இதயத்தில் ஒரு யுத்தம் – 29
3868
0
அத்தியாயம் – 29
அன்றோடு சூர்யா வேலைக்கு செல்லாமல் ஐந்து நாட்கள் முடிந்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக கபிலன் சூர்யாவிடம் மிக இலக்கமாக நடந்து கொண்டான். அவளிடமிருந்து அவன் பறித்த அவளுடைய கைபேசியையும் அவளிடமே கொடுத்துவிட்டான். எப்பொழுதும் கரித்துக் கொட்டுபவன் புதிதாக இலக்கம் காட்டியது செயற்கை தனமாக இருந்தாலும் அவன் அதை பொருட்படுத்தாமல் மகிழ்சியாகதான் இருந்தான்.
சூர்யாவிற்கு அவனுடைய கடுகடுப்பான முகத்தை கூட சகித்துவிட முடிந்தது. ஆனால் இந்த புதிய கரிசனத்தை சகிக்க முடியாமல் மூச்சு திணறினாள்.
அன்றும் அப்படிதான். ஒரு புது புடவையை வாங்கிக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்து “இந்த கலர் உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும் சூர்யா… உனக்காகவே பத்து கடை ஏறி இறங்கி தேர்ந்தெடுத்தேன்… இன்னிக்கு எங்க கம்பெனில பார்ட்டி இருக்கு. நீ இந்த புடவையைதான் கட்டிட்டு வரணும்….” அவன் அன்புக் கட்டளையிடான்.
சூர்யாவிற்கு “ஐயோ…” என்றிருந்தது. அவனிடம் பதில் சொல்லி பேச்சை வளர்க்காமல் புடவையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.
அவளுக்குள் இன்னொரு கலக்கம்… “கம்பெனி பார்ட்டின்னா தீரஜ் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கே…! அவன் வந்தா என்ன செய்றது…! ஐயோ கடவுளே…! ” பார்ட்டிக்கு தயாராகி வெளியே வந்தவளின் உடல் பயத்தில் பதறியது…
“சூர்யா… என்னம்மா ஆச்சு…? ஏன் ஒரு மாதிரியா இருக்க…?” கபிலன் கரிசனமாக கேட்டான்.
“மயக்கம் வர்றமாதிரி இருக்கு… என்னவோ செய்யுது…” அவள் தலையை கையில் தாங்கி பிடித்துக் கொண்டு தள்ளாடினாள்.
“ஐயையோ… மயக்கமா… ஒரு நிமிஷம் இப்படி உக்காரு….” அவன் பதட்டமாகிவிட்டான். அவளை வாசல் படியில் அமரவைத்துவிட்டு, அவசரமாக உள்ளே ஓடி தண்ணீர் கொண்டுவந்தான்.
“இந்தா இத கொஞ்சம் குடி… முகத்தை கழுவு…” அவனுடைய கரிசனத்தில் சூர்யா உருகிவிடவில்லை என்றாலும் மனித தன்மையுடன் அவன் நடந்துகொள்வது ஆறுதலாக இருந்தது.
அவன் கொண்டுவந்து கொடுத்த தண்ணீரில் முகத்தை கழுவிவிட்டு மீதியை பருகினாள். கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றியது. இருந்தாலும் அவளுக்கு பார்ட்டிக்கு போவதை நினைத்தால் படபடப்பு அதிகமாவது போல் இருந்தது.
“எனக்கு ஏதோ மாதிரி இருக்கு… நீங்க மட்டும் பார்ட்டிக்கு போயிட்டு வாங்களேன்…” அவனை கெஞ்சலாக பார்த்தவள் திடுக்கிட்டாள். அவனுடைய முகம் அவ்வளவு பயங்கரமாக மாறியது. ஒரே நொடியில் தன்னுடைய முகபாவத்தை மாற்றிக் கொண்டவன்,
“என்ன சூர்யா நீ… மயக்கம் வர்றதெல்லாம் ஒரு காரணமா பார்டியை தவிர்க்க… எல்லாரும் அவங்கவங்க குடும்பத்தோட வரும் போது நான் மட்டும் தனியா போயி நிக்க முடியுமா…? ப்ளீஸ்… ஒன்னும் ஆகாது…. ஒரே மணி நேரம்தான்… போயிட்டு உடனே திரும்பிடலாம்… வா சூர்யா…” அவன் அவளை கட்டாயப்படுத்தினான்.
அவள் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்காமல் அவளை காலில் விழாத குறையாக கெஞ்சி அழைத்து சென்றுவிட்டான்.
