இதயத்தில் ஒரு யுத்தம் – 40 End
7484
11
அத்தியாயம் – 40
தீரஜ்பிரசாத்தின் காதல் எவ்வளவு ஆழமானது. இந்த காதலை தூக்கியெறிந்த தான் எவ்வளவு பெரிய துரதிஷ்ட்டசாலி என்று நினைக்கும் போது சூர்யாவிற்கு அழுகை பொங்கியது…
அவள் தேம்புவதை சிறிது நேரம் வெறித்த தீரஜ்…
“என்ன ஆச்சு இப்போ… எதுக்கு இப்படி அழற?” என்றான்.
அவளுடைய அழுகை நிற்கவில்லை.
“சூர்யா…” அவன் அதட்டினான்.
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளுடைய கலங்கிய முகம் அவனை என்ன செய்ததோ… உடனே “என்ன சூர்யா….? சொல்லிட்டு அழு…” என்று தழைந்த குரலில் கேட்டான்.
“………………..” அவளிடமிருந்து பதில் வரவில்லை. ஆனால் அழுகை நின்றிருந்தது.
“உன்னை ரொம்ப கஷ்ட்டப் படுத்துறேனா சூர்யா…?”
அவள் இல்லை என்பது போல் தலையசைத்தாள்.
“பின்ன என்ன…?”
“எல்லாத்தையும் விட்டுட்டு வர்றேன்னு சொல்றியே… இத்தனை நாள் அனுபவிச்ச சுகங்களையும் அதிகாரத்தையும் விட்டுட்டு வந்து உன்னால சந்தோஷமா இருக்க முடியுமா…?”
“நீயும் குழந்தையும்தான் என்னுடைய சந்தோஷம். நீங்க ரெண்டு பேரும் என் பக்கத்துல இருந்தா நரகத்தையும் என்னால சொர்கமா மாத்திக்க முடியும்… நீங்க இல்லைன்னா சொர்கத்துல இருந்தாலும் அது எனக்கு நரகம்தான்… ”
அவன் சொல்லி முடிப்பதற்குள் “தீரஜ்…” என்கிற கூச்சலுடன் பாய்ந்துவந்து அவனை கட்டிக் கொண்டாள்.
உடல் சிலிர்க்க… மனம் இனிக்க… வானத்திலிருந்து பூமழை பொழிய… இனிய கீதம் அவன் செவிகளை நனைக்க… அந்த ஒரு நொடியில் அவன் வாழ்ந்துவிட்டான். இதுவரை அனுபவித்தறியாத மகிழ்ச்சியை அனுபவித்துவிட்டான். இதுவரை எட்ட முடியாத வெற்றியை எட்டி பிடித்துவிட்டான். அந்த கணம்தான் அவன் வாழ்க்கையில் ஜெயித்தகணம்.
தனக்கு கிடைத்திருக்கும் இந்த மகிழ்ச்சியும் வெற்றியும் உண்மைதானா என்பதை உறுதி செய்துகொள்ள அவளை தன்னோடு சேர்த்து இறுக்கிப் பிடித்துக் கொண்டே அவளிடம் கேட்டான்…
“சொல்லு சூர்யா… என்னை கல்யாணம் செய்துகொள்ள உனக்கு சம்மதமா…? சொல்லு…”
அதற்கு மேல் தன் மனதை மூடி மறைக்க வலுவில்லாத சூர்யா கண்களில் கண்ணீருடன் ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தாள்.
இன்ப படபடப்பில் மீண்டும் கேட்டான்…
“சூர்யா… என்னை உனக்கு பிடிச்சிருக்கா…?”
“ம்ம்ம்…. பி…டிச்சி…ருக்கு… பிடிச்சிருக்கு… ரொம்ப… பிடிச்சிருக்கு தீரஜ்… ரொம்ப பிடிச்சிருக்கு…” அவள் கண்ணீரும் விம்மளுமாக சொல்ல… அவன் மனம் அடைந்த ஆனந்தத்தை என்னவென்று சொல்ல…!!!
அவன் சிறகே இல்லாமல் வானத்தில் பறந்தபடி… மகிழ்ச்சியில் மிதந்தபடி… மீண்டும் கேட்டான்.
