கனல்விழி காதல் – 27
9795
15
அத்தியாயம் – 27
“உட்கார்” – மதுராவை ஒரு நாற்காலியில் அமரச் செய்துவிட்டு, இயல்பாய் அவளுக்கு அருகில் அமர்ந்தான் தேவ்ராஜ். அவளுடைய அருகாமை அவனை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை போலும். பரிமாறப்பட்ட உணவை நன்றாக சாப்பிட்டான். ஆனால் அவளுக்குத்தான் ஒரு வில்லை சப்பாத்தி கூட உள்ளே இறங்கவில்லை.
“என்ன ஆச்சு? சப்பாத்தி பிடிக்காதா?” – மதுராவின் பக்கம் திரும்பிக் கேட்டான்.
“இல்ல… பிடிக்கும்…” – ஏன் இப்படி எல்லாவற்றையும் கவனிக்கிறான். எத்தனை முறை மூச்சு விடுகிறாள் என்பதை கூட சொல்லிவிடுவான் போலிருக்கிறதே! முயன்று உணவை உள்ளே தள்ளினாள்.
“வெளியே கிளம்பிட்டியாப்பா?” – இராஜேஸ்வரி.
“ம்ம்ம்… ஆபீஸ்”
“ஆபீஸா!”
“ஆமாம்… ஏன்?” – உணவிலிருந்து கவனம் சிதறாமல் கேட்டான். மகனை வியப்புடன் பார்த்தாள் இராஜேஸ்வரி. திடீர் திருமணம்தான். அதற்காக மறுநாளே அலுவலகம் செல்ல வேண்டுமா!
“ஒரு வாரம் லீவ் போட்டுட்டு மதுராகூட இருக்கலாம்லப்பா…” – இராஜேஸ்வரி சொன்னதும் அவன் மதுராவைத் திரும்பிப் பார்த்தான். அவள் குனிந்த தலை நிமிரவில்லை. அவளை ஆழ்ந்து பார்த்தபடியே, “வேலை இருக்கும்மா” என்றான்.
“வேலை எப்பவும் இருக்கும் ப்பா. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு”
“நோ ம்மா… ஆபீஸ்ல ஒரு முக்கியமான வேலை போயிட்டு இருக்கு. நா கண்டிப்பா இருக்கணும்” – முடிவாகக் கூறினான். சற்று நேரம் யோசித்த இராஜேஸ்வரி, “சரி, இன்னைக்கு மட்டுமாவது லீவ் எடுத்துக்கோ. அண்ணன் வீட்லேருந்து வராங்க” – இதை கேட்டதுமே அவனுடைய மனநிலை சட்டென்று மாறியது.
“மதுரா இங்கதானே இருக்கா. அவங்க வந்து பார்த்துட்டு போகட்டும். எனக்கு வேலை இருக்கு. என்னை எதுக்கு தடுக்கறீங்க?” – எரிச்சலைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான். ‘நம் பெற்றோருக்கு இவ்வளவுதான் மதிப்பா!’ – மதுராவிற்கு சுருக்கென்றது.
“அவங்க மதுராவை பார்க்க வரல தேவ். உன்னையும் மதுராவையும் அவங்க வீட்டுக்கு இன்வைட் பண்ண வர்றாங்க. இதெல்லாம் ஒரு சம்பிரதாயம்”
“ம்மா… உங்க சம்பிரதாயம்… சடங்கையெல்லாம் ஃபாலோ பண்ணிட்டு இருக்க எனக்கு டைம் இல்ல சரியா? என்னை தொந்தரவு பண்ணாதீங்க” – சட்டென்று எழுந்து கைகழுவச் சென்றான். மதுராவின் முகம் விழுந்துவிட்டது. அவனுடைய அலட்சிய போக்கு அவளுக்கு சிறிதும் பிடிக்கவில்லை.
‘அவர்கள் வருவார்கள் என்று இவன் அலுவல்களை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு காத்துக் கொண்டிருக்க வேண்டுமாம்! ஹா…’ – அகங்காரத்துடன் வெளியே வந்தான். கார் ஒன்று போர்டிக்கோவில் வந்து நின்றது. நரேந்திரமூர்த்தியும் பிரபாவதியும் இறங்கினார்கள். அவர்களைக் கண்டதும் அவனுக்குள்ள சிறு கோபம் மூண்டது. எதிலோ தோற்றுவிட்ட உணர்வு…
“ஹலோ எங் மேன்… எங்க காலையிலேயே கிளம்பியாச்சு!” – பழையபடி உற்சாகமாக மருமகனைக் கட்டிக் கொண்டார் நரேந்திரமூர்த்தி.
