கனல்விழி காதல் – 17
9957
6
அத்தியாயம் – 17
வாழ்க்கை அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது… மனைவியை பார்த்தே ஆறுமாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. குழந்தைகளை மட்டும் அவ்வப்போது பள்ளியில் சென்று பார்த்துவந்தார். அப்போதுதான் இராஜேஸ்வரி தனிவீட்டிற்கு வந்துவிட்டாள் என்கிற விபரம் அவருக்கு தெரியவந்தது. அங்கு ஏதோ பிரச்சனை நடந்திருக்க வேண்டும் என்பதை ஊகித்துக் கொண்டவர், மனைவியை தேடி அவளுடைய புது வீட்டிற்கு வந்தார். மிகவும் சாதாரணமான ஏரியாவில்… சுமாரான அப்பாட்மென்டில், ஃபிளாட் எடுத்திருந்தாள்.
அவரால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அங்கே மோனிகாவிற்கு என்னவெல்லாம் வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்! அவர் எப்படிப்பட்ட வீட்டில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்! ஆனால் இங்கே அவருடைய மனைவியும் குழந்தைகளும்…! தன் மீதே அவருக்கு ஆத்திரம் வந்தது. தான் எதற்காக வாழ்கிறோம்! யாருக்காக உழைக்கிறோம் என்றெல்லாம் சிந்தித்தவர், தன்னைத்தானே வெறுத்தார்.
அழைப்பு மணி ஒலி கேட்டு, இடுப்பில் குழந்தையோடு வந்து கதவைத் திறந்த இராஜேஸ்வரி, கணவனைக் கண்டதும் திகைத்தாள். அவளுடைய அந்த ஒரு நொடி பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டு சட்டென்று வீட்டுக்குள் நுழைந்துவிட்டார் சிவமாறன்.
“நீங்க எதுக்கு இங்க வந்தீங்க? வெளியே போங்க” – உணர்ச்சிப் பேரலையில் நடுங்கியது அவள் உடல். அவள் இடுப்பிலிருந்த பாரதி, தந்தையைக் கண்டதும் “அபூ… அபூ…” என்று சிரித்துக் கொண்டு தாவினாள். அணையை உடைத்துக்கொண்டு வெளியேறும் விளிம்பிலிருந்தன அவருடைய உணர்வுகள். குழந்தையை அவளிடமிருந்து தூக்க முனைந்தார். உடனே இரண்டடி பின்னால் தள்ளி நின்றுக் கொண்டு முறைத்தாள் இராஜேஸ்வரி.
“என்னோட குழந்தை… எனக்கு உரிமை இருக்கு…” என்றார் சற்று திமிராகவே. அவருடைய தோரணையும் பேச்சும் அவளை மேலும் காயப்படுத்தியது. எவ்வளவு பெரிய துரோகத்தை செய்துவிட்டு, எப்படி இவரால் நேருக்குநேர் நின்று பேச முடிகிறது! கொஞ்சம் கூட குற்றஉணர்வே இல்லையா! உள்ளுக்குள் உடைந்து போனாள். அவரும் உடைத்துத்தான் போயிருந்தார். ஆனால் அதை வெளிக்காட்ட தெரியாமல் ஏறுக்கு மாறாக பேசி அவளுடைய வெறுப்பை அதிகமாக்கினார்.
அவருடைய முகத்தைப் பார்க்கக் கூட பிடிக்கவில்லை அவளுக்கு. பாறை போல் இறுகிய முகத்துடன், எங்கோ வெறித்தபடி சிலை போல் நின்றுக் கொண்டிருந்தாள். அவளை பார்க்கும் போதே அவர் மனதிற்குள் ஏதோ செய்தது. எப்படியாவது அவளை சமாதானம் செய்துவிட வேண்டும் என்று உள்ளம் துடித்தது. ஆனால் என்ன பேசுவது! எப்படி பேசுவது! – உண்மையில் அவர் பயந்தார்.
