கனல்விழி காதல் – 32
10017
22
அத்தியாயம் – 32
பல முறை முயற்சித்தும் அவன் போனை எடுக்கவில்லை. மதுராவின் பதட்டம் அதிகமானது. தனியாக வந்து, “ப்ளீஸ் பிக் மை கால். வேர் ஆர் யு?’ என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு காத்திருந்தாள். பதில் வரவில்லை. அவள் கண்களில் கண்ணீர் கசிந்தது. மீண்டும் ஒருமுறை முயற்சி செய்தாள். அழைப்பொலி முழுவதுமாக அடித்து ஓய்ந்தது. வெறுப்புடன் கண்களை இறுக்கமாக மூடி திறந்தாள்.
‘எப்படியாவது தொடர்புகொள்ள வேண்டும். அவன் வந்தே ஆக வேண்டும்’ – பெற்றோரை ஏமாற்ற விரும்பாத மனம் அடித்துக் கொண்டது. என்ன செய்யலாம் என்று யோசித்தாள். அலுவலகத்திற்குத்தானே சென்றான்! என்று யோசித்தவள் ரஹீமிற்கு அழைத்துக் கேட்கலாம் என்று எண்ணினாள். ஆனால் அலைபேசி எண்? மாயாவிடம் இருக்குமே! உடனே மாயாவை தேடிவந்தாள்.
ரஹீமின் தொடர்பு எண்ணை கேட்ட மதுராவை ஏற இறங்க பார்த்தாள் மாயா. ஆனால் எதுவும் கேட்கவில்லை. “நோட் பண்ணிக்க…” என்று கூறி தன்னுடைய கைபேசியில் சேமித்து வைத்திருந்த அவனுடைய எண்ணை கொடுத்தாள். மறுகணமே அங்கிருந்து தனியாக வந்து ரஹீமிற்கு தொடர்பு கொண்டு தேவ்ராஜுடன் பேச வேண்டும் என்றாள். “இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை மேம். சார் வீட்லதானே இருக்கணும்” என்றான் குழப்பத்துடன்.
“இல்ல ஆபீஸ்தான் வந்திருக்கார். அவசர மீட்டிங்னு சொன்னாரே!”
“ஓகே மேம்…. நா செக் பண்ணிட்டு சொல்றேன்” என்று கூறி போனை அனைத்துவிட்டான். அடுத்த சில நிமிடங்களில் தேவ்ராஜிடமிருந்து அழைப்பு வந்தது.
அவசரமாக எடுத்து, “ஹ…” – “அறிவே இல்லையா உனக்கு?” – அவள் முடிப்பதற்குள் சீறினான். திடுக்கிட்டுப் போனாள் மதுரா. ‘என்னவாயிற்று!’ அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. வேறு யாரிடமோ பேசுவதாக நினைத்து பேசிவிட்டானா! குழப்பத்துடன், “நா மதுரா…” என்றாள்.
“ரஹீம்கிட்ட என்ன பேச்சு உனக்கு? அவனுக்கு எதுக்குடி போன் பண்ணின?” – காட்டமாகக் கேட்டான். ‘டீ-யா!’ – வெலவெலத்துப் போய்விட்டாள் மதுரா. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. இவ்வளவு சீற்றத்தை அவள் யாரிடமும் எதிர்கொண்டதில்லை. அதோடு, இது என்ன பேச்சு! தவறான அர்த்தத்தில் கேட்கிறானா! கடவுளே! மேல் மூச்சுவாங்கியது. நா வறண்டது.
“தேவ்! தேவ் என்ன ஆச்சு?” – நடுங்கும் தொனி அவளுடைய பதட்டத்தை எடுத்துக் கூறியது.
“எதுக்கு ரஹீமுக்கு போன் பண்ணினேன்னு கேட்டேன்” – அதட்டினான்.
“நீங்க… நீங்க… உங்களை ரீச் பண்ண முடியல…” – கோர்வையாக பேச முடியவில்லை.
“இன்னைக்கு சண்டே. அவன் லீவ்ல இருப்பான்னு தெரியாது? அப்படி என்ன அவசரம் உனக்கு” – தங்களுக்குள் இருக்க வேண்டிய விஷயத்தை மூன்றாம் மனிதனின் காதுக்கு கொண்டு சென்றுவிட்டாளே என்கிற ஆத்திரத்தில் வெடித்தான்.
