Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Kanalvizhi kaadhal 34

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 11

அத்தியாயம் – 11

உருவத்தில் தன் தாயை ஒத்திருப்பதாலோ என்னவோ மதுராவின் மீது இராஜேஸ்வரிக்கு ஒரு தனி பிரியம். தன்னுடைய மகனை திருமணம் செய்துகொண்டாலும் இல்லையென்றாலும் அவள் நன்றாக வாழ வேண்டும் என்பதுதான் அவளுடைய விருப்பம். பாரதியின் திருமண விஷயத்தை மதுராவின் வாழ்க்கையோடு முடிச்சுப் போட அவள் விரும்பவில்லை. ஆனால் அவளுடைய பிள்ளைகள் அதைதான் செய்தார்கள். தேவ்ராஜ் அவளை நிராகரித்துவிட்டான். மாயா இன்னும் ஒருபடி மேலே போய் அவள் மனதில் நிறைவேறாத ஆசையை வளர்க்க விரும்பினாள். அந்த முயற்சியில் தான் மதுராவை கைபேசியில் அழைத்தாள்.

 

“சொல்லுங்க அண்ணி…”

 

“எங்க இருக்க?” – அவள் எங்கு இருக்கிறாள் என்று தெரிந்தே, எதுவும் தெரியாதது போல் கேட்டாள்.

 

“ஏரோபிக்ஸ் கிளாஸ்ல…”

 

“ஓகே… நா ‘பாலி ஹில்’ வந்திருக்கேன். நீ கிளாஸ் முடிஞ்சு வீட்டுக்கு போகும் போது என்னையும் பிக் பண்ணிக்கோ. போற வழி தானே!” என்றாள்.

 

‘மதுராவிற்கு திக்கென்றிருந்தது. தேவையில்லாமல் அந்த வீட்டிற்கு கூப்பிடுகிறாளே! அங்கு தேவ்ராஜ் இருந்தால் என்ன செய்வது!’ – சிறு தடுமாற்றத்துடன், “அண்ணி… எனக்கு கிளாஸ் முடிய லேட் ஆகும். வேணுன்னா நா துருவன் பாய்க்கு கால் பண்ணி கார் அனுப்ப சொல்லட்டுமா?” என்றாள்.

 

“அதை நீதான் செய்யணுமா? என்னால முடியாது?” என்றவளின் குரலில் கடுமை ஏறியிருந்தது.

 

“சாரி அண்ணி, எனக்கு லேட் ஆகும்ன்னு சொன்னேன். வேற எதுவும் இலை. நீங்க தப்பா நினைக்காதீங்க”

 

“நோ நோ… நா எதுவும் தப்பா நினைக்கல. உனக்கு எவ்வளவு லேட் ஆகும்?” – காரியத்தை சாதிக்க வேண்டும் என்பதே அவள் குறி.

 

“ஒரு மணிநேரம்…”

 

“ஓகே… ஐ கேன் வெயிட்…” என்றாள் முடிவாக. மதுராவும் வேறு வழியின்றி தேவ்ராஜின் வீட்டிற்கு வருவதற்கு சம்மதித்தாள்.

 

சொன்னபடியே ஏரோபிக்ஸ் கிளாஸ் முடிந்ததும் மாயாவை அழைக்க ‘பாலி ஹில்’ வந்தாள். துருவன்-மாயா திருமணத்தின் போது வந்தது. குறைந்தது ஆறு வருடங்கள் இருக்கும்… கேட்டிலிருந்த செக்யூரிட்டி, வீட்டிற்கு இண்டர்காம் செய்து அனுமதி கேட்ட பிறகே காரை உள்ளே அனுமதித்தான். வீட்டிற்கு வெளியிலும் பாடி கார்ட்ஸ் இருந்தார்கள். இத்தனை காவலுக்கு அவசியம் என்ன என்று யோசித்தபடியே காரிலிருந்து இறங்கி வந்தாள்.