“நிஜமாவே என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா சூர்யா… கொஞ்சம் சிரிச்சுகிட்டே சொல்லேன்…” எத்தனை முறை அவள் சொன்னாலும் மீண்டும் மீண்டும் அவள் வாயால் அவனை பிடித்திருக்கிறது என்று சொல்வதை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது அவனுக்கு…
இவன் நமக்காக எவ்வளவு ஏங்கியிருக்கிறான் என்பதை உணர்ந்த சூர்யா கண்களில் கண்ணீரும் உதட்டில் புன்னகையுமாக “சம்மதம் தீரஜ்… உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு முழு சம்மதம்…” என்றாள்.
நிம்மதி பெருமூச்சுடன் “தேங்க்ஸ் சூர்யா…” என்றவனின் அணைப்பு இன்னும் இறுகியது.
‘எனக்கு நீ தேங்க்ஸ் சொல்றியா…!’ அவள் மனம் கேட்டது. மகிழ்ச்சி தொண்டை வரை நிறைந்திருக்க பேச்சுவராமல் கண்ணீர் முட்டிக் கொண்டு வெளியேறியது. ஆனந்தக் கண்ணீர்…!!!
இரண்டு வாரத்தில் தீரஜ்பிரசாத்திற்கும் சூர்யாவிற்கும் எளிமையாக கோசிகாலனில் திருமணம் முடிந்தது. ஆம் கோசிகாலனில்தான்… தீரஜ் சூர்யாவிற்காக மதுராவை விட்டுவிட்டு வர தயாரானாலும், சூர்யா தீரஜ்பிரசாத்திற்காக மதுராவை விட்டுவெளியேற மறுத்துவிட்டாள். அவன் அவளை அவளுடைய எல்லா குறை நிறைகளோடும் ஏற்றுக்கொண்டது போலவே, அவளும் அவனை அவனுடைய எல்லா குறை நிறைகளோடும் அப்படியே ஏற்றுக் கொண்டாள். அவர்கள் வாழ்க்கை மதுராவிலேயே ஆரம்பம் ஆனது.
கீர்த்தனாவிற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை. வயதுக்கேற்ற வளர்ச்சி அவளிடம் இருக்காது என்பது தெளிவாகிவிட்டது. அவள் மூன்று வயதில்தான் நடப்பாள், ஐந்து வயதில்தான் பேசுவாள், எட்டு வயதில்தான் பள்ளியில் சேர்க்க முடியும்… என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். மற்றபடி அவளை சாதாரண குழந்தைபோல் மாற்றிவிடலாம் என்றும் சொல்லியிருந்தார்கள்.
கீர்த்தி குனமாகிவிடுவாள் என்கிற நம்பிக்கையே தீரஜ்பிரசாத் தம்பதிகளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. தீரஜ் மகளையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு உலகத்தை சுற்றினான். சென்னைக்கு சென்று மாமனார் வீட்டில் தங்கினான். குடும்பத்தோடு சென்று பிரபாவை பார்த்துவிட்டு வந்தான். அவளும் முழுமையாக குணமாகி தோழியுடன் பழையபடி அரட்டை அடித்தாள். குறுகிய காலத்தில் வாழ்க்கையின் மொத்த துன்பத்தையும் அனுபவித்து முடித்துவிட்ட சூர்யாவின் வாழ்க்கையில் இப்போது இன்பம் மட்டுமே நிறைந்திருந்தது…
கீர்த்தனாவிற்கு ஐந்து வயதாகும் போதுதான் நலன் பிறந்தான். நலன் பிறந்த பின் கீர்த்தனா நலனிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டாள். அதன் பிறகு அவளிடம் நிறைய முன்னேற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. அவள் சுட்டிக் குழந்தையாக மாறினாள்.
மதுராவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் பிரசாத்ஜியை சூர்யா, கீர்த்தி, நலன் மூவரும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் செல்ல தொல்லைகளை இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்தான் தீரஜ்பிரசாத்.
11 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Shandhiya says:
Superb story. Ivlo naal en kanla padama irunthirukke.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Amali George says:
Semma story
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Periyasamy says:
Nice story
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thanammal R says:
Super ji
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
EMMI BABU says:
Semma story…… kanal vizhi kadhal and intha story excellent… ungalukku fan aitten naan…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Samrithi says:
Unga story la Ethan na paducha 1 St story sis semma narration ungalodathu 👏💐 I love very much Dheeraj… Superb story 👍
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Samrithi
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Saranya Venkat says:
enna story nithiya kalukul iram enbarathuku poruthama kadhai arumai nithiya solla varathaigal illai kanavizhi kadhal and idhayathil oru yutham super nithaya congratulations keep it up
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you somuch Saranya Venkat… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Meena Vighneswar says:
semma story nithya ji
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Araselvithiru Thirunavukkarasu says:
Very nice