Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 28

அத்தியாயம் – 28

பெற்றோர் கிளம்பிச் சென்ற பிறகு செய்வதற்கு எந்த வேலையும் இல்லாமல் அறையிலேயே அடைந்துக் கிடந்தாள் மதுரா. மதிய உணவிற்கு வேலைக்கார பெண் வந்து அழைத்தாள். உணவு மேஜையில் இராஜேஸ்வரியோடு பாரதியும் அமர்ந்திருதாள்.

“வா… வா… வந்து இப்படி உட்காரு. ஏன் ரூம்லேயே இருக்க? இது உன்னோட வீடு. ஃப்ரியா இரு” – புன்னகையுடன் கூறினாள் இராஜேஸ்வரி. பாரதி அவளை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

“ஓகே ஆண்ட்டி…” என்று மூத்தவளுக்கு பதிலளித்துவிட்டு, “ஹாய் பாரதி” என்று அவளிடம் தானாகவே பேச முயன்றாள். என்னதான் தாய் அவளிடமிருந்து ஒதுங்கியிருக்க சொன்னாலும், இவள் மனம் அவளிடம் நட்புறவாடவே விரும்பியது. சிறு வயதில் இருவரும் ஒன்றாக விளையாடியிருக்கிறார். அந்த நட்பும், பாசமும் மதுராவை உந்தியது. ஆனால் பாரதி அவளுடைய நட்பை விரும்பவில்லை என்பதை தெளிவாகக் காட்டினாள்.

‘ஹாய் பாரதி’ என்ற மதுராவின் குரல் அவள் காதில் விழவே இல்லை என்பது போல உணவிலேயே கவனமாக இருந்தாள்.

அவளுடைய உதாசீனம் மதுராவை முகத்தில் அறைந்தது. இராஜேஸ்வரிக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது. இரண்டு பக்கமும் பேச முடியாமல், “நீ உட்காரு… சாப்பிடு… இந்தா கூட்டு வச்சுக்கோ… இன்னும் கொஞ்சம் பொரியல் வச்சுக்கோ…” என்று மருமகளை கூடுதலாக கவனித்தாள். அவளிடம் நிறைய பேச்சு கொடுத்து அவளுடைய மனநிலையை மாற்ற முயன்றாள்.

வெறுப்புடன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பாரதி விறுவிறுவென்று சாப்பிட்டு முடித்துவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டாள். திலீப்பின் மீது அவளுக்கு இருந்த கோபம் அப்படியே மதுராவின் மீது திரும்பியிருந்தது.

உணவு உண்டபின் மதுரா மாடிக்கு செல்ல எத்தனித்த போது அவளை தடுத்து, சோபாவில் அமரவைத்து பேசிக் கொண்டிருந்தாள் இராஜேஸ்வரி. தனக்கும் தன் அண்ணனுக்கும் உள்ள நெருக்கத்தைப் பற்றி பேசினாள். மதுராவிற்கே தெரியாத அவளுடைய சிறுவயது குறும்புத்தனங்களை ரசனையோடு நினைவுப்படுத்தி கூறினாள். இடையிடையே தன் மகனைப் பற்றியும் எடுத்துவிட்டாள். மதுராவிற்கு நன்றாக பொழுது போனது. அவளோடு சேர்ந்து அமர்ந்திருப்பது… பேசிக் கொண்டிருப்பதெல்லாம் மனதிற்கு இதமாக இருந்தது. அதுவரை தன் தாயின் மதிப்பீட்டிலேயே இராஜேஸ்வரியை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு முதல் முறையாக வேறு கோணத்தில் பார்த்தாள்.

அவர்களுடைய சுவாரஸ்யமான பேச்சில் குறுக்கிட்டது தொலைபேசி அழைப்பு. அழைப்பை ஏற்றுக் பேசிய இராஜேஸ்வரி, ரிசீவரை மதுராவிடம் நீட்டினாள்.

“எனக்கா!” – வியப்புடன் கேட்டாள்.

“ஆமா…”- சிரித்த்துக் கொண்டே அவளிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் மூத்தவள்.

“ஹலோ….” – யாராக இருக்கக் கூடும் என்கிற யோசனையோடு பேசிய மதுரா பதிலுக்காக காத்திருந்தாள். சிறு இடைவேளைக்குப் பிறகு “என்ன பண்ணிட்டு இருக்க?” என்னும் காந்தக்குரல் அவளுக்குள் ஆழப்பாய்ந்தது. இனம்புரியாத உணர்வில் திகைத்துப் போனவளுக்கு பேச்சு வரவில்லை. மறுமுனையிலிருந்து பதிலேதும் வராததால் மீண்டும், “ஹலோ…” என்றான் தேவ்ராஜ்.

“ஆங்… இரு…இருக்கேன்”

“என்ன ஆச்சு?”

“ஒண்ணும் இல்ல”

“ம்ம்ம்… என்ன பண்ணிட்டு இருந்த?”

