இல்லறம் இதுதான் – 2
5548
1
அத்தியாயம் – 2
காலை மணி ஐந்துக்கெல்லாம் எழுந்துவிட்டாள். அது அவளது வழக்கம். தலைக் குளித்து புடவைக் கட்டி மஞ்சள் பூசிய முகத்தில் குங்குமப் பொட்டுவைத்து வகுட்டின் குங்குமம் அழகுக்கு அழகு சேர்த்தது. முகத்தில் புது மணப்பெண்ணின் ஜெலிஜொலிப்பு. வீட்டில் வேறு யாரும் எழுந்திருக்கவில்லை. கல்யானக்களைப்பில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர். தன் கொலுசு சத்தம் அவர்களின் தூக்கம் பாதிக்காத வண்ணம் பொறுமையாக நடந்து போய், பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து, சாமிக் கும்பிட்டு, திருநீரிட்டாள். திரும்பவும் தன்னறைக்கு வந்து கணவனை பார்த்தாள், பிறந்தக் குழந்தை முகமாய், எந்த ஒரு உணர்வையும் காட்டாத அவன் முகத்தை ரசித்தாள். முகத்தில் விழுந்த முடியை செல்லமாகக் கோதிவிட்டாள். அந்த ஸ்பரிசத்தில் அவன் புரண்டுப் படுத்தான். நல்ல காலம் தூக்கம் கலையவில்லை என்று நிம்மதிப் பெருமூச்சோடு வெளியேறினாள்.
வாசல் தெளித்து அழகான கோலம் போட்டுவிட்டு வருகையில் மணி ஆறு முப்பது. இன்னும் கூட யாரும் எழவில்லை. சமையலறைக்குச் சென்று, குளிர்சாதனப் பெட்டியிலிருந்து பாலை எடுத்து சுட வைத்து, சர்க்கரை காப்பி பொடியைத் தேடிக் கண்டுபிடித்து காப்பி கலந்துக் கொண்டு, பின்புறம் கதவை திறந்து, கிணற்றடிப் பக்கம் வந்தாள். அழகானத் தோட்டத்தை ரசித்துக் கொண்டு, துணித் துவைக்கும் கல்லின் மேல் அமர்ந்துக் காப்பியை ரசித்துப் பருகினாள். அம்மா அப்பா நினைவு வந்தது. கண்கள் கசிந்தது.
ஆதரவாக யாரோ தோல் மீது கைவைத்ததை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். அத்தை ராஜம் சிநேக புன்னகையுடன் நின்றுந்தாள். லட்சுமியின் கண்ணீரைப் பார்த்துப் பதறிவிட்டாள்.
“என்னம்மா ஆச்சு?”
“ஒன்றும் இல்லை அத்தை, அம்மா அப்பா நினைவி வந்தது”
“அவ்வளவு தானே, நான் என்னவோ ஏதோ என்று பதறிப் போயிட்டேன்” தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
“என்னம்மா, இவ்வளவு சீக்கிரம் எழுந்து குளிச்சுட்ட” என்று அவளை உற்றுப் பார்த்துக் கொண்டேக் கேட்டாள்.
“என் பழக்கம் அத்தை. எப்பவும் ஐந்து மணிக்கு எழுந்த உடனே குளிச்சிடனும், இல்லைன்னா அப்பாவுக்கு பிடிக்காது”
“நல்ல பழக்கம். எங்க எல்லாரையும் உனக்கு பிடிச்சிருக்காம்மா?” என்று அன்போடு அவள் தலையைக் கோதிவிட்டாள்.
“ரொம்பப் பிடிச்சிருக்கு அத்தை”
“மோகனை?” என்று கூறி மருமகளை உற்றுப் பார்த்தாள்.
“போங்க அத்தை” வெட்கத்தில் வீட்டிற்குள் ஓடினாள் மருமகள். ஓடிய வேகத்தில் எதிரில் வந்த மோகனைப் பார்க்காமல் அவன் மீது இடித்து விழப் போனாள். அவளை தாங்கிப் பிடித்தான் அவன். உடனே உதாரித்துக் கொண்டு நின்றாள், அவனைப் பார்க்க முடியாமல் வெட்கம் கொத்தித் தின்றது. சமையலறைக்குள் ஓடி மறைந்தாள். இதைப் பார்த்த ராஜம் மகிழ்ச்சியில் மூழ்கினாள்.
மோகனுக்கு தான் எந்த ஒரு சிலிர்ப்பும் தோன்றவில்லை. ராஜம் சமையாரையுள் நுழைந்தாள். அங்கே லட்சுமி தத்தளித்துக் கொண்டிருந்தாள். அவன் தாங்கிப் பிடித்த ஒரு நொடியே அவனது ஆண்மையை உணர்த்திவிட்டது. அந்த மகிழ்ச்சியில் கால்கள் நிலத்தில் நிற்க மறுப்பது போல் நடுங்கியது, சந்தோஷம் தலைக்கேறியது.