“ஐம் சாரி தேவ். நீங்க போன் எடுக்கல. அதான் வேற வழியில்லாம நா ரஹீமுக்கு…”
“நா போன் எடுக்கலன்னா நீ வீட்டுக்குத்தான் கூப்பிட்டிருக்கணும்” – கண்டிப்புடன் கூறினான்.
“வீட்டுக்கா! வீட்லையா இருக்கீங்க?” – புரியாமல் கேட்டாள்.
“ஏய்… டோன்ட் ஆக்ட் லைக் எ இன்னசென்ட் ஓகே? இவ்வளவு நேரமா தட்டிக்கழிச்சுட்டு இருக்கேன். போன் ரிஸீவ் பண்ணல… ஆனா உனக்கு எதுவுமே புரியல இல்ல? என்னை முட்டாள்னு நெனச்சியா?” – கர்ஜித்தான்.
உண்மையில் இப்போதும் கூட அவளுக்கு எதுவும் புரியவில்லை. “என்ன சொல்லறீங்க?” என்றாள் அப்பாவியாக.
“மதுரா… நடிக்காதேன்னு சொன்னேன்” – இறுகிய குரலில் எச்சரித்தான்.
“தேவ் எனக்கு புரியல. ஆஃபீஸ்தானே போறேன்னு சொன்னீங்க? எதுக்கு வீட்டுக்கு போனீங்க? ஏன் இங்க வர மாட்டேங்கிறீங்க? ப்ளீஸ்… ஓப்பனா பேசுங்க”
“எனக்கு அங்க வர பிடிக்கல… போதுமா?”
“ஏன்?”
“பிடிக்கல… அவ்வளவுதான்…”
“முன்னாடியே சொல்லியிருக்க வேண்டியதுதானே! உங்களுக்காகத்தான் இங்க எல்லா ஏற்பாடும் பண்ணியிருக்காங்க”
“நா சொன்னேன். நீதான் கேட்கல…”
“என்ன சொன்னீங்க?” – புரியாமல் கேட்டாள்.
“கடமைக்காகத்தான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன். கடமைக்காகத்தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்னு சொன்னேன். நீ கேட்கல… அதிகமா ஆசைப்பட்ட. என்னை நல்லவன்னு நம்பறதா நாடகமாடினே. அதான்… நா எவ்வ்வ்வளவு நல்லவன்னு காட்டினேன். ஆர் யு ஹாப்பி?” – நக்கலாகக் கேட்டான்.
“தேவ்!!” – குரல் மட்டும் அல்ல… அவளுடைய மனமும் சுக்கு நூறாக உடைந்துவிட்டது. கண்களில் கண்ணீர் பெருகியது. அவனுக்குள் இவ்வளவு கபடமிருக்கும் என்று அவளால் நம்பவே முடியவில்லை. திகைத்துப் போய் நின்றாள்.
“உனக்கு பதினஞ்சு நிமிஷம் டைம் கொடுக்கறேன். அதுக்குள்ள வீட்ல இருக்கணும்… இல்ல… நா இன்னும் எவ்வளவு நல்லவன்னு உனக்கு காட்ட வேண்டியிருக்கும். புரியுதா டார்லிங்…?” எள்ளல் தெறித்தது அவன் பேச்சில்.
“என்னோட அப்பாம்மா பேஷண்ட்ஸ். நீங்க அவங்கள ரொம்ப காயப்படுத்தீட்டிங்க”
“அவங்க அதுக்கு தகுதியானவங்கதான்…” – அலட்சியமாகக் கூறினான். துடித்துப்போனாள் மதுரா. அவனிடம் பேசவும் பிடிக்கவில்லை… அவன் குரலை கேட்கவும் பிடிக்கவில்லை. பட்டென்று அழைப்பை துண்டித்தாள். ‘அவனுடைய பெற்றோரை இப்படி பேசினால் பொறுத்துக்கொள்வானா!’ – மனம் கொதித்தது. கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்தது.
“என்ன ஆச்சு? பேசிட்டியா?” என்றபடி மகளை தேடிவந்த பிரபாவதி அவளுடைய கண்ணீரை கண்டதும் பதறிவிட்டாள்.
