Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல் 55

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் -18

அத்தியாயம் – 18

திருமணம் செய்துகொள்ளாமலேயே சிவமாறனுடன் தனித்துவாழும் மோனிகாவின் மீது திரையுலகில் பலருக்கும் நன்மதிப்பில்லாமல் போனது. அதோடு, பல கழுகளின் கண்களும் அவளை ஆழம்பார்த்தன. சில இடங்களில் சங்கடங்களையும் சந்தித்தாள். ஆனால் அவரிடம் எதையும் சொல்ல முடியவில்லை. இது அவள் தானாக ஏற்றுக் கொண்ட வாழ்க்கை. இதில் வரும் சங்கடங்களையும் அவள்தானே சந்தித்தாக வேண்டும். ஏற்கனவே மனைவியையும் குழந்தைகளையும் பிரிந்து துன்பத்திலிருக்கும் அவரை, தன் பங்கிற்கு வேறு துன்பப்படுத்த வேண்டுமா என்று அமைதியாக இருந்தாள். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல அவள் மீது பாயும் ஆபாசமான பார்வைகளும், வெளிப்படையான மதிப்பீட்டு கருத்துக்களும் அவளை வேதனைப்படுத்தின.

 

சில நாட்களுக்குப் பிறகு விஷயம் அவர் காதுகளையும் எட்டியது. கடுங்கோபத்திற்கு ஆளானார். எதற்காக இதைப் பற்றி முன்பே தன்னிடம் கூறவில்லை என்று மோனிகாவிடம் பொங்கினார். அவளை சங்கடப்படுத்தியவர்களை நேரில் அழைத்துக் கடுமையாகக் கண்டித்தார். ஆனால் எத்தனைபேரை கண்டிக்க முடியும். அவள் மீதான, மற்றவர்களின் பார்வையை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானார். எனவே வேறு வழியில்லாமல் அவளை திருமணம் செய்து கொண்டார். சட்டப்படி அந்த திருமணம் செல்லாது என்றாலும், உலகத்தின் பார்வையில் அவளை தன் மனைவி என்று அடையாளப்படுத்தினர்.

 

மோனிகாவை திருமணம் செய்துக்க கொண்ட பிறகு அதைப் பற்றி இராஜேஸ்வரியிடம் விளக்கம் சொல்ல முயன்றார். ஆனால் அவளிடம் அவரால் நெருங்கவே முடியவில்லை. வழக்கம் போல குழந்தைகளுக்குமட்டும் செய்ய வேண்டியதை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். ஆனால் அவர்களும் அவரை ஒதுக்கினார்கள். அவரிடம் முகம் கொடுத்து பேச மறுத்தார்கள். அவர் எதையும் பொருட்படுத்தவில்லை. வளர்ந்துவிட்டார்கள்… யோசிக்கிறார்கள்… போகப்போக பழகிவிடுவார்கள். அதன்பிறகு தன்னிடம் நெருங்கி வருவார்கள் என்று நம்பினார். அவருடைய நம்பிக்கையை ஒருநாள் உடைத்தெறிந்தான் தேவ்ராஜ்.

 

அப்போது அவனுக்கு பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதிருக்கும். சிவமாறன் இராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்திருந்தார். இவர் வந்தாலே தேவ்ராஜ் வீட்டில் இருக்க மாட்டான். மாயாவையும் பாரதியை மட்டும் பார்த்துவிட்டு வருவதுதான் அவருடைய வழக்கம். ஆனால அன்று அவன் வீட்டில் இருந்தான். மிகவும் இறுக்கமாக இருந்தான். அவனை பார்த்ததும் புன்னகையோடு அவனிடம் நெருங்கி பேச வாயெடுத்தார்.

 

“இனி இங்க வராதீங்க” – அவரை முந்திக் கொண்டு அவன் பேசினான். திகைப்புடன் மகனைப் பார்த்தார் சிவமாறன். அவன் முகத்திலும் குரலிலும் அப்படி ஒரு தீவிரம் இருந்தது. இத்தனை வெறுப்பை தன மகனிடமிருந்து எதிர்பார்க்காதவர், “ஏன்?” என்றார் மெல்ல.

