Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Kanalvizhi 38

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 38

அத்தியாயம் – 38

சுள்ளென்று சூரியன் முகத்தில் குத்த சிரமப்பட்டு, அரைகுறையாக கண்களை திறந்தான் தேவ்ராஜ். சூரிய ஒளியில் கண்கள் கூச முகத்தை திருப்பிக் கொண்டு கண்களை இறுக்கமாக மூடி நிதானத்திற்கு வந்து, பிறகு நன்றாக விழித்தான். ‘டெரஸ்! – இங்கேயே உறங்கிவிட்டோமா!’ – கோச்சிலிருந்து எழுந்து அமர்ந்தான். இரவு முழுக்க ஒரே நிலையில் படுத்திருந்திருக்க வேண்டும்… முதுகெல்லாம் வலித்தது. தலையில் பெரிய மலையை தூக்கி வைத்தது போல் கனத்தது. எழுந்து நின்று சோம்பல் முறித்தவன் தலையை உலுக்கிக் கொண்டு அறைக்குள் வந்தான்.

‘எழுப்பி உள்ள வந்து படுக்க சொல்லணும்னு தோணிச்சா! எல்லாம் ஆக்ட்டிங்… வேஷக்காரி’ – மதுராவை திட்டிக் கொண்டே உள்ளே வந்தவன், அவளை காணாமல் ஏமாற்றத்துடன் குளியலறையை திறந்து பார்த்தான். காலியாக இருந்தது. எங்க போயிட்டா! வெளியே வந்து கீழே எட்டிப்பார்த்தான். தரையை துடைத்து சுத்தம் செய்ய வேலைக்காரப் பெண்ணை அறிவுறுத்திக் கொண்டிருந்தாள் ரெஜினா.

“ரெஜினா” – கரகரத்த குரலில் சத்தமாக அழைத்தான். சட்டென்று மேலே நிமிர்ந்து பார்த்தார்கள் கீழே நின்ற பெண்கள் இருவரும்.

“சார்…”

“மதுரா எங்க?”

“கார்டன்ல இருக்காங்க சார்”

“ஓ! ஓகே…” – மீண்டும் உள்ளே வந்தான். ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தான். தோட்டக்காரன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் பேசுவது இவள் காதில் விழுந்ததா இல்லையா என்றே தெரியவில்லை. ஏதோ கனவில் இருப்பவள் போல் பூக்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். முகத்தில் சோகம் படிந்திருந்தது. தேவ்ராஜிற்கு நேற்றைய நினைவு வந்தது. பெருமூச்சுவிட்டு தலையை உலுக்கிக் கொண்டான். ‘எதையும் யோசிக்கக் கூடாது… யோசித்தால் அடிமை வாழ்க்கைதான்’ – தன்னைத்தானே திடப்படுத்திக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.

குளித்துவிட்டு வந்தபோதும்… அலுவலகத்திற்கு செல்ல தயாராகி கீழே வந்த போதும் கூட அவன் கண்ணில் அவள் படவேயில்லை. இன்னமும் தோட்டத்தில் தான் இருக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டான். உணவு மேஜையில் வந்து அமர்ந்த பிறகு, “மதுராவை வர சொல்லு” என்றான் ரெஜினாவிடம்.

இராஜேஸ்வரியும் பாரதியும் கூட தேவ்ராஜோடு சேர்ந்து அவளுடைய வருகைக்காக காத்திருந்தார்கள். சற்று நேரத்தில் அங்கே வந்த மதுரா, அவனை நிமிர்ந்து பார்க்காமல், சேரில் அமர்ந்தாள்.

“ரொம்ப வேலையோ! எல்லாரையும் வெயிட் பண்ண வச்சுட்ட?” குத்தலாக கேட்டபடி உண்ண ஆரம்பித்தான்.

