கனல்விழி காதல் – 40
9321
9
அத்தியாயம் – 40
பாரதியின் மனப்போராட்டத்தை மதுராவால் புரிந்துகொள்ள முடிந்தது. சிவமாறன் தவறு செய்தவர்தான். ஆனாலும் அவளுடைய தந்தையாயிற்றே! அவள் உடம்பில் ஓடுகிற இரத்தம் அவருடையதாயிற்றே! இரத்தத்தில் கலந்திருக்கும் பாசம் எப்படி வற்றி போகும்? பாரதியின் தவிப்பு சரிதான். ஆனால் அந்த தவிப்பு இவனுக்கு ஏன் இல்லாமல் போனது! இவனும் அவருடைய மகன்தானே! அதே இரத்தம்தானே இவன் உடம்பிலும் ஓடுகிறது! கைகளை பின்னால் கட்டிக் கொண்டு இலக்கில்லாமல் எங்கோ வெறித்தபடி, சிலை போல் நின்றுக் கொண்டிருக்கும் தேவ்ராஜை திரும்பிப் பார்த்தாள். ஒரு போர்க்களம்தான் அவள் கண்ணில் தெரிந்தது. உள்ளே உணர்வுகள் போராடிக் கொண்டிருக்க, அதன் வலி அவன் முகத்தில் பிரதிபலித்தது.
மதுராவின் மனம் சங்கடப்பட்டது. அவனை ஆறுதல்படுத்த துடித்தாள். அவன் தூக்கியெறிந்த ரிசீவர் மேஜையிலிருந்து தொங்கி கொண்டிருந்தது. எடுத்து பார்த்தாள். யார் செய்த புண்ணியமோ, அது உடையவில்லை. அதை உரிய இடத்தில் வைத்துவிட்டு சமையலறைக்குச் சென்றாள். மதிய உணவு தயாரிப்பில் மும்மரமாக இருந்த சமையல்காரர், இவளை பார்த்ததும், “வாங்கம்மா… என்னம்மா வேணும்?” என்றார்.
“காபி…”
“இதோ தர்றேன்… யாருக்கும்மா போடணும்?” – அந்த வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக காபி அருந்துவார்கள். இராஜேஸ்வரிக்கு சக்கரை இல்லாமல் இருக்க வேண்டும். பாரதி பால் அதிகமாக கலந்து லைட்டாக கேட்பாள். தேவ்ராஜிற்கு கறுப்புக் காப்பி தான் விருப்பம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் என்பதால் விபரம் கேட்டார்.
“இல்ல… நானே… போட்டுக்கறேன்” என்று கூறி அவரை ஒதுக்கிவிட்டவள், தேவ்ராஜ் விரும்பிக் குடிக்கும், கருப்பு காபியை தயார் செய்தாள்.
அவள் மீண்டும் ஹாலுக்கு வரும் பொழுது அவன் சோபாவில் அமர்ந்திருந்தான். கைகள் இரண்டையும் முழங்காலில் ஊன்றி, கீழே குனிந்த படி ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.
“காபி…” – அவனுக்கு எதிரில் கப்பை நீட்டினாள். அவன் நிமிர்ந்து பார்த்தான்.
“ப்ளாக் காபி…” – ‘எடுத்துக்கோங்க…’ என்று கூறியது அவளுடைய கண்கள். அவள் பேசிய பார்வை மொழி அவனுக்குள் ஓர் அதிர்வை ஏற்படுத்த அவள் நீட்டிய கப்பை வாங்கி கொண்டான்.
அந்த காப்பியினாலா… அல்லது அதை அவள் கொடுத்ததனாலா என்று தெரியவில்லை… அவனுக்குள் ஓர் இதம் பரவியது. மனதில் அமைதி மீண்டது. கையிலிருந்த காலி கப்பை அவளிடம் கொடுத்துவிட்டு கண்களை மூடி சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.
“இவ்வளவு டென்ஷன் உங்க உடம்புக்கே நல்லது இல்ல…” – மெல்லிய குரலில் கூறினாள்.
“எனக்கு அட்வைஸ் பிடிக்காது” – அவனும் அமைதியாகத்தான் கூறினான். ஆனால் அந்த அமைதியில் ஓர் அழுத்தமான கண்டிப்பு இருந்தது.
மதுராவின் முகம் கூம்பிவிட்டது. ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் இருந்தவள், “அட்வைஸ் பண்ணல… மனசுல தோணினதை சொன்னேன்” என்றாள்.
அவள் குரலில் தெரிந்த மாற்றத்தைக் கண்டு கொண்டவன், கண்திறந்து மனைவியைப் பார்த்தான். இவருடைய விழிகளும் பின்னிக் கொண்டன.
“தலை வலிக்குது… பிடிச்சுவிடு” என்றான். அவள் விழிகள் அதிர்ந்தன. ‘நடுவீட்ல உட்கார்ந்துகிட்டு தலையை பிடிச்சுவிட சொல்றானே!’ – அவளுடைய சங்கடத்தை புரிந்துக் கொண்டவனின் இதழ்கடையோராம் லேசாக சுருங்கியது. ‘சிரிக்கிறானா!’ – ஆச்சர்யத்துடன் பார்த்தாள் மதுரா.