“வெல்கம் மாமா… கம் இன்” – வேறு வழியில்லாமல் இருவரையும் வரவேற்றான் தேவராஜ். பிரபாவதி அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. மருமகனாகிவிட்ட பிறகும் கூட அவனை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் நெற்றியிலிருக்கும் தழும்பு அவளை உருத்திக் கொண்டே இருந்தது. அவளுடைய நிராகரிப்பில் தேவ்ராஜின் முகம் இறுகியது.
பெரும் மகிழ்ச்சியிலிருந்த நரேந்திரமூர்த்தி அங்கே நடந்த மௌன யுத்தத்தை கவனிக்கவில்லை. மருமகனை தோளோடு அனைத்து அவரே உள்ளே அழைத்துக் கொண்டு வந்தார். அவர்களைத் தொடர்ந்து பிரபாவதியும் வந்தாள்.
பெற்றோரைக் கண்டதும் எல்லைகடந்த உற்சாகத்துடன், “ம்மா… டாடி…” என்று ஓடிவந்தாள். இவளுக்கு இவ்வளவு சத்தமாகக் கூட பேசத்தெரியுமா என்று தேவராஜ் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, “மது..” என்று மகளை அனைத்துக் கொண்டார் நரேந்திரமூர்த்தி. பிரபாவதியும் வாஞ்சையுடன் மகளின் தலையை வருடினாள். அவர்களின் பாசப் போராட்டம் தேவ்ராஜை எரிச்சல்படுத்தியது. ‘வருஷக் கணக்கா பிரிஞ்சிருந்த மாதிரி ஓவரா ரியாக்ட் பண்ணுதுங்களே!’ என்று எண்ணிக் கொண்டான்.
“வாங்க வாங்க… அண்ணா… அண்ணி… வாங்க. உட்காருங்க…” என்று அவர்களை நன்கு வரவேற்று உபசரித்தாள் இராஜேஸ்வரி. பாரதிக்கு அவர்களை சந்திக்க விருப்பமில்லை. எனவே, வெளியில் குரல் கேட்டதுமே டைனிங் ஹாலிலிருந்து நைசாக நழுவி தன்னுடைய அறைக்குச் சென்றுவிட்டாள்.
நலவிசாரிப்புகள் உபச்சாரங்களெல்லாம் முடிந்த பிறகு, “தேவ், மதுவை கூட்டிட்டு இன்னைக்கு நம்ம வீட்டுக்கு லஞ்சுக்கு வாப்பா…” என்றார்.
“சாரி மாமா… இன்னைக்கு எந்த ஏற்பாடும் செய்யாதீங்க. இன்னொருநாள் ஃப்ரீயா இருக்கும்போது பார்த்துக்கலாம்” என்றான்.
இவன் இப்படித்தான் ஏதாவது சொல்லி தட்டிக்கழிப்பான் என்று எதிர்பார்த்த பிரபாவதி, ‘உங்க மாப்பிள்ளையோட லட்சணத்தை பார்த்துக்கிட்டீங்களா?’ என்பது போல் கணவனை முறைத்தாள்.
மனைவியின் முறைப்படி சட்டை செய்யாமல் “இல்லப்பா… இதெல்லாம் கல்யாணத்துக்கு பிறகு செய்ய வேண்டிய முறை…” என்று இழுத்தார் நரேந்திரமூர்த்தி.
“இந்த கல்யாணமே எதிர்பாராம நடந்ததுதானே மாமா… ஜஸ்ட் லைக் அன் ஆக்ஸிடென்ட். என்னோட ஒர்க் ஷெட்யூல்ஸ் எல்லாம் அப்படியேதான் இருக்கு. எதையும் மாத்த முடியாது. ஐ ஹேவ் டு ஹாண்டில் எவ்ரித்திங். உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்” – அழுத்தமாகக் கூறினான். திடீர் திருமணமென்றால் மதிப்பற்றதாகி விடுமா என்ன! மதுராவின் முகம் கூம்பிவிட்டது.
“எனக்கு புரியுதுப்பா… புரியுது… பிசினஸ்ன்னா அப்படிதான். எனக்கு புரியுது” – வேகவேகமாக தலையாட்டினார் நரேந்திரமூர்த்தி. பிரபாவதிக்கு புகைந்தது. ‘இவனோட அகங்காரம் குறையவே குறையாது. தெரியாத்தனமா பொண்ண கொடுத்துட்டோமே!’ என்று உள்ளுக்குள் புழுங்கினாள்.
