Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Kanalvizhi kaadhal 34

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 12

அத்தியாயம் – 12

அரவிந்த் குப்தா, வலைதளத்தில் பதிவிட்ட அனைத்து வீடியோக்களையும் மொத்தமாக அழிக்கும்படி தன்னுடைய டெக்னிக்கல் டீமிற்கு உத்தரவிட்டிருந்தான் தேவ்ராஜ். மூன்று மணிநேரமாகிவிட்டது இன்னும் வீடியோக்கள் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றன. யாரை வேண்டுமானாலும் உதவிக்கு அழைத்துக் கொள்ளுங்கள்… யாரிடம் வேண்டுமானாலும் சகாயத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று தன்னுடைய கேபினெட் சீனியர் லாயரிடமும் கூறிவிட்டான். ஆனாலும் கதை நடக்கவில்லை.

எரிச்சலுடன் கைபேசியை எடுத்து சலீமிற்கு அழைத்து “என்ன மேன் நடக்குது? டெக்னிக்கல் டீம்கிட்ட பேசி சீக்கிரம் எதையாவது செஞ்சு, அந்த பிரச்னையை முடி” என்று சத்தம் போட்டான். அப்போது தன்னுடைய அறையை வேலைக்கார பெண் கடந்து செல்வது கண்ணில்பட்டது. அவள் கையில் ஆதிராவும் இருந்தாள். அவள் அணிந்திருந்தது, சற்று நேரத்திற்கு முன் மாயா… வம்படியாக தன்னுடைய அறைக்கு வந்து அலமாரியை குடைந்து தேடி எடுத்துச் சென்ற டி-ஷர்ட்.

‘என்ன நடக்குது இங்க!’ சலீம் சொல்லும் சமாதானங்களை கேட்டபடியே தன்னுடைய அறையில் ஒருபக்கம் உள்ள கண்ணாடி சுவர் வழியே கீழே பார்த்தான். ஆச்சர்யம்! மதுரா! இவள் எங்கே இங்கு! – அவனுடைய பார்வையில் சுவாரஸ்யம் கூடியது. கைபேசியை அணைத்துவிட்டு தன்னுடைய சுவாரஸ்யத்திற்குத் தீனி போட்டான்.

குழந்தையைப் பார்த்ததும் முதலில் மலர்ந்த அவள் முகத்தில், பிறகு கோபமோ அல்லது பதட்டமோ…. ஏதோ ஒரு கலவையான உணர்வு! என்னவாயிற்று திடீரென்று! – அவனுடைய பார்வை மேலும் கூர்மையானது. வேலைக்கார பெண் ஏதோ சொல்கிறாள். பிறகு குழந்தையை அவளிடம் கொடுக்கிறாள்…. அவள் சட்டென்று கையை உயர்த்தி தடுத்துவிட்டாளே! அதுவும் இவ்வளவு கடுமையாக! ம்ம்ம்…. அப்பாவி போல் தோற்றமளிக்கும் இந்த முகத்திற்குள் இத்தனை கடுமையா! அப்படி என்னதான் கோபம் இவளுக்கு! – ஆச்சர்யத்துடன் அவள் மீது பார்வையை ஆழப்பதித்தான். அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்காத துவங்கியது.

வேலைக்காரப்பெண் ஆதிராவை சோபாவில் இறக்கிவிட்டு, அவள் அணிந்திருந்த அவனுடைய சட்டையை கழட்டிவிட்டாள். ஏனோ அந்த செயலில் அவன் அவமானப்பட்டுவிட்டதாக உணர்ந்தான். அவனுடைய சட்டையைக் கூட அவள் தொடமாட்டாளோ! அப்படிப்பட்ட தேவகன்னிகையா … அல்லது அவன்தான் தீண்டாத தகாதவனா! – குமுறும் உள்ளத்துடன் அவள் மீதிருந்து பார்வையை அகற்றாமல் மேலும் என்ன நடக்கிறது என்பதை கவனித்தான்.