 

“நேநேக இங்க வர்றது எங்க யாருக்கும் பிடிக்கல” – முகத்திலடிப்பது போல் பேசினான்.

 

“நா உன்னோட அப்பா…”

 

“வெளியே போங்க”

 

“தேவ்…!”

 

“ஐ செட் கெட் அவுட் ஃப்ரம் ஹியர்…” – அவரவர் பதில் பேசவே முடியவில்லை. ‘என்ன ஒரு ஆளுமை! என்ன ஒரு கம்பீரம்!’ – அவர் அசந்துப் போனார். ‘ஆனால் இதையெல்லாம் நம்மிடமே காட்டிவிட்டானே!’ – அவர் மனம் வலித்தது. புண்பட்ட மனதோடு அன்று அந்த வீட்டிலிருந்து வெளியேறியவர் மீண்டும் அங்கு செல்லவே இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவருக்கு தைரியமில்லை.

 

தன் பிள்ளைகளின் படிப்புக்கான கட்டண தொகையை மட்டும் கல்வி நிறுவனங்களில் நேரடியாகக் கட்டி கொண்டிருந்தார். அதையும் ஒரு கட்டத்தில் அவன் திருப்பி அனுப்பிவிட்டான். அப்போது ஒருமுறை வீட்டிற்கு சென்று பேச முயன்று, அவமானப்பட்டு திரும்பினார். அதன்பிறகு மாயாவின் திருமணம். அப்போதெல்லாம் தேவ்ராஜ் மிகப்பெரிய சக்தியாய் உருவெடுத்துவிட்டான். இவரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அந்த திருமணம் நடந்து முடிந்தது. அவர் வாழ்க்கையில் மிகவும் வேதனைப்பட்ட தருணங்களில் அதுவும் ஒன்று.

 

தேவ்ராஜ் விவேகமானவன். சாதூர்யமாக சாதிப்பவன். அவனுடைய சாதூர்யம் அதை எந்த அளவிற்கு செல்லும் என்பதை துஷ்மன் பட வெளியீட்டுப் பிரச்சனையில்தான் புரிந்துக் கொண்டார் சிவமாறன். அவரே நெளிவுசுழிவுகள் தெரிந்தவர்தான். எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் நடந்து காரியத்தை சாதிப்பவர். அவரையே விழத்தட்டிவிட்டான். வாழ்க்கையில் அவர் சம்பாதித்த அனைத்து சொத்துக்களும் கடன் என்னும் ஆழிப்பேரலையில் துரும்பாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அப்போதும் கூட அவருடைய முழு கடனும் தீர்ந்தபாடில்லை. உலகத்திற்கு முன் கடனாளியாக வெறும்கையோடு நின்றார்.

 

இப்போது தெரிந்துவிடும்… உண்மையான நண்பர்கள் யார்… சுயநலத்திற்காக அவரோடு ஒட்டிக் கொண்டிருந்தவர்கள் யார்யாரென்று…! மற்றவர்களை விட்டுத்தள்ளிவிடலாம். ஆனால் மோனிகா! அனைத்தையும் இழந்துவிட்டு நிற்கும் இவரிடம் அவள் எப்படி நடந்துக்கொள்ளப் போகிறாள்! ஒருபோதும் மரியாதை குறைவாக நடந்துகொள்ள மாட்டாள். ஆனால் அவருக்குத்தான் அவளிடம் செல்ல ஏனோ தயக்கம். ஆனால் அவள் விடவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்று தேடிப்பிடித்து வந்து சண்டை போட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அவரிடம் அமர்ந்து பேசினாள். பிரச்சனைகளை கேட்டுது தெரிந்துக் கொண்டு அதற்க்கு தீர்வும் சொன்னாள். ஆனால் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

தன்னுடைய கடின உழைப்பில் தான் சொந்தமாக சம்பாதித்த சொத்துக்களை விற்று அவருடைய கடனை அடைக்கலாம் என்று மோனிகா கூறியபோது சிவமாறனால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவருக்காக அவள் நிறைய இழந்துவிட்டாள். இப்போது இதுவுமா! நியாயமே அல்ல… என்று மனசாட்சி அவருக்கு தடைபோட்டது. ஆனால் மோனிகா விடவில்லை… சூழ்நிலையும் சாதகமாக இல்லை… ஏற்றுக்கொண்டுவிட்டார். படம் வெற்றிகரமாக வெளியாகிவிட்டது. கடனையெல்லாம் ஒன்றுவிடாமல் அடைத்தாயிற்று. அவள் விருப்பப்படி சிறப்பாக ‘ராப்-அப்’ பார்ட்டியும் கொண்டாடியாகிவிட்டது. அவள் சந்தோஷமாக இருக்கிறாள். ஆனால் அவர் நிம்மதியாக இல்லை.