 

கார்ட்ஸ் தன்னிடம் ஏதும் கேட்பார்கள் என்று நினைத்தாள். ஆனால் அசையாமல் நின்ற அவர்கள் அவளை தடுக்கவில்லை. உறவினர் வீட்டிற்குள் நுழையும் உணர்வே இல்லை அவளிடம். சிங்கத்தின் குகைக்குள் நுழைந்துவிட்டது போன்றதொரு உணர்வு அவளை ஆக்கிரமித்தது. தயக்கத்தை வெளிக் காட்டிக்கொள்ளாமல் உள்ளே வந்தாள். ஹாலில் யாரும் இல்லை. கைபேசியை எடுத்து மாயாவின் எண்ணை அழுத்தினாள். அழைப்பொலி முழுவதுமாக அடித்து ஓய்ந்தது.

 

“கொஞ்ச நேரம் உட்காருங்க மேம். மாயா மேம் இப்போ வந்துடுவாங்க” –  சீருடை அணிந்த வேலைக்கார பெண் உபசரித்தாள்.

 

“சரி…” – புன்னகையுடன் தலையசைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தாள் மதுரா. நேரம்தான் கழிந்து கொண்டிருந்ததே தவிர மாயா வந்தபாடில்லை. எங்கு போய்விட்டாள்! – எரிச்சலுடன் அமர்ந்திருந்தாள். அவளை உபசரித்த வேலைக்காரப்பெண் இப்போது மாடியிலிருந்து இறங்கிவந்தாள். அவள் கையில் ஆதிரா இருந்தாள்.

 

‘என்ன டிரஸ் அது!’ – குழந்தையை ஊன்றி கவனித்தாள். தொமாந்தொமாவென்று ஏதோ டி-ஷர்ட் அணிந்திருந்தாள். – குழப்பத்துடன் பார்த்தாள் மதுரா.

 

“ஹேய்… ச்சாச்சி…!” – சத்தமிட்டாள் ஆதிரா. சத்தமிட்டு சிரிக்கும் குழந்தையை விட அவள் அணிந்திருக்கும் ஆடை யாருடையது என்பதில்தான் இருந்தது மதுராவில் கவனம். குழந்தையை தூக்கிக் கொண்டு வரும் வேலைக்கார பெண் அருகில் வரவர அந்த சட்டை யாருடையது என்பதும் அவளுடைய நினைவில் தெளிவானது.

 

‘எனக்கு உன் மேல எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல… யு ஆர் ஜஸ்ட் ரியாக்டிங் டூ மச்…’ – அன்று அவன் அணிந்திருந்தது இதே டி-ஷர்ட் தான்… தேவ்ராஜ்! – அவள் உள்ளம் கபகபவென்று எரிந்தது. உடல் நடுங்கியது. அன்றைய நினைவே அவளுக்குள் இத்தனை பாதிப்பை ஏற்படுத்துகிறதே! திகைப்புடன் அமர்ந்திருந்தாள்.

 

“குழந்தையை தூக்கிக்கோங்க மேம்” என்று மதுராவிடம் குழந்தையை நீட்டினாள்.

 

“வெயிட்… ஷர்ட்… அந்த ஷர்ட்… அதை கழட்டிட்டு குழந்தையை மட்டும் கொடு…” – அழுத்தமாகக் கூறினாள் மதுரா.

 

“மேம்…” – தயங்கினாள் அந்த பெண்.

 

“ஜஸ்ட்… ஜஸ்ட்… டேக் ஆஃப் தட்…” – அவள் முகத்தில் கடுமை குடியேறியிருந்தது.

 

“ஓகே மேம்…” – குழந்தையை இறக்கிவிட்டு, அவள் அணிந்திருந்த டி-ஷர்ட்டை கழட்டிவிட்டாள்.

 

“தூக்கு ச்சாச்சி…” – கையை உயர்த்தி கொஞ்சியது குழந்தை. ஆசையோடு அள்ளி அனைத்துக் கொண்டாள். ஆனால் அடுத்த நொடியே அதை உணர்ந்தாள். ஏதோ ஒரு வித்தியாசமான.. திடமான… வாசனை. மிகவும் அசவுகரியமாக உணர்ந்தாள். அதற்கான காரணத்தை அவள் புரிந்துக்கொள்ள முயன்றுக் கொண்டிருக்கும் போதே, “செல்ல ச்சாச்சி… புஜ்ஜு ச்சாச்சி…” என்று கொஞ்சி கழுத்தைக் கட்டி கொண்டு முத்தமிட்டது குழந்தை.