குழந்தை அவளை தூக்கச் சொல்லி கைநீட்டியது. அவளும் தூக்கினாள். அதில் ஒன்றும் தவறில்லை… ஆனால் உடனே வீசியடிப்பது போல் ஏன் குழந்தையை வேலைக்காரியிடம் தள்ளிவிட்டாள். ஆசையாக கழுத்தைக் கட்டிக்க கொண்டிருந்த குழந்தையை தன்னிடமிருந்து பிய்த்து எறிந்துவிட்டாளே! எவ்வளவு திமிர்! – ஆத்திரத்தில் அவன் கண்கள் சிவந்தன. ஆனால் அடுத்து அவன் பார்த்த காட்சி அவனை ருத்ராவதாரம் எடுக்கச் செய்தது.

அவனுக்கு நன்றாகக் புரிந்துவிட்டது. குழந்தையைத் தூக்கியவள் உடனே விட்டெறிந்துவிட்டு, முகம் கையெல்லாம் துடைத்துக்கொள்கிறாள்! என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்! என்னை யாரென்று நினைத்தாள்! – ஆத்திரத்துடன் தன்னுடைய அறையிலிருந்து வெளியே வந்தவன், பக்கத்து அறையில் சந்தேகப்படும்படியான சலசலப்பு கேட்டதும் நின்றான்.

அது பாரதியின் அறையாயிற்றே! மாயாவின் குரல் கேட்கிறது! கூடவே தாயின் குரலும்… அவள் கீழே இருக்கும் பொழுது இவர்களெல்லாம் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்! புரிந்துவிட்டது… அனைத்தும் இவர்கள் சேர்ந்து அடித்த கூத்துதானா! இந்த கருமத்தை நிறைவேற்றத்தான் என்னுடைய சட்டையை தேடி எடுத்துக் கொண்டு சென்றாளா மாயா! – சீற்றத்துடன் கீழே செல்ல வந்தவன், பாரதியின் அறைக்கு திசைதிரும்பினான்.

“தேவையில்லாத வேலை பண்ணற மாயா நீ. வீட்டுக்கு வந்த பொண்ண இப்படி தனியா உட்கார வச்சுட்டு எதுக்கு வேலைக்காரிகிட்ட குழந்தையை கொடுத்து அனுப்பற? அதுவும் தேவ் சட்டையை போட்டு?” – இராஜேஸ்வரி.

“நா எதையும் சொல்ல தேவையில்லம்மா. நீங்களே பார்க்கலாம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க”

“எதுக்கு மாயா? எதை நிரூபிக்க விரும்ப நீ?” – பாரதி.

“நா எதையும் நிரூபிக்க விரும்பல பாரதி. ஜஸ்ட் தெரிஞ்சுக்க விரும்பறேன்”

“என்ன தெரிஞ்சுக்கணும் நீ?”

“அவளுக்கு நம்ம தேவ் பாய் மேல ஆசை இருக்கோன்னு எனக்கு ஒரு சந்தேகம். அதைத்தான் இப்போ தெரிஞ்சுக்க போறேன்”

“எப்படி மாயா?” – பாரதி ஆர்வமாகக் கேட்டாள். இராஜேஸ்வரி அமைதியாக இருந்தாள். ஒருவேளை மாயா சொல்வது மட்டும் உண்மையாக இருந்தால், தன் மகனிடம் எப்படியாவது பேசி அவளை தன்னுடைய மருமகளாக்கிக் கொள்ளலாமே என்கிற ஆசை அவளுக்குள் துளிர்விட்டது. எனவே அமைதியாக ஜன்னல் பக்கம் வந்து கீழே நடப்பதை வேடிக்கை பார்த்தாள். ஆனால் அவள் கண்ட காட்சி அவளை ஏமாற்றிவிட்டது. வெறும் ஏமாற்றம் மட்டும் அல்ல… தன் மகன் மீது அவளுக்கு வெறுப்போ என்று கூட சந்தேகம் வந்தது.

