Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல் 39

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 13

அத்தியாயம் – 13

மாதுராவின் பதட்டம் சிறிதும் குறையவில்லை. இன்னமும் உடல் வெடவெடவென்று நடுங்கி கொண்டுதான் இருந்தது. கைகளை இருக்கமாகக் கட்டிக் கொண்டு, சோபாவில் குறுகி அமர்ந்திருந்தாள்.

 

“காபி எடுத்துக்கோங்க மேம்” – வேலைக்கார பெண் அவள் எதிரில் வந்து ட்ரேயை நீட்டினாள்.

 

“தேங்க்ஸ்…” என்றபடி காபியை எடுத்துக் கொண்டாள்.

 

அடுத்த நொடியே, வீடே அதிரும்படி ‘டமார்’ என்று ஓங்கி ஒலித்த சத்தத்தில் அதிர்ந்து போய் மாடியை நிமிர்ந்து பார்த்தாள். ராட்சஸன்…! கதவை ஓங்கி அடித்து சாத்திவிட்டு, அதிவேகமாக கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான். மதுராவின் இதயம் ‘டம் டம்’ என்று வேகமாக அடித்துக் கொண்டது. முகமெல்லாம் சூடாகி, நா வறண்டு, முதுகுத்தண்டு சில்லிட்டது. அவன் கீழே இறங்க இறங்க இவள் அனிச்சையாய் எழுந்து நின்றாள். அவனுடைய பார்வை குத்தீட்டி போல் அவளைத் துளைத்தது. இதோ அருகில் நெருங்கிவிட்டான். ‘டம்டம்… டம்டம்…’ – இன்னும் வேகமாக துடித்தது இதயம். உள்ளுக்குள் நடுக்கம் பிறந்தது. உடம்பெல்லாம் சில்லிட்டு போய்விட்டது. மிரண்டு போய் நின்றாள்.

 

“என்ன பண்ணற இங்க?” – நெருப்புப் பிழம்பு போல் சிவந்திருக்கும் முகத்துடன் சீறினான் அவளிடம்.

 

“வெ.. வெயிட்… வெயிட் பண்ணறேன்” – உளறக்கூட முடியாமல் திணறினாள்.

 

“யாருக்கு வெயிட் பண்ணற?” – அதட்டினான். அவனுடைய பயங்கரமான முகமும் கண்களும் அவளை அச்சுறுத்தின.

 

“அண்… அண்… அண்ணி” – பதில் சொல்ல முடியவில்லை. மூச்சடைத்து… “தட..தட..தட…” – கையிலிருக்கும் கப் அண்ட் சாஸர் தடதடத்தது. அதை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, பேயை பார்ப்பது போல் அவனைப் பார்த்தாள். வெறுப்புடன் அவள் முகத்தில் பார்வையை பதித்தபடியே, “ரெஜினா… ரெ…ஜி…னா…” என்று யாரையோ சத்தம் போட்டு கோபமாக அழைத்தான். அடுத்த நொடியே வேலைக்கார பெண் அவனெதிரில் வந்து நின்றாள்.

 

இவனுடைய எரிக்கும் பார்வை இன்னமும் மதுராவின் முகத்தில்தான் நிலைத்திருந்தது. வெடவெடக்கும் உடலும், தடதடக்கும் காபி கப்புமாக ஆடிப் போய் நின்றாள் மதுரா.

 

“சார்…” – குறுக்கிட்ட ரெஜினாவின் குரல், அனல் பார்வையிலிருந்து அவளை சற்று ஆசுவாசப்படுத்தியது.

 

“என்ன வேலை பார்க்கற நீ?” – கடுப்படித்தான்.

 

“தட…தட…தட” – மதுராவின் கையிலிருந்த காபி கப்.

 

“சார்…” – புரியாமல் பார்த்தாள் ரெஜினா.

 

“தட…தட…தட” – காபி கப்.

 

“கெஸ்ட் வந்தா விசிட்டிங் ஹால்ல உட்கார வைக்க வேண்டியதுதானே? லிவிங் ரூம்ல என்ன வேலை?” – எரிந்து விழுந்தான்.