கிருஷ்ணா கெமிக்கல்ஸ் கம்பெனி வளாகத்திலேயே இருந்த விருந்தினர் மாளிகையில்தான் பார்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்ற ஆண்டு சூர்யா அதே நிறுவனத்தில்தான் வேலை செய்தாள். அப்போதெல்லாம் இது போல் எந்த பார்டியும் கொண்டாடியதில்லை. ‘இந்த ஆண்டு மட்டும் என்ன சிறப்பு…? எதற்காக இந்த பார்ட்டி…!’ அவள்குழம்பியபடியே ஆட்டோவிலிருந்து இறங்கினாள்.
விருந்தினர் மாளிகை பிரம்மாண்டமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. இரவு நேரத்தில் மின்விளக்கு அலங்காரத்தில் அந்த மாளிகை மின்னியது. கிருஷ்ணா கெமிக்கல்சில் மேல் மட்டத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். நல்லவேளையாக தீரஜ்பிரசாத்தை அங்கு காணவில்லை. அவள் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தாள்.
“ஹலோ… மேடம்… எப்படி இருக்கீங்க…?”
“ஹாய்… சூர்யா… எப்படி இருக்க… கபிலன் சார்தான் உன் ஹஸ்பன்டா…?”
“என்ன மேடம்… திடீர்ன்னு வேலையை விட்டுட்டு போயிடீங்க…? நீங்க போகனுன்னு நினைத்தாலும் கோசிகாலன் உங்களை விடாது போல… ஹா… ஹா… ”
“சூர்யா… உன்ன பார்த்து எத்தை நாளாச்சு… உன் கல்யாணத்துக்கு எங்களை எல்லாம் கூப்பிடவே இல்லையே…” என்று பலர் சூர்யாவிடம் வந்து பேசினார்கள்.
பழைய நட்பு வட்டாரத்தை பார்த்ததும் சூர்யாவிற்கு அவளுடைய கவலை மறந்துவிட்டது. அவள் மலர்ந்த முகத்துடன் பேசிக்கொண்டிருந்தாள்.
கபிலனின் கண்கள் ‘சூர்யாவை யார்யாரெல்லாம் பார்க்கிறார்கள்…? அவர்களின் பார்வை எப்படி இருக்கிறது…? இந்த கூட்டத்தில் எவன் சூர்யாவின் முன்னாள் காதலனாக இருப்பான்… ‘ என்று கணக்கு பண்ணிக் கொண்டிருந்தது.
கபிலன் தீரஜ்தான் சூர்யாவை காதலித்தவன் என்று நம்பவே இல்லை. அந்த முகம் தெரியாத காதலன் யார் என்பதை கண்டுபிடிக்கத்தான் இன்று பல ஜாலங்களை செய்து அவளை அலங்கரித்து அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.
அதை புரிந்துகொள்ளாத சூர்யா பழைய நண்பர்களுடன் விகல்பமின்றி பேசிக் கொண்டிருந்தாள். அவனால் யாரையும் குறிப்பிட்டு சந்தேகப்பட முடியவில்லை. சூர்யாவின் மீது யாருடைய பார்வையும் ஏக்கமாகவோ… தவறாகவோ… கோபமாகவோ… பதியவே இல்லை. எல்லோருடைய பார்வையும் சகஜமாக இருப்பது போல்தான் தெரிந்தது.
அவனுக்குள் கோபம் குமிழிட்டது. யார் அவன்…? ஒருவேளை இன்று அவன் வரவே இல்லையோ…! அவனுக்குள் சந்தேகம் பிறந்தது. யோசித்துப் பார்த்தான். அவனுக்கு தெரிந்து யாரும் வராமல் இருப்பதாக தோன்றவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனையுடன் இருந்தான்.
அந்த நேரம் அனைவருக்கும் மதுபானமும் குளிர்பானமும் விநியோகிக்கப்பட்டது. கபிலன் மதுபானம் அருந்தியபடி ஒரு மூலையில் அமர்ந்துவிட்டான். சிறிது நேரத்தில் விருந்து நடக்கும் கூடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பாஸ் வருகிறார்… ஜி வருகிறார்… என்கிற குரல்கள் எழும்பின.
தீரஜ்பிரசாத் ஒரு இளம் பெண்ணின் கையை பிடித்தபடி உள்ளே வந்தான். அந்த பெண்ணின் அழகில் விருந்து கூடமே ஒரு நொடி அசைவற்றுப்போன நேரம், தீரஜ்பிரசாத்தின் கண்கள் மலர்ந்த முகத்துடன் பழைய நட்பு வட்டாரத்துடன் கதைத்துக் கொண்டிருக்கும் சூர்யாவை விழுங்குவது போல் பார்த்ததை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
பார்ட்டி ஹாலுக்குள் வந்த தீரஜ் புதிய பெண்ணின் கையை உரிமையுடன் பிடித்தபடி, மைக்கில், இந்த பார்டி தொழிலாளர்களை உற்ச்சாகமூட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பார்ட்டி என்றும் இந்த தருணத்தை அனைவரும் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்றும் சொல்லி சுருக்கமாக அனைவரிடமும் பொதுவாக பேசி முடித்தான்.
