இல்லறம் இதுதான் – 1
4359
1
அத்தியாயம் – 1
முதலிரவு அறையை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தால் லட்சுமி. மெல்லிய ஊதுபத்தியின் மணம் கமழ அமைதியாய் இருந்தது அறை. மோகன் கட்டிலின் ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்தான்.
எதிர்பார்த்த ஏமாற்றம்தான் என்றாலும் கவலையாக இருந்தது லட்சுமிக்கு. ஒரு பெருமூச்சை வெளியிட்டுவிட்டு அவனருகில் சென்று படுத்துக் கொண்டாள். தூக்கம் தான் வர மறுத்தது. சற்று முன் சிவசங்கரி கூறியதையே மனது அசை போட்டுக் கொண்டிருந்தது.
முதளிராவுக்காக அவளை அலங்கரித்துக் கொண்டிருந்தனர் தோழிகள். அப்பொழுதுதான் அறைக்குள் நுழைந்தாள் சிவா.
“எல்லோரும் போங்கடி. நான் என் அக்காவுக்கு அலங்காரம் பண்ணிக்கறேன்” என்று கூறி தோழிகளை அனுப்பினாள்.
“நான் யாருன்னு உங்களுக்கு தெரியுமா அக்கா?” என்றாள்.
“ஓ… தெரியுமே. அவரோட அத்த பொண்ணு. மண்டபத்தையே ஒரு கலக்கு கலக்கிட்டியே. உன் பாட்டு சூப்பர். என் வாழ்த்துக்கள்”
“ரொம்ப நன்றிக்கா. நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்ன்னு தான் வந்தேன்.”
“என்ன?”
“சின்ன அத்தானைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”
அவள் சின்னத்தான் என்று கூறுவது தன் கணவர் மோகனை தான் என்றதும் வெட்கத்தில் முகம் சிவந்தது.
“ரொம்ப அமைதியானவர்” என்றாள் வெட்கத்தினூடே.
“அப்புறம்”
“இப்போதைக்கு இவ்வளவுதான் தெரியும் போகப் போக இன்னும் தெரிஞ்சுக்குவேன்.”
“அதுக்கு டிப்ஸ் நான் தருகிறேன்”
“சொல்லு”
“அத்தானை பற்றி சொல்றதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி சொல்றேன். நான் ரொம்ப பிராங்க் டைப். எதையும் மனசுல வச்சுக்க மாட்டேன். தப்போ ரைட்டோ… டேரைக்ட் டீலிங் தான். அடிக்கடி அத்தை வீட்டுக்கு வருவேன்.அத்தைன்னா எனக்கு உயிர். நான் எது கேட்டாலும் செய்து தருவாங்க. வாய் நிறைய மருமகளே மருமகலேன்னு தான் கூப்பிடுவாங்க. பெரிய அத்தான் கூடத்தான் அதிகம் பேசுவேன். சின்னத்தான் நான் வந்தாலே வாயாடி அவன்துட்டான்னு ஓடி ஒளிஞ்சுக்குவாங்க. நான் வந்தா அத்தைவீடே கலை கட்டும். சின்னத்தான் மட்டும் அந்த பாழாப் போன கம்ப்யூட்டரை தான் நோன்டுவாங்க. அதிகமா பேசறது அவங்களுக்குப் பிடிக்காது.எப்பவும் எதாவது செய்துகிட்டே இருப்பாங்க. நான் அவங்களை உம்மணா மூஞ்சின்னு கிண்டல் கூடப் பண்ணுவேன். ஆனா அதை அவங்க பெருசா எடுத்துக்க மாட்டாங்க. ஆனா அத்தானுக்கு நல்ல மனசு. அது மட்டும் எனக்கு நல்லா தெரியும்.கை நிறைய சம்பளம். பணத்துக்கு குறைவில்லை”
“ஏன் யார்கிட்டயும் உங்க அத்தான் பேச மாட்டாரு?”
“அவர் எப்பவும் காம் டைப். பெரியத்தானுக்குthalaivalinnaa அத்தை மடில படுத்துக்கிட்டு தைலம் தேச்சுவிட சொல்லுவார். ஆனா சின்ன அத்தான் தலைவலின்னு சொல்லவே மாட்டாங்க. அப்படி சொன்னாலும் அத்தை தைலம் தேச்சுவிட்டா கையைத் தட்டி விட்டுடுவாங்க. அவ்வளவு ஒரு தனித்தன்மை. பொண்ணுங்ககிட்ட அவ்வளவா பேச மாட்டாங்க. நான் வந்தா வா சிவான்னு ஒரு வார்த்தை கூப்பிடக் கூட மாட்டாங்க.”
“ஐயோ…” அலறினாள் லட்சுமி.
“பயப்படாதிங்கக்கா, நீங்க அத்தானை பத்தி முழுசா தெரிஞ்சுக்கணும்னு தான் சொன்னேன். மத்தபடி எங்க அத்தான் கருப்பு வைரம். அவரை மட்டும் கொஞ்சம் பேச வச்ஹ்கிட்டிங்கன்னா அவர் மனம் கோணாம நடந்துகிட்டிங்கன்னா அவர் உங்களை கைல வச்சு தாங்குவார். இது நிச்சயம். நான் சின்ன வயசுலேருந்து பார்த்துகிட்டு இருக்கேன். அத்தானை பத்தி எனக்கு தெரிஞ்சதையெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டேன். நீங்களும் நல்ல குடும்பத்து பொண்ணு. பாத்து பக்குவமா நடந்துக்குங்க அக்கா” என்று கூறி முடிக்கவும் அலங்காரம் முடியவும் சரியாக இருந்தது. லட்சுமியை பார்த்து சிவா அசைந்தாள்.
“உங்களுக்கு எந்த நேரத்தல லட்சுமின்னு பேர் வச்சாங்களோ சாட்சாத் அந்த மகாலட்சுமியே நேர்ல நிக்கறா மாதிரியிருக்கு அக்கா” என்று கூறி நெட்டிமுறித்தாள். லட்சுமியின் கன்னங்கள் சிவந்தன.
“சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும் அக்கா. இப்ப நீங்க போகும் பொதுக் கூட பாருங்களேன் அத்தான் நல்லா தூங்கும். பொறுமையாயிருங்க. இனிமே இந்த வீட்டுக்கு நீங்கதான் ராணி. அத்தையை நல்லா பாத்துக்கோங்க, பெரியக்காவும் பெரியத்தானும் இன்னும் ரெண்டு நாள்ல டெல்லி போயிடுவாங்க. பெர்யத்தான் அங்கதான் வேலை பாக்குறாங்க. அப்புறம் இங்க எல்லாமே நீங்க தான். சரியா. நான் இப்போ வீட்டுக்கு கிளம்பறேன். கார் வைத் பண்ணுது. மணி 9.00 ஆச்சு. நீங்க போயி தூங்குங்க.எனக்கு கால் பண்ணனும்னா அத்தைகிட்ட நம்பர் இருக்கு. வாங்கி பண்ணுங்க சரியா. ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் லைப்” என்று கூறி கண்ணடித்துவிட்டு வெளியே சென்றாள்.
லட்சுமி சிலையாய் நின்றாள். ‘இப்போ நீங்க போகும்போதுக் கூட பாருங்களேன். அத்தான் நல்லா தூங்கும்” என்கிற வரிகள் சலிப்பை தந்தன. மெதுவாக நடந்து அறைக்குள் சென்று இந்த உரையாடலை ஆசைப் போட்டுக் கொண்டே தூங்கிப் போனாள் லட்சுமி.
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
நன்றாக இருந்தது ஆரம்பம்.
நன்றி