“சரி மாமா… நீங்க பேசிட்டு இருங்க. நா கிளம்பறேன். டைம் ஆச்சு…” என்று அவரிடம் விடைபெற்றுக் கொண்டவன், “பார்த்துக்கோங்கம்மா…” என்று தாயிடம் கூறிவிட்டு, மதுராவை ஒருமுறை பார்வையால் தழுவிவிட்டு புறப்பட்டான். அந்த ஒற்றைப் பார்வையிலேயே அவளுடைய பிணக்குகளையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டான்.
இராஜேஸ்வரி தன் அண்ணனோடு பேசிக் கொண்டிருந்த போது, “மது… வா…” என்று மகளை தனியாக அழைத்துச் சென்று, கேள்விகேட்டு குடைந்தாள் பிரபாவதி.
“உனக்கு இங்க ஒண்ணும் பிரச்சனை இல்லையே? உன்கிட்ட ஒழுங்கா நடந்துக்கறானா?” – மகள் நலமாக இருக்கிறாள் என்பதை அவள் வாய்வழியாகவே உறுதி செய்து கொண்டால்தான் நிம்மதி.
தாயின் கேள்விக்கு மதுராவால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. அவன் தன்னிடம் எப்படி நடந்துக்கொள்கிறான் என்பது அவளுக்கே புரியவில்லை. நேற்றெல்லாம் பார்வையாலும், குறுக்கு கேள்விகளாலும், அவளை அச்சுறுத்தினான். அதன் பிறகும் கூட… என்று யோசித்தவளுக்கு சட்டென்று முகம் சிவந்தது. உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
மகளின் முகமாற்றத்தை கவனித்த பிரபாவதிக்கு ஆச்சர்யமாக இருந்தது. தேவ்ராஜுக்கு ஒரு கனிவான பக்கம் இருக்கக்கூடும் என்பதை நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும், மகளை நினைத்து மனம் மகிழ்ந்தது.
மதுராவின் யோசனை தொடர்ந்தது. – இன்று காலை எழுந்ததிலிருந்து அவனுடைய பார்வை பேச்சு எல்லாமே விசித்திரமாக இருக்கிறது. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. சில நேரங்களில் வார்த்தையால் சுருக்கென்று குத்துகிறான். சில நேரங்களில் பார்வையால் அரவணைக்கிறான். அவனுடைய குணம்தான் என்ன! புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. அவள் நினைத்து பயந்த அளவிற்கு அவன் ஒன்றும் கொடூரமானவன் அல்ல.
“என்ன யோசிக்கிற?” – பிரபாவதி.
“ஆங்… ஒண்ணும் இல்ல… ஒண்ணும் இல்லம்மா…”
“ஆர் யு ஓகே?”
“ம்ம்ம்… ஐ ஆம்…” – புன்னகைத்தாள். அதிலிருந்த ஜீவன் பிரபாவதியை திருப்திபடுத்தியது.
“திலீப் பாய் எப்படி இருக்காங்க? என்கிட்ட பேசறதே இல்ல… போனும் அட்டென்ட் பண்ணறது இல்ல…” என்றாள் வருத்தத்துடன்.
“ம்ம்ம்… டாடி மேல கோவமா இருக்கான். அன்னைக்கு அவரு பாரதியை கண்டிச்சு பேசியிருக்கணும். எம்பையனுக்கு எவ்வளவு மன கஷ்டம். எல்லாம் அவராலதானே?” – படபடவென்று பெருமினாள். மகனுக்கு இருக்கும் கோபம் அவளுக்கும் இருந்தது.
“இல்ல ம்மா… எல்லாம் என்னாலதான். என்னாலதான் திலீப் பாய்க்கு இந்த அவமானம். அதனாலதான் என்னோட கூட பேச மாட்டேங்கிறாங்க” – வருத்தத்துடன் கூறினாள்.
“ச்சே… ச்சே… உம்மேல அவனுக்கு எந்த கோபமும் இல்ல. உன்னோட கல்யாணம் அவனுக்கு பிடிக்கல… அவ்வளவுதான். தேவ் மேல ரொம்ப வெறுப்பா இருக்கான். அவன் சொல்லித்தான் பாரதி இப்படி பண்ணியிருப்பா. இல்லன்னா அவளுக்கு இந்த தைரியம் வந்திருக்காதுன்னு நினைக்கறான். அதுதான் உண்மையும் கூட. இங்க எல்லாருகிட்டேயும் நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்” என்று எச்சரிக்கை செய்தாள். தாயின் கூற்றை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் அமைதியாக நின்றாள்.
