கனல்விழி காதல் – 25
10600
15
அத்தியாயம் – 25
கவலை… பயம்… பதட்டம்… குளிரூட்டப்பட்ட அறையிலும், வியர்வை முத்துக்கள் மதுராவின் முகத்தை அலங்கரித்தன. எகிறி வெளியே குதிக்கும் அளவிற்கு இதயம் அடித்துக் கொண்டது. அடிவயிறெல்லாம் பிசைந்தது. மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“எதுக்கு இவ்வளவு ரியாக்ட் பண்ணற? தேவ் பாய் ஒண்ணும் உன்ன கடிச்சு சாப்பிட்டுட மாட்டாங்க…” – இறுகியிருந்த மாயாவின் முகமும் குரலும் அவளை மேலும் கலவரப்படுத்தியது.
அண்ணன் மனைவி என்கிற முறையில், மதுராவை அலங்கரிப்பது மாயாவின் கடமை. செய்துவிட்டாள்… இனி என்ன…! பழைய படங்களில் வருவது போல் பால் நிறைந்த வெள்ளி செம்பை அவள் கையில் கொடுத்து, “பக்கத்து ரூம்தான் தேவ் பாய் ரூம். போ…” என்றாள்.
இந்த பழக்கமெல்லாம் இன்னும் மாறவில்லையா! கடவுளே! – சங்கடத்துடன் தயங்கினாள் மதுரா. மருதாணி சிவப்பேறியிருந்த தளிர்விரல்கள் நடுங்கின.
“இதெல்லாம் சம்பிரதாயம். ஃபாலோ பண்ணிதான் ஆகணும்” – மாயா கண்டிப்புடன் கூற, மதுராவின் கீழுதடு மடிந்து பற்களுக்கிடையில் சிக்கிக் கொண்டது. அவளுடைய உணர்வுகளை புரிந்துகொள்ள அங்கு ஒருவரும் இல்லை. மெல்ல அடியெடுத்துவைத்து தேவ்ராஜின் அறைக்கு வந்தாள். கதவு மூடியிருந்தது. பதட்டம் அதிகமானது. ஆனால் இதை சந்தித்துதானே ஆக வேண்டும்! ஆழமூச்செடுத்து தன்னை தேற்றிக் கொண்டு கதவைத் தட்டினாள். உள்ளேயிருந்து எந்த பதிலும் வரவில்லை.
ஓரிரு நொடிகள் யோசனைக்குப் பிறகு கதவில் கைவைத்து லேசாகத் தள்ளிப் பார்த்தாள். திறந்து கொண்டது. தயக்கத்துடன் உள்ளே சென்றாள். பிரம்மாண்டமான அறை பளபளத்தது. இடது பக்க சுவரை வார்ட்ராப் அடைத்திருந்தது. வலது பக்கம் டெரஸ் அமைந்திருந்தது. அதை ஒட்டி இன்னொரு கதவு… குளியலறையாக இருக்க வேண்டும். நடுநாயமாக பெரிய கட்டில்… அதையடுத்து சின்ன கோச்… அனைத்தும் நன்றாக பராமரிக்கப்பட்டிருந்தது, அழகாகவும் இருத்தது. ஆனால் அவன் எங்கே! – அவளுடைய கண்கள் அறையை மீண்டும் ஒருமுறை வட்டமடித்தன. அப்போதுதான் அவன் டெரஸில் இருப்பதை கவனித்தாள். கோச்சில் நன்றாக சாய்ந்து அமர்ந்திருந்தான். லேசாக பின்தலை மட்டும்தான் தெரிந்தது. இவள் வந்ததை அவன் கவனிக்கவில்லை. இப்போது என்ன செய்வது! அவளுக்கு விளங்கவில்லை. கையிலிருந்த பால் செம்பை டீப்பாயில் வைத்துவிட்டு, கையை பிசைந்துக் கொண்டு நின்றாள். அவனிடம் சென்று பேசவும் பயமாக இருந்தது. யோசனையில் மூழ்கினாள்.
“எவ்வளவு நேரம் இப்படி நின்னுக்கிட்டே இருக்க போற?” – திடீரென்று அருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பினாள். கையிலிருந்த ஆப்பிள் மேக்-புக்கை மேஜையில் வைத்துவிட்டு அவளுக்கு வெகு அருகில் காதோரம் வந்து, “வெல்கம்…! டு மை ரூம்…!” என்றான். அவன் பார்வையிலிருந்த ஏதோ ஒன்று அவளை அச்சுறுத்த, அவள் மிரண்டு போய் அவனைப் பார்த்தாள். நமுட்டுச் சிரிப்புடன் அவளைக் கடந்து சென்று கட்டிலில் அமர்ந்தவன், “உட்காரு” என்றான்.
கட்டிலுக்கு வலிக்குமோ என்கிற விதத்தில், ஓரத்தில் ஒட்டிக் கொண்டு அமர்ந்தாள். அவளை ஏற இரங்கப் பார்த்தவன், “நா உன்னோட ஹஸ்பண்ட்தான். இப்படி, பக்கத்துல வந்து உட்காரலாம். தப்பில்ல…” என்றான்.