“மது! என்ன…! ஏன் அழற?” – தாயைக் கண்டதும் கட்டிப்பிடித்துக் கொண்டாள். உடல் அழுகையில் குலுங்கியது.
“என்னம்மா… என்னன்னு சொல்லு முதல்ல…” பிரபாவதியின் பதட்டம் அதிகமானது.
“சாரி ம்மா… சாரி… வெரி சாரி…”
“என்ன பிரச்சனை? எதுக்கு சாரி… தேவ் எங்க? வாய தெறந்து பேசு மது” – என்னவோ ஏதோ என்று பயந்துபோய் மகளை அதட்டினாள்.
“தேவ்… தேவ் வரலம்மா” – குற்றஉணர்வுடன் கூறினாள்
‘உஃப்’ – நிம்மதி பெருமூச்சுடன் மகளை தன்னிடமிருந்து பிரித்து அவள் முகத்தை பார்த்து, “இதுக்குதான் இப்படி அழுதியா?” என்றாள். அவள் மேலும் கீழும் தலையை அசைத்தாள்.
“இது பெரிய விஷயமா? இதுக்கு போயி இப்படி அழறதா?” என்றாள். மதுரா மூக்கை உறிஞ்சியபடி நின்றாள்.
“அழுகையை நிறுத்து முதல்ல” என்று மகளின் கண்களை துடைத்துவிட்டவள், “என்ன பிரச்சனை? ஏன் தேவ் வரல?” என்றாள்.
“ஆபீஸ்… ஆபீஸ்ல ஏதோ பிரச்சனை…” – உள்ளுக்குள் அவ்வளவு கோபமிருந்தாலும் தாயிடம் கூட அவனை வீட்டுக் கொடுக்க முடியவில்லை மதுராவிற்கு.
“அதுக்கு ஏன் நீ மூட் ஆஃபாயிட்ட. பிசினஸ்ல ஆயிரம் பிரச்சனை வரும். அதையெல்லாம் நீ மனசுல ஏத்திக்காத. ஃப்ரியா இரு” என்று மகளுக்கு தைரியம் சொன்னாள். அவளும் அதைத்தான் நம்பினாள். கோபக்காரன் என்கிற அளவில்தான் பிரபாவதிக்கு அவன் மீது வெறுப்பே தவிர, இந்த அளவிற்கு நம்ப வைத்து கழுத்தறுப்பான் என்றெல்லாம் அவள் நினைத்துக்கூட பார்த்ததில்லை.
“ரியலி சாரி ம்மா…” – மனம் கேட்கவே இல்லை அவளுக்கு. எவ்வளவு மெனக்கெட்டாள் இந்த பெண்மணி. இப்படி செய்துவிட்டானே! – கணவன் மீது ஆத்திரமாக வந்தது.
“இட்ஸ் ஓகே மது… நீ இருக்கியே. அதுவே போதும்… வா… சேர்ந்து சாப்பிடலாம்”
மகளை அழைத்துக் கொண்டு கூடத்திற்கு வந்து கணவனிடம் எடுத்துக் கூறி அனைவரையும் உணவருத்த அழைத்தாள். அனைவருக்குமே உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும், அவனுடைய சூழ்நிலையையும் மதுராவின் மனதையும் நினைவில்கொண்டு யாரும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.
‘பதினைந்து நிமிடத்தில் வீட்டில் இருக்க வேண்டும்’ என்கிற தேவ்ராஜின் மிரட்டல் மதுராவின் மனதில் உருத்திக் கொண்டேதான் இருந்தது. உணவு தொண்டைக்குழிக்குள் இறங்க மறுத்தது. ஆனால் பெற்றோருக்காக சாப்பிட்டே ஆக வேண்டும் என்கிற பிடிவாதத்துடன் கடைசிவரை, பொறுமையாக அமர்ந்து உண்டு முடித்துவிட்டே எழுந்தாள். பெற்றோரின் அன்புக்கு முன் அவன் மீதான பயம் இரண்டாம் பட்சமாகிவிட்டது.
22 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Umamanoj says:
பயபுள்ள. .இப்படி ஏமாத்திட்டானே!என்னையும் சேர்த்து 😔..
