Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல்

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 35

அத்தியாயம் – 35

எப்போதும் மாலை ஆறுமணிக்கு வீட்டிற்கு வருகிறவன் இன்று நான்கு மணிக்கெல்லாம் வந்துவிட்டான். அவன் அறைக்குள் நுழையும் அரவரம் கேட்டும், சுவற்றில் தொங்கி கொண்டிருந்த LED யில் கவனமாக இருப்பது போல் கண்டுகொள்ளாமல் இருந்தாள் மதுரா.

“ஃபீலிங் பெட்டர்?” – கையிலிருந்த கோட்டை கோச்சில் போட்டுவிட்டு, டையை தளர்த்தி கழட்டியபடி கேட்டான். டிவியிலிருந்து நகரவில்லை அவள் பார்வை.

“ஆர் யு ஓகே?” – மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொண்டே அருகில் வந்து நெற்றியை தொட்டுப் பார்த்தான். அவள் இறுகி போய் அமர்ந்திருந்தாள். அவனை பார்க்க பிடிக்கவில்லை… பேச பிடிக்கவில்லை.

“ஏதாவது… பெயின்…” – அவன் முடிப்பதற்குள் சட்டென்று அவன் பக்கம் திரும்பி உக்கிரமாக முறைத்தாள். செவ்விதழ்கள் துடித்தன. கண்ணீர் குளம் காட்டியது. என்னவோ போல் ஆகிவிட்டது அவனுக்கு. அவள் பார்வையில் தெரிந்த வலியை அவன் தனக்குள் உணர்ந்தான். அவளுடைய வேதனையையெல்லாம் துடைத்துத் தனதாக்கிக் கொள்ளவேண்டும் போலிருந்தது. இமைக்காமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘ஐம் சாரி… ரியலி சாரி…’ – மனதார சொன்னான். ஆனால் மனதிற்குள் மட்டுமே சொன்னான்.

மதுரா தேவ்ராஜிடமிருந்து விலகியிருக்கவே விரும்பினாள். அவனிடம் நெருங்கவே அச்சமாக இருந்தது. அவன் நெருங்கி வந்தாலும் வெறுப்பாக இருந்தது. அவன் பக்கம் லேசாக சாய்ந்த மனதைதான், நேற்று சற்று நேரத்தில் ஒடித்து எறிந்துவிட்டானே! பிறகு எப்படி அவனோடு ஒன்றமுடியும்? அவன் உடைமாற்றும் அறைக்குச் சென்றதும் இவள் எழுந்து கீழே வந்துவிட்டாள். நல்லவேளை கூடத்தில் பாரதி இல்லை. டிவியை ஓடவிட்டுவிட்டு அமர்ந்திருந்தாள். கவனம் முழுக்க அவன் என்ன செய்து கொண்டிருப்பான் என்கிற சிந்தனையிலேயேதான் இருந்தது. சற்று நேரத்திலேயே, சோர்ந்திருந்த உடல் படுக்க வேண்டும் என்று கெஞ்சியது. மேலே சென்றால் அவன் இருப்பானே என்கிற அச்சத்தில் சிரமத்துடன் அமர்ந்திருந்தாள்.

உடைமாற்றிவிட்டு வெளியே வந்த தேவ்ராஜ் மதுராவை காணாமல் அறையிலிருந்து வெளியே வந்து ஹாலில் எட்டிப் பார்த்தான். சோபாவில் அமர்ந்திருந்தாள். கையில் கப் இருந்தது. விறுவிறுவென்று கீழே இறங்கிச் சென்று, “என்ன சாப்பிடற?” என்று கேட்டபடி அவளுக்கருகில் ஒட்டி அமர்ந்துக் கொண்டான்.

திடுக்கிட்டுப் போன மதுரா விலகி அமர்வதற்குள் அவள் தோளை சுற்றி கையைப் போட்டுக் கொண்டு, “என்ன ப்ரோக்ராம் இது?” என்று அவளை நகரவிடாமல் தடுத்தான்.

“ப்ளீஸ்…” – அவன் பக்கம் பார்வையை திருப்பாமல் மெல்ல கூறினாள்.

“உன்கிட்ட ரெண்டு கேள்வி கேட்டேன். ரெண்டுக்கும் பதில் சொல்லாம, எதுக்கு இந்த ப்ளீஸ்” – சூழ்நிலையை இலகுவாக்க முயன்றான்.