“இன்னும் ஏம்மா தலையில் துண்டுக் கட்டியிருக்க? போய் அவுத்து பேன் காத்துல காய வை. சளி பிடிச்சுக்கப் போகுது” என்று அத்தை அக்கரையில் கூறினாள்.
“அது இருக்கட்டும் அத்தை, நீங்கல்லாம் என்ன குடிப்பிங்கன்னு தெரியில. அதான் பாலை மட்டும் காய்ச்சி வச்சிருக்கேன். யாருக்கு டீ, யாருக்கு காப்பி, யாருக்கு பாலுன்னு சொன்னிங்கன்னா போட்டுடுவேன்” என்று கூறி முந்தானையை வந்ரிந்து செருகிக் கொண்டு அடுப்புப் பக்கம் போனாள்.
“நீ போய் தலையைத் துவட்டு. நான் எல்லோருக்கும் தேவையானதை கலந்துக் கொடுக்கிறேன்”
“அதெல்லாம் முடியாது. இனி நீங்க இந்த சமையலறைப் பக்கம் வரக் கூடாது. தண்ணி வேணுன்னா கூட என்னைக் கேளுங்க. நான் கொண்டு வந்து தர்றேன். இனிமேல் நான் உங்களை இங்கப் பார்த்தேன் நடக்குறதே வேற” என்று உரிமையுடன் அதட்டினாள். மருமகள் *பொழிந்த அன்பில் மாமியார் சிலையாக நின்றாள்.
இடுப்பில் ஒரு கையை வைத்து மற்றொரு கையை தலைக்கு மேல் தூக்கி ஜெயம் சதா போல், “போங்க போங்க, போங்கன்னா…” என்று அதட்டி சிரித்தாள்.
மாமியார் சந்தோஷத்தில் திளைத்தவலாய் சமையலறையை விட்டு வெளியேச் சென்று, வாலலில் கோலம் போடலாம் என்று தண்ணீர் எடுத்துக் கொண்டு போனாள். போனவள் பிரம்மித்து நின்றுவிட்டாள். அவ்வளவு அழகான கோலத்தை, அவள் ரங்கோலி போட்டிகளில் கூடக் கண்டதில்லை. அவள் விக்கித்துப் போய் நின்றாள்.
“என்னடி ராஜம் இப்படி கோலத்தையே பார்த்துக்கிட்டு நிக்கற?” என்று தங்கவேலு தூக்கக் கலக்கத்துடன் வெளிப்பட வாரும் கோலத்தைப் பார்த்து அசந்து போனார்.
“பாருங்க நம்ம மருமகளை, இவ எப்போ எழுட்ன்ஹிருச்சு குளுச்சா… கோலம் போட்டா, பால் காஇச்சினான்னு யாருக்கும் தெரியல. நம்ம தூக்கத்தைக் கலைக்காமல் எல்லா வேலையையும் முடிச்சுட்டா பாருங்க. நம்ம மருமக நமக்கு கிடைச்ச தங்கம்ங்க” என்று சிலாகித்தாள். அவரும் சந்தோஷப் பட்டார்.
“அத்தை உங்களுக்குக் காபி மாமாவுக்கு சுக்கு காபி சர்க்கரைப் போடாம”
“ஏன்மா எனக்கு மட்டும் சர்க்கரைப் போடாம?”
“அதான் உடம்பு பூராவும் வச்சிருக்கிங்களே. அத்தை சொன்னாங்க” கண்ணடித்து சிரித்தாள்.
“அதூக்குல்ல சொல்லிட்டியா? ஓட்ட வாயி, ஓட்ட வாயி” மனைவியை செல்லமாக அதட்டினார். அதை ரசித்தவாறே சமையலறைக்குச் சென்றாள். அங்கே பெரியத்தானின் மனைவி சாரதா நின்றிருந்தாள்.
“இந்தாங்க அக்கா. பெரியத்தானுக்கும் உங்களுக்கும் இங்கி டீ. போய் கொடுங்க” என அவளை அனுப்பினாள். மோகனுக்கு பாலில் சர்க்கரைப் போட்டு ஆற்றிக் கொண்டிருந்தாள். தலையைத் துவட்டிக் கொண்டே உள்ளே வந்தவன் மனைவியைப் பார்த்ததும் திரும்பி நடந்தான்.
“ஒரு நிமிஷம்” என்று தடுத்தாள்.
“என்ன?”
“இந்தாங்க பா” டம்ளரை நீட்டினாள்.
“எனக்கு பால்தான்னு எப்படித் தெரியும்?”
“அத்தை சொன்னாங்க”
“ஓ…” என்றபடியே டம்ளரை வாங்கிச் சென்றான். மறுபடி டிபன் வேலையைத் தொடர்ந்தாள்.
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
மோகன் எதற்காக பாராமுகமாய் நடக்கின்றார்.
நன்றி