Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

இல்லறம் இதுதான்

Share Us On

[Sassy_Social_Share]

இல்லறம் இதுதான் – 3

அத்தியாயம் – 3

அரைமணி நேரத்தில் ஆவி பறக்கும் இட்லிகள் வகைவகையான சட்டினிகள் டைனிங் டேபிளை அலங்கரித்தன. குடும்பமே டிபன் சாப்பிடக் கூடியது. மோகன் பேன்ட் சட்டைக்குள் நுழைந்துக் கொண்டு வந்தான்.

“காலையிலேயே எங்கடா கிளம்பிட்ட?” என்று கேட்டவண்ணம் மகனை மேலும் கீழும் பார்த்தாள்.

“ஆபிஸுக்கு” என்று கூறி தன் சேரில் அமர்ந்தான்.

“என்னது ஆபிஸுக்கா? கல்யாணமாகி ரெண்டு நாள் கூட ஆகல. அதுக்குள்ள என்ன வேலை? இன்னும் ஒரு வாரம் லீவு போடு, நிறைய விருந்து இருக்கு” என்று கட்டளையிடுவது போல் கூறினாள்.

“விருந்தா! அதெல்லாம் முடியாது… எனக்கு பிடிக்காத விஷயம். கம்ப்பல் பன்னாதிங்கம்மா”

“சரி, விருந்துக்கு போகவேண்டாம். லட்சுமி காலையிலேயே அவங்க அப்பா அம்மா நினைவு வந்துட்டதா சொன்னா. அவளை அவங்க அப்பாம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு வா போதும்” என கோரிக்கை வைத்தாள்.

இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டே லட்சுமி இட்டிலியை பரிமாற, சாரதா முகம் சுளித்தாள்.

“இட்லியா! சப்பாத்தி இல்லையா?”

“நாம சப்பாத்திதான் சாப்பிடுவோம்ன்னு லதுமிக்கு எப்படித் தெரியும்?/ இன்னிக்கு ஒரு நா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்று சமாதானப்படுத்தினான் சங்கர்.

இதை சற்றும் எதிர்பாராத லட்சுமி “ஒரு அரைமணிநேரம் பொறுத்துக்கோங்க அக்கா. சப்பாத்தி ரெடி பண்ணிடறேன்” என்று சமையலறைப்பக்கம் திரும்ப அவளைத் தடுத்தான் சங்கர்.

“வேண்டாம் லட்சுமி இன்னிக்கு ஒரு நாள் தானே. அட்ஜஸ்ட் பண்ணிக்கட்டும்.நாளைக்கு பார்த்துக்கலாம்”

ஏனோ தானோவென்று இட்லியை பிட்டு வாயில் போட்டுக் கொண்டாள். மோகன் பேசாமல் சாப்பிட்டான்.

“என்னடா? கூட்டிட்டு போறியா இல்லையா?”

“அவளே போயிட்டு வரட்டுமே. அதான் ஸ்கூட்டி இருக்குல்ல” என்றபடி தன சாப்பாட்டைத் தொடர்ந்தான்.

லட்சுமியின் முகம் வாடிவிட்டது. அதை கவனித்த அத்தை “இட்லிக்கும் சட்டினிக்கும் சும்மா அமிர்தம் மாதிரி இருக்கு லட்சுமி” என்று பாராட்டினாள்.

“ஆமாமாம்” என்று தங்கவேலுவும் சங்கரும் ஆமோதிக்க அவள் முகம் சற்று மலர்ந்தது.

சாரதா எதுவும் கூறாமல் சாப்பிட மோகனும் அதையேத்தான் செய்தான். அவனுடைய முகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த லட்சுமியின் முகம் மீண்டும் வாடியது. அதை கவனித்த அத்தை “டேய் மோகன்… இட்லி எப்படிடா இருக்கு?” என்றாள்.

“ஏன்… நல்லாத்தான் இருக்கு” – லட்சுமியின் முகம் மலர்ந்தது.

“அதை கொஞ்சம் சிரிச்சுகிட்டே சொல்லலாம்ல?” மருமகளை சந்தோஷப்படுத்த எண்ணினாள்.

மோகன் நிஜமாகவே வேலைக்குக் கிளம்புவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவன் பெட்டியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்ததும் “டேய் நிஜமாவே வேலைக்கு போறியா?” என்றாள்.

“பின்ன பொய்யாவா?”

“இன்று ஒரு நாள் லீவு போட்டுட்டு லட்சுமியை கூட்டிட்டு போறியா இல்ல ஒரு வாரம் லீவு போட்டுட்டு வீட்டுக்குள்ளேயே இருக்கியா? இதுல எது நல்ல சாய்ஸ்ன்னு நீயே முடிவு பண்ணு”

“கூட்டிட்டு போயி தொலையறேன். கிளம்ப சொல்லு” பெட்டியை தூக்கி எறிந்துவிட்டு சோபாவில் அமர்ந்தான். ராஜம் மலர்ந்த முகமாக சமையலறைக்குள் நுழைந்தாள்.