அவன் பக்கம் சற்று நகர்ந்து அமர்ந்தாள். அப்போதும் இடைவெளி அதிகமாகத்தான் இருந்தது. வேண்டுமென்றே அந்த இடைவெளியை பார்வையால் அலைந்துவிட்டு, “இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் தானே?” என்றான்.
“ஆங்… ஆ… ஆமாம்….” – எவ்வளவு முயன்றும் தடுமாற்றத்தை தவிர்க்க முடியவில்லை.
“அப்படி தெரியலையே!” – தலை குனிந்து அமர்ந்திருப்பவளை ஆழ்ந்து நோக்கியபடிக் கூறினான்.
உண்மைதான்… அவளுக்கு விருப்பம் இல்லைதான். தன்னை வெறுக்கும் ஒருவனை… தன்னை அலட்சியப்படுத்தும் ஒருவனை, திருமணம் செய்துகொள்ள எந்த பெண்தான் ஆசைப்படுவாள்!
“கல்யாணப் பொண்ணு… ஒரு உற்சாகமே இல்லையே! காலையிலிருந்து உன் முகத்துல ஒருதரம் கூட சிரிப்பை பார்க்க முடியலையே!” என்றான். அவள் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தாள். அவளால் என்ன சொல்ல முடியும். உன்னிடம் பயம்… திடீர் திருமணத்தின் பாதிப்பு… என்றெல்லாம் சொன்னால் அவனுடைய எதிர்வினை எப்படி இருக்கும் என்று யாருக்கு தெரியும். எனவே உதட்டைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.
“ஹும்ம்ம்…” என்று பெருமூச்சு விட்டபடி எழுந்துச் சென்று, கட்டிலுக்கு அருகில் இருந்த மினி பிரிட்ஜை திறந்து ஒரு கூல்ட்ரிங்ஸ் டின்னை எடுத்தான். நிமிர்ந்து பார்க்கவில்லை என்றாலும் அவளுடைய பார்வை வட்டத்தில் அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தது.
“வான ட்ரிங்க்?” – ‘குடிக்கிறியா?’ என்று அவளிடம் கேட்டான். வேண்டாம் என்பது போல் தலையசைத்தாள். தோளை குலுக்கிவிட்டு, டின்னை திறந்து குடித்தான். குடித்துக் கொண்டே அவளை பார்த்தான். குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள். அழகாக இருந்தாள். ஆனால் முகத்தில் சந்தோஷமில்லை… நாணமில்லை… புன்னகை இல்லை. அவனுக்குள் அகங்காரம் உறுமியது.
“அன்னைக்கு சிரிச்சுகிட்டே இருந்தியே!” – கனலை கக்கும் அவன் கண்களை அவள் நிமிர்ந்துப் பார்க்கவில்லை. அவன் எந்த நாளை குறிப்பிடுகிறான் என்பதை புரிந்து கொண்டவளின் உடல் நடுங்கியது.
“அவனை ரொம்ப பிடிச்சிருந்ததோ!” – பகீரென்றது அவளுக்கு. சட்டென்று நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள்.
அவன் பேசிய வார்த்தைகளைவிட, ஏளனம் நிறைந்த அந்த குரல் அவளை மிகவும் காயப்படுத்தியது. ‘என்ன?’ என்பது போல் புருவம் உயர்த்தி விழியால் கேட்டான். அப்போதுதான் கவனித்தாள்… அவனுடைய முகத்தில் முன்பிருந்த சாந்தம் இல்லை. விழிகள் சிவந்திருந்தன. என்ன ஆச்சு திடீர்ன்னு! – அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, கையிலிருக்கும் டின்னை வாயில் சரித்தான். திரவம் தொண்டையில் இறங்கியது. அவளுக்கு விளங்கிவிட்டது… அவன் கையிலிருப்பது குளிர்பானம் அல்ல மதுபானம்…! இதைத்தான் குடிக்கிறாயா என்று கேட்டானா! கடவுளே! – மீண்டும் ஒரு திடுக்கிடல்!
“ஏதாவது பதில் இருக்கா?” – கோணல் புன்னகையுடன் கேட்டான். ஏதோ ஒரு காட்டு மிருகத்திடம் மாட்டிக் கொண்டுவிட்ட உணர்வுடன், “அது… இந்த கல்யாணம்… திடீர்னு… எனக்கு… ஷாக்…” – கோர்வையாக பேசமுடியாமல் தடுமாறினாள்.
“ப்ச்…ப்ச்… பதில் பொருத்தமா இல்லையே!”
“ஆங்…?” – புரியாமல் விழித்தாள்.
“அவனை ரொம்ப பிடிச்சிருந்ததான்னு கேட்டேன்” – மதுராவிற்கு உதறலெடுத்தது. அவனுடைய கேள்வியும்… பார்வையும்… சிரிப்பும்… எல்லாம் வேறுவிதமாக இருந்தது. பயந்துபோய் பார்த்தாள்.
“பதில் சொல்லு…” – அதட்டினான்.
