Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல் 39

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 41

அத்தியாயம் – 41

‘கல்லுக்குள் ஈரம்’ – இந்த வாசகத்திற்கு அட்சர சுத்தமாக பொருந்துகிறவன் தேவ்ராஜ்தான். அவனுடைய ஒவ்வொரு செயலிலும், நோக்கம் நல்லதாகத்தான் இருக்கும். ஆனால் அதை செயல்படுத்துகிற விதத்தில்தான் முரட்டுத்தனத்தைக் காட்டிவிடுகிறான். திலீப் – பாரதி திருமண முயற்சியிலிருந்து இன்று இந்த கார் பரிசளிப்பு வரை நிதானமாக எண்ணிப்பார்த்தால் அவனை நன்றாக புரிந்துக்கொள்ள முடியும். முன்கோபமும் பிடிவாதமும் அவனுடைய பிறவி குணம். அதை தவிர்த்துவிட்டு பார்த்தால் அவன் ஒரு சொக்கத்தங்கம். அவனை போல் ஒரு கணவன் கிடைக்க அவள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்ன ஒன்று… மனைவிக்கு பரிசு கொடுக்கும் போது கூட கனிவாக பேசத்தெரியவில்லை. பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான். வேறு வழி! – கையிலிருக்கும் சாவியை ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்த மதுராவின் முகம் புன்னகையில் மலர்ந்திருந்தது.

“என்ஜாய்…” – அலைபேசி வழியாக காதில் கிசுகிசுத்த அவன் குரலில் சிந்தனையிலிருந்து மீண்டவள், “தேங்க் யூ…” என்றாள்.

“ஈவினிங் பார்க்கலாம்…” – அழைப்பை துண்டிக்கவே மனமில்லாதவன் போல் தெரிந்தான்.

“ம்ம்ம்…” – அவன் காட்டிய நெறுக்கத்தில் கிரங்கிப் போனவளுக்கு வாய்த்திறந்து பேச முடியவில்லை.

“ரெடியா இரு…”

“எங்க?”

“கேள்வி கேட்காம ரெடியா இரு…” – அவன் சொன்ன விதத்தில் அவள் களுக்கென்று சிரித்துவிட்டாள்.

“ஏன் சிரிச்ச?”

“நா உங்க வைஃப்ன்னு இப்போதானே சொன்னீங்க?”

“அதுக்கென்ன?”

“அப்புறம் ஏன், மிலிட்டரி கெர்னல் ஒரு ஜவான்கிட்ட பேசறமாதிரி பேசுறீங்க?”

“யு மீன் டு சே ஐம் ரூட்?” – ஆச்சர்யமாக கேட்டான்.

“ம்ம்ம்ம்…” – ஏறியிறங்கிய அவள் குரலில் துள்ளலும் மகிழ்ச்சியும் கலந்திருந்தது.

அவள் தன்னை கிண்டல் செய்கிறாள்… தன்னோடு இணக்கமாக பேசுகிறாள் என்பது அவன் அடிமனதில் ஓர் இனிமையான உணர்வை சுரக்கச்செய்தது. மனமெல்லாம் ஆனந்தத்தில் திளைக்க, அவனும் அவளை கேலி செய்தான்.

“நீ ஜவான் இல்ல… ஸ்ராபெரி… வரேன் வீட்டுக்கு… வந்து நா எவ்வளவு ரூட்ன்னு காட்டறேன்” என்றான். அந்த பக்கம் அவன் முகத்திலிருந்த சிரிப்பை இந்த பக்கம் இவள் உணர்ந்தாள்.

“வாங்க… வாங்க… ஸ்டராபெரி வெயிட்டிங்…” – அவள் கலகலவென்று சிரிக்க அவனும் அவளோடு இணைந்துக் கொண்டான்.

சொன்னது போலவே அன்று இரவு வீட்டிற்கு வந்ததும், ‘அகம்பிடித்தவனா நான்!’ என்று அவளிடம் பொய்யாய் சண்டை வளர்த்தான். “ரெடியா இருக்க சொன்னீங்களே!” என்று செல்ல கோபத்துடன் அவள் சினுங்க, “ரெடியாதா…ன் இருக்க சொன்னேன்” என்று அவன் விஷமப்பார்வை பார்க்க, அவர்களுக்குள் தேகம் தீண்டா ஊடல் இரகசியமாய் ஊடுருவியது. வார்த்தைகள் மறித்துப்போய்விட மூச்சுகள் மோதிக்கொண்டன. இடைப்புக காற்றுக்கும் இடமில்லை… அளவில்லா அன்யோன்யம் ஆட்கொண்டு அவர்களை திக்குமுக்காடச் செய்தது. இன்பத்தின் எல்லை உயிர் தீண்டி ஓய்ந்த போது அன்னை மடிசாயும் குழந்தையாய் அவன் மார்பில் துயில் கொண்டிருந்தாள் மதுரா. அவள் முகத்தில் சரிந்துவிழும் கூந்தலை காதோரம் ஒதுக்கிவிட்டு நெற்றியில் இதழ் பதித்த தேவ்ராஜின் முகம் புன்னகையில் மலர்ந்திருந்தது.

