கனல்விழி காதல் – 42
10262
23
அத்தியாயம் – 42
திலீப்பின் திருமண விஷயத்தை பற்றி தேவ்ராஜிடம் பேச மதுரா பல முறை முயற்சி செய்தாள். ஆனால் சூழ்நிலை சரியாக அமையவில்லை. நாட்கள் தள்ளிச் செல்லச் செல்ல பிரச்சனைதான் அதிகமாகும். அதோடு திருமண தேதியை, வேறு யார் மூலமாவது அவன் தெரிந்துகொள்வதற்கு முன், தானே சொல்லிவிடுவதுதான் நல்லது என்று நினைத்து கணவனை அணுகினாள்.
கட்டிலின் தலைபுரத்தில், முதுகுக்கு அணைவாக சில தலையணைகளை முட்டுக்கொடுத்து, வாகாக நீட்டிய கால்களின் மீது மடிக்காணியினை வைத்து மும்மரமாகத் தட்டிக் கொண்டிருந்தவன், “திருட்டு பூனை முழிக்குது… என்ன மேட்டர்?” என்றான் திரையிலிருந்து கண்களை விலக்காமல்.
“பிஸியா இருக்கீங்களா?” – தயக்கத்துடன் கேட்டாள்.
“நாட் ரியலி..”
“ஒண்ணு சொல்லணும்…” என்றாள் மெல்லிய குரலில்.
“ஐம் வெயிட்டிங் ஸ்டராபி…” – குறும்பு கூத்தாடியது அவன் குரலில். நல்ல மனநிலையில் இருக்கிறன். இதை கெடுக்க வேண்டுமா என்று தயங்கினாள் மதுரா. ஒவ்வொரு முறையும் இப்படித்தான் தயங்கித்தயங்கி நாட்களை தள்ளிவிட்டாள். இன்றும் அதையே செய்தால் கடைசிவரை சொல்லவே முடியாது. மாயா இடைபுகுந்து அனைத்தையும் குழப்பிவிடுவாள். மூளை எச்சரிக்கை செய்தது. எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று ஓரிரு நொடிகள் யோசித்தவள், “அம்மா போன் பண்ணினாங்க…” என்று ஆரம்பித்தாள்.
“டெய்லி நடக்குறதுதானே? அதுல என்ன ஸ்பெஷல்?”
“ம்ம்ம்… ஸ்பெஷல் ஒண்ணும் இல்ல… திலீப் பாய் கல்யாணத்துக்கு தேதி முடிவு பண்ணியாச்சு. பத்திரிகை கூட அடிச்சாச்சு. உங்களுக்குத்தான் முதல்ல கொடுக்கணுமாம்… எப்போ வர சொல்லட்டும்?” – தயங்கித் தயங்கி ஒருவழியாக கேட்டு முடித்துவிட்டாள்.
அவன் முகத்திலிருந்த குறும்பும் மகிழ்ச்சியும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. ‘போச்சு… கத்தப்போறான்…’ – படபடப்புடன் அவன் பதிலுக்காக காத்திருந்தாள் மதுரா. அவளை ஆழ்ந்து பார்த்த தேவ்ராஜ், “அம்மாதான் வீட்ல இருப்பங்களே. எப்போ வேணுன்னாலும் வந்து கொடுத்துட்டு போக சொல்லு” என்றபடி லேப்டாப்பை மூடிவைத்துவிட்டு, சரிந்து படுத்து கண்களை மூடிக் கொண்டான்.
“உங்கள நேரா பார்த்து இன்வைட் பண்ணணும்ல…”
“அவசியம் இல்ல…” – மூடிய கண்களை திறக்காமலேயே கூறினான்.
“அது மரியாதையா இருக்காதே!”
“ப்ச்… யாருக்கு மரியாதையா இருக்காது?” – எரிச்சலுடன் அவளை திரும்பிப்பார்த்தான். இழுத்துப் பிடித்து வைத்திருந்த பொறுமை பறந்துவிட்டது. கடுகடுவென்றிருக்கும் அவன் முகத்தை பார்த்து, அதற்குமேல் அவளால் எதுவும் பேசமுடியவில்லை.
“இல்ல… ஒண்ணும் இல்ல… தூங்குங்க… சாரி…” – முணுமுணுத்தபடி மறுபக்கம் வந்து படுத்து கண்களை மூடிக் கொண்டாள். பெற்றோரிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்கிற சிந்தனை அவள் உறக்கத்தை கெடுத்தது.
