Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 26

அத்தியாயம் – 26

கசக்கியெறிந்த பூமாலையாக சுருண்டுக் கிடந்தாள் மதுரா. கண்ணீர் நிற்காமல் கசிந்துக் கொண்டேயிருந்தது. ‘ஏன் இப்படி செஞ்சீங்க டாடி… என்னை எதுக்கு இந்த நரகத்துல தள்ளிவிட்டீங்க? எனக்கு பயமா இருக்கு டாடி. ப்ளீஸ் சேவ் மீ… டாடி ப்ளீஸ்…’ – அவள் மனம் அரற்றியது. உடல் அழுகையில் குலுங்கியது. அருகில் மெத்தை உள்வாங்கியதும், கப்பென்று இருகைகளாலும் வாயை மூடி அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

 

‘விழித்துவிட்டானோ!’ – பயத்துடன் மெல்ல திரும்பிப் பார்த்தாள். கால்களையும் கைகளையும் அகல விரித்து மொத்தக் கட்டிலையும் அடைத்துக் கொண்டு, பீமன் போல் படுத்திருந்தான் தேவ்ராஜ். அவளுடைய உடல் குறுகி ஒடுங்கி இன்னும் ஓரத்திற்குச் சென்றது. உறக்கமே வரவில்லை. வெகுநேரம் விழித்துக் கிடந்தாள். சிந்தனைகள் எங்கெங்கோ ஓடின. இதுதான் வாழ்க்கையா! கடைசிவரை இப்படித்தான் வாழ வேண்டுமா! சுழலில் சிக்கிக் கொண்டது போல் தோன்றியது.

 

‘கடவுளே!’ – சிந்தனைக்கு திரைபோட முடியாமல் கண்களை மூடினாள். கனவிலும் அவன் வந்தான். கொடூர பற்களுடன் ஆஜானுபாகுவாக ராட்சச உருவத்திலிருந்தான். அடர்ந்த காட்டுக்குள் அவளை விரட்டினான். சூழ்ந்திருக்கும் இருளில் திக்குத் தெரியாமல் அவள் ஓடினாள்… ஓடினாள்… ஓடி ஓடி… கடைசியில் ‘சட்’டென்று ஒரு பாறையில் மோதி கீழே விழுந்தாள். பலமான அடி… எழமுடியவில்லை. என்ன ஆச்சர்யம்! அந்த பாறை குனிந்து அவளை தூக்கியது. கண்களை கசக்கி, பார்வையை கூர்மையாக்கி பார்த்தாள்.

 

அது பாறையே அல்ல… அவன்… ராட்சசன். அவளை இறுக்கிப் பிடித்தான். கழுத்தை வளைத்தான். தன் கோரப்பற்களை அவள் கழுத்தில் பதித்து இரத்தத்தை உறிஞ்சினான். ‘ஆஆ…’ – விரண்டு எழுந்தாள். கனவா! எப்போது உறங்கினாள்… எப்போது இந்த கனவு வந்தது! – முகத்தில் அரும்பியிருந்த வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொண்டாள். படபடப்பு மெல்ல குறைந்தது. அருகில் திரும்பிப் பார்த்தாள். ஒன்றும் அறியாத பாலகன் போல உறங்கி கொண்டிருந்தான் பீமன். இரவெல்லாம் அசுரனாகத் தெரிந்தவன் இப்போது ஏனோ அப்பாவியாகத் தெரிந்தான். ‘ச்சே…’ – தலையை உலுக்கிக் கொண்டாள் மதுரா. ‘பைத்தியக்காரத்தனம். அசுரன் அப்பாவியாவது எந்த ஊரில் சாத்தியம்!’ – தன்னைத்தானே கடிந்துக் கொண்டு, சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். நேரமாகிவிட்டது… ஓசைப்படாமல் எழுந்து குளியலறைக்குச் சென்றாள்.