“சும்மா… ஆண்ட்டி கூட பேசிட்டு…”

“ஓ!” என்று சற்று யோசித்தவன், “ஃபீலிங் போர்ட்?” என்றான்.

“………..” – பதில் சொல்லவில்லை.

“ஓகே… ரெடியா இரு”

“எங்க?”

“சொன்னாதான் ரெடியாகுவியா?”

“இல்ல… அப்படியில்ல… ஆனா…” – இழுத்தாள்.

“முப்பது நிமிஷத்துல வீட்ல இருப்பேன். ஓகே?” – அவன் முடித்துவிட்டான்.

கையில் ரிசீவரை பிடித்தபடி விழித்துக் கொண்டு நின்றாள் மதுரா. எந்த இடத்திற்கு போகிறோம் என்று சொன்னால் அதற்கு தகுந்தாற் போல் தயாராகலாம். இப்படி எதுவுமே சொல்லாமல் ‘ரெடியாகு’ என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டானே! ஓரிரு நிமிடங்கள் யோசனையோடு நின்றுக் கொண்டிருந்தவள் நேரம் ஓடிக் கொண்டிருப்பதை உணர்ந்து மாடிக்கு ஓடினாள்.

வழக்கம் போல், எந்த உடையை அணிந்துகொள்வது என்பதில் பெரும் குழப்பம். நீண்ட நேர பகுப்பாய்விற்குப் பிறகு ஒரு கிறீம் நிற சல்வாரை தேர்வு செய்து அணிந்துக் கொண்டாள். தலைவாரி, எளிய ஒப்பனைகளை முடித்துக் கொண்டு அவள் கீழே வந்த போது அவனும் உள்ளே நுழைந்தான். அவனை பார்த்ததும் சட்டென்று சிறு வெட்கம் தோன்றியது அவளுக்குள். இந்த உணர்வெல்லாம் தனக்குள் எப்போது வந்தது என்பது அவளுக்கே ஆச்சர்யம்தான்.

அவள் முகத்தில் தோன்றிய வெட்கத்தையும் சிறு புன்னகையையும் வியப்புடன் பார்த்த தேவ்ராஜ், “குட்!” என்றான் மெச்சுதலாக. அவனை நிமிர்ந்து பார்த்த மதுராவின் பார்வையில் ‘ஏன்?’ என்ற கேள்வி இருந்தது.

“யு ஆர் லூக்கிங் குட்” என்றான் கண்களில் குறும்புடன்.

‘ஜஸ்ட் குட்?’ – மனதிற்குள் அவள் கேட்டுக் கொண்ட கேள்வியை படித்துவிட்டவன், “ஐ வாண்ட் மோர்…” என்றான்.

குபீரென்று சிவந்தது அவள் முகம். உடம்பிலுள்ள அத்தனை இரத்தமும் முகத்தில் வந்து பாய்ந்தது போன்றதொரு உணர்வு. “திஸ் இஸ் பர்ஃபெக்ட்” என்று கூறியவன், “வெயிட் பண்ணு.. .ஒரு நிமிஷத்துல வந்துட்றேன்” என்று கூறியபடியே மாடிப்படிகளில் பாய்ந்தான். அதுவரை சிந்தனையையே மறந்திருந்த அவள் மூளை, அவன் அங்கிருந்து சென்ற பிறகுதான், எதை ‘குட்’ என்று சொல்லிவிட்டு போகிறான் என்கிற ஆராச்சியில் இறங்கியது.

14 Comments

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Umamanoj says:

    தேவ் நீ நல்லவனா?கெட்டவனா?
    வன்மையும் மென்மையும் கலந்த கலவையா நீ?

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      தெரியில்லையேம்மா…. 😀

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    swma ud sis

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Ugina… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha khaliq says:

    Madhu konjam konjama than uravugalai purinjika aarambichiruka…..aha indha Dev kullayum oru romantic hero olinjirukan paren…..aval kannathu sivaipai good nu sollitu poran adhu puriyama bae nu muluchitu iruka Madhu

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you HAdija… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi says:

    Semma pathivu nithya … Barathi en innum ippadi irukka … Ava seitha thappu puriyalaiya innum avalukku …

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Lakshmi… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    தேவ்வை புரிந்துகொள்ள முடியவில்லையே,முன்பு பேசாமலே மதுராவை பயத்தில் படபடக்க வைத்தார்,இப்போது பேச்சிலேயே முகம்சிவக்க படபடக்க வைக்கின்றார்,எங்கே மதுராவின் பிறந்த வீட்டிற்கு போகின்றார்களா,பொண்டாட்டி சோக இருந்தது ஐயாவுக்கு தாங்க முடியல ,அதனால் அழைத்துப் போகப்போகின்றாரா.

    நன்றி

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      அவனாவது அவ்வளவு சீக்கிரம் மதுராவுக்காக வருத்தப்படறதாவது…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya says:

    Thanks for next update si. Super, Dave oru pureyatha puther.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Priya… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pons says:

    ஆராய்ச்சி பண்ணும்மா…பண்ணு…

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thanks ka… 🙂

You cannot copy content of this page