தன் தோளை சுற்றி பிடித்திருந்த அவன் கையை எடுத்துவிட முயன்றபடி, “இட்ஸ் ஹர்ட்டிங்…” என்றாள். அதிர்ந்து போய் சட்டென்று பிடியை தளர்த்தினான். பிறகு கையை முற்றிலுமாக அவளிடமிருந்து எடுத்துவிட்டு, சற்று விலகி அமர்ந்தான். உள்ளே ஏதோ ஒரு உணர்வு… மனதை பிசைவது போலிருந்தது. அவள் முகத்தை பார்க்க முடியாமல் முழங்காலில் கையை ஊன்றி தலை கவிழ்ந்து அமர்ந்தான். மனம் நேற்றைய நினைவில் துன்புற்றது.

சிறு வயதிலேயே எவ்வளவோ பார்த்துவிட்டான். எத்தனை வலிகள்… எத்தனை அவமானங்கள்… எல்லாம் பழகிவிட்டது. ஆனால் இந்த சிறு விஷயத்திற்கு ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறான்! தனக்கு என்னதான் ஆயிற்று என்று எண்ணியபடி அவன் அமர்ந்திருக்கும் போது, இவள் மெல்ல எழுந்து மாடிக்குச் சென்றாள். இடுப்புவலி படுக்கச் சொல்லி துரத்தியது.

மதுரா தன்னிடமிருந்து விலகியிருக்க விழைகிறாள் என்பது தேவ்ராஜிற்கு நன்றாக புரிந்தது. ஆனால் அதை எப்படி அனுமதிக்க முடியும். என்னதான் இருந்தாலும் அவன் அவளுடைய கணவன். அவனை விலகிச் செல்ல வேண்டும் என்று அவள் எப்படி நினைக்கலாம்! உள்ளுக்குள் பொருமினான். அதை அவளிடம் வெளிப்படுத்திக் கேட்கும் துணிவில்லை. குறைந்தபட்சம் இப்போது… அவள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பொழுது… விட்டுப்பிடிக்கலாம் என்று எண்ணி, டிவியை நியூஸ் சேனலுக்கு மாற்றி அதில் கவனம் செலுத்த முயன்றான். முயற்சி மட்டும்தான் செய்ய முடிந்தது. அவளையே சுற்றிவந்த மனம் அவனை வெற்றிபெற விடவில்லை.

ஒருவாரம் கழிந்துவிட்டது. தேவ்ராஜ் மிகவும் அமைதியாக இருந்தான். முடிந்த அளவிற்கு மதுராவை தொந்தரவு செய்யாமல் இருக்க முயன்றான். ஆனால் அவர்களுக்குள் பெரிய இடைவெளி விழுந்துவிட்டது போல் தோன்றிவிடவே, சஞ்சலப்பட்டான். ஏதோ பாதுகாப்பிலாதது போன்றதொரு உணர்வு அவனை ஆட்கொண்டது. அவளை தன்னுடைய வட்டத்தில்.. தன்னுடைய பிடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் அவனை ஆட்டிப்படைத்து. முன்பெல்லாம் இப்படி தோன்றினால் வலுக்கட்டாயமாக தான் இருக்கும் இடத்தில் அவளை பிடித்து அமரவைத்துவிடுவான். ஆனால் இப்போது தயக்கமாக இருந்தது. அவள் மனம் புண்பட்டுவிடுமோ என்று யோசித்தான். அந்த யோசனை அவளை கட்டாயப்படுத்தவிடாமல் தடுத்தது. அந்த நேரத்தில்தான் மாயா அழைத்தாள்.

அன்று துருவனும் மாயாவும் குழந்தை ஆதிராவோடு வீட்டிற்கு வந்திருந்தார்கள். ஆதிராவை கண்டதும் மதுராவிற்கு உற்சாகம் பொங்கியது. அவளை தூக்கி தட்டாமாலை சுற்றி கன்னத்தில் முத்தமிட்டாள். துருவன் தங்கையை அன்போடு விசாரித்தான். அவளோடு அமர்ந்து பேசினான். அண்ணனின் அன்பில் மகிழ்ந்தாள் தங்கை. தினமும் போனில் பேசிக் கொண்டிருந்தாலும், பெற்றோரைப் பற்றி விசாரித்தாள்.

“திலீப் பாய் எப்படி இருக்காங்க?” என்று இளைய சகிதரனை பற்றியும் கேட்டாள். அவனை நினைத்தாலே அவள் மனம் நெகிழும். தனக்காக பிடிக்காத திருமணத்தை செய்துகொள்ள துணிந்தவன். அந்த முடிவால் அவமானப் படுத்தப்பட்டவன். அவளோடு உடன்பிறந்தவன். – கண்களில் நீர்கோர்த்துவிட்டது மதுராவிற்கு.