 

மனசாட்சி குத்திக் கொண்டே இருக்கிறது. அவளுக்காக தான் என்ன செய்தோம் என்று எண்ணியெண்ணி மருகினார். தனக்குப் பிறகு இந்த உலகத்தில் அவளுக்கு என்ன பாதுகாப்பிருக்கிறது என்கிற எண்ணம் அவரை அச்சுறுத்தியது. குழந்தை வேண்டாம் என்று எப்படிப்பட்ட சுயநலமான முடிவை எடுத்துவிட்டார்! அதை அவளும் ஏற்றுக்கொண்டுவிட்டாளே! அவருடைய மனதை ஏன் மாற்றாமல் போய்விட்டாள்! அவள் மட்டும் கேட்டிருந்தால் அவர் மறுத்திருக்க மாட்டார். ஆனால் அவள் கேட்கவில்லை… அவளுடைய பக்கத்திலிருந்து இவரும் யோசிக்காமல் போய்விட்டார். இப்போது காலம் கடந்துவிட்டது. தனக்குப் பிறகு அவளுக்கென்று யாரும் இல்லை.. எதுவும் இல்லை… வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்ட்டங்களை சந்தித்தவர். ஒருபோதும் கண்கலங்கியதில்லை. ஆனால் இன்று தனியாக மொட்டைமாடியில் நின்று இருளை வெறித்துக் கொண்டிருந்தவரின் கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது…

 

****************

 

மதுராவின் திருமண விஷயத்தில், முடிவாக இருந்த வரன் ரத்தாகிவிட்டதில் நரேந்திரமூர்த்திக்கு வருத்தம்தான். ஆனால் மேலும் சிறந்த வரனை கொண்டுவர வேண்டும் என்கிற உத்வேகம், வருத்தத்தை தலைத்தட்டிவிட்டு மேலெழுந்து நின்றது. தொடர்ந்து முயற்சி செய்தார். செய்துகொண்டே இருக்கிறார். ஆனால் என்ன நேரமோ காலமோ தெரியவில்லை… காலம்தான் கரைந்துக் கொண்டிருக்கிறதே தவிர, அவருடைய முயற்சிகளெல்லாம் தோல்வியிலேயே முடிந்துக் கொண்டிருந்தன. போதாக்குறைக்கு அவளுடைய ஜாதகத்தை கணித்த பண்டிதர் வேறு அவளுடைய திருமணத்தில் பெரும் குழப்பம் நேரிடும் என்று குழப்பிவிட்டார்.

 

வீட்டில் அனைவரும் பயந்து போனார்கள். நாட்கள் கழியக்கழிய அவர்களுடைய எதிர்பார்ப்பும் குறைந்துகொண்டே வந்தது. பணம், பதவி, அந்தஸ்து இதிலிருந்தெல்லாம் இறங்கி வந்தார்கள். நாகரீகமான மனிதன், நல்ல குடும்ப பின்னணி என்று அடிப்படையில் கவனம் செலுத்தி வரன் தேடினார்கள். அப்போதுதான், சுஜித் தன்னுடைய நண்பனின் நிறுவனத்தில் தணிக்கையாளராக வேலை செய்யும் கிஷோரைப் பற்றிக் கூறினான்.

 

படித்தவன்… அறிவாளி… சிறந்த மனிதன்… நாகரீகமான குடும்பப்பின்னணி. அனைவருக்கும் பிடித்திருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் முழு மனதோடு யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

“யாருன்னே தெரியாத பையனாச்சேப்பா!” என்று தயங்கினார் நரேந்திரமூர்த்தி.

 

“எனக்கு பல வருஷமா கிஷோரைத் தெரியும். ஹி இஸ் வெரி குட் அட் ஹார்ட்” என்று சான்றிதழ் கொடுத்தான் திலீப்.

