கனல்விழி காதல் – 29
10189
10
அத்தியாயம் – 29
மனைவியோடு தனிமையில் பேச விரும்பிய தேவ்ராஜ் அவளை ஒரு இத்தாலியன் ரெஸ்டாரண்டிற்கு அழைத்து வந்திருந்தான். மிதமான குளிரும், மெல்லிய வெளிச்சமும் நிறைந்ததிருந்த ரம்யமான அறையில், இஸ்டுமெண்டல் இசை இனிமையாய் இழைந்தது. பயமா வெட்கமா என்று புரியாத ஒரு சங்கட உணர்வுடன் அவள் அமர்ந்திருக்க, அவளை கண் இமைக்காமல் பார்த்தபடி எதிரில் அவன் அமர்ந்திருந்தான்.
“சார்… ஆர்டர் ப்ளீஸ்” – கார்லிக் பிரட் மற்றும் ஆலிவ் ஆயிலை கொண்டு வந்து டேபிளில் வைத்துவிட்டு ஆர்டர் கேட்டான் வெய்ட்டர்.
அவன் மதுராவை பார்த்தான். அவளுடைய விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்தது அந்த பார்வை. அவள் மெனுவை புரட்டிப்புரட்டிப் பார்த்தாள். இந்த உணவகத்திற்கு அவள் வந்ததில்லை. இங்கு எது நன்றாக இருக்கும் என்று அவளால் ஊகிக்கவும் முடியவில்லை.
“உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதையே சொல்லிடுங்க” என்றாள். அவள் சொன்ன பதில் உவப்பாக இருந்தாலும், ஏற்க முடியவில்லை அவனால். எனவே, “உனக்கு என்ன பிடிக்கும்?” என்றான்.
“எனக்கு எந்த ஐடியாவும் இல்ல. இங்க நான் புதுசு” என்றாள். அவளை ஆர்ச்சர்யமாக பார்த்துவிட்டு அவனே ஆர்டர் கொடுத்தான்.
சீஸ் பாஸ்தாவும் பொரித்த கோழியும் சுவையாகவே இருந்தது. கத்தியையும் குத்துக்கரண்டியையும் நாசுக்காக பயன்படுத்தும் மதுராவை பார்த்தபடியே அமர்ந்திருந்த தேவ்ராஜின் மனம் எதையோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தது. ‘என்ன ஆச்சு!’ – சிந்தனையுடன் மதுரா அவனைப் பார்த்தாள். இருவருடைய கண்களும் ஒன்றையென்று ஆழ்ந்து நோக்கிய தருணம், “என்கிட்ட ஏதாவது சொல்ல நினைக்கிறியா?” என்றான் தேவ்ராஜ்.
ஓரிரு நிமிடங்கள் யோசித்த மதுரா ‘இல்லை’ என்பது போல் தலையாட்டினாள். அவனுடைய பார்வை கூர்மையானது. “உனக்கும் கிஷோருக்கும் நடக்க இருந்த கல்யாணம் ஏன் நின்னுச்சுன்னு ஏதாவது ஐடியா இருக்கா?” என்றான்.
சட்டென்று பதட்டமானாள் மதுரா. ஏதோ ஒரு அவமான உணர்வு… தாழ்வு மனப்பான்மை அவளை தொற்றிக் கொண்டது. முகமும் உடலும் இறுகி போக அசையாமல் அமர்ந்திருந்தாள். அவளுடைய முகபாவம் அவனை கோபம் கொள்ளச் செய்தது. நின்றுபோன திருமணத்திற்காக அவள் வருந்துவதை அவன் சிறிதும் விரும்பவில்லை. வருத்தத்தைவிட அவமானம்தான் அவளை பாதிக்கிறது என்பதை புரிந்துகொள்ளாமல் உள்ளுக்குள் எறிந்தான்.
