanal vizhi kaathal..Continue your rocking writing…


        • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
          admin says:

          Thank you… Thank you… Next episode updated… enjoy reading… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sasi says:

    Awww… Dev varap poorana?


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Dev vandhu enna panna…??? 🙂

      Thank you Sasi…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pons says:

    போச்சு..தேவ் ..கெத்தாக வந்து முடிக்க போறானா….


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      யாரை முடிக்க போறானான்னு கேக்குறீங்க அக்கா…? 😉


      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Pons says:

        ஆளை வேற முடிக்க போறானா….ஆவ்வ்வ்..
        அந்த மாயாவை முடிக்க சொல்லு


        • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
          admin says:

          ஹா ஹா… அவ அவனோட தங்கச்சி… இவனெல்லாம் தங்கச்சி… நீ எங்கச்சி னு பாட்டு பாடுற ஆளு… அவன்கிட்ட போயி என்னைய சொல்ல சொல்லறீங்களா? 😀 😀

You cannot copy content of this page