கனல்விழி காதல் – 16
10098
11
அத்தியாயம் – 16
புதிதாக ஒரு அப்பாட்மெண்டை வாடகைக்கு எடுத்து, அவளை தங்கவைத்தார் சிவமாறன். அந்த வீட்டில், அவளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தன்னுடைய நேரடி கண்காணிப்பில் அமைத்துக் கொடுத்தார். ஹவுஸ் மெய்ட் ஏஜென்சி மூலம் வீட்டு வேலைக்கு தேவையான ஆட்களை, தானே நேர்முகத் தேர்வு செய்து எடுத்தார். அவளுடைய பாதுகாப்பை மனதில் கொண்டு தன்னுடைய நம்பிக்கையான ட்ரைவரை, அவளுக்கு மாற்றிவிட்டார். அவள் ஒரு இளவரசியை போல எந்த குறையும் இல்லாமல், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தார். இது எதுவும் தன்னுடைய மனைவிக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார்.
சிவமாறன் எப்பொழுதுமே வீட்டிற்கு தாமதமாகத்தான் வருவார் என்பதாலும், வீட்டிற்கு வந்துவிட்டால், மிகவும் சந்தோஷமாக மனைவோடும் குழந்தைகளோடும் நேரத்தைக் கழிப்பார் என்பதாலும் இராஜேஸ்வரிக்கு சிறிதும் சந்தேகம் வரவில்லை. சில மாதங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக சென்றுக் கொண்டிருந்தது. இப்போதிருக்கும் கைபேசியின் பயன்பாடு அப்போது இருந்திருந்தால் ஒருவேளை மாட்டியிருப்பார். அது இல்லாததால், சூழ்நிலையை சமாளிப்பது அவருக்கு சற்று சுலபமாகவே இருந்தது. ஆனால் உண்மையை வெகுநாட்களுக்கு மூடிவைக்க முடியாதல்லவா! வார இதழில் வெளிவந்த ஒரு கிசுகிசு அவரை காட்டிக் கொடுத்துவிட்டது.
‘புதிய உதயம் – தனி வீட்டில் தயாரிப்பாளரும்… தாம்-தூம் அழகியும்’ – சல்லாபமான கார்டூனோடு அச்சிடப்பட்டிருந்தது. இந்தி திரையுலகில் எத்தனையோ தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். வெளிப்படையாகவே நடிகளைகளோடு கூத்தடிக்கவும் செய்கிறார்கள். அவர்களில் யாரையோ குறிப்பிடும் துணுக்கு இது என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள். மனநிம்மதியை இழக்க அவள் தயாராக இல்லை. அவளுடைய கணவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்றே நினைத்தாள். அதையே நம்பவும் விரும்பினாள்.
‘ஒன்றாக சேர்ந்து சுற்றுவது.. பார்ட்டிக்கு சொல்வதெல்லாம் நடந்திருக்கலாம். ஆனால் தனியாக வீடு எடுத்து தங்க வைக்கும் அளவுக்கெல்லாம் சென்றிருக்க மாட்டார்’ – இழுத்துப் பிடித்த நம்பிக்கைதான்… ஆனால் நிம்மதியைக் கொடுத்தது.
அவள், அவரிடம் நேரடியாக எதையும் கேட்கவில்லை. அமைதியாகத்தான் இருந்தாள். ஆனால் தன்னை அறியாமலே அவருடைய நடவடிக்கைகளை கவனித்தாள். அவர் அலுவலகத்தில்தான் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அடிக்கடி அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டாள். முடிந்த அளவுக்கு எல்லா விழாக்களுக்கும் அவரோடு சேர்ந்து செல்ல முயன்றாள். அப்படி ஒரு விழாவில்தான், ஹோட்டல் பார்க்கிங் ஏரியாவில் அவருடைய பழைய ட்ரைவரை பார்த்தாள். இவளை பார்த்ததும் அவன் சற்று மறைந்துக் கொண்டான்.