“என்னால உன்ன புரிஞ்சுக்க முடியுது. உன்னோட வருத்தம்… ஃபீலிங்ஸ் எல்லாம்… ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்…” என்று இழுத்தவன், “நீயும் ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கணும்” என்றான் இறுகிய குரலில். ‘என்ன சொல்லப் போகிறானோ!’ என்கிற பயத்துடன் அவனை நோக்கினாள் மதுரா.
“உன்ன மாதிரியேதான், எனக்கும் இந்த கல்யாணத்துல பெருசா இன்ட்ரெஸ்ட் இல்ல… ஆனா நடந்துடுச்சு… இனி நாம கணவன் மனைவி. இந்த வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகணும்… உனக்கு பிடிச்சாலும்… பிடிக்கலைன்னாலும்… புரியுதா?” என்றபடி அவளை தீவிரமாகப் பார்த்தான். அந்த பார்வை அவளை அச்சுறுத்தியது.
அவன் சொன்ன விஷயம் தவறானதல்ல. அவர்களிருவரும் கணவன் மனைவிதான். சேர்ந்து வாழதான் வேண்டும். அதை அவளும் ஒப்புக்கொள்கிறாள். ஆனால் அவன் சொன்ன விதம்! அவனுக்கும் பிடிக்காத திருமணமாம்… ஆனால் அவள் வாழ்ந்துதான் ஆக வேண்டுமாம். என்ன ஒரு அதிகாரம்! அவளுடைய உணர்வுகளுக்கு மதிப்பே இல்லையா! ஜடமென்று நினைத்தானா! – துக்கம் பொங்கியது.
அன்று காலை எழுந்ததிலிருந்து அவன் கொடுத்த அழகான தருணங்கள் அத்தனையையும் ஒரே நொடியில் அழித்துவிட்டான். கூட்டுக்குள் அடங்கும் நத்தை போல தனக்குள் ஒடுங்கி கொண்டாள் மதுரா. ஒரு வாரம் கழிந்தும் கூட அந்த இறுக்கத்திலிருந்து அவளால் வெளியே வர முடியவில்லை. ஆனால் அவன் விடவில்லை.
பிடிவாதமாக அவளை இழுத்துப்பிடித்தான். அவனுடைய விருப்பங்களை அவள் மீது திணித்தான். அவனுக்கு பிடித்த ஆடைகளை அணியவேண்டும். சத்தான உணவு என்று அவன் நினைப்பதை அவள் உன்ன வேண்டும். அழைக்கும் நேரத்தில் வெளியே செல்ல வேண்டும். அவன் வீட்டில் இருக்கும் போது அவனோடு நேரம் கழிக்க வேண்டும்… இதிலெல்லாம் மிகவும் கண்டிப்பாக இருந்தான்.
கூண்டுக்குள் அடைபட்டது போல் மூச்சு முட்டியது அவளுக்கு. இயல்பாகவே இருக்க முடியவில்லை. அன்றும் அப்படித்தான்… அவனுக்கு காபி கொடுக்க வந்தாள். டெரஸில் லாப்டாப்போடு முட்டி கொண்டிருந்த தேவ்ராஜ் அவளை நிமிர்ந்து பார்க்கக் கூட நேரமில்லாமல், “அப்படி வை…” என்று கூறிவிட்டு வேலையிலேயே கவனமாக இருந்தான்.
அவன் குறிப்பிட்டபடி டீப்பாயில் காபி கப்பை வைத்துவிட்டு திரும்பி நடந்த மதுராவை, “எங்க போற?” என்று தடுத்தான். குரல் மட்டும்தான் அவளிடம் உரையாடியதே தவிர கையும் கண்களும் லாப்டாப்பில்தான் பிஸியாக இருந்தன.
“கீழ…” – மெல்லிய குரலில் கூறினாள்.