“குழந்தையை கொடு…” – அவர் கேட்பது காதில் விழவே இல்லை என்பது போல் அசையாமல் நின்றுக் கொண்டிருந்தாள். தானாகவே அவனிடமிருந்து குழந்தையை வாங்கி கொண்டார்…. இல்லை… பிடுங்கினார் என்றுதான் சொல்ல வேண்டும்.
குழந்தையை அவர் வாங்கிக்கொண்டதும், ஒரு நொடிக்கு கூட தாமதிக்காமல் சமையலறைக்குள் நுழைந்துக் கொண்டாள் இராஜேஸ்வரி. அந்த வீட்டில் இருந்ததே இரண்டு அறைகள்தான். ஒன்று அவர் நின்றுக் கொண்டிருக்கும் கூடம். மற்றொன்று சமையலறை. இது ஒரு வீடா! – அவருக்கு ஆத்திரம் வந்தது. ஆனால் யார் மீது ஆத்திரப்படுவது? எல்லாவற்றிற்கும் காரணமானவரே அவர்தானே!
நொந்துபோய் அங்கே கிடந்த பிளாஸ்ட்டிக் சேர் ஒன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தார். குழந்தை அவர் முகத்தில் அடித்து-அடித்து ஏதோ சொல்லி, அவருடைய கவனத்தை தன் பக்கம் ஈர்க்க முயன்றாள். அவளிடம் அனிச்சையாய் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாலும், அவருடைய மனம் முழுவதும் மனைவியிடமே இருந்தது. தந்தையோடு வெகுநேரம் விளையாடிய பிறகு, குழந்தை அவர் தோளிலேயே உறங்கிவிட்டாள்.
மெல்ல பூனை போல் சமையலறை பக்கம் வந்தார். முழங்கால்களைக் கட்டிக்கொண்டு தலை கவிழ்ந்து தரையில் அமர்ந்திருந்தாள் இராஜேஸ்வரி. சற்றுநேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்த சிவமாறன், “ராஜீ…” என்றார் மெல்ல. சட்டென்று அவள் உடல் இறுகியது. ஆனால் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவர் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தார். “குழந்தைங்க எப்போ ஸ்கூல்லேருந்து வருவாங்க?” என்றார். அதற்கும் அவள் பதில் சொல்லவில்லை.
அதற்குமேல் என்ன பேசுவது என்று அவருக்குத் தெரியவில்லை. அவள் அழுதாள் சமாதானம் செய்யலாம்… சண்டை போட்டால் திரும்ப சண்டைபோடலாம்… இப்படி இறுகிப்போய் அமர்ந்திருப்பவளிடம் எப்படி நெருங்குவது! – அவருக்கு விளங்கவே இல்லை.
அப்போதுதான் பாரதியின் நினைவு வந்தது அவருக்கு. “குழந்தை தூங்கிட்டா பாரு….” என்றார். அவள் எழுந்து வந்து குழந்தையை வாங்கி தொட்டிலில் போட்டாள்.
“இனியாவது கிளம்பலாமா?” – இறுகிய குரலில் கேட்டாள்.
“தேவ் – மாயாவை பார்க்கணும்” – – பிடிவாதமாக கூறினார்.
“அவங்களதான் ஸ்கூல்ல போயி பார்க்கறீங்களே! அப்புறம் என்ன?” – வெடுவெடுத்தாள்.
“இன்னைக்கு இங்க பார்க்கணும்” – அங்கிருந்து செல்ல அவருக்கு மனமே இல்லை.
“உங்கள பார்க்கவே எனக்கு வெறுப்பா இருக்கு. புரியில உங்களுக்கு? எதுக்கு இப்படி தொல்லை பண்ணறீங்க?”- அவளுடைய வார்த்தைகளை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை அவரால்.
“ப்ளீஸ்… இப்படி பேசாத ராஜி… எனக்கு நீயும் குழந்தைகளும் வேணும். வீட்டுக்கு வா” என்றார்.
“அடேயப்பா! எவ்வளவு பாசம்! மெய்சிலிர்த்துப் போச்சு…” – விரக்தியும் வெறுப்பும் விரவியிருந்தது அவள் பேச்சில்.