“சாரி…” – யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் முணுமுணுத்துவிட்டு உணவில் கவனமானாள். அதன் பிறகு அவர்களுக்குள் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. அனைவருக்கும் முன்பாக ‘நானும் சாப்பிட்டேன்’ என்று தன்னுடைய உணவை முடித்துக் கொண்டு மாடிக்கு சென்றுவிட்டாள் மதுரா. தன்னிடம் முகம் கொடுக்காமல் விலகிச் செல்லும் மனைவியை நினைத்தபடியே சப்பாத்தியை மென்ன்ன்று விழுங்கினான் தேவ்ராஜ்.

மாலை அவன் வீடு திரும்பிய போதும் கூட மதுரா கண்ணில் படவில்லை. எங்கு சென்று ஒளிந்துகொள்கிறாள்! வெறுப்பாக இருந்தது அவனுக்கு. அப்படி என்ன சொல்லிவிட்டான்! திலீப்பின் திருமண விஷயத்தை தன்னிடம் சொல்லவில்லை என்றுதானே கேட்டான்! அதற்குபோய் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறாள்! எரிச்சலுடன் கையிலிருந்த ‘கோட்’டை கட்டிலில் கடாசியவன், போன், பர்ஸ் என்று அனைத்தையும் மூளைக்கு ஒன்றாக எறிந்தான்.

‘எங்கேயாவது போடி… நீ இல்லன்னா என்ன தேவ்ராஜ் செத்துடுவானா!’ – வீம்புடன் குளியலறைக்குள் நுழைந்தவன், வேறு உடையில் வெளியே வந்து, தூக்கியெறிந்த கார் சாவி, பர்ஸ், மொபைல் அனைத்தையும் சேகரித்துக் கொண்டு வெளியே வந்தான்.

“எங்கப்பா கிளம்பிட்ட? எதுவும் சாப்பிடல? டீ எடுத்துட்டு வர சொல்லவா?” எதிர்ப்பட்ட தாய் கேட்டாள்.

“இல்லல்ல… வேண்டாம்…. வேலை இருக்கு. வர லேட் ஆகும்” – சொன்னபடியே வெளியே சென்று காரில் ஏறினான்.

மதுரா தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றே தேவ்ராஜ் நினைத்தான். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமானது அவள் மனதில் அவன் இல்லை என்பதுதான். இருந்திருந்தால் கிஷோரை திருமணம் செய்துகொள்ள சம்மதித்திருப்பாளா! – கண்கள் சிவந்தன.

அனைத்திற்கும் காரணம் திலீப்தான்… அது என்னவோ தெரியவில்லை… சிறு வயதிலிருந்தே அவனுக்கும் திலீப்பிற்கும் ஏழாம் பொருத்தம் தான். பெரியவர்களின் உறவையே பாதிக்கும் அளவிற்கு சிறு வயதிலேயே சண்டை போட்டிருக்கிறார்கள். இன்றளவும் அந்த வெறுப்பு இருவருக்குள்ளும் இருக்கிறது. இது அனைத்தையும் மீறி, பாரதி ஆசைப்படுகிறாளே என்கிற ஒரே காரணத்திற்காக அவனை ஏற்றுக்கொள்ள நினைத்தான். நரேந்திரமூர்த்தியும் மதுராவை தேவ்ராஜிற்கு கொடுக்க நினைத்தார். எல்லாம் கூடி வரும் நேரத்தில் தாழி உடைந்தது போல் பாரதியை மறுத்துவிட்டான் திலீப். தேவ்ராஜிற்கு நன்றாகத்தெரியும்… அவன் மீது இருக்கும் வெறுப்பில்தான் திலீப் அப்படிச் செய்தான். அவன் வெறுப்பை காட்டும் பொழுது இவனும் காட்டித்தானே ஆக வேண்டும். காட்டினான்… அன்பில் மலர வேண்டிய உறவுகள் ஈகோவில் கருகின.

திலீப்பை நினைத்தாலே அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது. இவன் வேண்டாம் என்று சொன்னதும், அதுதான் சாக்கென்று அவசர அவசரமாக மதுராவிற்கு வேறு ஒரு மாப்பிள்ளையை பார்த்ததோடு மட்டும் அல்லாமல் நிச்சயம் வரை கொண்டு சென்றுவிட்டான். – நரம்புகள் புடைக்க ஸ்டியரிங் வீலை இறுக்கிப் பிடித்தான். இன்று கூட அவனால்தான் மதுராவிற்கும் அவனுக்கும் பிரச்சனை. பற்களை நறநறத்தான்.