மதுராவுக்கென்று தனி கார் கிடைத்து பத்து நாட்களாகிவிட்டது. நினைத்த நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்… வரலாம்… சிறகு முளைத்த பறவை போல் மிகவும் சுதந்திரமாக உணர்ந்தாள். மனம் உற்சாகமாக இருந்தது… உற்சாகத்திற்குக் காரணம் சுதந்திரம் மட்டும் அல்ல… இன்னொரு சிறப்பு காரணமும் இருந்தது.

இப்போதெல்லாம் தனிமையில் நல்ல மனநிலையில் இருக்கும் போது அவளை, ‘ஸ்டராபெரி’ என்றுதான் அழைத்தான் தேவ்ராஜ். இது போதாதா… அவளுடைய உற்சாகத்திற்கு… மனமெல்லாம் பட்டாம்பூச்சி பறந்தது… அவனுடைய செல்ல சீண்டல்கள் அவளை அரைமயக்க நிலையிலேயே வைத்திருக்க, தரையில் கால் பாவாமல் சுற்றிக் கொண்டிருந்தாள்.

அப்போதுதான் திலீப்பின் திருமண தேதி முடிவு செய்யப்பட்டுவிட்டது என்கிற செய்தி தன் தாயின் மூலம் அவளுக்கு கிடைத்தது. அந்த நொடியே அவளுடைய உற்சாகமெல்லாம் பதட்டமாக உருமாறியது. ‘திலீப் பத்தி என்கிட்ட நீ பேசவே கூடாது’ – தேவ்ராஜின் குரல் அவள் செவியில் எதிரொலித்தது.

சம்மந்தம் இல்லாமல் தாயின் மீது கோவபம் வர, “இதை சொல்லத்தான் போன் பண்ணுனீங்களாம்மா?” என்று பட்டென்று கேட்டுவிட்டாள்.

மகளின் தொனியில் குழப்பமடைந்த பிரபாவதி, “பொண்ணு முடிவு பண்ணினப்போ உன்கிட்ட சொல்லலைன்னு நீதானே கோச்சுக்கிட்ட. இப்போ என்ன இன்ட்ரெஸ்ட் இல்லாதது மாதிரி பேசற? கல்யாணம் ஆனதும் புருஷன் பக்கம் சேர்ந்துக்கிட்டியா?” என்றாள் மனதில் தோன்றிய வருத்தத்தை மறைக்காமல்.

சட்டென்று நுனிநாக்கை கடித்துக் கொண்ட மதுராவின் மனதில் குற்ற உணர்ச்சி மேலெழுந்தது.

“சாரி ம்மா… அப்படி இல்ல… ஜஸ்ட் கேட்டேன்…” என்றாள் தயக்கத்துடன்.

“சரி சரி விடு… ஃபீல் பண்ணாத. நானும் டாடியும் பத்திரிகை கொடுக்க வரணும். முதல் பத்திரிகை அங்கதான் வைக்கணுமாம். தேவ் எப்போ ஃபிரீயா இருப்பாப்லன்னு கேட்டு சொல்லு. நேர்ல பார்த்துதான் கொடுக்கணும்” – பிரபாவதி பேசப்பேச மதுராவின் மனதிற்குள் பீதி கிளம்பியது.

“சரி ம்மா…” என்று முணுமுணுத்துவிட்டு அலைபேசியை அணைத்தவள் மாடிக்கு செல்லவே பயந்தாள். ஆனால் போய்தான் ஆகவேண்டும். கையிலிருக்கும் பாலை அவனிடம் கொடுத்தாக வேண்டுமே! இதயத்துடிப்பு அதிகமானது. வியர்வைமுத்துக்கள் முகமெல்லாம் பொரிந்துவிட்டன.