‘இவன் எங்கே இங்கு! ஏன் மறைகிறான்!’ – அவளுடைய புருவம் சுருங்கியது. மனதில் பயமும் குழப்பமும் சூழ்ந்துக் கொண்டது.
அவசரப்பட்டுவிடக் கூடாது என்கிற எண்ணத்தில், முயன்று நிதானத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஒருவாரம் அமைதியாக இருந்தாள். பிறகு, சாதாரணமாக பேசுவது போல் அவனை பற்றி கணவனிடம் விசாரித்தாள். அவன் சொந்த ஊருக்கே போய்விட்டான் என்று கூசாமல் பொய் சொன்னார் சிவமாறன். பகீரென்றது அவளுக்கு.
‘பொய் சொல்கிறாரே! ஒருவேளை அவன் இங்கிருப்பது அவருக்கே தெரியாதோ!’ – அப்போதும் அவரை நம்பவேs விரும்பினாள். ஏதாவது ஒருவிதத்தில் அவளுடைய மனதில் தோன்றியுள்ள சந்தேகம் பொய்த்துப் போய்விடாதா என்கிற அல்ப ஆசை அவளுக்கு.
“அவன் இங்கதான் இருக்கான். நான் பார்த்தேன்… அன்னைக்கு பார்ட்டியில…” – அவள் சொல்லும் பொழுதே அவருடைய முகம் பயங்கரமாக மாறியது. கோபத்தில் உக்கிரமாக மாறியிருந்தார்.
‘ஏன் இவ்வளவு கோவம்! கண்டுபிடித்துவிட்டாளே என்றா! கடவுளே!’ – மனம் பதறியது. அவள் நினைப்பது போல்… அந்த பத்திரிகையில் வந்தது போல் எதுவும் நடந்திருக்கக் கூடாதே என்று உள்ளம் தவித்தது. பொறுமை நிதானமெல்லாம் காற்றில் கரைந்துட, “நீங்க அவ கூட இருக்கீங்களா?” என்றாள் நடுங்கும் குரலில். அவர் பதில் சொல்லாமல் அங்கிருந்து செல்ல எத்தனித்தார்.
“எனக்கு பதில் சொல்லிட்டு போங்க” – ஆத்திரத்துடன் அவரை தடுத்தாள் இராஜேஸ்வரி.
“நா யாருக்கும் எந்த பதிலும் சொல்ல தேவையில்லை. போடி இங்கேருந்து…” – அவளை இழுத்துத்தள்ளிவிட்டு அங்கிருந்துச் சென்றார். அவருடைய இயலாமை… குற்றஉணர்ச்சியெல்லாம் கோபமாக வெளிப்பட்டது.
மனைவியிடம் சண்டைபோட்டுக் கொண்டு வெளியே வந்த சிவமாறன், நேராக மதுபான அருந்தகத்திற்குச் சென்று, மூக்குமுட்டக் குடித்தார். அவர் எதிர்பார்த்தபடி மனபாரம் குறையவில்லை. எப்படி குறையும்? எந்த கோணத்திலிருந்து யோசித்தாலும் அவர் பக்கம் நியாயமே இல்லையே!
இராஜேஸ்வரியின் கோபம் நியாயம்தான். ஆனால் மோனிகாவை தவிர்க்க அவர் என்ன செய்திருக்க வேண்டும் என்று இப்போதும் அவருக்கு புரியவில்லை. அவராக எதையும் தேடிச்செல்லவில்லை. தவறு செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. எல்லாம் தானாக நடந்துவிட்டது. இதை எப்படி அவளுக்கு புரியவைப்பது! இந்த பிரச்னையை எப்படி சுமூகமாக முடிப்பது! – எவ்வளவு யோசித்தாலும் தீர்வு புலப்படவில்லை.
