Share Us On
[Sassy_Social_Share]யாருக்கு மாலை
4972
0
ஆசிரியர் : ரமணிச்சந்திரன்
நாயகன் : சிவநேசன்
நாயகி : மந்தாகினி
கதை சுருக்கம்:
கமலநாதன் சிவநேசன் இருவரும் ஒரே குடியிருப்பு பகுதியில் வசிக்கும் இளம் தொழிலதிபர்கள் மற்றும் நண்பர்கள். சிவநேசனின் பெற்றோர் உடல்நலக்குறைவு காரணமாக எஸ்டேட்டில் ஓய்வெடுப்பதால் தன்னுடைய ஓய்வு நேரத்தை தன் நண்பன் கமலநாதனின் வீட்டில் கழிக்கிறான் சிவநேசன். அந்நிலையில் கமலநாதன் கல்யாண போட்டோவில் இருக்கும் அவனுடைய மனைவியின் தங்கை மந்தாங்கினி மேல் காதல் தோன்ற, நண்பனிடம் வெளிபடுத்துகிறான்.
மூத்த தம்பதிகள்,மந்தாங்கினியின் தந்தையின் காதல் எதிர்ப்பை மனதில் கொண்டு, தாங்கள் பார்க்கும் மாப்பிள்ளையாக சொல்கின்றனர். அவர் சின்ன மகள் மாதங்கினியை அக்காள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். இங்கே தொழில் துறை அமைச்சகம், சிவாவை டெல்லியில் அமைச்சர் சந்திப்பிற்கு அனுப்புகிறது. இவள் வரும் நேரம் அவன் டெல்லியில் காவல் இருக்க… இங்கோ மாதங்கினி… இளம் கவிஞன் தமிழ்தாசனின் காதல் வலையில் வீழ்கிறாள்.
தமக்கை எதிர்க்க… பொது இடத்தில், சிவா முன் நிலையில், தமிழ்தாசனை மணக்க அறிவிக்கிறாள். சிவா வாழ்த்துக் கூற, நண்பனாகி பின் எப்படி அன்பனாகிறான். எப்படி தமிழ் தாசனை போட்டியில் வென்று, மாதங்கியின் கவர்ச்சியை போக்குகிறான் என்பதை அறிய படியுங்கள் யாருக்கு மாலை.
சிவாவின் காதலையும்,மாதங்கினியின் மன மாற்றத்தையும் ஆழகுற சொல்லி இருப்பார் நம் ரமணிச்சந்திரன் அம்மையார்.
– பொன்ஸ்
Comments are closed here.