‘திலீப் பாய் பற்றி பேசவே கூடாது என்றிருக்கிறான். இப்போது இதை பற்றி எப்படி சொல்வது! கோவப்படுவானா! சொல்லவில்லை என்றால் ரகளையே செய்துவிடுவானே! கடவுளே!’ – அந்த ஒரு நொடியில் நரகத்தை உணர்ந்தாள் மதுரா. அவ்வளவு பயம்! பரிபூரண அன்பு இருக்கும் இடத்தில் பயத்திற்கே வேலையிருக்கக் கூடாது. அப்படியென்றால் அவர்களுக்குள் இருப்பது என்ன! எதை பற்றியும் சிந்திக்கும் நிலையில் அவள் இல்லை. இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்றும் புரியவில்லை. பூனை போல் படியேறி படுக்கையறைக்குச் சென்றாள்.

இருட்டிக் கிடந்த டெரஸில் ஆழ்ந்த சிந்தனையுடன் அமர்ந்திருந்தான் தேவ்ராஜ். அன்றொருநாள், வீட்டிற்கு வந்து மதில் சுவருக்கு வெளியே காத்துக்கிடந்ததை போல இன்றும் அலுவலகத்திற்கும் வந்து காத்திருந்தார் சிவமாறன். அவன் சந்திக்க விருப்பமில்லை என்று உறுதியாக கூறிய பின்பும் கூட, இப்படி பிடிவாதமாக அவர் பின்தொடர்வதை அவன் சிறிதும் விரும்பவில்லை. எதை சாதிக்க நினைக்கிறார்! இப்படியெல்லாம் நாடகம் நடத்தி அவனுடைய பரிதாபத்தை சம்பாதிக்க பார்க்கிறாரா! – பல்கலைக் கடித்தான்.

எட்டு வயதில், தன் தாய் மற்றும் சகோதரிகளுடன் சொந்த வீட்டை விட்டு அகதி போல் வெளியேறி மாமா வீட்டில் தஞ்சமடைந்தது நினைவில் வந்தது. விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்குத்தான். அதற்கு மேல் போனால் கசந்துவிடும். அப்படித்தான் அங்கும் நடந்தது. எத்தனை முக சுளிப்புகள்…! எத்தனை அவமானங்கள்! அனைத்திற்கும் அவர் மட்டும்தான் காரணம். கட்டிய மனைவியையும் பெற்ற குழந்தைகளையும் அனாதைகளாக தவிக்கவிட்டுவிட்டு ஒரு நடிகையுடன் கூத்தடித்தவர், இன்று பரிதாபத்தை தேடப் பார்க்கிறார். அவன் உள்ளம் எரிந்தது.

‘லைட் போடாம உட்கார்ந்திருக்கானே! ஏதும் மூட் ஆஃப்ல இருக்கானா!’ – தயங்கித்தயங்கி அவனிடம் நெருங்கினாள் மதுரா. அலுவலகத்திலிருந்து வந்ததிலிருந்தே கொஞ்சம் அமைதியாகத்தான் இருக்கிறான். என்ன விஷயமோ தெரியவில்லையே! – இன்னொரு பதைபதைப்பும் சேர்த்துக்கொள்ள உள்ளே நடுக்கம் பிறந்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவன் எதிரில் பால் கப்பை நீட்டினாள்.

அவளை நிமிர்ந்து பார்க்காமல் கப்பை வாங்கி கொண்டான். வழக்கமாக இந்த நேரத்தில் துறுதுறுப்பாக இருக்கிறவன், இன்று ஏன் எதையோ பறிகொடுத்ததை போல் அமைதியாக இருக்கிறான்! அவளுக்கு மனம் கேட்கவில்லை. ஆனால் விஷயம் தன் சம்மந்தப்பட்டதாக இருக்குமோ என்கிற பயமும் இருந்தது. எனவே அமைதியாக அறைக்கு திரும்பினாள்.

“எங்க போற? உட்காரு…” – இப்போதும் அவனுடைய பார்வை அவள் பக்கம் திரும்பவில்லை. ஆனால் அவளுடைய அருகாமை அவனுக்கு தேவை என்பது மட்டும் அந்த குரலில் தெரிந்தது. ‘ஓ… நம்ம மேல கோபம் இல்ல…!’ – மதுராவின் இறுக்கம் சற்று தளர அமைதியாக அவன் அருகே வந்து அமர்ந்தாள்.

“என்ன ஆச்சு? டென்க்ஷனா இருக்க மாதிரி தெரியறீங்க?” – நாசுக்காக கேட்டாள். அவள் கேட்ட விதமும் தொனியும் அவனுக்கு இதமாக இருந்தது. அவள் பக்கம் திரும்பி மென்மையாக புன்னகைத்தான்.

“இப்போ எந்த டென்ஷனும் இல்ல…” என்றான்.

“அப்போ முன்னாடி இருந்ததா?”

“இப்போ போயிடிச்சு”

“என்கிட்ட ஷேர் பண்ண மாட்டீங்களா?”

