Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Kanalvizhi kaadhal 34

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 34

அத்தியாயம் – 34

“மதுரா… எழுந்திரு… மதுரா… நீ தூங்கலான்னு எனக்கு தெரியும். எழுந்திரிச்சு கொஞ்சம் சாப்பிட்டுட்டு படு…” – அவனுடைய அழைப்பை புறக்கணித்துவிட்டு அழுத்தமாக படுத்திருந்தாள் மதுரா.

 

எவ்வளவு முயன்றும் அவளை அசைக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் வலுக்கட்டாயமாக அவளை தோள்களைப் பிடித்து எழுப்பி அமரவைத்தான். வலி பாதி.. எரிச்சல் பாதியுமாக முகத்தை சுளித்தாள் மதுரா. தன் மீது படிந்திருந்த அவனுடைய கைகளை தட்டிவிட்டவள், முழங்கால்களை கட்டி கொண்டு குறுகி அமர்ந்தாள்.

 

உதாசீனமும் அலட்சியமும் ஏழு ஜென்ம எதிரி அவனுக்கு. சற்று நேரத்திற்கு முன்புதான் அனுபவப்பட்டாள். அப்படியும் புத்திவரவில்லை. அவன் தாடை இறுகியது.

 

“இந்தா… இதை சாப்பிடு…” – தட்டை அவளிடம் நீட்டினான்.

 

“வேண்டாம்”

 

“ஏன்?”

 

“பிடிக்கல”

 

“என்ன பிடிக்கல?”

“எதுவுமே பிடிக்கல…” – சக்தியெல்லாம் வற்றிப்போனவளாக சோர்வுடன் முணுமுணுத்தாள். அவனுக்கு வலித்தது.

 

“சரி… இந்த பாலையாவது குடி” என்றான்.

 

“வேண்டாம்”

 

“பிடிவாதம் பிடிக்காத… குடி” – லேசாக அதட்டினான். அவனை முறைத்துப் பார்த்தவள் மீண்டும் படுத்து கொண்டாள். அதற்குமேல் அவளை கட்டாயப்படுத்த முடியவில்லை.

 

கால்களையும் கைகளையும் குறுக்கி… ஏதோ பாதுகாப்பில்லாத குழந்தை போல் படுத்திருப்பவளை கண்களில் கனிவுடன் பார்த்துக் கொண்டே நின்றான். சற்று நேரத்திலேயே சீராக வெளிப்பட்ட மூச்சுக்காற்று அவள் உறங்கிவிட்டாள் என்பதை எடுத்துக் கூறியது. போர்வையை அவள் மேல் இழுத்து போர்த்திவிட்டு, விளக்கை அணைத்துவிட்டு கட்டிலின் மறுபக்கம் வந்து படுத்தான்.

 

ஒரு மணிநேரம் கூட கழிந்திருக்காது… மதுராவிடமிருந்து முனகல் வெளிப்பட்டது. ஏதேதோ புலம்பினாள். எதுவும் கோர்வையாக இல்லை. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. போர்வையை விலக்கிவிட்டு எழுந்து அமர்ந்தான். அவளுடைய புலம்பலில் பதட்டமும் பயமுமிருந்தது.

 

“மதுரா… மதுரா…” – அவளுடைய கன்னத்தை தொட்டு எழுப்பியவன் திடுக்கிட்டான். காய்ச்சல் கொளுத்தியது. ‘காட்!’ – தனது முட்டாள்தனத்தை எண்ணி தலையிலடித்துக் கொண்டு எழுந்துச் சென்று, மாத்திரையும் நீரும் கொண்டுவந்து, அவளை எழுப்பி விழுங்க செய்தான். காய்ச்சல் வேகத்தில், யார் எழுப்புகிறார்கள்… எதை கொடுக்கிறார்கள் என்றெல்லாம் அவள் உணரவில்லை. வாயில் வைத்த எதையோ விழுங்கிவிட்டு மீண்டும் படுத்து கொண்டாள். புலம்பல் குறைந்து உறக்கம் அவளை தழுவியது. அதுவரை அமர்ந்த நிலையிலேயே அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் மீண்டும் தன் இடத்திற்கு வந்து படுத்து கண்களை மூடினான்.