அவளை சமாதானம் செய்ய எவ்வளவோ முயன்றார். ஆனால் அவளிடம் நெருங்கவே முடியவில்லை. அமைதியாக சென்று சேரில் அமர்ந்துவிட்டார். மதியம் அந்த வீட்டிற்குள் நுழைந்தித்தவர், மாலை குழதைகள் பள்ளியிலிருந்து வரும் வரை, புத்தர் போல அமர்ந்தே இருந்தார்.
ஆரவாரத்துடன் வீட்டிற்குள் நுழையந்த குழந்தைகள் அவரைப் பார்த்ததும் சற்று திகைத்தார்கள். அவர்களிடம் சிறு ஒதுக்கம் தெரிந்தது. பழையபடி சந்தோஷமாக அவரிடம் ஓடிவரவில்லை. அவருக்கு உள்ளே வலித்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தானாகவே வலிய சென்று அவர்களை தூக்கி கொஞ்சினார். ஏதேதோ பேசினார். அப்போதுகூட அவர்கள் இயல்பாகவில்லை. அதிலும் தேவ்ராஜ் மிகவும் இறுக்கமாக இருந்தான். அப்போதெல்லாம் அவனுக்கு என்ன வயதிருக்கும்! மிஞ்சிப் போனால் ஏழு அல்லது எட்டு வயதிருக்கலாம்… அப்போதே அவ்வளவு அழுத்தமாக இருந்தான்.
மனைவியும் குழந்தைகளும் எவ்வளவுதான் அழுத்தமாக இருந்தாலும் சிவமாறன் தன்னுடைய முயற்சியை கைவிடவே இல்லை. அடிக்கடி அவர்களை தேடி வந்து கொண்டுதான் இருந்தார். இராஜேஸ்வரி எவ்வளவுதான் எடுத்தெறிந்துப் பேசினாலும் அதையெல்லாம் சகித்துக் கொண்டு, அந்த கோபத்தை மோனிக்காவிடம் வந்து கொட்டுவார். அவருடைய அனைத்து உணர்வுகளுக்கும் அவளே வடிகாலாய் இருந்தாள். அதுவே அவள் அவருக்குள் இன்னும் ஆழமாக ஊடுருவ காரணமாக இருந்தது.
பிரிவும் ஏக்கமும் இரட்டை குழந்தைகள் போன்றது. பிரிவு இருக்கும் இடத்தில் ஏக்கமும் இருக்கும். அப்படித்தான் அவரும் இராஜேஸ்வரியின் ஒரு பார்வைக்காக ஏங்கி போயிருந்தார். அன்று ஏனோ அவளை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருந்தது. ஒரு கதை டிஸ்கஷனில் இருந்தவர், அதை பாதியிலேயே நிறுத்திவிட்டு மனைவியைப் பார்க்க புறப்பட்டார். வீடு பூட்டியிருந்தது. பிறகுதான் தெரிந்தது, குழந்தையை கிரீச்சில் விட்டுவிட்டு, அவள் ஏதோ வேலைக்கு செல்கிறாளாம்.
‘சகிக்கவில்லை…’ – பல்லைக்கடித்தார். அவரிடம் கோடிகோடியாக பணம் இருக்கிறது. எத்தனையோ பேரிடம் அவர் வேலை வாங்கி கொண்டிருக்கிறார். இவள் என்னடாவென்றால், யாரோ ஒருவனிடம் கைகட்டி நின்று வேலை பார்க்கிறாளாம்! அதுவும் இரண்டரை வயது குழந்தையை காப்பகத்தில் விட்டுவிட்டு! என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்! – அவர் உள்ளம் பொறுமியது. கடுங்கோபத்துடன் அவள் வரும்வரை காரிலேயே காத்திருந்தார்.
அவள் வந்து வீட்டைத் திறந்ததும், இவரும் காரை விட்டு இறங்கி உள்ளே சென்றார்.