பிறகும் அந்த பெண்ணின் கையை பிடித்தபடியே தனித்தனியாக அவனிடம் வந்து பேசுபவர்களிடம் உற்சாகமாக பேசியதோடு கையணைப்பில் இருக்கும் பெண்ணையும் அறிமுகப்படுத்தினான்.
சூர்யாவிர்க்குள் ஒரு தீ பற்றிக்கொண்டது. அந்த தீ இதுவரை தீரஜ்பிரசாத்திற்குள் எரிந்து கொண்டிருந்த தீ…! பொறாமை தீ…!
அவள் எவ்வளவோ முயன்றும் அவள் முகம் சிவந்து சூடாவதை அவளால் தவிர்க்க முடியவில்லை. சூர்யாவின் சிவந்த முகம் தீரஜ்பிரசாத்தை கொஞ்சம் சாந்தப்படுத்தியது. அவள் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருப்பதை அவன் புரிந்து கொண்டான்.
கபிலன் எதை கடுபிடிக்க வேண்டும் என்று இங்கு வந்தானோ அதை எப்படி கண்டுபிடிப்பது என்று மது கோப்பையுடன் அமர்ந்து யோசிக்கும் போதுதான் இவர்களின் மௌன போராட்டம் நடந்து கொண்டிருந்தது…
அவன் ஒருவழியாக யோசித்து முடித்துவிட்டு மனைவியிடம் வரும்போது தீரஜ் சகஜமாகிவிட்டான். ஆனால் சூர்யா தகித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய முக மாற்றம் கபிலனுக்கு சொன்ன செய்தி… ‘நீ தேடும் ஆள் இங்குதான் இருக்கிறான்…’
இந்த உண்மை புரிந்ததும் கபிலன் சூர்யாவின் தோளில் கையை போட்டான். அவளுடன் மிக நெருக்கமாக நின்றான். சூர்யாவால் விலக முடியாதாளவு அவனுடைய பிடி இறுகியிருந்தது.
அப்படி சூர்யாவுடன் நெருங்கி நின்றபடியே அங்கிருந்த ஆண்கள் அனைவரின் முகபாவத்தையும் கணக்கிட்டான். தீரஜ் உட்பட… யாருடைய முகத்திலும் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவன் ஏமாற்றமாக உணர்ந்தாலும் அவனுடைய நெருக்கத்தை தளர்த்தவே இல்லை.
கபிலன் அறியாத விஷயம்… தீரஜ் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தாலும் வெளியில் சிரித்துக் கொண்டிருக்கிறான் என்பதுதான்…
சிறிது நேரத்தில் அனைவரும் விருந்துண்ண அழைக்கப் பட்டார்கள். சைவமும் அசைவமும் தனித்தனியாக தோட்டத்தில் நிலா வெளிச்சத்திலும் மின் விளக்கு வெளிச்சத்திலும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவரவர் தங்களுக்கு விருப்பமான உணவை நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் உண்டு மகிழ்ந்தார்கள்.
கபிலன் மனைவிக்கு ஊட்டியே விட்டுவிடுபவன் போல நடந்து கொண்டான். அவளுக்கு அவனுடைய செய்கை வெறுப்பாக இருந்ததோடு தீரஜ் முன் இவன் இப்படி நடந்து கொள்வதை நினைத்தால் ‘காற்றில் கரைந்து காணாமல் போய்விடமாட்டோமா…’ என்றிருந்தது.
யாரயும் நிமிர்ந்து பார்க்கும் சக்தியின்றி குன்றிபோய் அமர்ந்திருந்தாள். அந்த காட்சியை சகிக்க முடியாத தீரஜ் என்ன சொல்லி தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்திருந்த பெண்ணை அனுப்பினானோ… அவளை அனுப்பிவிட்டு அந்த மாளிகையிலேயே மாடியில் இருந்த அவனுடைய அறைக்கு சென்றுவிட்டான்.
மேலே சென்றவனால் சும்மா இருக்க முடியவில்லை. சிசி கேமராவுடன் பொருத்தப்பட்ட திரை அவனுடைய அறையில் இருந்தது. அதில் கபிலனின் கொட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தான். இதற்க்கு மேல் அவனால் இந்த கொடுமையை பார்க்க முடியாது என்கிற நிலையில் தன்னுடைய கைபேசியை எடுத்து சில எங்களை அழுத்தினான். அங்கே கபிலனின் கைபேசி அலறியது…
Comments are closed here.