***********************
திருமணத்திற்கு பிறகு தன்னுடைய அனைத்து சுதந்திரங்களும் பறிபோய்விட்டது என்று எண்ணிக் கொண்டிருந்த மதுரா இப்போது ஏரோபிக்ஸ் கிளாசில் இசைக்கு என்றார் போல் உடலை வளைத்து ஆடி கொண்டிருந்தாள். சிறகடிக்கும் பறவையாக தன்னை மீட்டுக் கொடுத்துவிட்ட கணவனின் மீது மனம்கொள்ளா அன்பு ததும்பியது. அன்றைய வகுப்பு முடிந்து வெளியே வரும் பொழுது திலீப் அவளுக்காக ரிசப்ஷனில் காத்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு தமயனைப் பார்த்ததும், “திலீப் பாய்…!” என்று மகிழ்ச்சியோடு அவனிடம் விறைத்தாள்.
“எப்படி இருக்க மது?”
“நா நல்லா இருக்கேன் பாய். நீங்க எப்படி இருக்கீங்க?”
“ம்ம்ம்…. நல்லா இருக்கேன்”
“எம்மேல இன்னமும் கோவமா பாய்…? ஐம் சாரி…”
“ச்சீ ச்சீ… உம்மேல எனக்கு என்ன கோவம்”
“போன் பண்ணிகிட்டே இருந்தேன். நீங்க எடுக்கவே இல்லையே!”
“உம்மேல கோவம் இல்ல மது. கொஞ்சம் அப்செட்டா இருந்தேன். யாரோட கால்சையுமே அட்டென்ட் பண்ணல. இப்போ உன்ன பார்க்கறதுக்காகத்தானே வந்திருக்கேன். வா… ஏதாவது சாப்பிடறீயா?”
“பாய்… இப்போதான் கஷ்டப்பட்டு ஹண்ட்ரட் கேலரீஸ் பார்ன் பண்ணிட்டு வர்றேன்”
“தட்ஸ் ஓகே… உன்கூட சேர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. வா… உன்கிட்ட பேசணும்” – தங்கையை அழைத்துக் கொண்டு பக்கத்திலிருக்கும் ஐஸ்கிரீம் பார்லருக்குச் சென்றான்.
“போட்டோ பார்த்தியா?” – கையிலிருக்கும் ஐஸ் கிரீமை சுவைத்தபடி கேட்டான். அவன் எந்த புகைப்படத்தைப் பற்றி கேட்க்கிறான் என்பதை பிரிந்துக் கொண்டவள்,
“ஷி ஐஸ் வெரி ப்ரிட்டி… டால் மாதிரி இருக்காங்க பாய்…” என்று புன்னகையுடன் கூறினாள்.
“பார்த்தியா?” – திலீப்பின் கண்கள் மின்னின.
“ம்ம்ம்… அம்மா போட்டோ அனுப்பியிருந்தாங்க”
“ஓ…! உனக்கு அவளை பிடிச்சிருக்கா?” – பூரிப்புடன் கேட்டான்.
“நிச்சயமா பாய்… அவ்வளவு அழகா இருக்காங்க. யாருக்குத்தான் பிடிக்காது”
“சரி… ஒரு நிமிஷம்… நான் போன் பண்ணி தர்றேன் நீ பேசு. நீங்க ரெண்டு பேரும் நல்ல ஃபிரண்ட்ஸா இருக்கணும்னு நான் ஆசைப்படறேன்” என்று கூறிவிட்டு தன்னுடைய வருங்கால மனைவியை அழைத்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு தங்கையை பற்றி கூறி அவளிடம் அலைபேசியை கொடுத்தான்.
தேஜா பார்ப்பதற்கு மட்டும் அல்ல. பழகுவதற்கும் மிகவும் இனிமையானவள். முதல் முறை பேசும் பொழுதே பல வருடம் பழகிய தோழியிடம் பேசுவது போல் உணர்ந்தாள் மதுரா. மாயாவிடம் கிடைக்காத நட்பும் பாசமும் தன் மனைவியிடமிருந்து மதுராவிற்கு கிடைக்க வேண்டும் என்று திலீப் விரும்பினான். இறைவனின் கருணையால் அது கிடைத்துவிட்டது. எந்தவிதமான விலகளோ… வேற்றுமையோ இல்லாமல் மகிழ்ச்சியோடு தேஜாவிடம் பேசிக் கொண்டிருக்கும் தங்கையைப் பார்த்து திலீப்பின் மனம் நிறைந்தது.