 

திடுக்கிட்டுப்போன மதுரா, படக்கென்று குழந்தையை தன்னிடமிருந்து பிரித்து வேலைக்காரியிடம் தூக்கிக் கொடுத்தாள். வீசினாள் என்று கூட சொல்லலாம். அப்படியொரு வேகம்.

 

‘அது… அது ஆதிராவே இல்லை… நிச்சயமாக இல்லை… அவன்…! அவனேதான்…! அவனுடைய சட்டை… அவனுடைய வாசம்… அவனுடைய ஸ்பரி… ச்சே… ச்சே…’ – சிலிர்த்துக் கொண்டவள் சட்டென்று துப்பட்டாவை எடுத்து, கை… கழுத்து… முகம்… உடம்பெல்லாம் துடைத்துக் கொண்டாள்… மீண்டும் மீண்டும் துடைத்துக் கொண்டாள். ஒரு நொடி அவனே தன்னை கட்டியணைத்து முத்தமிட்டுவிட்டது போல் தோன்றிவிட வெடவெடத்துப் போய்விட்டாள். எவ்வளவு மோசமான கற்பனை! – கற்பனையோ! கனவோ! கண்றாவியோ! ஒரு நொடியேதான் என்றாலும் அவளுக்குள் தோன்றிவிட்டதே! இந்த அழுக்கை எப்படி சுத்தம் செய்வது! எப்படி! கடவுளே! – அவளுடைய பதட்டம் அப்பட்டமாய் தெரிந்தது.

“என்ன ஆச்சு மேம் ?” – மதுராவை குழப்பத்துடன் பார்த்தாள் வேலைக்கார பெண்.

 

“ஆங்…” – விழித்தாள். அவளிடம் என்ன சொல்வது! எதுவும் புரியவில்லை. அவள் அங்கு இருக்கிறாள் என்பதைக் கூட மறந்துவிட்டாளே!

 

“ஏதாவது பிரச்சனையா மேம்?”

 

“இல்ல… ஒண்ணும் இல்ல… குழந்தையை குளிக்க வச்சு… வேற டிரஸ் போட்டு கொண்டுவரீங்களா? வீட்டுக்கு போகணும்”

 

“ஓகே மேம்…”

 

“ம்ம்ம்… ஒரு நிமிஷம்…”

 

“எஸ் மேம்”

 

“அண்ணி எங்க…?”

 

“நீங்க வந்துருக்கீங்கன்னு சொல்லியாச்சு மேம்… வந்துடுவாங்க. ப்ளீஸ் வெயிட்” – குழந்தையோடு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

 

 




8 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    இன்று அடுத்த பதிவு இல்லையா.

    நன்றி


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      அடுத்த பதிவு போட்டாச்சு தாட்சாயிணி…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    தேவராஜுடன் நெருங்கி பழகவில்லை மதுரா இருந்தும் அவரின் அவருடைய உடையின் வாசத்தை உணர்கின்றார்,எதனால் இந்த பதட்டம் மதுராவுக்கு ,எனக்கென்னவோ இந்தப்பதட்டத்தின் பின்னால் அன்று தேவராஜ் அவமானப்படுத்தியது மட்டுமில்லை என்று தோன்றுகின்றது ,மதுராவுக்குள்ளும் சலனம் வந்தாச்சுது,எதற்காக குழந்தை தேவராஜின் உடையை அணிந்து வந்தது,மாயாவின் வேலையா.

    நன்றி


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      நன்றி தோழி…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sharmila Natarajan says:

    I would appreciate if you could give long updates. These are over within 2 minutes. Too short. Not even able to read a conversation completely. Very uncomfortable to read and gather thoughts.


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Hi Sharmila,

      Welcome to Shaptham. Happy to see your first comment…

      I’m really sorry to disappoint you my friend. I’m giving 2 updates daily which means around 15 pages. This is the maximum limit what I can do… I hope I’m not splitting the scene in epis. so conversation would not break… Anyhow… I ll try to improve…

      Thank you… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    HAYO ANTHE PULLAIYA IPDI KASATAPADUTHAARALAY
    YAARLLAM PAARTHANGALOOOOO
    NICE UD SIS


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Ugina…

You cannot copy content of this page