“என்ன நெனச்சுக்கிட்டு இருக்க? ஏன் இந்த மாதிரியெல்லாம் பண்ணற?” -அவளை பார்த்ததும் சட்டென்று காரிலிருந்து இறங்கிவந்து சீறினார். வீட்டிற்குள் செல்லும்வரை கூட அவருக்கு பொறுமையில்லை. அவளோ சோர்ந்து போயிருந்தாள். குழந்தை அவள் தோளில் தூங்கி கொண்டிருந்தது.
“என்கிட்ட கேள்விகேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல…” – நடந்தபடியே பதில் சொன்னாள். நின்று விவாதம் செய்யும் அளவிற்கு அவளுக்கு தெம்பில்லை. இன்னும் சற்று நேரத்தில் மற்ற குழந்தைகளும் வீட்டிற்கு வந்துவிடுவார்கள். அவர்களுக்கு சமைக்க வேண்டும். வீட்டில் உள்ள வேலைகளையெல்லாம் பார்க்க வேண்டும்.
உள்ளே வந்ததும், பாரதியை தொட்டிலிலிட்டுவிட்டு பரபரவென்று வேலை செய்துக் கொண்டிருந்தாள். வேலைக்காரர்கள் செய்யும் வேலையையெல்லாம் இவளே செய்து கொண்டிருக்கிறாளே! – அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதுவரை இதைப்பற்றியெல்லாம் அவர் யோசித்தே பார்க்கவில்லை.
“இதையெல்லாம் ஏன் நீ செய்ற?” என்று முட்டாள்தனமாக கேட்டுவிட்டு அவளிடமிருந்து அனல் பார்வையை பதிலாகப் பெற்றுக் கொண்டார்.
அவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். விவாதம் செய்தார். எதுவும் எடுபடவில்லை. அவள் பிடிவாதத்தின் உச்சத்தில் இருந்தாள். அவரும் பிடிவாதமாகத்தான் இருந்தார். ஆனால் குழந்தைகள் வரைதான் அவருடைய பிடிவாதம் செல்லுபடியானது. குழந்தைகளுக்கான படிப்பு மற்றும் இதரச் செலவுகளை செய்ய முடிந்த அவரால் மனைவிக்காக ஒரு நயாபைசாவை கூட செலவழிக்க முடியவில்லை. அதற்கு அவள் இடம் கொடுக்கவில்லை.
6 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha khaliq says:
Hi Nithya… nice ud……vayadhu vandha piragu appa rendam thirumanam seidhaar enbadhu varuthathukuriya vishayam dhaan endralum illegal affair ah illamal muraipadi thirumanam seidharae adhanaal avarai konjam mannika mudiyudhu…
Monica ivalai patri enna solradhune theriyala….shivamaran thirumanam aanavarnu therindhum avar vaazhkaiyil nulaidhadharku kobamum varudhu,,,,sivamaran mael aval kaadhalai paarthu aacharmagavum iruku…..
Hey Madhura ku Kailash kooda marriage fix aagi iruka….idhai yeppadi Dev thaduka poran….theriyalaye
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Umamanoj says:
சூப்பர் ராஜேஸ்வரி. .பிடித்த பாத்திரம்
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
எப்பவுமே பெண்களுக்கு சுயமரியாதை வேண்டும்,இராஜேஸ்வரியும் சுயமரியாதை உள்ள பெண்ணென்று நிரூபித்துவிட்டார்.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
ஹாய் தாட்சாயணி… நான் இவ்வளவு நாள் கவனிக்கவே இல்லை… நீங்க என்னை ஏன் மேம் னு கூப்பிடறீங்க… நித்யா னு சொல்லுங்க…
ஹும்ம்ம்… தேவ்ராஜ்கே அம்மா… அப்போ பிடிவாதம்… சுயமரியாதையெல்லாம் இல்லாம போயிடுமா…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pons says:
இராசேசுவரி…கிரேட்.
அவள் மகன் தப்பாவானா..?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
நன்றி பொன்ஸ் அக்கா..