 

‘வெளியே விரட்ட சொல்றானா! கடவுளே!’ – மதுராவின் விழிகள் விரிந்தன. கையிலிருக்கும் கப்பின் தடதடப்பு அதிகமானது. “தடதட…. தடதட…”

 

“சார் அவங்க…” – ஏதோ விளக்கம் கொடுக்க வந்தாள். “ஷட் அப்” என்று அவளை இடைமறித்தவன், “யூ ஜஸ்ட் ஷட்… அப்…! ஓகே…?” என்று ஒவ்வொரு வார்த்தையையும் கடித்து துப்பினான். ரெஜினா அதிர்ந்து போய் நின்றுவிட்டாள். அவள் முகமே மாறிவிட்டது.

 

மதுராவின் இதயம் உள்ளே டமார் டமார் என்று பயங்கரமாக அடித்துக் கொண்டது. அதற்கு இணையாக, “தடதட…. தடதட…” என்று அவள் கையிலிருக்கும் கப்பும் தொடர்ந்து சத்தமிட்டுக் கொண்டிருந்தது.

 

“எக்ஸ்பிளனேஷன் கொடுக்கறதுக்கு நீ சம்பளம் வாங்கல…” – “தடதடதடா… தடதடதடா…” – “சொல்ற வேலையை செய்றதுக்குத்தான் நீ இங்க இருக்க…” – “தடதடதடா… தடதடதடா…” – “ஏய்… நீ அந்த தடதடதடாவை முதல்ல நிறுத்து” – சட்டென்று மதுராவிடம் பாய்ந்தான்.

 

“ஆங்… ம்ம்ம்.. நா…” – ஆடிப்போனவள் கப்பை அழுத்தமாக பிடிக்க முயன்று, அது கவிழ்ந்து, ஆடையெல்லாம் காபியில் நனைந்து… அதையெல்லாம் யார் கவனித்தது! கப்பை நெஞ்சோடு அனைத்துப் பிடித்துக் கொண்டுவிட்டாள். சத்தம் நின்றுவிட்டது… அவ்வளவுதான்… அவ்வளவேதான்! நிம்மதி… இப்போது திரும்பிவிடுவான்… இங்கிருந்து போய்விடுவான்… போய்விடு… போய்விடு… இங்கிருந்து போய்விடு…. – அவள் மனம் உருப்போட்டது.

 

அவனுடைய பார்வை அவள் முகத்தை ஆழமாக அளந்தது. மிரண்ட விழிகள்… துடிக்கும் இதழ்கள்… வெளிறிப்போன சருமம்… – கண்களை இறுக்கமாக மூடி தலையை உலுக்கிக் கொண்டான். அவள் முகத்தில் தெரியும் அப்பட்டமான பயம் அவனை… ‘ப்ச்…’ – மீண்டும் ஒருமுறை கண்களை இறுக்கமாக மூடி, முகத்தை திருப்பிக் கொண்டு ஆழமாக மூச்செடுத்தவன், வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டான்.

 

“ஹாங்…. ஹாங்…. ஹப்பா…” – தாராளமாக மூச்சை இழுத்துவிட்டபடி தளர்ந்து போய் சோபாவில் பொத்தென்று அமர்ந்தாள் மதுரா. காட்டுவிலங்கிடம் சிக்கித் தப்பியது போன்றதொரு விடுதலை உணர்வு.

 

மதுரா தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் போது மாடியிலிருந்து, இராஜேஸ்வரியும் அவளுடைய மகள்களும் இறங்கி வந்தார்கள். மாயாவின் முகமும் கண்களும் சிவந்திருந்தது. ஏதோ பிரச்சனை என்று ஊகித்துக் கொண்டாள் மதுரா. மாயா தன்னை வேண்டுமென்றே இவ்வளவு நேரம் காத்திருக்க வைக்கவில்லை என்பதும் அவளுடைய ஊகமாக இருந்தது. அது அவளை சற்று ஆறுதல் படுத்தவும் செய்தது.

 

“சாரி மது… நீ வந்து ரொம்ப நேரம் ஆச்சு… வெரி சாரி” – இராஜேஸ்வரி மதுராவை அன்போடு அனைத்துக் கொண்டாள்.

 

“இட்ஸ் ஓகே ஆண்ட்டி…” – புன்னகையுடன் அவள் அணைப்பில் அடங்கினாள் மதுரா. பரஸ்பர நலவிசாரிப்புகளுக்கு பிறகு ஓரிரு நிமிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, மாயாவோடும் குழந்தையோடும் அங்கிருந்து கிளம்பினாள். இன்னொரு முறை இந்த வீட்டு பக்கம் தலைவைத்துக் கூட படுக்க கூடாது என்கிற எண்ணம் அவளுக்குள் அழுத்தமாக பதிந்தது.