தங்கையின் தலையை செல்லமாக கலைத்துவிட்ட துருவன்,” என்ன இது…! சின்ன குழந்தை மாதிரி… ஹி இஸ் ஆல் ரைட்… சந்தோஷமாத்தான் இருக்கான். நீ வருத்தப்படாத. இப்போகூட அவனுக்கு ஒரு வரம் பேசிகிட்டு இருக்கோம். அம்மா சொன்னார்களா?” என்றான்.

அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. “சொல்லலையே பாய்” என்றாள் தாயின் மீது எழுந்த சிறு வருத்தத்துடன். மறுகணமே அவள் மனம் சகோதரனை எண்ணி மகிழ்ந்தது. “திலீப் பாய்க்கு பொண்ணு பிடிச்சிருக்கா?” ஆர்வமாகக் கேட்டாள்.

“பிடிச்சிருக்குன்னு தான் நினைக்கிறேன். ஓகே சொல்லிட்டான்”- சிரித்துக் கொண்டே கூறினான். இதே விஷயத்தை பற்றித்தான் மாயாவும் தன் தாயிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

“என்கிட்ட சொன்னதோடு விட்டுடு மாயா. பாரதிக்கு எதுவும் தெரிய வேண்டாம். திலீப் மேல இருக்க கோவத்துல அவனை நிராகரிச்சிட்டா. இப்போ அவனுக்கு கல்யாணம்னு தெரிஞ்சா மனசு கஷ்ட்டப்படுவா. அந்த கல்யாணத்துக்கு முன்னாடி பாரதியோட கல்யாணம் நடக்கணும். தேவ்கிட்ட நா பேசிக்கறேன். நீ யார்கிட்டேயும் எதையும் சொல்லிக்க வேண்டாம்” என்று கூறி முடித்துவிட்டாள்.

“ம்ம்ம்…. ஓகே…” என்று அரைகுறை மனதோடு ஒப்புக்கொண்ட மாயா, வந்த வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

மாலை வழக்கம் போல் வீட்டிற்கு வந்த தேவ்ராஜ் துருவனை கண்டதும், “ஹலோ… சார்… வெல்கம்… வெல்கம்…” என்று புன்னகையுடன் கைகுலுக்கி கட்டியணைத்து வரவேற்றான். இருவரும் நண்பர்கள் போல்தான் பழகுவார்கள். குடும்பத்திற்குள் இருக்கும் மனஸ்தாபங்கள் எதுவும் அவர்களுக்குள் இதுவரை நுழைந்ததில்லை.

“மாமூ” என்று ஆதிரா குட்டி உள்ளேயிருந்து ஓடிவர அவளை தொடர்ந்து மாயாவும் வந்தாள்.

“ஹேய்… குட்டிமா…” என்று குழந்தையை தூக்கிக் கொஞ்சினான் தேவ்ராஜ்.

“தேவ் பாய்… சொல்லியிருந்தேல்ல… ஒரு சின்ன சர்ப்ரைஸ். ரெண்டு பெரும் டிரஸ் பண்ணிட்டு ரெடியாகுங்க” என்றாள் மாயா. “எஸ் எஸ்… மது… நீயும் போயி சீக்கிரம் டிரஸ் பண்ணிட்டு வா…” – துருவன்.

“ம்ம்ம்… ஓகே…” என்று தேவ்ராஜ் மகிழ்ச்சியாக தோள்களை குலுக்க, “சர்ப்ரைஸா! என்ன பாய்!” என்று தமையனை பார்த்தாள் மதுரா.

“அதை இப்போவே சொல்லிட்டா சர்ப்ரைஸ் இல்ல… நீ போயி முதல்ல டிரஸ் பண்ணிட்டு வா… நீங்களும் கிளம்புங்க…” என்று கூறி ஆதிராவை வாங்கி கொண்டு இருவரையும் மாடிக்கு விரட்டினான் துருவன்.

20 Comments

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    nice ud sis
    ipp yenna thitamoo

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      நன்றி தோழி…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha khaliq says:

    Nice epi Nithya….avaloda unarvugalai kaayaoaduthitu ippa ottamataengiranu feel panna enna laabam? Niraya siramapadavaendi irukum Dev nee…..

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      நன்றி தோழி…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sharmila Natarajan says:

    Nithya,

    The story is going good. I have read a few other stories of your’s. My favorite is Kaarmukilan and Madhumathi. There was a kind of strong connection between characters and it was very well written. So was Irumbin idhayam and Mayakkum maanvizhi. Just a honest opinion about this story: I feel that the characters are a bit scattered, and they are not connected very well. Mainly, the hero and heroine characters are a bit formal, I feel. A warm intimacy is missing. I know that a few authors are a bit reluctant in writing intimacy. While I said intimacy, it does not mean physical intimacy; it’s about staying emotionally connected, a good chemistry and a kind of “patru”. Of course, I also remember that Dev’s character is a bit rough, but I still feel that something is missing. Or, may be it could be that the whole story is happening in Mumbai, and I am not able to connect to the lifestyle and thoughts. Nothing to discourage you. You write very well, but I feel that you have a bit of hesitation in opening up the characters emotionally. May be that’s your nature. Just felt like sharing as I was not able to read and pass by.