“லட்சுமி நீ கிளம்பு”

“எங்க அத்த?”

“உங்க அப்பா வீட்டுக்கு” – உடனே சந்தோஷமான அவள் முகம் சிறிது வாடியது.

“தனியாதானே?”

“இல்ல… மோகன் கூட”

வெட்கத்தில் சிவந்த முகத்துடன் “மத்திய சாப்பாடு அத்தை?”

“அதை நான் பார்த்துக்கறேன். நீ கிளம்பு” – பாசத்துடன் கூறினாள்.

அடுத்த பத்து மிமிடத்தில் மருமகள் கிளம்பிவிட அவளை வாசல்வரை சென்று வழியனுப்பினாள் மாமியார்.

“நல்லா பிடிச்சுக்க லட்சுமி. விழுந்துட போற” அவள் கணவனின் தோள் தொட்டு அமர்ந்தாள்.

அவன் உள்ளுக்குள் கொதித்தான். அதை அவன் முகமே காட்டியது. தெருமுனை வரை பொறுத்துக் கொண்டு ஓட்டியவன் பிறகு தோளிலிருந்த அவள் கரத்தை உற்றுப் பார்த்தான். அந்த பார்வையில் பயந்துப் போன லட்சுமி அவன் மீதுருந்த கையை விளக்கிக் கொண்டு பைக் கம்பியை பற்றிக் கொண்டாள். மனம் வலித்தது. அவன் வண்டியை மெதுவாக ஓட்டினான். வீடு வந்ததும் துள்ளிக் குதித்துக் கொண்டு உள்ளே ஓடினாள்.

எதிரில் வந்த காமாட்சியம்மா மகளைப் பார்த்ததும் பூரித்துப் போய் நின்றாள்.

“வாம்மா லட்சுமி. எப்படி இருக்கடா கண்ணு?” என்று மகளை உச்சிமுகர்ந்தவள் “தனியாவா வந்த?” என்று வாசலை நோக்கினாள்.

“மாப்பிள்ளையும் வந்திருக்காரா? சரி நீ உள்ள போ. நான் மாப்பிள்ளையை கூட்டிட்டு வர்றேன்”

“வாங்க மாப்பிள்ளை. எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லா இருக்கேன் அத்தை. உங்களை பார்க்கனும்னு சொன்னா. அதான் கூட்டிட்டு வந்தேன். எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் போயாகனும். எவனிங் என்னால வர முடியாது. அதனால மாமாகிட்ட சொல்லி லட்சுமியை டிராப் பண்ணிட சொல்லுங்க”

“சரி மாப்பிள்ளை. நீங்க முதல்ல வீட்டுக்குள்ள வாங்க. ஏதாவது சாப்பிட்டுவிட்டு அப்புறம் போகலாம்”

“இல்ல அத்தை இப்போவே லடே ஆயிடிச்சு. நான் கிளம்பறேன்” நிற்காமல் சென்றுக் கொண்டேயிருந்தான்.

காமாட்ச்சிக்கு வருத்தமாகத்தான் இருந்தது. இருப்பினும் மாப்பிள்ளையாக வந்துவிட்டவரை கொபிக்கவா முடியும். ஒரு பெருமூச்சுடன் உள்ளே சென்றாள்.

அம்மா மட்டும் உள்ளே வருவதை கண்ட லட்சுமியின் மனம் கூம்ப்யது. இருப்பினும் அதை மறைத்துக் கொண்டு சின்ன சிரிப்புடன் “அவருக்கு முக்கியமான வேலையாம்மா. இந்த நேரம் அங்க இருக்கணும். எனக்காகத்தான் ரிஸ்க் எடுத்து என்னை இங்க கூட்டிட்டு வந்து விட்டுட்டு போறார்” என்றாள்.

“மாப்பிள்ளைக்கு உன் மேல அவ்வளவு அக்கறையா லட்சுமி?”

“இருக்காதா பின்ன? கட்டின மனைவியாச்சே?”

“சந்தோஷமா இருக்கியாடா?” மகளின் கைகளை பற்றி அவளை உள்ளர்த்தத்துடன் பார்த்த தாயை கனிவுடன் பார்த்து “ரொம்ப சந்தோஷமா இருக்கேன்மா” என்று அப்பட்டமாக பொய் உரைத்தாள் மகள்.




3 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    மோகனுக்கு லட்சுமி மீது ஏதாவது கோபமா.

    நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Umamanoj says:

    நித்யா ..நீங்க எழுதும் கதையா?ஸ்பெல்லிங் மிஸ்டேக் நிறைய இருக்கு. .


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      இந்திரா கதை உமா… நான் தான் போஸ்ட் பண்ணினேன். ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் கவனிக்கிறேன்பா… தேங்க்ஸ்…

You cannot copy content of this page