தண்ணீரிலே தாமரைப்பூ
6525
0
ஆசிரியர் – ரமணிச்சந்திரன்
கதாநாயகன் : புவனன்
கதாநாயகி : பவானி
உடல் நிலை சரியில்லாத தந்தை காரணமாக வேலை பார்க்கும் கட்டாயத்தில் இருக்கும் பவானி முதலாளியின் கட்டாயத்தின் பேரில் பெங்களூர் கூட்டத்துக்கு வருகிறாள். இங்கே வந்தப்பின் முதலாளியின் தவறான அணுகுமுறை புரிந்து தப்பிக்க, அக்கூட்டத்தில் பங்கேற்ற புவனனிடம் உதவி கேட்கிறாள். அன்று ஓர் இரவு அவன் அறையில் தங்க, அங்கே இவள் முதலாளி அறையை காலி செய்துவிடுகிறான். பாவனி ஊர் திரும்பவும், மாற்று வேலையும் ஏற்பாடு செய்யவும் உதவுகிறான் புவனன்.
புவனன் பரிந்துரையின் பெயரில் ஒய்வுபெற்ற மருத்துவர் அகல்யா தேவியிடம் வேலைக்கு பெறுகிறாள். தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் , பத்திரிகை பேட்டிக்கும் கேள்வி பதில் அளிப்பதற்கு உதவி செய்ய, தனித்து வாழும் அவருடன் தங்கி பணிபுரிய ஒத்துக்கொண்டு வருகிறாள்.
அகல்யா தேவியின் வீடு புவனன் சொந்த வீடு. அங்கே வாடகை வசூலிக்கும் பாவனையில் அவன் காதல் தொடர்கிறது. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அவள் தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து, புவனனின் முயற்சியில் வீட்டில் இருந்தபடியே சிறு சிறு கணக்கு வழக்குகள் நோக்கி வருமானமும் ஈட்டுகிறார்.
இந்நிலையில் தொழில் விஷயமாக புவனன் வெளிநாடு போக இங்கே மருத்துவரின் தறுதலை மகன் சுந்தரவதனம் வில்லன் மீண்டும் வந்து மருத்துவர் குடும்பத்தில் ஐக்கியமாகிறான். நன்றி உணர்ச்சிமிக்க பாவனி அவனைத் திருத்த முயல, அது மருத்துவரின் தாய்மை உணர்வு இவளை மருமகளாக்க எண்ணுகிறார். இதனால் புவனன், பாவனி சந்திப்புக்கு தடை போடுகிறார்.
புவனன் தடை எப்படி தகர்க்கிறான்.பவானியை எப்படி வில்லனிடமிருந்து காப்பாற்றி மணக்கிறான் என்பதை அறிய படியுங்கள்.
– பொன்ஸ்
Comments are closed here.