Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

இல்லறம் இதுதான்

Share Us On

[Sassy_Social_Share]

இல்லறம் இதுதான் – 5

அத்தியாயம் – 5

கீழ்வானத்தில் சூரியன் மெதுவாக மறைந்துக் கொண்டிருந்தது. இந்த காட்சியை ரசித்தவாறு கைகளை மாடி சுவற்றில் முட்டுக் கொடுத்துக் கொண்டு நின்றாள் சிவா. காலடி ஓசைக் கேட்கத் திரும்பிப் பார்த்தாள். லட்சுமி வந்துக் கொண்டிருந்தாள்.

 

“இப்படி உட்க்காருங்கக்கா” என்று சுவற்றைக் காட்டினாள். அவளும் லட்சுமியின் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

 

“இப்ப சொல்லுங்க. என்ன விஷயம்?”

 

“முதல்ல உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்”

 

“எதுக்கு?”

 

“நீ மட்டும் அன்னிக்கி உங்க அத்தானை பற்றி சொல்லாம போயிருந்தா நான் ரொம்ப எமார்ந்துப் போயிருப்பேன்”

 

“இல்லன்னா மட்டும் எமாரலையா?” சிவா உற்றுப் பார்த்தாள்.

 

“அவ்வளவா இல்லை. நீ சொன்னதும் நான் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி என்னை மாற்றிக்கிட்டேன்”

 

“சரி. இப்ப என்ன பிரச்சனை?”

 

“என்ன பிரச்சனை. எல்லாம் உங்க சின்னத்தான் தான்”

 

“அவர் என்ன பண்ணினாரு பாவம்?”

 

“ஒண்ணும் பண்ணாதது தான் பிரச்சனை” என்று லட்சுமி கூற இருவருமே சிரித்தனர்.

 

“சரி அப்புறம்”

 

“மூஞ்சிக் குடுத்து பேசக் கூட மாட்டேங்கிறாரு. அன்றைக்கு நீ சொன்ன மாதிரியே தூங்கிக்கிட்டுத் தான் இருந்தாரு. நேத்து நான் அப்பா வீட்டுக்கு போயிட்டு வரும் போது மணி பத்தாயிடிச்சு. நேத்தும் தூங்கிட்டாரு. அவர்கிட்ட எது பேசவும் எனக்கு பயமாயிருக்கு. என்னை அவருக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையா எதுவுமே புரியல. இது பற்றி யார்கிட்ட ஆலோசனை கேட்கறதுன்னு யோசிக்கும் போது தான் உன் ஞாபகம் வந்தது. போன் பண்ணினேன்”

 

“இப்போ நான் என்ன செய்யணும்?”

 

“நீ தான் நல்ல ஐடியா கொடுக்கணும். இந்த வீட்டுல எல்லோரையும் பற்றி ஓரளவுக்கு தெரிஞ்சுக்கிட்டேன். உன் அத்தான் மட்டும் புரியாத புதிராவே இருக்காரு”

 

“புரிஞ்சுக்க வேண்டியவரை புரிஞ்சுக்கல”

 

“சீக்கிரம் புரிஞ்சுப்பேன்”

 

“அத்தை எப்படி?”

 

“ரொம்ப தங்கமானவங்க. என்னை அவங்க மகள் மாதிரி பார்த்துக்கறாங்க”

 

“அது மட்டுமா? உங்க பெருமையை ஊர் முழுக்க பரப்புரை செய்யறாங்க”

 

“என்ன சொல்ற… புரியல”

 

“நேத்து மதியம் எங்க அம்மாவுக்கு போன் பண்ணி என் மருமகள் கோலம் போடுறா காபி போடுறா, டிபன் செய்யறா கல்யாணமான மறு நாளே குடும்பத்தை கையில் எடுத்துகிட்டா அப்படி இப்படின்னு ஒரு மணி நேரம் பேசி அறுத்து எடுத்துட்டாங்களாம். எங்கம்மா சொன்னாங்க”

 

“அப்படியா!” சந்தோஷத்தில் பூத்தாள்.