அவர் வீடு திரும்பும் பொழுது நேரம் நள்ளிரவை தாண்டிவிட்டது. மனைவியின் முகத்தில் எப்படி விழிப்பது… அவளுக்கு என்ன சமாதானம் சொல்வது என்கிற சங்கடத்தோடுதான் வீட்டிற்கு வந்தார். கதவு திறந்தே இருந்தது. உள்ளே நுழைந்துப் பார்த்தார். வீட்டில் யாரும் இல்லை. குழந்தைகளைக் கூட காணவில்லை. திடுக்கிட்டுப் போன சிவமாறன், அவசரஅவசரமாக கீழே இறங்கி வந்து செக்யூரிட்டியிடம் கேட்டார்.
“மேடம் குழந்தைங்களோட வெளியே போனாங்க சார்” என்றான்.
“எப்படி… எந்த கார்ல?” என்று விபரம் கேட்டு தெரிந்துக் கொண்டார். அவருடைய இதயம் தாறுமாறாகத் துடித்தது. ஏதாவது தவறான முடிவெடுத்துவிட்டாளோ என்று பயந்து போனார். பாதையெல்லாம் போன இடம்தெரியாமல் போய்விட்டது. நொடிகூட தாமதிக்காமல் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அவளுடைய அண்ணன் வீட்டுக்கு சென்றிருந்தாலும் இருக்கலாம் என்கிற நம்பிக்கையில் அங்கு வந்தார்.
இப்போது இருக்கும் அதே அப்பார்ட்மெண்டில்தான் அப்போதும் இருந்தார்கள். கேட்டுக்கு வெளியிலேயே காரை நிறுத்திவிட்டார். இராஜேஸ்வரி வந்த கார் பார்க்கிங்கில் நின்றதை பார்த்த பிறகுதான், அவருடைய மூச்சே சீரானது. வீட்டிற்குள் செல்லும் துணிவு வரவில்லை. ஒருவேளை இராஜேஸ்வரி அனைத்தையும் அனைவரிடமும் போட்டு உடைத்திருந்தால்! – அவர்கள் முகத்திலெல்லாம் எப்படி விழிக்கப் போகிறார்! குழந்தைகளை எப்படி பார்க்கப் போகிறார். மிகவும் அவமானமாக உணர்ந்தார்.
கேட்டில் அமர்ந்திருந்த வாட்ச்மேன் காருக்குள் எட்டிப்பார்த்து, யாரென்று விசாரித்தான். அவனிடம் நோட்டை எடுத்து நீட்டி, இராஜேஸ்வரியும் குழந்தைகளும் எப்போது வந்தார்கள்… எப்படி வந்தார்கள் என்கிற விபரத்தையெல்லாம் கேட்டுக் கொண்டு அங்கிருந்துச் சென்றார்.
கோபத்தில் வீட்டை விட்டுச் சென்ற மனைவி தானாக திரும்பி வந்துவிடுவாள் என்று இரண்டு நாட்கள் காத்திருந்தார். அவள் வரவில்லை என்றதும் தானே மைத்துனன் வீட்டிற்குச் சென்றார். அங்கே அவரிடம் யாரும் முகம் கொடுத்துப் பேசவில்லை. இராஜேஸ்வரி வெளியே வந்து அவரை பார்க்கவே மறுத்துவிட்டாள். குழந்தைகளையும் உள்ளேயே வைத்துக் கொண்டாள். இறுகிய முகத்துடன் அமர்ந்திருக்கும் நேரந்திரமூர்த்தியிடமும் அவரால் எதுவும் பேசமுடியவில்லை. சற்றுநேரம் அமர்ந்திருந்து பார்த்துவிட்டு கிளம்பினார். அப்போது, “இனி இங்க வராதீங்க” என்று முகத்தில் அடித்தது போல் கூறிவிட்டார் நரேந்திரமூர்த்தி. அவ்வளவுதான்… அந்த பக்கம் தலைவைத்துப் படுப்பதைக் கூட மறந்துவிட்டார் சிவமாறன். அவரால் அவமதிப்பை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
இராஜேஸ்வரி வீட்டைவிட்டுச் சென்று இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. சிவமாறன் தன்னுடைய வாழ்க்கை முறையை எந்தவிதத்திலும் மாற்றிக்கொள்ளவில்லை. காலையில் அலுவலகத்திற்குச் செல்வார். மாலை மோனிகாவை சென்று பார்ப்பார். அவளோடு சற்று நேரம் செலவிடுவார். இரவு வீட்டிற்கு வந்து தனிமையில் இருப்பார். மனம் மனைவியையும் குழந்தைகளையும் நினைத்து ஏங்கும். ஆனாலும் அவர் வீட்டுக்கு வருவதை ஒருநாளும் தவிர்க்க மாட்டார். நாட்கள் செல்லச் செல்ல அவருடைய ஏக்கம் அதிகமாகிக் கொண்டே சென்றது. மனிதன் பைத்தியம் பிடித்தது போல் ஆனார். மோனிகா மட்டும்தான் அவருடைய ஒரே ஆறுதல். நோயும் அவளே மருந்தும் அவளே என்பது போல பிரச்சனையும் அவள்தான்… அதற்கான மருந்தும் அவளேதான்.