 

தேவ்ராஜ் உறக்கம் களைந்து எழும்பொழுது அவள் அறையில் இல்லை. பொம்மையை பறிகொடுத்த குழந்தை போல் அவன் முகம் சுருங்கியது. ‘எங்க போய்ட்டா!’ – புருவங்கள் முடிச்சிட்டன. அவள் விட்டுச் சென்ற நறுமணம் இன்னும் அவனை சுற்றிக் கொண்டிருந்தது. காய்ந்த மலர்கள் சில மெத்தையில் சிதறி கிடந்தன. வெள்ளி பால் செம்பு வைத்த இடத்திலேயே இருந்தது. ‘ஹும்ம்ம்ம்…’ – பெருமூச்சு விட்டவனின் முகம், குளியலறை கதவு திறக்கும் ஓசைக்கேட்டதும் சட்டென்று பிரகாசமானது.

 

விரித்துவிட்ட ஈரக்கூந்தலுடன், அரக்கு நிற சல்வாரில் வெளியே வந்தாள் மதுரா. ‘மலரென்பதா இல்லை மயிலென்பதா… அவ்வளவு அழகு!’ – கவிதை கிலோ என்ன விலை என்று கேட்பவன் கூட, அவள் அழகை மலரொடும் மயிலோடும் ஒப்பிட்டுப் பார்த்தான். முகத்தில் சிறு புன்னகையுடன் தலையிலிருந்து கால்வரை அவளை பார்வையால் அளந்தான். அப்போதுதான் கவனித்தான், கையில் எதையோ வைத்திருந்தாள். என்ன அது! – கூர்ந்து பார்த்தான். நேற்று அவள் அணிந்திருந்த ஆடைகள்.

 

“அதை ஏன் கையில வச்சுக்கிட்டு சுத்திட்டிருக்க?” – டெரஸிற்கு சென்று கொண்டிருந்த மதுரா விறைத்து நின்றாள். என்றைக்கும் இல்லாமல் இன்று புதியதாய் அவன் குரலில் ஒரு நெருக்கம் தெரிந்தது. அந்த நெருக்கம் அவளை என்னவோ செய்தது.

 

“லண்டரி பாக்ஸ் உள்ளேயே இருக்கு. அதுல போட்டுட்டா, சர்வெண்ட்ஸ் வந்து எடுத்துப்பாங்க” என்றான் மிருதுவாக.

 

அவனுடைய நெருக்கமும் மென்மையும் அவளுக்குள் ஆழமாக ஊடுருவியது. ஏதோ அவன் அவளுக்காகவே உருகுவது போன்றதொரு பிரம்மை தோன்ற, சட்டென்று உள்ளுக்குள் இனம்புரியாத ஓர் உணர்வு பரவியது. திடுக்கிட்டுப் போனாள் மதுரா. இது போன்ற உணர்வுகள் தனக்கு நல்லதல்ல என்பதை மனதில் கொண்டு வந்தவளுக்கு, ஆத்திரம் தொண்டையை அடைத்தது.

 

துளிர்க்கும் ஆசையை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் என்று எண்ணி, “தேங்க்ஸ்…” என்று குனிந்தபடியே முணுமுணுத்துவிட்டு குளியலறைக்குள் பாய்ந்தாள். மனம் படபடத்தது. ஆழ மூச்செடுத்து தன்னை கட்டுக்குள் கொண்டுவந்தாள். கையிலிருந்த அழுக்குத் துணிகளை உரிய இடத்தில் போட்டவளுக்கு மீண்டும் வெளியே வரவே பயமாக இருந்தது. ‘அவன் இருப்பானே!’ – ஏனோ அவனை பார்க்கும் துணிவே இல்லை அவளிடம். ஆனால் எவ்வளவு நேரம் உள்ளேயே இருக்க முடியும். வெளியே வந்துதானே ஆகவேண்டும். மனதை திடப்படுத்திக் கொண்டு வெளியே வந்தவள் அவன் பக்கம் திரும்பாமலே டெரஸிற்கு விரைந்தாள். அவனுடைய பார்வை, நொடிகூட விலகாமல் தன்னை பின்தொடர்வதை அவளால் உணர முடிந்தது.