“இப்படி வந்து உட்காரு…”
‘இவன்தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறானே! நம்மை எதற்காக இங்கே இருக்க சொல்கிறான்!’ – அவளுக்கு சந்தேகம் வந்தது. ‘சரி… ஏதாவது பேச வேண்டியிருக்கும். குத்தலாக எதுவும் பேசாமல் இருந்தால் சரி’ என்று எண்ணியபடி எதிரில் கிடந்த பிரம்பு நாற்காலியில் வந்து அமர்ந்தாள்.
மதுரா எதிர்பார்த்தபடி அவன் எந்த முக்கியமான விஷயத்தையும் பேசவில்லை. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் பேசவே இல்லை… அவ்வளவு ஏன்… அவளை நிமிர்ந்துக் கூட பார்க்கவில்லை. அவளுக்கு குழப்பமாக இருந்தது. ‘என்ன ஆச்சு இவனுக்கு!’ – ஓரிரு நிமிடங்கள் யோசித்தவள், “நீங்க பிஸியா இருக்கீங்க” என்றாள்.
“எஸ்… ஐ ஆம்…” – வேலையில் கவனமாகவே கூறினான்.
‘அப்புறம் எதுக்குடா என்னை இங்க உட்கார வச்சிருக்க’ என்று வேறு ஒரு பெண்ணாக இருந்தால் கேட்டிருப்பாள். இவள்தான் மதுராவாயிற்றே! எதுவும் கேட்காமல் அமைதியாகவே அமர்ந்திருந்தாள். நாள்முழுக்க அவன் முகத்தை பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்கலாம் என்று ஓரிருமுறை அவள் நினைத்தது உண்மைதான். அதற்காக நிஜமாகவே உட்கார வைத்துவிட்டானா! – சந்தேகத்துடன் அவனை குறுகுறுவென்று பார்த்தவள், “கீழ கொஞ்சம் வேலை இருக்கு…” என்று இழுத்தாள்.
“வேலையெல்லாம் பார்க்க வீட்ல நிறைய ஆளுங்க இருக்காங்களே!” – தூசு தட்டுவது போல் அவளுடைய சாக்குப்போக்கை தட்டிவிட்டான். இன்னும் சற்றுநேரம் காத்திருந்தவள், அதற்கு மேல் பொறுக்க முடியாமல், “நா இங்க சும்மாவேதான் உட்கார்ந்திருக்கேன். ஃபீலிங் போர்ட்… கீழ போறேன்…” என்றாள்.
“ஏதாவது பேசு… போரடிக்காது” – அதற்கும் ஒரு பதில் இருந்தது அவனிடம். ஆனால் பேசுவதற்கு அவளிடம் ஒன்றும் இல்லை. திருதிருவென்று விழித்தாள். அவன் எதுவும் பேசவில்லை என்றதும் அவனே ஆரம்பித்தான்.
“கல்யாணம் ஆயி ஒரு வாரம் ஆச்சு. எப்படி ஃபீல் பண்ணற?” – இப்போதுகூட அவன் பார்வை அவள் முகத்தை சந்திக்கவில்லை.
‘மூச்சு முட்டி போச்சு’ – எரிச்சலுடன் நினைத்துக் கொண்டாலும் வெளியே சொல்ல முடியாமல், “ம்ம்ம்… ஃபீலிங் குட்…” என்றாள்.
“ஜஸ்ட் குட்?” – சற்று மிரட்டுவது போலிருந்தது அவன் தொனி.
“இல்ல… நாட் ஜஸ்ட் குட்… அது… என்னன்னா… இட்ஸ் டூ குட்…” – தயங்கித்தயங்கிக் அவள் கூறியதிலிருந்தே அவள் எந்த அளவிற்கு இந்த வாழ்க்கையை விரும்புகிறாள் என்பது அவனுக்கு புரிந்துவிட்டது. பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டான்.
“ரியலி?” – நக்கலாகக் கேட்டான்.