11 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Yazhvenba says:
Monika love pana family man than kidachana?
Ella mistake kum starting ava than… and dev dad yum …
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Yazhvenba says:
Woww nithya mam… superbbb story…
I couldn’t stop reading…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha khaliq says:
Hi Nithya….nice ud….niraya aangal seiyum thavarai dhaan avarum seidhirukirar….avar ninaipadhu saridhaan Monica vishayathil avaraal onnum seidhiruka mudiyadhu….avar manaivi kuzhandhai yena manakatthupadudan irundhalum avar mele kanmoodi thanamaana kaadhal vaithirukum monica vin Pakkam avar Manam saayadhaan seiyum….idhai thaduka avaraal mudindhirukadhu….but avar manaiviyidam aarambathileye solli irundhal avar yedhavadhu yosanai solli irupar illai pirachanai ivvalavu perusa vedichirukadhu but avar anaega aangal pola moodi maraidhadhaal pirachanai ivvalavu perusa aanadhu
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
மோனிகா மீது தவறில்லை என்று சொல்லமாட்டேன் ஆனால் சிவமாறன் அவரது செயல்கள் மன்னிக்க முடியாதவை,ஒரு திருமணம் ஆன நபருக்கு தன் குடும்பமும் அதன் கட்டமைப்புக்குத்தான் முன்னுரிமை கொடுக்கணும்,சிவமாறன் அதை செய்ய தவறிவிட்டார்,இராஜஸ்வரி தண்டனை கொடுத்ததில் தவறில்லை.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
உண்மைதான்… சிவமாறன் தண்டனைக்குரியவர் தான்…
நன்றி தாட்சாயணி… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Rajalaxmi P says:
ஹாாய்்
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
ஹாய்… ராஜலக்ஷ்மி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Uma Deepak says:
Enna sollanu theriyala..
Avalukku puriya vachu irukkalaam..
Avarum appo avalin paithiyakaara kaathalukku sari solli ippadi pannitaar..
Ithula rajeswari amma thaan paavam..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
இராஜேஸ்வரி மட்டும் அல்ல… குழந்தைகளும் பாவம்தான்… மனம் சங்கடப்படும் தானே! அதிலும் ஒரு செலிபிரிட்டி… பொது மேடைகளில் வேறு ஒரு பெண்ணோடு பார்க்கும் போதெல்லாம் எப்படி இருக்கும்…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pons says:
என்ன சொன்னாலும்..சிவமாறன் வாதத்தை ஏற்க முடியாது…
இப்ப புரியுது….ஏன் ஆட மாட்டான்..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
நிச்சயமாக ஏற்க முடியாது. அவர் தண்டனைக்கு தகுதியானவர்..