மாயாவும் அதிர்ந்து போய்தான் நின்றாள். இத்தனை கடுமையாகவும், கண்டிப்பாகவும் நடந்துகொள்வாள் என்று அவள் நினைக்கவே இல்லை. எங்கிருந்து வந்தது இவ்வளவு வலு அவளுக்கு!

“தெரிஞ்சுக்கிட்டியா மாயா?” – நக்கலாகக் கேட்டாள் பாரதி. “என்னைய மட்டும் இல்ல… தேவ் பாயை கூட அந்த வீட்ல யாருக்கும் பிடிக்கல” – வருத்தம் இழையோடியது அவள் குரலில். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சூறாவளி போல் அங்கு வந்தான் தேவ்ராஜ்.

“என்ன பிரச்சனை உனக்கு? எதுக்கு இப்படியெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க? எதுக்கு நீ அவளை இங்க கூப்பிட்ட? எதுக்கு? சொல்லு… எதுக்கு அவ இங்க வந்தா? யு ஜஸ்ட் ஸ்பீட் அவுட் டாமிட்…” – மாயாவிடம் கத்தினான்.

அவன் வந்த வேகமும் பேசிய தோரணையும் அங்கிருந்த மூவரையும் உலுக்கியது. யாருக்கும் எதுவும் பேச முடியவில்லை. செய்துவைத்த சிலை போல் பிரம்மித்து நின்றுவிட்ட மகள்களை ஒருமுறை பார்த்த இராஜேஸ்வரி, “தேவ்… என்ன… எப்பா ஆச்சு?” என்றாள் மெல்ல.

“டோன்ட்… டோன்ட் ட்ரை டு ஆக்ட் ஸ்மார்ட்… இங்க என்ன நடந்துட்டு இருக்குன்னு உங்களுக்கு நல்லா தெரியும்…” – தாயை கடுமையாக முறைத்தான்.

“இல்ல… நீ கொஞ்சம்… கொஞ்சம்… அமைதியா இரு…”

“ஓகே…. ஐம் கூல் நௌ. டெல் மீ… அவ ஏன் இங்க வந்தா?”

“மாயாவை பிக் அப் பண்ண…”

“நா உங்ககிட்ட கேட்கல… நீ சொல்லு… ஏன் இங்க வந்தா?”

“நா… நாந்தான்… வர… வர சொன்னேன்…”

“ஏன்?”

“என்னை பிக் அப்…”

“உன்னோட காருக்கு என்ன ஆச்சு?”

அவளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. மெளனமாக தலை குனிந்தாள்.

“சோ…. எல்லாமே உன்னோட பிளான். இந்த டி ஷர்ட்… அன்னைக்கு காபி ஷாப்க்கு வர சொன்னது… எல்லாமே… இல்ல?”

“………..”

“ஸ்பீட் அவுட்…” – கடுமையாக வெடித்தான்.

“ஐம் சாரி…”

“எதுக்கு சாரி?”

“………………” – அவள் கண்களில் கண்ணீர் கசியத்துவங்கிவிட்டது.

“நீ என்ன பண்ணிட்டு இருக்கேன்னு உனக்கு கொஞ்சமாவது புரியுதா? நீ என்னை அவமானப்படுத்திகிட்டு இருக்க. அதுவும் அவ முன்னாடி. யாரு அவ? என்னோட…” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு “என் பக்கத்துல நிக்கக் கூட தகுதியில்லாதவ. உனக்கு அவ ஸ்பெஷன்னா… உன்னோட வீட்டோட வச்சுக்கோ. அதை இங்கவரைக்கும் கொண்டுவந்து என்னை இரிட்டேட் பண்ணாத. திஸ் ஐஸ் த லாஸ்ட் டைம், ஐம் டெல்லிங் யு… அவ என் கண்ணு முன்னாடியே வர கூடாது” – வெறுப்பை கக்கியவன், கடுங்கோபத்துடன் கதவை அடித்து சாத்திவிட்டு கீழே இறங்கினான்.