 

தேவ்ராஜ் மறுநாள் காலை எழுந்து குளித்து முடித்து அலுவலகத்திற்கு தயாராகி கீழே வரும்வரை மதுரா ஆழ்ந்த உறக்கத்தில்தான் இருந்தாள். உணவுக்கூடத்திற்கு தனியாக வரும் மகனைப் பார்த்து, “மதுரா எங்க?” என்றாள் தாய்.

 

“தூங்கறா…” – தனக்கான இருக்கையில் அமர்ந்தபடிக் கூறினான்.

 

“தூங்கறாளா! இவ்வளவு நேரமா! என்ன ஆச்சு?” – சட்டென்று தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தாள். அவள் மாடிக்கு சென்று மதுராவை பார்க்க உத்தேசிக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்ட தேவ்ராஜ், “ம்மா… அவளுக்கு ஒண்ணும் இல்ல உட்காருங்க. லேசா காச்சல்… கொஞ்சம் டயர்டா இருக்கா அவ்வளவுதான். தூங்கட்டும்” என்றான் முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல்.

 

“ஓ! சரி… சரி…” – சட்டென்று மீண்டும் சேரில் அமர்ந்துக் கொண்டாள் இராஜேஸ்வரி. மகன் மருமகள் மீது காட்டும் அக்கறை அவள் முகத்தில் புன்சிரிப்பை கொண்டுவந்தது.

 

உணவை முடித்துக் `கொண்டு அவன் கூடத்திற்கு வந்த போது, வழக்கம் போல் கையில் கோப்புடன் தயாராக நின்றான் ரஹீம் கான்.

 

“குட் மார்னிங் சார்” – முதலாளியை பார்த்ததும் வணங்கினான்.

 

“மார்னிங்…” என்றபடியே வெளிப்புறம் நோக்கி நடந்தான். அவனை தொடர்ந்து வந்தபடியே அன்றைய வேலைகளுக்கான கால அட்டவணையை சொல்லிக் கொண்டிருந்தான் ரஹீம்.

 

காரில் ஏறுவதற்கு முன் தயங்கி நின்று கையால் சைகை காட்டி, ரஹீமை நிறுத்தும்படி கூறியவன், சத்தமாக வேலைக்கார பெண்ணின் பெயரை சொல்லி அழைத்தான். அடுத்த சில நிமிடங்களில் அங்கே வந்து நின்றாள் ரெஜினா.

 

*******************

 

கிழக்கிலிருந்து புறப்பட்ட சூரியன் உச்சியை நோக்கி மெல்ல நகர்ந்துக் கொண்டிருந்த போதுதான் மதுரா கண்விழித்தாள். பக்கத்தில் மெத்தை காலியாக இருந்தது. விண்ணென்று தெறிக்கும் தலையை அழுத்திவிட்டபடி, குளியலறை பக்கம் பார்வையை திருப்பினாள். உள்ளே ஆள் இருப்பது போல் தோன்றவில்லை. பார்வையை உயர்த்தி சுவர்கடிகாரத்தை பார்த்தாள் நேரம் ஒன்பது என்று காட்டியது. ‘இவ்வளவு நேரமாயிடிச்சா!’ – ஆயாசத்துடன் எழுந்தாள். தடதடவென்று வந்தது. உடம்பெல்லாம் வலித்தது. கதகதவென்றிருந்தது. மிகவும் சோர்வாக உணர்ந்தாள். மெல்ல நடந்து குளியலறைக்குச் சென்றாள். அவள் மீண்டும் வெளியே வரும் பொழுது கையில் ட்ரேயுடன் அறைக்குள் நுழைந்தாள் ரெஜினா.

 

“மேம்… ஜூஸ்” – மதுராவிடம் நீட்டினாள்.

 

“ஜூஸ்! இல்ல…. எனக்கு இப்போ ஜூஸ் வேண்டாம்…” – தலைவலிக்கு சூடாக காபியோ அல்லது டீயோ குடித்தால் நன்றாக இருக்கும் என்று பார்த்தால், இவள் ஏன் கையில் ஜூஸ் டம்ளரோடு வந்து நிற்கிறாள்! – மெத்தையில் வந்து அமர்ந்தாள்.