 

‘ஏன் இப்படி பார்க்கிறான்!’ – சற்று நேரம் அவளை பார்வையால் சங்கடப்படுத்திவிட்டு, குளியலறைக்குள் நுழைந்தான் தேவ்ராஜ். அதற்காகவே காத்திருந்தது போல தடதடவென்று அறையிலிருந்து வெளியேறி கீழேச் சென்றாள். வேலைக்காரர்களை தவிர வேறுயாரும் கண்ணில் படவில்லை. வெளிக்காற்றை சுவாசித்தால் இறுக்கம் தளரும் என்றெண்ணி தோட்டத்திற்கு வந்தாள். மனம் அவன் நினைவிலேயே சிக்கிக் கொண்டிருந்தது. ‘அவனே ஒரு இராட்சஸன்… மூர்க்கன்… அவனுடைய குரலும் பார்வையும் நம்மை ஏன் இவ்வளவு தூரம் பாதிக்க வேண்டும்! கடவுளே!’ – இயலாமையுடன் கடவுளை துணைக்கு அழைத்தாள். ‘பிடிக்காம… கட்டாயத்துக்காக… சூழ்நிலைக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவன்கிட்ட வெறுப்பை தவிர வேறு எதையும் எதிர்பார்க்கக்கூடாது’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். ஆனால் மனம் அடங்க மறுத்தது.

 

குளித்துவிட்டு வெளியே வந்த தேவ்ராஜின் பார்வை நேராக டெரஸிற்கு தான் சென்றது. அங்கே அவளை காணவில்லை என்றதும் மனம் ஏமாற்றத்தில் சுணங்கியது. ‘அதுக்குள்ள எங்க போனா!’ – உள்ளே சிறு கோபம் கூட மூண்டது. அதை ஓரம்கட்டிவிட்டு விறுவிறுவென்று உடை மாற்றி தயாராகி கீழே வந்தான். வழக்கம் போல இராஜேஸ்வரியும் பாரதியும் அவனுக்காக உணவு மேஜையில் காத்திருந்தார்கள்.

 

“குட் மார்னிங் பாய்…” – பாரதி.

 

“மார்னிங்… மார்னிங் ம்மா…” – இருக்கையில் வந்து அமர்ந்தவனின் கண்கள் அவளை தேடின. “மதுரா எங்க?” – இராஜேஸ்வரி கேட்க நினைத்ததை அவன் முதலில் கேட்டான்.

 

மகனை ஆச்சர்யத்துடன் பார்த்தவள், “மேல இல்லையாப்பா! கீழ வரலையே!” என்றாள்.

 

“கீழ வரலையா!” – அவனுடைய புருவம் சுருங்கியது.

 

அவர்கள் தங்களுக்குள் குழம்பிக் கொண்டிருக்கும் போது, “சார்… மேம் கார்ட்னல இருக்காங்க” என்று பரிமாறிக் கொண்டிருந்த வேலைக்கார பெண் இடையிட்டாள்.

 

“ஓ…! சரி நீ போயி வர சொல்லு” – இராஜேஸ்வரி.

 

“இல்ல… நீ இரு… ம்மா… நீங்க கன்டினியூ பண்ணுங்க. நா இப்போ வந்துடறேன்” – மதுராவைத் தேடி தோட்டத்திற்குச் சென்றான் தேவ்ராஜ்.

 

கொத்துக் கொத்தாய் மலர்ந்திருக்கும் பன்னீர் ரோஜா செடிகளுக்கு மத்தியில், கையைக் கட்டிக்கொண்டு கொடிபோல் நின்றாள் மதுரா. அவளுடைய பார்வை இலக்கில்லாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தது.

 

“என்ன யோசனை?” – திடீரென்று அருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்.

 

‘பயந்துட்டா…’ – அவன் மனம் சொன்னது.

 

‘உன்ன பத்திதான் யோசிச்சுகிட்டு இருக்கேன்னு சொன்னா நம்பவா போற!’ – அவள் மனம் கேள்வி கேட்டது.

