Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

இதயத்தில் ஒரு யுத்தம் – 34

அத்தியாயம் – 34

கபிலன் வெறிபிடித்தவன் போல் இருந்தான். அவனுடைய நடவடிக்கைகள் அவனுடைய பெற்றோரையே வெறுப்படைய செய்தது. அவர்களால் இனி மருமகளை பாதுகாக்க முடியாது என்பதை புரிந்து கொண்டார்கள்.

 

“என்னங்க… இந்த பயல் ஏங்க அந்த பொண்ண இந்த பாடு படுத்துறான்…?”

 

“பைத்தியம் மாதிரி நடந்துக்கறான் கமலா… அந்த பெண்ணோட வாழ்க்கையை பாழாக்கிட்டான்…”

 

“நம்ம மகன் இப்படியெல்லாம் நடந்துக்குவான்னு நான் நினைத்துக் கூட பார்க்கலைங்க…”

 

“சரிதான் கமலா… ஆனால் ஒன்னுமட்டும் நிச்சயம்…”

 

“என்னங்க….?”

 

“இனிமேலும் நம்ம மருமகளை இங்க வச்சிருக்கறது நல்லது இல்ல… நான் நாளைக்கே போய் சென்னைக்கு டிக்கெட் புக் பண்ணிட்டு வந்தடறேன்… எவ்வளவு சீக்கிரம் முடியுமோ… அவ்வளவு சீக்கிரம் நாம சூர்யாவ அவளுடைய பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுவது நல்லது…”

 

“அதுதான் சரிங்க… இன்னும் இரண்டு நாள்ல இங்கிருந்து கிளம்புற மாதிரி பாருங்க… நான் சூர்யாவோட சாமானை எல்லாம் பேக் பண்ண சொல்லிடறேன்…”

 

இப்படி தான் அந்த வீட்டு பெரியவர்கள் பேசி முடிவு செய்தார்கள். இவ்வளவு நாட்கள் இங்கு இருந்துவிட்டோம்… இன்னும் இரண்டு நாட்களில் பெரிதாக எதுவும் நடந்துவிடாது என்று நம்பித்தான் அந்த அவகாசத்தையும் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நாளே அவர்களுடைய நம்பிக்கை தவிடு பொடியானது…

 

# # #

 

அற்று அலுவலகத்தில் ஏதோ தவறு செய்துவிட்டு மேலதிகாரியிடம் திட்டு வாங்கிய கபிலன்… வேலை செய்யும் மனநிலை இல்லாமல் மத்தியத்திற்கு மேல் விடுப்பு சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தான். அவன் வீட்டிற்குள் நுழைந்த நேரத்தில் அங்கு பெண்கள் இல்லாததை கவனித்து தந்தையிடம் கேட்டான்.

 

“அப்பா.. எங்க அவளையும் அம்மாவையும் காணும்…?”

 

“அவங்க ரெண்டு பேரும் பார்க்குக்கு வாக்கிங் போயிருக்காங்கப்பா…? ”

 

“வெளியே சென்றுவிட்டு வரும் ஆண்பிள்ளையை கவனிப்பதை விட இவங்களுக்கு என்ன வாக்கிங் முக்கியமா போச்சு…?” அவன் எரிந்து விழுந்தான்.

 

ஊருக்கு கிளம்புவதற்கு தேவையான சாமான்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தவர் தன்னை மறந்த நிலையில் “மருமக பொண்ணு இந்தமாதிரி நேரத்துல வாக்கிங் போகணும்ன்னு டாக்டர் சொல்லியிருக்காராம்பா..” என்று சொல்லிவிட்டார்.

 

‘குழந்தைக்காக வாக்கிங் போயிருக்காளா…!’ அவன் கடுப்பானான். அதோடு தன் பெற்றோருடன் சேர்ந்து அவளும் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறாள் என்பதையும் அவன் ஊகித்திருந்தான். அந்த கோபமும் அவனை சூதேற்றிவிட… அவனுக்கு வெறி பிடித்துவிட்டது.

 

அதற்கு மேல் அவன் தந்தையிடம் எதுவும் கேட்கவில்லை… வீட்டிற்குள் நின்று அவரிடம் பேசிக் கொண்டிருந்தவன் வேகமாக வெளியே வந்து வாசல்படியில் அமர்ந்துகொண்டான். அவனுடைய முகத்தில் இருந்த கொடூரம் அந்த முதியவரை அச்சுறுத்தியது. இன்று ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று அவர் உள்ளுணர்வு சொல்லியது.