“இ…இல்ல… அப்படிலாம் இல்ல…” – பயத்துடன் கூறினாள்.
“ரியலி!!!” – போலியாக ஆச்சரியப்பட்டான். அவள் கண்கள் கலங்கின. கடவுளே! இந்த விசாரணையெல்லாம் எப்போது முடியும்! முடிந்தாலும் தப்பித்து எங்கே போவது! தன்னுடைய கலக்கத்தை அவன் கண்டுகொள்ளக் கூடாதே என்கிற தவிப்புடன் கீழே குனிந்துக் கொண்டாள்.
அவன் கையிலிருந்த டின் காலியாகிவிட்டது. அதை போட்டுவிட்டு, பிரிட்ஜை திறந்து அடுத்த டின்னை எடுத்தான். ‘இன்னொன்னா!’ – அவன் குடிக்கக் குடிக்க இவள் கதிகலங்கினாள்.
“சரி சொல்லு… என்னை பிடிச்சிருக்கா?” – வேறு வழியே இல்லை. பொய் என்றாலும் அதை சொல்லித்தான் ஆக வேண்டும். எனவே ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தாள்.
“புரியல… வாயத்தெறந்து சொல்லு…”
“பிடிச்சிருக்கு…” – மெல்லிய குரலில் கூறினாள்.
“ஹா…ஹா…” – கடகடவென்று சிரித்தான். அந்த சிரிப்பில் மகிழ்ச்சியின் சாயலே தென்படவில்லை. “ஸ்மார்ட்… யு ஆர் டூ ஸ்மார்ட்… ஹா ஹா…” – நம்பிக்கையின்மை அப்பட்டமாகத் தெரிந்தது.
“பிடிச்சிருக்கு!!! குட் ஆன்சர். ஆனா எனக்கு உண்மையான ஆன்சர்தானே வேணும்…” என்றான் நக்கலாக.
“உண்… உண்மைதான்… எனக்கு… எனக்கு பிடிச்சிருக்கு” – பதட்டத்துடன் உளறுபவளை அவளை ஆழ்ந்துப் பார்த்த தேவராஜ், “சரி அப்போ காட்டு…” என்றான் கரகரத்த குரலில்.
“என்ன!” – நடுங்கிப் போன மதுரா சட்டென்று கட்டிலிலிருந்து எழுந்தாள்.
“பிடிச்சிருக்குல்ல?”
“ம்ம்ம்… ஆனா…”
“பிடிச்சிருக்கா… இல்லையா?” – முகமும் குரலும் கடுமையாக மாறியது.
“பி..பிடிச்சிருக்கு” – பயத்துடனே கூறினாள்.
“எவ்வளவு பிடிச்சிருக்குனு காட்டு”
“அது… அது எப்படி!”
“எப்படி வேணுன்னாலும்…” – அவன் பார்வை மாறியது.
“ப்ளீஸ்…” – அவள் குரல் தழுதழுத்தது.
“உனக்கு ரெண்டு ஆப்ஷன் தர்றேன் மதுரா… ஒண்ணு, என்னை உனக்கு எவ்வளவு பிடிச்சிருக்குன்னு நீ காட்டு… இல்ல, எனக்கு உன்மேல எவ்வளவு உரிமைன்னு நான் காட்டறேன். சாய்ஸ் இஸ் யூர்ஸ்…” என்றான் இலகுவாக. அவள் கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென்று வழிந்தது.
15 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Mithunkanmani says:
Dev Madhu va love panran….athuvum romba …adha Ava kitty solla amabala ego…..adhu dan intha mirattaluku reason ……..super love story ……Dev ena aanalum madhuva Vitu kuduka mattan
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi says:
என்ன தான்டா பிரச்சனை உனக்கு … இப்படி மிரட்டுற மதுவை … 😡😡😡
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
நன்றி லட்சுமி… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
படபடப்பான பதிவு,தேவ்வுக்கு தெரியும்தானே மதுராவின் முந்தய நிலை,எதற்காக இப்படி பயம் காட்டுகின்றார்,சொந்த மாமன் பிள்ளைகள் என்றாலும் ஒருத்தரை ஒருத்தர் தெரியாதுதானே,அதனால் மதுராவுக்கு தேவ் நேரம் கொடுக்க வேண்டும்தானே.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
நன்றி தாட்சாயணி… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha khaliq says:
Ennapa kalyanam mudinjirichi….puliyidam pullimaan thaniya maatikicha? Aiyo eppadi vaetai aada porano? Kadaisila kaayapadaporathu madhura dhaan☹️
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Hi Hadija,
Thank you… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
பாவம் அந்த பெண்
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Hi Vatsala,
Mikka nandri… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
hayoooo pawamda pillai payanthu nadungaraaaaaaaa
intersting ud sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Hi Ugina, Thank you so much… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pons says:
பாவி…
பாவி..
போடா வெண்ணை
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
ஹா ஹா… சூப்பர்…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Priya says:
Sareyana vellan pa dave. Pavam mathura
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Hi Priya,
Thank you so much… 🙂