 

“மேம்… இந்த மாத்திரையும் ஜூஸும் நீங்க இப்போ சாப்பிடணும்” – ரெஜினா மீண்டும் ட்ரேயை அவள் முன் கொண்டுவந்து நீட்டினாள். அப்போதுதான் கவனித்தாள், ட்ரேயில் ஜூஸ் கிலாஸோடு, சிறு கிண்ணத்தில் ஒரு மாத்திரையும் இருந்தது. இது என்ன அநியாயம்! அவள் என்ன சிறையிலா இருக்கிறாள். என்ன சாப்பிட வேண்டும் எப்போது சாப்பிட வேண்டும் என்றெல்லாம் ஆடர் போடுவதற்கு! முணுக்கென்று நுனி மூக்குவரை கோபம் வந்தது.

 

“என்ன மாத்திரை இது! யார் கொடுத்தது?” – எரிச்சலுடன் கேட்டாள். அவளுக்கு தெரியும்… இது போன்ற எல்லை மீறிய செயல்களை செய்வதற்கு அவனைத்தவிர வேறு யாரால் முடியும்.

 

“காய்ச்சல் மாத்திரை மேம். சார் கொடுக்க சொன்னாங்க…”

 

‘அடடா! எவ்வளவு அக்கறை!’ – இகழ்ச்சியாக நினைத்துக் கொண்டாள். நேற்று இரவு, தான் காச்சலில் புலம்பியது… அவன் மாத்திரை கொடுத்து உறங்கவைத்தது எதுவும் அவள் நினைவில் இல்லை. மதுரா எந்த பதிலும் சொல்லாமல் சிந்தனையில் அமர்ந்திருந்ததால், “மேம் ப்ளீஸ்… நீங்க லிக்யூட் நிறைய எடுத்துக்கணுமாம். இது சாரோட ஆடர்” என்றாள்.

 

“கடவுளே!” – தலையை பிடித்துக் கொண்டாள் மதுரா. ‘ஆடர் போடுவதற்கு இவள் என்ன அவனுடைய அடிமையா… அல்லது செல்ல பிராணியா?’ – முகம் சிவந்தாள்.

 

கணவன் மனைவிக்கு இடையில் மாட்டியவர்களின் கதி மத்தளம் தான். இரு பக்கமும் அடிவாங்கியாக வேண்டும். மாட்டிக்கொண்டோமே! என்று விதியை நொந்துகொண்டு நின்றாள் ரெஜினா.

 

“தலை வலிக்குது. ஒரு கப் காபி கொண்டு வாங்க” – கோபத்தை காட்டுவதற்குக் கூட தெம்பில்லை அவளிடம்.

 

“ஓகே மேம்…” – உடனடியாக அங்கிருந்து சென்றவள், சில நிமிடங்களிலேயே காலை உணவோடு சிறு பிளாஸ்க்கில் காபியையும் சேர்த்து எடுத்துக் கொண்டு வந்தாள்.

 

“என்ன இது! காபி மட்டும்தானே கேட்டேன்!”

 

“டைம் ஆயிடிச்சு மேம். நீங்க டிபன் சாப்பிட்டு மாத்திரை எடுத்துக்கிட்டு அதுக்கு பிறகு காபி குடிக்கணுமாம்… சாரோட ஆர்டர்” – உணவு நிறைந்த தட்டை அவளிடம் நீட்டினாள்.

 

‘ஓ காட்! ஹௌ இஸ் திஸ் பாஸிபிள்! ஹி இஸ் சோ கிரேஸி…’ – நம்பமுடியாத பார்வையை ரெஜினாவிடம் வீசினாள். இது என்னடா வம்பாக போயிற்றே என்று எண்ணி அவள் தலை குனிந்துக் கொண்டாள்.

 

“உங்க சார் இப்போ எங்க?”

 

“ஆபிஸ்ல”

 

“ஆபீஸ்ல இருக்கவர் உங்களுக்கு எப்படி ஆர்டர் போட்டார்!”

 

“போன்ல…” – பெருமூச்சுவிட்டாள் மதுரா.

 

“சரி… நீங்க போயி உங்க வேலையை பாருங்க. நா சாப்பிட்டுக்கறேன்” – தட்டை கையில் வாங்கியபடி கூறினாள்.

 

“இல்ல மேம்… சார் வர்றவரைக்கும் உங்களை கவனிச்சுக்கறதுதான் என்னோட வேலை. நீங்க சாப்பிடுங்க. அதுவரைக்கும் இப்படி ஓரமா நான் வெயிட் பண்ணறேன்” – சற்று தள்ளி நின்றுக் கொண்டாள்.

 

‘கண்டிப்பா இது ஜெயில் தான்! மோசமான ஜெயில்…’ – மூச்சு முட்டியது மதுராவிற்கு.