 

சொந்த தொழில் இல்லையா! இன்னொருவரிடம் வேலைப் பார்ப்பவனா! பெற்றோர் அரசு ஊழியர்களா! என்று ஆயிரம் கேள்வி கேட்டாள் பிரபாவதி. அனைத்திற்கும் மடையதைத்தான் திலீப்.

 

“அவனை மாதிரி ஒரு ஆடிட்டர் இந்த மும்பையிலேயே இல்ல. தேவ்ராஜ் கூட ரெண்டு முறை இவனை ஹயர் பண்ண ப்ரபோஸ் பண்ணியிருக்கான். பட் ஹி ரெஃப்யூஸ்ட்” – தேவ்ராஜின் அழைப்பையே ஏற்க மறுத்த தன்மான சிங்கம் என்று மார்தட்டினான். அந்த இடத்தில்தான் விழுந்தாள் பிரபாவதி.

 

“நிஜமாவா! நிச்சயமா அந்த பையன் பெரிய திறமைசாலியாதான் இருக்கணும்” என்று ஆனந்தப்பட்டாள்.

 

“பட் ஹி இஸ் நாட் ஃபினான்ஸியலி சவுண்ட்…” – ‘அவன் ஒண்ணும் பெரிய பணக்காரன் இல்லையே! அவனுக்கு எப்படி நம்ம மதுராவை கொடுக்கறது?’ என்று கேட்டான் துருவன்.

 

“நம்மகிட்ட தொழில் இருக்கு. மதுராவுக்கு அதுல பங்கும் இருக்கு. நாமளே சப்போர்ட் பண்ணி அவங்கள நல்லா கொண்டுவரலாம்” என்று கூறி அவனுடைய வாயையும் அடைத்தான். ஒருவழியாக அனைவரும் சமாதானமானார்கள்.

 

அடுத்து மதுரா… அவளை சம்மதிக்க வைப்பது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. வீட்டில் அனைவரும் எதை சரி என்று சொல்கிறார்களோ அதைத்தான் அவளும் சரி என்பாள். அப்படியேதான் நடந்தது. ஒருநாள் பிரபாவதி அவளிடம் தனியாக விஷயத்தை சொன்னாள். அதன் பிறகு நரேந்திரமூர்த்தி அனைவர் முன்பாகவும் அதே விஷயத்தை சொன்னார். திலீப் தனியாக அவளிடம் பேசினான். அவள் மனதில் எந்த தயக்கமும் இல்லை என்பதை அனைவரும் தனித்தனியே உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

 

பின்பு ஒருநாள் திலீப் தன் நண்பன் மூலம் கிஷோரின் மனதை தெரிந்துக் கொண்டான். பிறகு அவனுடைய குடும்பத்தை தொடர்புகொண்டு பேசினான். அடுத்து தன்னுடைய பெற்றோரையும் பேச வைத்தான். இரு குடும்பமும் இணக்கமாக பழகினார்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வு அங்கே ஒரு பொருட்டாகவில்லை.

 




8 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Yazhvenba says:

    Super nithya mam…

    Nice flow…

    Sontha wife a vitutu varapa varunthala… Monika kaga feel panraru…

    Monika enna design ma ne… Unaku 16 vayasula chance kudukama unta kaniyam a nadanthukitathuku avar mela mariyathai varalam.. but nee avara kathalichu avaru kudumbathuku evala periya pavam panita…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    NICE UD SIS


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    இந்த முறையாவது மதுராவின் திருமணம் சரிவருமா.

    நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Umamanoj says:

    அப்ப கலாட்டாவுக்கு வைடிங்


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Uma Deepak says:

    குழப்பம் கல்யாணத்தில் அப்போ கல்யாண கலாட்டா இருக்கு ஹி ஹி


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      ரொம்ப பெரிய கலாட்டா இருக்கு… 😀


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pons says:

    தேவ்…நீங்க நல்லவனா…கெட்டவனா…


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      கண்ணா… நா நல்லவனுக்கு நல்லவன்… கெட்டவனுக்கு ரொம்ம்ம்ம்ப கெட்டவன்… (ரஜினி வாய்ஸ்… 😉 )

You cannot copy content of this page