காக்கும் இமை நானுனக்கு
6928
0
ஆசிரியர் : இரமணிச்சந்திரன்
நாயகன் : புவனேந்திரன்
நாயகி : நளினி
நளினி பண்காரர்களுக்கான பல்பொருள் அங்காடியில் வேலை பார்க்கிறாள். அங்கே விற்பனை குறைவா இருப்பது அவள் மனதிற்கு வருத்தமைல்லிறது. விற்பனை கூடுதல் குறித்த அவள் கருத்தை பழைய நிர்வாகிகள் ஏற்க மறுக்கிறார்கள். இந்நிலையில் அங்கே ஒருவன் பாதுகாவாளிகளுடன் வந்து, ஒரு விலை உயர்ந்த கடிகாரத்தை தன் கையில் எடுத்து கட்டுவதை கண்டு, அவனை சாமார்த்தியமாக ஒரு அறையில் அடைத்து பிடிக்கிறாள். பிடித்த பின்னே தான் தெரிகிறது… அவனே கடையின் முதலாளி… நம் கதாநாயகன் புவனேந்திரன்.
நளினி வேலை இழக்கும் நிலை வருகிறது. பின் விற்பனை அதிகரிப்பு குறித்த அவள் யோசனையை கேட்க அவளுடன் பழகுகிறான். அப்போது அவள் மற்றும் தன் காதல் உணர்ந்து அவள் வீட்டில் பேசுகிறான். பிறகுதான் தெரிய வருகிறது, இவன் ஏற்கனவே கல்யாணம் ஆனவன், அதுவும் கல்யாணமாகி பத்து நாட்களிலேயே தன் மனைவியை பறிகொடுத்தவன் என்பது.
அதை அவள் காதல் வென்று விட….. நிச்சயம் முடிகிறது. ஆனால் அவன் பாதுகாவல் எண்ணம் அவளையும் அவனையும் பிரிக்குது. பின் எப்படி இருவரும் சேர்கின்றனர், முதல் மனைவியின் இறப்புக்கான காரணம்… இதையெல்லாம் அறிய படியுங்கள் இந்த கதையை.
அன்புடன்,
பொன்ஸ்..
Comments are closed here.