“ம்ம்ம்” – எவ்வளவு பொய்தான் சொல்வது! இவனிடம் மாட்டிக்கொண்டு பொய் சொல்ல கற்றுக் கொண்டதுதான் மிச்சம். தனக்குள் நொந்துகொண்டாள்.
“என்னோட போன் எங்க இருக்கு பாரு” – இப்போதாவது இந்த இடத்திலிருந்து தப்பிக்க ஒரு வழி கிடைத்ததே என்று எண்ணி, அலைபேசியை தேடி அறைக்குள் சென்றாள். அது சொகுசாக மெத்தையில் கிடந்தது. எடுத்துவந்து அவனிடம் நீட்டினாள்.
“கல்யாணம் ஆகி ஒருவாரம் ஆச்சு. இன்னும் மனைவியோட போன் நம்பர் தெரியாம இருக்கேன். சேவ் பண்ணு அதுல” – அதட்டினான். மறு பேச்சின்றி தன்னுடைய அலைப்பேசி எண்ணை அவனுடைய போனில் சேமித்தாள்.
“பண்ணிட்டேன்” – ஆசிரியருக்கு பதில் சொல்லும் மாணவியை போல் பவ்யமாக பேசும் மனைவியை எரிச்சலுடன் நிமிர்ந்து பார்த்தான் தேவ்ராஜ். “என்னோட நம்பர் தெரியுமா உனக்கு?”
“இல்ல… தெரியாது…”
“அதையெல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கணும்னு தோணாது. நா என்ன சொல்றேனோ அதுக்கு மண்டையை ஆட்ட மட்டும்தான் தெரியும்” என்று வெடுவெடுத்துவிட்டு மீண்டும் லப்டோப்பிற்குள் தலையை நுழைத்துக் கொண்டான். தான் எவ்வளவுதான் ஒட்டியொட்டி வந்தாலும் அவள் எட்டியெட்டி விலகிச் செல்வது அவனை எரிச்சல்படுத்தியது. அந்த எரிச்சல் அவ்வப்போது கோபமாக வெடித்துவிடுகிறது.
அவனுடைய அலைபேசியிலிருந்து தனக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்து நம்பரை எடுத்துக் கொண்டவள், ‘திட்டாமல் ஒருநாளும் கழியாது உனக்கு… திட்டு வாங்காமல் எந்நாளும் கழியாது எனக்கு’ என்று எண்ணி விதியை நொந்துக் கொண்டாள்.
10 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
HAYO DAI YENDA PADUTHARAA AVALAIIIII
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Ugina… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi says:
ஹேய் லூசாடா நீ … அவ மறக்க நினைக்கும் விஷயத்தை நியாபக படுதிட்டு நீயே டென்ஷன் ஆகுற
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Hmmm… May be complex…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
தேவ்வுக்கு மதுராவை பயம் காட்டாவிட்டால் அந்த நாள் விடியாதோ.நானும் வெளியில் அழைத்துப்போகின்றார் என்றவுடன் மதுராவீட்டுக்குப்போகப்போகின்றனர் என்று நினைத்து ஏமாந்ததுதான் மிச்சம்.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
ஹா ஹா… மதுவை ஏமாற்றினானோ இல்லையோ… உங்களை ஏமாற்றிட்டான்… நன்றி தாட்சாயணி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Priya says:
Nan than frist. Very nice update. Mithu Dava parithu payaipaturatha vitu avana koinjam ethuithu pasu.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Priya… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha khaliq says:
கிஷோருடன் நிச்சயித்த திருமணத்தை இவன் விடமாட்டான் போல அதை கேட்டே அவளை வதைக்கிறான்…..தேவ் மனைவியின் அருகாமைக்கு ஆசைப்பட்டுதான் அவளை உடன் இருக்க சொல்றான் பட் அவளுக்கு போர் அடிக்கும்னு புரிஞ்சிக்காம அவள் மேல கோபப்படுறான்
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Hmmm… true… Thank you so much Hadija… 🙂