“ம்ஹும்…” – அவள் தோலை சுற்றி வளைத்தபடி ராகம் போட்டான்.

“ரியலி?”

“எஸ்…”

“ஐம் யுவர் வைஃப்…”

“அதனால?”

“எனக்கு உரிமை இருக்கு… உங்களோட கஷ்டம்… சந்தோஷம் எல்லாத்தையும் நான் ஷேர் பண்ணிக்க விரும்பறேன்” – அவள் தீவிரமாக சொல்வதை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன், “சந்தோஷம்…” என்று சிரித்தான்.

“அவ்வளவுதானா?”

“டோன்ட் ஒர்ரி… நீ கவலை படர அளவுக்கு எனக்கு எந்த கஷ்டமும் இல்ல…” – அவள் தனக்காக கவலைப்படுகிறாள் என்பது அவனை மகிழ்வித்தது. ஆனால் மதுராவின் மனம் மகிழவில்லை. அவன் தன்னிடம் மனம் திறக்கவில்லை என்பது அவளை வருத்தியது.

இருவரும் கணவன் மனைவியாக, சந்தோஷமாகத்தான் வாழ்ந்தார்கள். அவர்களுக்குள் அன்பு ஆழமாய் வேரூன்றியிருந்தது. ஒருவருடைய துக்கமும் மகிழ்ச்சியும் மற்றவரை பாதித்தது. ஆனாலும் ஒரு கனமான திரை இருவருக்குமிடையில் இருப்பதை அவள் நன்றாக உணர்ந்தாள். அதை கிழித்தெறிய வேண்டும் என்று பெரிதும் விரும்பினாள். ஆனால் அதற்கான வழிதான் தெரியவில்லை.

19 Comments

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nirmalasudhakar says:

    Sister i need full link of this story

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Madhini Jayakumar says:

    Hi Nithya
    கதை அருமையா இருக்கு …நான் உங்கள் கதைகளை புத்தகமா படிச்சிருக்கேன் எல்லாமே எனக்கு பிடித்த கதைகள் தான் சூப்பரா எழுதுரீங்க …இன்னிக்கு தான் இந்த தொடரை படிக்க ஆரம்பித்தேன் வைக்கவே மனசில்லை எல்லா எபிசோட்ஸையும் முடிச்சிட்டேன் ரொம்ப விறுவிறுப்பா போகுது கதை … தேவராஜ் மதுரா ஜோடி சூப்பர் அவன் என்ன நினைக்கிறான்னு கனிக்கவே கடினமான இருக்கு …வாழ்த்துகள் நித்யா🌹🌹🌹

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Hi Madhini Jayakumar,
      WElcome to Shapatham… Thank you so much… Stay with us and Happy reading…. 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    uma manoj says:

    பயத்தில் உண்மையான அன்பு அடிபட்டு போச்சு. .
    அப்போது காதல் எங்கே இருக்கிறது. .
    அவனின் முரட்டுத்தனமான காதல் அவள் இப்போ தான் உணர்ந்து இருக்காள் …
    திலீப் திருமணம் அறியும் போது இருக்கு…

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Uma… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    Strawberry’ sweet name….Dilip kalyanathai patri sonna enna nadakumo….

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Hadhija… )

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    உண்மைதான் அன்பு வைத்த நபரிடம் பயம் இருக்கக்கூடாதுதான்,மதுராவுக்கும் தேவ்வும் இப்போதுதானே திருமணமாகியுள்ளது ,ஒருவரையொருவர் புரிந்துகொள்ள நாளாகும்,தேவ் கோபத்தை கொஞ்சம் குறைத்தாலே மதுரா இன்னும் தேவ்விடம் நெருங்குவார்,அப்படி மதுரா நெருங்க நெருங்க தேவ்வும் மதுராவை நோக்கி நெருங்குவார்,அப்படி நெருங்கும்போது அந்த கனமான திரை விலகிவிடும்,அலை எப்ப ஓய்வது கடலில் எப்ப குளிப்பது என்பது மாதிரித்தான் தேவ்வின் கோபமும்.

    நன்றி

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Thadsayani… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya Priya says:

    ❤❤❤❤Update

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Priya… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sumi Rathinam says:

    Lovely update

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Sumi… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    barathy ruban says:

    Nice update

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Bharathy… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pon Mariammal Chelladurai says:

    கல்லில் நார் உரிக்க ஆசைப்படுற….நடக்கட்டும்.
    திலீப் கல்யாணம் இன்னும் என்ன கலாட்டாவை தரப்போகுதோ.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you ka… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    sujatha subbiah says:

    Nice update.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Sujatha… 🙂

You cannot copy content of this page