 

“இந்த வீட்டுல எல்லோரும் உங்க மேல தனி மரியாதை வச்சிருக்காங்க”

 

“ஹ்ம்ம்..” பெருமூச்சு விட்டாள் லட்சுமி.

 

“புரியிது. மோகன் அத்தானை எப்படியாவது சரிக்கட்டிடலாம்”

 

“வழி?”

 

“இருங்க யோசிக்கலாம்”

 

ஐந்து நிமிட மௌனத்திற்குப் பிறகு சிவா பேசினாள்.

 

“அத்தான்கிட்ட என்னை பிடிச்சிருக்கா இல்லையான்னு கேக்கறது தான் சரின்னு படுது. இப்படியே எத்தனை நாளைக்கு விடுறது. ஆனா பொறுமையா பேசுங்க”

 

“பேசினா பிரச்சனை வராதே”

 

“பேசிப்பாருங்க. மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்”

 

“சரி முயற்சி பண்ணறேன்”

 

“இது யாருக்கும் தெரிய வேணாம்”

 

“எது?”

 

“மோகன் அத்தான் இப்படி இருக்கறது”

 

“சரி”

 

“எனக்கு டைம் ஆச்சு. அம்மா தேடுவாங்க”

 

“சரி வா.. கீழ போகலாம்”

 

இருவரும் கீழே சென்றனர். அங்கே ராஜம் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். சங்கரும் சாரதாவும் பயண எர்ப்பாடுகளில் இருந்தனர். இவர்களைப் பார்த்ததும் “லட்சுமி கொஞ்சம் தண்ணிக் கொண்டுவாம்மா” என்றார்.

 

“சரி அத்தை”

 

“சிவா இப்படி உட்கார். என்ன கேட்டியா?”

 

“ஓ… கேட்டேனே நீங்க நினைக்கற மாதிரியெல்லாம் ஒண்ணுமில்ல அத்தை. அக்கா சந்தோஷமாத்தான் இருக்காங்க”

 

“என் வயித்துல பாலை வார்த்தேடி கண்ணு. மோகன் சரியான உம்மணா மூஞ்சி. அதான் கொஞ்சம் பயந்துட்டேன்”

 

“கல்யாணம் ஆனா சரியாயிடும்னு தானே கல்யாணம் பண்ணீங்க?”

 

“சரியானதை உறுதி பண்ணிகிட்ட பிறகுதான் எனக்கு நிம்மதியா இருக்கு”

 

லட்சுமி தண்ணீர் கொண்டு வந்தாள். காலிங் பெல் அடித்தது. லட்சுமி சென்று கதவைத் திறந்தாள். மோகன் தான் நின்றுக் கொண்டிருந்தான். இவளை பார்க்காமல் உள்ளே வந்தான். டிவி ஓடியதைப் பார்த்து விட்டு “என்ன படம்மா?” என்றுக் கேட்டான்.

 

“ஹீம்… கல்யாணமாகியும் பிரம்மச்சாரி” என்று சிவா முந்திக் கொண்டாள்.

 

“ஐயோ வாயாடி…” உள்ளே ஓட முற்பட்டான்.

 

“சுட்சுவேஷன் படம் அத்தான். உட்கார்ந்து பாருங்க” என கத்திவிட்டி சிரித்தாள் சிவா.

 

சற்று நேரம் இருந்துவிட்டு மறுநாள் தனக்கு போன் செய்யும்படி லட்சுமியிடம் சைகை காட்டிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள் சிவா.

 




2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    மோகனுக்கு என்ன பிரச்சனை,முன்பே வேறு பெண்ணை காதலித்து அந்தப்பெண் மோகனை ஏமாற்றி விட்டாரா.

    நன்றி


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Indira selvam says:

      Thank you so much Thadsayani

You cannot copy content of this page