மதுரா தன்னிடம் ஒன்றை மறைக்கிறாள் என்பதை தேவ்ராஜிற்கு ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவள் தன்னை நம்ப வேண்டும்… வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று விரும்பினான். அவள் அப்படி இல்லை என்று தெரியும் போது வருமே ஒரு கோபம்…! அதை கட்டுப்படுத்தவே முடிவதில்லை அவனால். வார்த்தைகளை கொட்டிவிடுகிறான். கொட்டிவிட்டு அவளை பார்த்துப்பார்த்துப் புழுங்குகிறான்.

அந்த புழுக்கம்தான் இப்போது கூட அவனை வீட்டில் தங்கவிடாமல் துரத்தியடித்தது. பெருமூச்சுடன் வண்டியை ‘பிட்னஸ் சென்டர்’ பக்கம் விட்டவன், திடீரென்று ஏதோ நினைவிற்கு வர ‘யு டேர்ன்’ அடித்து வந்த வழியிலேயே திருப்பினான்.

‘இந்த மனநிலையில் அங்கு செல்வது நல்லதல்ல. சென்றமுறை பட்டது போதும்…’ என்று நினைத்துக் கொண்டு இலக்கில்லாமல் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.

தொழில் சார்ந்த நண்பர்களை தவிர தனிப்பட்ட முறையில் அவனுக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை. மனம்விட்டு சுக துக்கங்களை பகிர்ந்துக்கொள்ள, இந்த பரந்துவிரிந்த உலகில் அவனுக்கென்று யாரும் இல்லாமல் போனது அவனுடைய துரதிஷ்ட்டம். அதனால்தான் வீட்டிற்கு போக பிடிக்காதவன், வேறு எங்கு செல்வது என்று புரியாமல் சாலையில் சுற்றிக் கொண்டிருந்துவிட்டு, இறுதியாக ஒரு ‘பப்’பிற்குள் நுழைந்தான்.

குடிக்க வேண்டும் என்பது அவனுடைய எண்ணம் இல்லை. நேரத்தை கழிக்க வேண்டும் அவ்வளவுதான். ஆனால் ‘பப்’பிற்கு சென்றுவிட்டு குடிக்காமல் வெளியே வருவதற்கு அவன் என்ன சந்நியாசியா? குடித்தான்… எல்லை மீறாத அளவிற்கு… ட்ரைவரை வேறு அழைத்துவரவில்லை… பாதுகாப்பையும் பார்க்க வேண்டுமல்லவா?

தேவ்ராஜ் வீடு திரும்பிய போது நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது. வழக்கம் போல் நைட் டியூட்டி கார்ட்ஸ் விழிப்போடு இருந்தார்கள். பணம் புழங்கும் இடத்தில் பாதுகாப்பிற்கும் பஞ்சம் இருக்கக் கூடாது. அதுமட்டுமல்ல… வேட்டையாட காத்திருக்கும் எதிரிகளும் அதிகமாயிற்றே! வணக்கம் வைத்த பாதுகாவலனுக்கு தலையசைப்பால் பதில் சொல்லிவிட்டு மாடியேறி படுக்கையறைக்கு வந்தான்.

இரவு விளக்கின் மங்கலான வெளிச்சத்தில், மலர்மாலை போல் மஞ்சத்தில் கண்மூடிக் கிடைக்கும் மதுராவைக் கண்டான். மனதிற்குள் அலையடித்து. ஆசை அலை… அவளை நெருங்கி அருகில் அமர்ந்தான். சீராக சென்று வந்து கொண்டிருந்த மூச்சுக்காற்று நன்றாக உறங்கிவிட்டாள் என்று கூறியது. போர்வைக்குள் மொத்தமாய் புதைந்திருந்தவளின் முகம் மட்டும் மலர்ந்த தாமரை போல் மின்னியது. இன்னும் நெருக்கமாகச் சென்று அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தான். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது… அவ்வளவு அழகு.