 

இருவரும் ஆளுக்கொன்றை மனதில் நினைத்தபடி ஒருவரை ஒருவர் பார்க்க, கண்கள் பின்னிக் கொண்டன.

 

“நா இருக்கும்போது உன்கிட்ட வேற யாரு நெருங்க முடியும்?” – அவன் என்ன சொல்கிறான் என்பது அவளுக்கு விளங்கவில்லை. புரியாமல் பார்த்தாள். “ஏன் இவ்வளவு பயம்?” என்றான். அவளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ‘உன்னாலதான் இந்த பயம்’ என்று அவனிடமே சொல்லவா முடியும். அமைதியாக தலை கவிழ்ந்தாள்.

 

“சரி வா…” என்றபடி திரும்பி நடந்தான்.

 

“எங்க?” – இடையிட்ட மென்குரலில் நின்று திரும்பிப் பார்த்தான்.

 

“பிரேக்ஃபாஸ்ட் ரெடி… அம்மாவும் பாரதியும் நமக்காகதான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” – இவனிடமிருந்து தப்பிப்பதற்காகத்தான் இங்கு வந்தாள். விடாமல் தேடிக்கொண்டு வந்தது மட்டும் அல்லாமல், சேர்ந்து உணவருந்த வேறு அழைக்கிறானே!

 

“இல்ல… எனக்கு பசிக்கல… நா லேட்டா…” – “இங்க அந்த பழக்கம் இல்ல. எல்லாரும் சேர்ந்துதான் சாப்பிடணும். வா…” – கையைப் பிடித்து அழைத்து… இல்லையில்லை இழுத்துச் சென்றான்.

 

தெரிந்த விஷயம்தானே! அவளுடைய விருப்பத்திற்கு எப்போது மதிப்பு கொடுத்திருக்கிறான் இப்போது கொடுப்பதற்கு! விதியை நொந்துக் கொண்டு அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றாள் மதுரா.

 




14 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Umamanoj says:

    கட்டாய திருமணம் அல்ல காதலினால் தான் திருமணம் செய்து கொண்டான் தேவ் என்று தெரிகிறது. .ஆனால் மது வை அந்த பயமுறுத்திடே இருக்கிறது ரொம்ப பாவம். .


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      ஹாய் உமா…
      மிக்க நன்றி…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha khaliq says:

    Dev ku madhura maela love start aagidichi….adhoda Muthal padidhaan poramai….Kailash koodamattum sandoshama irundhanu kobap paduran….rendavathu yekam….aval arugil illai yenavum mooji suringirichi….but avanuke theriyala avanuku madhura mael undana kaadhal….adhaan adhai kobama velipaduthuran….avan kaadhalai puriya mudiyama ivalum miralra


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Hi Hadija,
      Thank you so much pa… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    மதுராவின் பயத்தை தேவ் உணர்கின்றார் ஆனால் தேவ் அதை அசட்டை செய்து நடக்கின்றார்,எதற்காக தேவ் இப்படி அதிரடியாக நடக்கணும்,தன்னுடைய விருப்பத்தை கொஞ்சம் கோடிட்டு காட்டலாம்தானே ,இப்போதய தேவ்வின் பேச்சில் இருக்கும் மென்மைக்குப்பின்னால் தேவ்வின் காதல் இருக்கென்று மதுராவுக்கு தெரியும்போது மதுரா அப்பவும் தேவ் மீது பயத்துடன்தான் இருப்பாரா.

    நன்றி


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      பயமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாறிடும்… அப்புறம் அவன்தான் அவளுக்கு பயந்து கிடக்கணும்… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi says:

    Nice update


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Lakshmi… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    super ud sis


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Ugina… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    ஹம்ம்ம்.. அவள் மாதிரி பெருமூச்சு விட வச்சிடிங்களே!


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Vatsala… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pons says:

    பயங்கர கனவு


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      அவனை பற்றி அவ அப்படிதான் நினைக்கறா… அதான் கனவுல வந்துடுச்சு… 🙂

You cannot copy content of this page