 

சிறிது நேரத்தில் தூரத்தில் சூர்யாவும் அவள் மாமியார் கமலாவும் வருவது தெரிந்தது. கபிலனின் கண்களில் தீ பொறி பறந்தது… அதை பார்த்த அவன் தந்தையின் வயிற்றில் பயம் பொங்கியது. அவன் கையில் சூர்யாவை தாக்குவதற்கு ஏதுவாக எதாவது வைத்திருக்கிறானா என்று பார்த்தார். எதுவும் இல்லை… கொஞ்சம் நிம்மதியாக இருந்தாலும் முழுமையாக அவனை நம்ப முடியாமல்
“கபிலா… அவசரப்படாதடா…. சொன்னா கேளுடா… பொறுமையா இருடா…” அவர் பீதியுடன் மகனை அமைதிபடுத்த முயன்றார். அதற்குள் வீட்டை நெருங்கிவிட்ட சூர்யாவும் கமலாவும் கபிலனின் முகத்தை பார்த்து பயந்து தயங்கி நின்றார்கள்.

 

வாசல் படியிலிருந்து ஆவேசமாக எழுந்தவன் “எவனைடி பார்க்க போய்ட்டு வர்ற…?” என்று கேட்டபடி அவள் சுதாரிப்பதற்குள் வாசல்படியில் செடி மறைவில் இருந்த உருட்டுக் கட்டையை எடுத்து அவள் வயிற்றில் பலமாக அடித்துவிட்டான்.

 

“ஆ…” என்று அலறியவள் கீழே விழும் முன் மேலும் இரண்டு அடிகளை கொடுத்ததோடு தடுக்க வந்த பெற்றோரையும் தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவள் முடியை பிடித்து இழுத்தபடி வீட்டிற்குள் சென்று தாள் போட்டுவிட்டான்.

 

காலனியில் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் சூர்யா மற்றும் கபிலனின் பெற்றோர் போட்ட சத்தத்தில் வெளியே வந்து அவனை தடுப்பதற்குள் அவன் சூர்யாவுடன் வீட்டிற்குள் சென்றுவிட்டான்.

 

“அடேய் பாவி பயலே… உன்னை பெற்றதுக்கு நான் மலடியாவே இருந்திருக்கலாமேடா… கொடும் பாதகா… கர்பிணி பொண்ண சித்ரவதை செய்றியேடா… உன்னை அந்த கடவுள்தான்டா கேட்கனும்… பகவானே…!!! இந்த பயலுக்கு தண்டனை கொடுக்க வாப்பா… வந்து இந்த பொண்ண காப்பாத்துப்பா…” கமலா ஆவேசமாக வானத்தை பார்த்து கத்த உள்ளே அரை மயக்கத்தில் கிடந்த சூர்யாவின் மனமும் அதையே சொல்லிக் கொண்டிருக்க…. அவன் வந்தான்….!!!

இரணியனை கொள்ளவந்த நரசிம்மன் போல் வந்தான்…
ராவணனின் தலையை கொய்தெரியவந்த ராமன் போல் வந்தான்…
அசுரனை அழிக்க வந்த தேவன் போல் வந்தான்…
அப்பாவிகளை காக்க வந்த ரட்சகன் போல் வந்தான்…

சீறி பாய்ந்து வந்து கூடியிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தான்… அவன்தான் தீரஜ்பிரசாத்…!!!
அங்கு நடந்த கலவரம் யார் மூலம்… எப்படி அவனுக்கு தெரிந்தது… அவன் எப்படி அவ்வளவு விரைவாக KC காலனியை அடைந்தான் என்பது கடவுளுக்குதான் வெளிச்சம்… ஆனால் சரியான நேரத்திற்கு அங்கு வந்தான்… புயல் வேகத்தில் புழுதியை கிளப்பியபடி காலனிக்குள் நுழைந்து அரைவட்டம் அடித்து நின்ற காரிலிருந்து மின்னல் போல சீறி பாய்ந்து வந்தான்.

 

சூர்யாவை கபிலன் வீட்டிற்குள் இழுத்து சென்று கதவை தாள் போட்ட சில நிமிடங்களிலேயே ஒரே உதையில் அந்த கதவை தகர்த்தெறிந்தான்.

 

பலத்த சத்தத்துடன் திறந்துகொண்ட கதவை திடுக்கிடலுடன் திரும்பிப்பார்த்த கபிலன், ஆக்ரோஷமான முகத்துடன் உள்ளே நுழைந்த தீரஜ்பிரசாத்தை பார்த்து குலை நடுங்கிப்போனான். அவன் மேலே சிந்திக்கும் முன் அவனை நெருங்கிவிட்ட தீரஜ்பிரசாத் அவனின் செவிப்பறையை கிழித்தான். அருகிலிருந்த பூச்சாடியை கையிலேடுத்தவன் ஒரே அடியில் அவன் மண்டையை பிளந்ததோடு அவனை மயக்கமடையவும் செய்தான்.

 

அதற்கு மேல் தாமதிக்காமல் தரையில் அரைமயக்கமாக சரிந்து கிடந்தவளை அள்ளிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்… அவனுடைய ஆட்கள் கபிலனை அள்ளிக் கொண்டு பேப்பர் மில்லிற்கு விரைந்தார்கள்… அங்கு கூடியிருந்த அனைவரும் என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது…

 

 




Comments are closed here.

You cannot copy content of this page