 

**********

எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வாவு விரைவாக பாரதிக்கு திருமணம் செய்துவிட வேண்டும் என்பதை இராஜேஸ்வரியின் அபிப்ராயம். தனியாக இருந்து திலீப்பின் நினைவில் அவதி படுவதைவிட, ஏதாவது ஒரு நல்ல மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு அவனை மறந்துவிடுவதே அவளுக்கு நல்லது. குடும்பம் குழந்தை என்று ஆகிவிட்டால் மற்றதெல்லாம் பழைய கதையாகிவிடும் என்று நினைத்தாள். அதைத்தான் மகனிடம் வற்புறுத்திக் கூறிக் கொண்டே இருந்தாள். ஆனால் அவனோ அவளுடைய பேச்சை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. அவன் உண்டு அவனுடைய வேலை உண்டு என்று சுற்றிக் கொண்டிருக்கிறான்.

 

பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு தானே ஒரு மாப்பிள்ளையைக் கொண்டுவந்தாள். தன்னுடைய நெருங்கிய தோழியின் மகன். அமெரிக்காவில் இருக்கிறான். இங்கிருப்பதைவிட வெளிநாட்டில் வேரூன்றுவதுதான் அவளுக்கு நல்லது என்று நினைத்து அந்த வரனை முடிக்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் பாரதி அசைந்துக் கொடுக்க மாட்டேன் என்கிறாள். எதற்கும் ஒத்துவர மாட்டேன் என்கிறாள். எனவே மகனின் உதவியை நாடி வந்தாள்.

 

“நல்ல பையன்… நல்ல குடும்பம்… பாரதிக்கு தகுந்த வரன்… பிடிகொடுக்கவே மாட்டேங்கிறா. நீ பேசிப்பாரு தேவ்”

 

“அவள கொஞ்சம் ஃப்ரீயா விடுங்கம்மா”

 

“இல்லப்பா… அவ ஃப்ரீயா இல்ல. அவளுக்கு மாற்றம் வேணும்….”

 

“அப்போ எங்கேயாவது ட்ரிப் அரேஞ் பண்ணறேன். கூட்டிட்டு போயிட்டு வாங்க”

 

“ப்ச்… இந்த வரன்ல உனக்கு என்ன பிரச்சனை? எதுக்கு அவாய்ட் பண்ணற?”

 

“எனக்கு எந்த பிரச்சனையும் இல்லம்மா. பாரதிக்கு பிடிக்கலைன்னா அவளை கட்டாயப்படுத்தாதீங்கன்னு தான் சொல்றேன். ஜஸ்ட் கிவ் ஹேர் சம் ஸ்பேஸ்… அவ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்” என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்.

 




10 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    தேவ்வுக்கு மாயா தன்னைப்பார்த்து பயப்படுவது மிரள்வது ஏதோ ஒரு வகையில் பாதிக்கின்றது ,அதனை கையாளத்தெரியாமல்தான்மதுரா மேல் இனம் தெரியாத கோபம் வருகின்றது,அதுசரி மதுரா அந்த வீட்டுக்கு விருந்தாளி என்று யாருக்கு சொல்கின்றார்,தனக்குத்,தானேயா அல்லது ரெஜினாவுக்கா அல்லது மதுராவுக்கா,பாரதியின் திருமணத்தில் அக்கறை காட்டாமல் தேவ் இருப்பதற்கு மதுராதான் காரணமா.

    நன்றி


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      நன்றி தாட்சாயணி…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    HAYO PAWAM
    MAYAAAAAAAAA IPPO SANTHOSAMAAAAAAAAA


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Ugina Begum…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pons says:

    இந்த மாயா லூசை …சாத்தணும்.
    மதுவை கொடுமைப்படுத்துறா…
    மிரட்டுறானே…


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      நன்றி பொன்ஸ் அக்கா…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Uma Deepak says:

    ஆத்தி இவன் ஒரு முடிவோடு தான் இருக்கான் போல.. பாரதிக்கு நல்ல வரன் பார்த்து முடிக்க அம்மா நினைக்க, மகள் பிடிவாதம் பிடிக்க, மகன் பிடி கொடுக்காமல் இருக்க அடுத்து என்ன என்று ஆவலுடன் ..


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      நன்றி உமா தீபக்…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya says:

    Mera baby pavampa.


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Hmmm… Pavam… enna pannalaam… 🙂

You cannot copy content of this page