“இண்டர்காமை எடு” – ரிசீவரை எடுத்து அவனிடம் நீட்டினாள். செக்யூரிட்டிக்கு தொடர்பு கொண்டு, “தேவையில்லாம அவர் இங்க நிக்கக் கூடாது. கிளம்ப சொல்லு” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
“ரொம்ப கடுமையா நடந்துக்கறீங்க” – பொறுக்க முடியாமல் கூறிவிட்டாள்.
அவளை ஆழ்ந்துப் பார்த்த தேவ்ராஜ், “இதுதான் நான்…” என்று அழுத்தமாக கூறினான்.
*******************
திருமணம் ஆனதிலிருந்து கூண்டுக்குள் அடைபட்ட கிளி போல் வீட்டை சுற்றிவந்துக் கொண்டிருந்தாள் மதுரா. கலகலப்பாக பேசினாலும்… பேசவில்லை என்றாலும், அவன் அருகிலிருக்கும் போது ஜெட் வேகத்தில் பறக்கும் நேரம், அவன் இல்லாத போது ஆமைவேகத்தில் நகர்ந்தது.
அவள், பொழுது போகாமல் ஏதோ புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்த போது அறைக்கு வந்த ரெஜினா அவளிடம் ஒரு கையடக்க பெட்டியைக் கொடுத்தாள்.
“என்னது இது?” – மதுரா.
“சார் கொடுக்க சொன்னாங்க மேம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
‘என்னவா இருக்கும்!’ – சிந்தனையுடன் திறந்து பார்த்தாள் மதுரா. கார் சாவி! இதை எதற்கு நம்மிடம் கொடுக்கச் சொன்னான்! அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே கைபேசி ஒலித்தது. எடுத்து பார்த்தாள். அவன்தான்…
“ஹலோ…”
“லைப்ரரி, ஷாப்பிங், ஏரோபிக்ஸ், ஃபிரண்ட்ஸ் மீட்… எங்க வேணுன்னாலும் எப்போ வேணுன்னாலும் போகலாம்… வீட்டுக்குள்ளேயே அடஞ்சுக்கிடக்கணும்னு அவசியம் இல்ல… ஹாப்பி?” – தேவ்ராஜின் குரலிலிருந்த ஏதோ ஒன்று அவளை ஈர்க்க, கிறங்கி நின்றாள்.
“என்ன சொல்லறீங்க?”
“வெளியே போயி பாரு” – அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவசர அவசரமாக கீழே இறங்கி… வெளியே ஓடிவந்தாள். அவள் நினைத்தது சரிதான்… கடவுளே!
“இது…!” – வியப்புடன் கேட்டாள்.
“இனி உன்னோடது…”
“நோ…” – அவளால் நம்ப முடியவில்லை. வீட்டில் எல்லோருக்கும் தனித்தனி கார் இருந்தது. அவளை தவிர…. வெளியே போக வேண்டும் என்றால் பிரபாவதியின் காரில், ட்ரைவரோடுதான் போக வேண்டும். ஒரே செல்ல பெண்ணாக பிறந்ததன் வினை, ட்ரிவிங் தெரிந்திருந்தாலும் தனியாக காரை எடுக்க அனுமதி கிடையாது. இப்போது அவளுக்கென்றே தனியாக ஒரு காரா! எங்கு செல்ல வேண்டும் என்றாலும், தனியாகவே செல்லலாமா! உள்ளே பொங்கும் உற்சாகத்தை நாகரீகம் கருதி மறைத்துக் கொண்டாள்.
“டிரைவிங் தெரியும்ல?” – தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றினாலும் சின்ன சந்தேகத்துடன் கேட்டான்.
“ஆங்… தெரியும்… ஆனா…” – இழுத்தாள்.
“என்ன ஆனா?”
“இல்ல… காரெல்லாம் கொஞ்சம் அதிகம்…” – தயங்கினாள்.
“நீ தேவ்ராஜோட வைஃப்… நியாபகம் இருக்கட்டும்…” – கண்டிப்புடன் கூறினான். அவனுடைய செயலில் அன்பிற்கு பஞ்சமில்லை. ஆனால் வார்த்தைகள் தான் கரடுமுரடாக வெளிப்படுகின்றன. கனிவாக பேசத் தெரியவில்லை. அவனை பற்றிய ஒரு சிறி குறிப்பு கிடைத்தது மதுராவிற்கு.
9 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
uma manoj says:
காரை கொடுத்து கவுத்திட்டான் 😁
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
மதுராவுக்கு புரிந்துவிட்டது தேவ் தன் விடயத்தில் கரடுமுரடாக பேசினாலும் நடந்தாலும் அவருக்குள் தன் மீதான அன்பு ஒளிந்துள்ளது என்று,அதை மதுரா கொஞ்சம் கொஞ்சமாய் வெளிக்கொண்டு வரணும் ,ஒரு காபிக்கே தேவ் மதுராவுக்கு Car வாங்கிக்கொடுத்திட்டார்.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sumi Rathinam says:
Now Madhura is on the correct track…..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Priya Priya says:
nice
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya karthigan says:
Thank you Priya….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sharmila Natarajan says:
Crazy guy! Soothing episode!
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you sharmila…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
கார் கொடுக்கிறான்.
காதல் கொடுடா…பக்கி.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Ha Ha… 🙂