15 Comments

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    இன்று கதைக்கான பகுதி இல்லையா.

    நன்றி

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      உண்டு தாட்சாயிணி… அப்டேட் பண்ணிட்டேன். இன்னிக்கு சனிக்கிழமை… குழந்தைகளுக்கு லீவ். வெளியே கூட்டிட்டு போக வேண்டியிருந்தது. இப்போதான் வந்தேன். உடனே அப்டேட் போட்டுட்டேன்…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    raghavansriramya says:

    started reading your novel nithya. very interesting !!! keep going !!!

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Hi Ramya, Welcome to Sahaptham. I’m glad you liked it… Thank you so much… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    யாரு அவ?என்னோட……………….”
    தயவு செய்து கீறிட்ட இடத்தை நிரப்பவும்,

    தேவ் எதை சொல்ல வந்துவிட்டு அந்த வார்த்தையை விழுங்கினார்,என்னோட காதலி என்னோட தேவதை. என்னோட வருங்கால மனைவி என்னோட உயிர் ,இதில் ஏதோ ஒன்றுதானே,அதை தன் குடும்பத்திடம் சொல்வதில் என்ன குறைந்துவிடப்போகின்றது,மாயாவின உண்மையான எண்ணம் அறிந்து திட்டினாரா அல்லது பார்த்த நிகழ்வை வைத்து திட்டினாரா,தேவ்வும் மதுராவும் விரும்பி சேர்ந்தாலும் கூட மாயா விடமாட்டார் போல,மதுராவின் இன்றய செயல் கொஞ்சம் அதிகப்படிதான்,தேவ்வின் வாசம் வந்தால் வந்துவிட்டது போகட்டும்,வீட்டில் போய் ஒரு குளியல் செய்தால் போச்சுது,அதை விட்டுவிட்டு தேவ்வின் வீட்டில் நின்றுகொண்டு துப்பட்டாவில் துடைக்கலாமா,அதை தேவ் பார்த்து மதுராவின் துரதிஷ்டம்,வாசல் வரை வந்துவிட்டு வேலைக்காரியை அனுப்பியதற்கே அவமானப்படுத்தி அழவைத்தாச்சுது,இப்போ துடைத்ததை வேறு பார்த்தாச்சுது இனி என்ன நடக்குமோ.

    நன்றி

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      தாட்சாயிணி… உங்க கமெண்ட் கு ரிப்ளை கொடுக்க பத்து நிமிஷம் யோசிக்கணும்… படிக்க படிக்க ஆசையா இருக்கு… நகைச்சுவையாவும் இருக்கு… நன்றி…

      //தேவ்வின் வாசம் வந்தால் வந்துவிட்டது போகட்டும்,வீட்டில் போய் ஒரு குளியல் செய்தால் போச்சுது,அதை விட்டுவிட்டு தேவ்வின் வீட்டில் நின்றுகொண்டு துப்பட்டாவில் துடைக்கலாமா// –

      பாவம்… அறியா பொண்ணு தெரியாம பண்ணிடுச்சு… 😀

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Uma Deepak says:

    Ha ha maayavavathu adangurathaavathu .. ava madhura va ala vaikkama oya maatta .. and bharathi yai vendam nu sonna reason thev madhuravai kattikka koodaathunu thaana .. sema epis .. keep rocking nithi ka..

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Hi Uma Deepak,
      Thank you so much… thodarndhu padinga…. comments share pannunga… thanks again… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    superrrrrrr
    yaruuuuuuuuuuu avaaaaaaaa

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank youuuuuuuuu Ugina Begum…. 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sasi says:

    Sooper… Ini Maaya adankuvala?

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Ava adangittaa kadhai kadhai eppadi pogum… 😀

      Thank you so much Sasi… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pons says:

    அப்பாடா ..தேவ் வாது நல்லா திட்டினானே…இனியாவது மாயா அடங்குவாளா…

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      இப்போ நிம்மதியா க்கா… 🙂

You cannot copy content of this page