“அவ உன்கிட்ட எப்படி நடந்துக்கறா?” – பாரதியை குறிப்பிட்டுக் கேட்டாள்.
“தெரியிலம்மா… டைனிங் ஹால்ல மட்டும்தான் அவளை பார்க்கறேன். என்னை அவாய்ட் பன்னீடறான்னு நினைக்கறேன்”
“நல்லது… அவகிட்டிருந்து ஒதுங்கியே இரு…” – ‘சரியான சிக்கல் பிடிச்ச குடும்பத்துல நம்ம பொண்ண கொண்டுவந்து மாட்டிவிட்டுட்டாரே’ என்று கணவனை மானசீகமாக கரித்துக் கொட்டினாள்.
“ம்மா… உங்க போன் கொடுங்க”
“ஏம்மா?”
“திலீப் பாய்க்கு கால் பண்ணி பார்க்கறேன். பேசணும் போல இருக்கும்மா…”
“வருத்தப்படாத மது. அவனே உனக்கு கால் பண்ணி பேசுவான். கொஞ்சம் டைம் கொடு…”
“ப்ச்…”- அதிருப்தியுடன் உச்சுக்கொட்டினாள்.
“இங்க பாரு… நீ புது வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்க. உன்னோட கவனம் முழுக்க இப்போ இங்கதான் இருக்கணும். திலீப் உன்னோட அண்ணன். உன்ன விட்டு எங்கேயும் போயிட மாட்டான். உனக்கு ஒண்ணுன்னா அவன்தான் முதல்ல வந்து நிப்பான். நீ மனச போட்டு குழப்பிக்காம தைரியமா இரு… சந்தோஷமா இரு… புரியுதா?” – தாயின் அறிவுரை மதுராவின் மனதிற்கு தெம்பை கொடுத்தது.
15 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha khaliq says:
Hi Nithya… nice ud..,.maman kudumbam maela Dev ku appadi enna kobam adhuvum kuripa prabavathi….paravaillaye madhura Dev ivoda paarvai maatrathai purinjika arambichita
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you HAdija… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pons says:
பிரபாவதி தான் கல்ப்ரிட் ஆ….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
May be ka…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
பிரபாவதி கடைசியில் கூறிய அறிவுரை சரிதான்,அதற்காக வாழ வந்த வீட்டில் இருக்கும் உறவுகளைப்பற்றி ,மதுரா தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும்படியோ அவர்களிடம் எச்சரிக்கையாக இரு என்று அறிவுரை கூறக்கூடாது ,உறவுகளை புரிந்து அதற்கேற்றவாறு நட என்று கூறணும்,அதுதான் அழகு ,மதுரா முதலில் தன்னுடைய வாழ்க்கையை பார்க்கட்டும்,இங்கே பெரியவர்களுக்குள்ளும் ஒற்றுமையில்லை சிறியவர்களுக்குள்ளும் புரிதலில்லை,,என்ன சொந்தங்களோ.
நன்றி
இன்று அடுத்த பகுதியில்லையா.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
பிரபாவதிக்கு தெரிஞ்சுது அவ்வளவுதான் விடுங்க… இதெல்லாம் குடும்பத்துக்குள்ள சகஜம்… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
NICE UD SIS
PRAABAMAA KITTA YENN KOBAM
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Ugina…:)
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi says:
Adutha pathivu ippo irukka pa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
illa pa… type pannittu irukken… first comment paarkkalaiyaa??? 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi says:
Sorry nithya gavanikala… Thanku pa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
ini mostly oru epi thaan pa… mudiyum podhu 2 kodukkaren… Thanks… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi says:
Prabhavati thazhumbu vara karanam dav ah … Lovely update nithya
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Lakshmi… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
ஹாய் ஃபிரண்ட்ஸ்,
இன்னிக்கு ஒரு எபிசொட் தான் அப்டேட் பண்ண முடிஞ்சுது பா… பேக்கப் எல்லாம் முடிஞ்சிடிச்சு. அப்பப்போ டைப் பண்ணிதான் போஸ்ட் பண்ண வேண்டியிருக்கு…. கமெண்ட்ஸ்கு இன்னும் ரிப்ளை பண்ணாம இருக்கேன். எப்பிசோடு டைப் பண்ணி முடிச்சுட்டு மதியம் பண்ணிட்றேன்… தினமும் கமெண்ட்ஸ் கொடுத்து தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கிட்டு இருக்க அத்தனை தோழிகளுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி… தொடர்ந்து உங்களோட சப்போர்ட் கொடுங்க…
மிக்க நன்றி தோழிகளே…!!!