சரியில்லையே. .😕
இவன ஏதாவது பெரிசா செய்யணுமே😤
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
உமா… நீங்களுமா! உங்களை விபரமானவங்கன்னுல நான் நெனச்சேன்…
பெருசா நீங்கலாம் செய்ய வேண்டியதில்ல… அவனே தனக்கு தானே செஞ்சுக்குவான்… 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
நானும் மதுராவை மாதிரி நம்பு ஏமாந்ததுதான் மிச்சம்,ஏன் இப்படி மாமன் குடும்பத்தை அவமதிக்கின்றார்,பாரதிக்காகவா அல்லது தனக்காகவா,மதுரா இன்னும் சாப்பிடவில்லை என்று தெரியும்தானே,சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வர தாமதமாகுமென்று புரியும்தானே ,அதென்ன 15 நிமிடத்திற்குள் வா என்று சொல்வது,மதுராவேறு சாப்பிட்டுவிட்டுத்தான் கிளம்பப் போகின்றார்,இந்த தேவ் மதுரா தாமதம் ஆனதிற்கும் ரஹீமிற்கு அழைத்து பேசியதிற்காகவும் இன்னும் என்ன செய்ய காத்திருக்கின்றாரோ தெரியவில்லை,மதுராவை ஏன் தேவ் நம்ப மாட்டேன்கிறார்,உண்மையிலே மதுராவுக்கு தேவ்வின் செயல்கள் புரியவில்லைத்தானே.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
தேவ்ராஜின் பெரிய மைனஸ் அவனோட கோபம்தான். கோவத்துல எடைக்குமடக்கா எதையாவது செஞ்சுடுவான். மதுரா அவனை டாக்கல் பண்ண கத்துக்கற வரைக்கும் கஷ்ட்டம்தான்…
நன்றி தோழி… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
சுதா ரவி says:
இவனை என்ன சொல்றதுன்னு தெரியல…அப்பாவிக்கும் அடப்பாவிக்குமா வித்தியாசம் தெரியாது? இவ்வளவு பெரிய பிசினஸ் மகநெட் தொழிலில் எத்தனயோ பேரை பார்திருப்பவனுக்கு அவள் நடிக்கிறாளா? இல்லை உண்மையாதான் பேசுறாளான்னு கண்டு பிடிக்கத் தெரியலையா? செம கடுப்பாகுது ..இதுகெல்லாம் சேர்த்து வச்சு நல்லா படனும்…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
ஹாய் சுதா ரவி,
தேவ் மேல பயங்கர கோவம் போல… இப்பவே இப்படின்னா இன்னும் போகப் போக என்ன பண்ணுவீங்க?
மிக்க நன்றி தோழி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sasi says:
Nice going story… ஆனா மதுரா பாவம். இந்த தேவ்க்கு இறுக்கு…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
மிக்க நன்றி சசி… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sumi says:
This is too much Dev… Madhura nee apaviya irukatha ma… Be bold… Waiting for the next episode… Nice flow Sissy….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Hi Sumi,
Welcome to Sahaptham… Thanks for sharing your comment with us… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
அடப் பாவி தேவ்… 15 நிமிஷத்துல போகலன்னா என்ன பண்ணுவானோ!?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
என்ன பண்ணுவான்!!! அடுத்த எபி ல… படிச்சுட்டு என்னை திட்டாம இருந்தா சரி…
தேவ் பண்ணற எதுக்கும் கம்பெனி பொறுப்பாகாது…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
என்னது கம்பனி பொறுப்பாகாதா,அப்போ நாங்க யாரிடம் நீதி கேட்பது
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha khaliq says:
நினைசேன்….பாவி எப்படி நம்பவைத்து ஏமாத்திட்டான்
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
தேவ் இல்ல… அப்படித்தான் இருப்பான்… கன்னிங்…
நல்ல குணம் இல்லதான்… மாறுவான்… ரொம்ப லேட்டா… 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
hooooo pawm madhu nee
innumaaaaa nee nambara avann nallavaannuuuuuu
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
aamaam Ugina… Nambaraa.. enna pannalaam avalai.. 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pons says:
Very bad.
Tipical indian men.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Yes… He is…
MAdhuraavai purinjukka sollunga… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi says:
Enna ithu ippadi panran … Pidikalana vara mudiyathunu solli itukkanum .. Ippadiya nambavachu emathuvaga … Po da daiii
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
அப்படி சொல்லிட்டா அவன் நல்லவன்… 😀
போடா டேய் மடையா!!! //மௌன ராகம்//
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi says:
Haha