செக்க சிவந்திருந்த ஸ்ட்ராபெரி இதழ்கள் போட்ட கொக்கியில், வறண்டு போன தன் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டான். கற்றைக் கூந்தல் காற்றில் சரிந்து அவள் நெற்றியை தொட்டுத்தொட்டு ரசித்தது. அதன் மீது பொறாமைக் கொண்டு அதை அவள் காதோரம் ஒதுக்கிவிட்டவன், “ரொம்ப இடம் கொடுத்துட்டேன்… அதான்… என்னோட வீட்ல… என்னோட பெட்ல… நீ நிம்மதியா தூங்குற… நா தூங்க முடியாம ஊரை சுத்திட்டு வர்றேன்…” என்றான் மீசை இடுக்கில் சிக்கிக் கொண்ட புன்னகையுடன்.

நேற்று இரவும் சரியாக உறங்காமல், இன்றும் அவன் எப்போது வருவானோ என்கிற சிந்தனையுடன் வெகுநேரம் விழித்திருந்தவள் இப்போது அசந்துவிட்டாள். அவனுடைய மூச்சுக்காற்றோ… குரலோ… ஸ்பரிசமோ… எதுவும் அவளை எழுப்பவில்லை. அது அவனுக்கு இன்னும் வசதியாகிவிட்டது. விழித்திருந்தால்தானே ஓடுவாய் என்று அவள் புதைந்திருந்த அதே போர்வையில் தன்னையும் புதைத்துக் கொண்டான்.

பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டது போல் மூச்சுவிட சிரமப்பட்ட மதுரா, உறக்கம் கலையாத இமைகளை முயன்று பிரித்தாள். விடியலின் அறிகுறியாக ஜன்னல் வழியாக வெளிச்சம் ஊடுருவியது. ‘ஓ! ரூம்லதான் இருக்கோமா!’ – எந்த பாறையிலும் மாட்டிக்கொள்ளவில்லை என்கிற நிம்மதியுடன் மீண்டும் கண்களை மூடியவள் மறு கணமே அதிர்ந்து விழித்தாள். அவளுடைய கால்களும் இடுப்பும் எதிலோ சிக்கியிருந்தது. மெல்ல திரும்பினாள். கழுத்திலும் கன்னத்திலும் அவனுடைய மீசையும் தாடியும் குறுகுறுக்க சட்டென்று கண்களை மூடிக் கொண்டாள். மனதில் ஒருவித பதட்டம் பரவியது. ‘எப்போது வந்தான்! அதுவும் இவ்வளவு நெருக்கமாக… கடவுளே!’ – உடலில் மெல்லிய நடுக்கம் ஏற்பட்டது.

‘உடனே விலக வேண்டும்’ – மூளை எச்சரிக்க ஓசை படாமல் எழ முயன்றாள். திருமலைநாயக்கர் தூண் ஒன்று அவளுடைய கால்களின் மீது கிடந்தது. சற்று மேலே, பெரிய மலைப்பாம்பு ஒன்று அவள் இடுப்பை வளைத்துப் பிடித்திருந்தது. அசைய கூட முடியவில்லை. ‘இல்லை… எழுத்துதான் ஆக வேண்டும்’ – அறிவு அவசரப்படுத்தியது. அவனிடமிருந்து நழுவ முயன்றாள். “படு…” – உறக்கக் கலக்கத்தோடு கூறியவனின் பிடி மேலும் இறுகியது. சட்டென்று அவளுடைய அசைவுகள் அனைத்தும் முடங்கின. விழிகள் மட்டும் இங்கும் அங்கும் உருண்டன. மூச்சுவிடக் கூட யோசித்தாள். ஓரிரு நிமிடங்கள் அப்படி அசையாமலிருந்தவள் பிறகு மெல்ல, “டைம் ஆச்சு” என்றாள்.