    One more thing: I would appreciate if you could use some nature picture instead of the boy and girl picture. The beauty of a book is that we imagine the mannerisms and face of the characters by ourselves instead bringing in a movie character or a serial character. I do not watch movies or any television programs, but I love reading both in english and tamil, and want to keep my imaginations far away from movie imagery. Again, this is me. There could be other readers who absolutely love movie characters.

    Overall, your writing is very sensible and free of grammatical and spelling errors. This itself is a blessing. You writing is mature and entertaining. Keep going. Apologies, if any of my feedback hurt you.

    Thanks,
    Sharmila

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      ஹாய் ஷர்மிளா,

      உங்க கமெண்டை மறுபடி மறுபடி படிச்சேன். மனசுல தோணினதை அப்படியே சொல்லியிருக்கீங்க… அதுக்கே முதல்ல ஒரு நன்றி…

      கார்முகிலன் – மதுமதி… இவங்களை பற்றி இவ்வளவு வருஷம் கழிச்சசு நீங்க சொல்லும் போது மனசுக்கு திருப்த்தியா இருக்கு… மிக்க நன்றி…

      கனல்விழி காதல் – இந்த கதையில உங்களுக்கு சில அதிருப்தி இருக்கு… எனக்கு புரியாது… இந்த கதையில ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரும் மனதளவில் நெருங்கல… அதுதான் உங்களை உறுத்துது… ஆனா கதையே அதுதான் ப்பா…

      மதுமதி கார்முகிலனை காதல்ல கரைஞ்சு கல்யாணம் பண்ணினா. ஆனா மதுரா அப்படி இல்ல… சூழ்நிலை அவளை அந்த கல்யாணத்துல தள்ளிவிட்டுடுச்சு. அவ மனசுல காதல் இல்ல… தேவ்ராஜ் மனசுல என்ன இருக்குன்னு அவனை தவிர அவனோட நிழலுக்கு கூட தெரியாது. அவளுக்கும் தெரியல… அவளை பொறுத்தவரை தேவ்ராஜும் அவளை மாதிரியே சூழ்நிலைக்கு கட்டுப்பட்டவன். ஆனா உண்மையிலேயே தேவ்ராஜ் சூழ்நிலைக்கு கட்டுப்பட்ட கூடியவனா அப்டிங்கறதை அவ யோசிக்கவே இல்ல… யோசிக்கும் போது எல்லாமே மாறும்… அதிகப்படியான சோசியல் மெசேஜ் எதையும் எதிர்பார்க்கலன்னா இந்த கதை நிச்சயமா உங்களுக்கு பிடிக்கும்பா… தொடர்ந்து படிங்க… நன்றி தோழி…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    Nalla episode..

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      நன்றி தோழி…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    தேவ்விற்குள் மெது மெது நல்ல மாற்றம் வந்துகொண்டிருக்கின்றது,மதுரா மனம் நோக்க்கூடாது என்று எல்லாம் நினைக்கிறார்,இது நல்லமாற்றம்தானே,புருசனுக்கும் பெண்டாட்டிக்கும் நல்ல பொருத்தம்,பக்கத்தில் தங்கள் துணை இருக்கும்போது மூஞ்சிய தூக்கி வைத்திருப்பது,அவர்கள் சற்று தள்ளிப் போனவுடன் அவர்களைப்பற்றியே சிந்திப்பது.

    நன்றி

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      நன்றி தோழி…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ரமா says:

    கல்லுக்குள் ஈரம்..பாப்போம் மதுரா என்ன செய்ய போரானு

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      நன்றி தோழி…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pons says:

    போடா போ…கிடைச்ச வைரத்தை தொலைச்சுட்டட…திலிபன் கல்யாணம் தெரிந்தால்…அண்ணனும், தங்கையும் என்ன பண்ண போறாங்களோ….

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      நன்றி தோழி…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi says:

    Dev panrathu romba thappu than but avanum pavam than nu thonuthu … Madhu avanai manasalavil romba bathikura… Pakkalam aduthu ennanu….

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      நன்றி தோழி…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya says:

    Sama interesting.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      நன்றி தோழி…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sasi says:

    Ayioo.. Enna aaga poogutho….

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      நன்றி தோழி…

You cannot copy content of this page