 

வேறு வழியில்லாமல் சிறிது உண்டுவிட்டு மாத்திரையை போட்டுக்கொண்டாள். அவளுக்கு அது தேவையாகவும் இருந்தது. பிறகு மிகவும் தேவைப்பட்ட காபியை அருந்தினாள். ரெஜினா, உணவு கொண்டு வந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு கீழே சென்றதும், எழுந்து டெரஸிற்கு வந்தாள் மதுரா. பெற்றோரை பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவர்களிடம் பேசலாம் என்றெண்ணி அலைபேசியில் அழைத்துப் பேசினாள்.

 

பிறகு சற்று நேரம் உறங்கினாள். பதினோரு மணிக்கு சூப்போடு வந்து நின்றாள் ரெஜினா. விவாதம் பண்ண விரும்பாமல் வாங்கி குடித்துக் கொண்டாள். பிறகு சற்றுநேரம் மேகசீனை புரட்டினாள். இடையில் ஒருமுறை இராஜேஸ்வரி வந்து பார்த்து விசாரித்துவிட்டுச் சென்றாள். அதற்குள் மதிய உணவுநேரம் நெருங்கிவிட, மணியடித்தது போல் மீண்டும் உணவு ட்ரேயுடன் வந்துவிட்டாள் ரெஜினா.

 

“ப்ச்… ஐம் ஓகே… கீழ வந்து சாப்பிட்டுக்கறேன். ஏன் நீங்க மேல எடுத்துட்டு வந்துட்டிருக்கீங்க?” – எவ்வளவு முயன்றும் எரிச்சலை மறைக்க முடியவில்லை.

 

“சாரி மேம்… சாரோட ஆர்டர்” – தட்டில் உணவை பரிமாறியபடி கூறினாள்.

 

‘சாப்பிடறீங்களான்னு கேட்க கூட மாட்டாளா! என்ன பெண் இவள்!’ – மானசீகமாக தலையிலடித்துக் கொண்டாள். அவளிடம் விவாதம் செய்யவும் முடியாது. மீறி செய்தால் சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லி கழுத்தறுப்பாள். அதற்கு அவள் கொடுப்பதை உண்டுவிட்டு அவளை இங்கிருந்து அனுப்பிவிடுவதே மேலானது என்று எண்ணி, குறைவாக பரிமாற்ற சொல்லி, நானும் சாப்பிட்டேன் என்று வேலையை முடித்தாள்.

 




8 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Umamanoj says:

    ரொம்ப பாவம் பா மது..
    ஏன் நித்யா இப்படி பாடு பட வைக்கிறீங்க. .


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    பணிப்பெண்ணை விட்டு தன்மனைவியை நன்றாகத்தான் கவனிக்கின்றார் தேவ் ,அப்படியே உச்சி குளிர்ந்து போகின்றது எனக்கு,டே வில்லா. மனசையும் உடம்பையும் காயப்படுத்திவிட்டு உடம்பிற்கு மட்டும் மருந்தா,அப்போ மனசிற்கு என்ன மருந்து,முட்டாள் செய்தது தப்பென்று புரிகின்றதல்லவா மன்னிப்பு கேட்டால் குறைந்தா போய்விடும்,அத்தோடு தொலைபேசியில் அழைத்து ஆறுதலாக இரண்டு வார்த்தை பேசலாம்தானே,வேலைக்காரியிடம் பேசத்தெரிகின்றது பெண்டாட்டியிடம் பேச முடியாத,இதற்கெல்லாம் அனுபவிப்பார்.

    நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pons says:

    காயப்படுத்தி விட்டு…மனதை காயப்படுத்தி விட்டு…உடம்புக்கு மருந்து தருகிறான். அவனுக்கு அது போதுமே.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    அடப் பாவத்த…. என்னா அக்கறை


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi says:

    Ithu pasama illa adakku muraiya .. Illa kurra unarchiya … Ethuva irunthalum 😈


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha khaliq says:

    செய்ற கொடுமையெல்லாம் செய்துட்டு என்ன அக்கறை வேண்டிக்கிடக்கு அக்கறை


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sasi says:

    OMG.. poor mathura.. Dev eppo purunjukka Pooran..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha khaliq says:

    Seira kodumaiyellam senjuthu akkarai enna vendiruku akkarai😏

You cannot copy content of this page