“சன்டே தானே! தூங்கு…” – அவளை இன்னும் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான். மூச்சு முட்டியது அவளுக்கு. கடவுளே! உடும்பு போல் இப்படி பிடித்துக் கொண்டால் மூச்சு கூட விட முடியாதே! எப்படி உறங்குவது! – திருதிருத்தாள்.

“வேலை இருக்கு…” – மீண்டும் மெல்ல முணுமுணுத்தாள்.

“அப்புறம் பார்த்துக்கலாம்” – காதோரம் கிசுகிசுத்தான்.

இவனை எந்த கணக்கில் எடுத்துக்கொள்வது! ஒரு நேரம் சர்ப்பம் போல் விஷத்தை கக்குகிறான். இன்னொரு நேரம் பெரிய காதல் மன்னன் போல் குழைகிறான். இன்று இவனுடைய விருப்பத்திற்கெல்லாம் வளைந்துக் கொடுத்தால் நாளை அதையே குற்றமாக்குவான். மதுராவின் கண்கள் கலங்கின. அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகள் அவள் மனதில் ஆயிரம் இருந்தன. ஆனால் அதையெல்லாம் கேட்கும் உரிமை தனக்கு இருக்கிறதா! – வேதனையுடன் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

“என்ன ஆச்சு?” – ‘கண்டு பிடித்துவிட்டானா!’ – சட்டென்று அவள் உடல் இறுகியது. அமைதியாக இருந்தாள்.

“என்…ன ஆ…ச்சு?” – மீண்டும் கேட்டான்.

“என்ன?” – புரியாதது போல் கேட்டாள்.

“என்ன யோசனை?” – உறக்கம் கலையாத குரலில்தான் கேட்டான். தூக்கத்தில் கூட அவளை கவனிப்பானா! அதுவும் இவ்வளவு நுணுக்கமாக! வியப்புடன் படுத்திருந்தாள்.

“பதில் சொல்லு…”

“ஒண்ணும் இல்ல…” – அவள் சொன்ன மறுநொடியே, இடுப்பை வளைத்திருந்த கையால் அவளை தன் பக்கம் திருப்பினான். இப்போது அவளுடைய கண்கள் அவள் கண்களை சந்தித்தன.

“சொல்லு… என்ன விஷயம்?” – புருவம் உயர்த்தினான்.

தலையை குறுக்காக அசைத்தாள். கண்களில் கலங்கியிருந்த கண்ணீர் கீழே நழுவ நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. நாசி சிவந்து… இதழ்கள் துடித்தன. சட்டென்று அவளை இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

“இட்ஸ் ஓகே… இட்ஸ் ஓகே… காம் டௌன்…” – அவள் தலையை வருடிக்கொடுத்தான். அவன் கொடுத்த ஆறுதல் அவளுடைய அழுகையை அதிகரித்தது. அவளுடைய அழுகை அவன் மனதை பிசைந்தது.

“ப்ச்… மதுரா… காம் டௌன்… இட்ஸ் ஓகே… ரிலாக்ஸ்…” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான். அவனுக்கு தெரியும்… அன்று இரவு நடந்த எதையும் அவன் மறக்கவில்லை. அவன் புண்படுத்தியது… அவள் துடித்து அழுதது… எல்லாம் தெளிவாக நினைவில் உள்ளது. ஆனால் அவளும் அவனிடம் எதையும் மறைத்திருக்கக் கூடாது அல்லவா! குறைந்தபட்சம் அவன் கேட்ட போதாவது சொல்லியிருக்க வேண்டும். – அவளை சமாதானப்படுத்தியதோடு தனக்கும் சேர்த்து சமாதானம் சொல்லிக் கொண்டான். அவள் அழுதால் இவனுக்கு ஏன் இப்படி வலிக்கிறது! அந்த புதிருக்கான விடையை அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது இன்டெர்க்காம் ஒலித்தது. அவளை அணைத்தபடியே, கையை நீட்டி எடுத்து, “ம்ம்ம்ம்” என்றான். அந்த பக்கத்திலிருந்து யார் என்ன சொன்னார்களோ, சட்டென்று அவன் உடல் இறுகியதை உணர்ந்தாள் மதுரா. ஓரிரு நொடிகள் அமைதியாக கேட்டவன் “நோ” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.

இப்போது, ‘என்ன ஆச்சு?’ என்னும் கேள்வி மதுராவின் மனதிற்குள் எழுந்தது. “ஒண்ணும் இல்ல… படு…” – அவள் மனதை படித்து பதில் சொல்லிவிட்டு கண்களை மூடிக் கொண்டான்.

25 Comments

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    uma manoj says:

    ரசித்துப் பார்த்தவன் ஏன் அடிமை வாழ்வு தான் என்று கூறினான்?
    உள்ளுக்குள் என்னவோ?

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    uma manoj says:

    தேவ் பக்கம் பார்த்தால் அவனின் நியாயம் எதனால் கோபம் என புரிகிறது…
    மது கணவனாக தே வை அவள் மனம் அறிந்து ஏற்றுக் கொள்ள வில்லை. .எங்கிருந்து புரிதல் வரும் இருவருக்கும்?. .எங்கிருந்து அவன் கோபத்தின் அர்த்தம் அவளுக்கு புரியும்? . .

    தேவ்க்கு மது மீது இருக்கும் முரட்டுத்தனமான
    காதல் தெளிவாகிறது. .ஆனால் மதுக்கு?

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      மிக்க நன்றி தோழி…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sumi Rathinam says:

    Interesting…..😄

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Sumi… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    NICE UD SIS

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Ugina…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    தேவ் எதற்கு No சொன்னார்,கீழே இருந்து பேசியது ராஜேஸ்வரிதானே ,அப்படி என்ன சொல்லி இருப்பார்,தேவ் வீட்டில் பிரச்சனை என்றால் தேவ் தூக்கத்தை தொடர்ந்திருக்க மாட்டார்,அப்போ மதுரா வீட்டில் ஏதாவது பிரச்சனை என்று நினைக்கிறேன்,அதனால்தான் No சொல்லிவிட்டு மதுராவையும் தூங்கச்சொல்கின்றார் போல,வேதாளம் இப்போ முருங்கை மரத்தில் இருந்து இறங்கி இருக்கின்றது,நித்திரையால் எழும்பியவுடன் மீண்டும் ஏறினாலும் ஏறும்.

    நன்றி

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      மிக்க நன்றி தோழி…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pon Mariammal Chelladurai says:

    கீழே மது பெற்றோர் வந்திருக்கிறாங்களோ….
    டேய்…நீயா இழுத்து வைப்பதுக்கு மதுவா பழி….?

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thanks ka…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vijaya lakshmi Jagan says:

    கதையைய் மிக அழகாக கொண்டு செல்கிறிர்கள்.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      மிக்க நன்றி தோழி…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sasi Kala says:

    Ethukku “NO” sonnaan.. mandai veduchchudum pola irukku..

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Sasi…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    Ssss happa … Sariyana IMSAI la Ivan intha neram eppadi irupannu theriyama enna pesa mudiyum madhuvala … Semma epi nithya ..

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Lakshmi…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    Hmmm chinna vayasu sandai epdilam turn aagudu!!
    Dilip madura ku Annan nu Dev ku marandudichi pavam… Avan mattume important ah irukanum nu perasai
    …..

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Vatsala…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    இவன் என்ன நிமிடத்துக்கு நிமிடம் நிலை மாறுரான்…..சப்பா மது இவனை எப்படி தான் சமாளிக்க போறாளோ…..இப்ப என்ன? யார் phoneல?

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Hadijha…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya Priya says:

    Nice update.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Sugakumar Thamilselvi says:

      Dev vy ethi serppathu endru theriyavillai sudderikkum suriyana? Allathu athikalai suriyana?

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        admin says:

        Thank you so much Sugakumar Thamilselvi…

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Priya…

You cannot copy content of this page