மதுரா தேஜாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே மேஜை மீதிருந்த அவளுடைய போன் சிணுங்கியது. அவளிடம் பேசியபடியே அழைப்பது யாரென்று பார்த்தாள்.
‘தேவ்ராஜ்!’ – போனை திருப்பி அண்ணனிடம் காட்டினாள். முறைத்த முகத்துடன் திரை முழுவதையும் ஆக்கிரமித்திருந்தான் தேவ்ராஜ்.
‘எடுத்து பேசு’ – என்பது போல் சைகை காட்டிவிட்டு, தன்னுடைய அலைபேசியை கேட்டு கையை நீட்டினான்.
“ஆங்… தேஜா… நீங்க அண்ணன்கிட்ட பேசுங்க” என்று அலைபேசியை திலீப்பிடம் கைமாற்றிவிட்டு, கணவனின் அழைப்பை ஏற்றாள்.
“எங்க இருக்க?” – எடுத்ததுமே முதல் கேள்வி இதைத்தான் கேட்டான். சுருக்கென்று தைத்தது மதுராவின் மனம். அவன் கேட்ட விதம் அவளுக்கு சிறிதும் பிடிக்கவில்லை.
“ஏன் கேட்கறீங்க?” – மெல்ல முணுமுணுத்தாள்.
தேஜாவோடு பிஸியாக இருந்த திலீப், இவர்களுடைய சம்பாஷணையை கவனிக்க வாய்ப்பில்லை. ஆனாலும் எவ்வளவு முடியுமே அவ்வளவு தூரம் குரலை தாழ்த்தியிருந்தாள் மதுரா. அண்ணனாக இருந்தாலும், தங்களுடைய அந்தரங்க சண்டைகளை பற்றி அவன் தெரிந்துகொள்வதில் அவளுக்கு விருப்பம் இல்லை.
“கேள்வி கேட்டா பதில் சொல்லு. அதை விட்டுட்டு இன்னொரு கேள்வி கேட்காத” எறிந்துவிழுந்தான் தேவ்ராஜ்.
“ஏரோபிக்ஸ் கிளாஸ் வந்தேன்…” – “ஐ-ஃபிரூட்ல தான் ஏரோபிக்ஸ் கிளாஸ் நடக்குதா?” – அவள் முடிப்பதற்குள் இடையிட்டு சீறினான்.
விக்கித்துப் போனாள் மதுரா. ஓரிரு நிமிடங்கள் அவளால் எதுவும் பேசவே முடியவில்லை. ‘பார்லரின் பெயர் முதற்கொண்டு சரியாக சொல்கிறான் என்றால்!’ “வேவு பார்க்கறீங்களா?” என்றாள் கட்டுப்படுத்த முடியாத கோபத்துடன்.
சட்டென்று திலீப்பின் கவனம் தங்கையிடம் திரும்பியது. கணவன் மனைவியின் பேச்சை காதில் வாங்க வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. ஆனால் தங்கையின் முகமாற்றமும் குரல் மாற்றமும், அவன் புருவ மத்தியில் முடிச்சிடச் செய்தது. “அப்புறம் பேசறேன்” என்று சொல்லி தேஜாவின் அழைப்பை துண்டித்துவிட்டு தங்கையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீ ஏரோபிக்ஸ் கிளாஸ்ல இருக்கேன்னு சொன்ன…” – சிடுசிடுத்தான் தேவ்ராஜ்.
“இருக்கேன்னு சொல்லல…” என்று அழுத்தமாக கூறியவள், தொடர்ந்து “ஏரோபிக்ஸ் கிளாஸ் வந்தேன். திலீப் பாய் என்னை பார்க்க வந்தாங்க. ரெண்டு பேரும் பக்கத்துல இருக்க ஐஸ் கிரீம் பார்லருக்கு வந்தோம்… அப்படின்னு சொல்ல வந்தேன். நீங்க என்னை முடிக்க விடல” என்றாள் கோபத்தை மீறிய துக்கத்துடன்.
சட்டென்று அமைதியாகிவிட்டான் தேவ்ராஜ். அவனுடைய பதிலுக்காக சற்று நேரம் காத்திருந்த மதுரா, அந்த பக்கத்திலிருந்து மூச்சுவிடும் சத்தம் கூட வராததால், “வேற ஏதாவது கேட்கணுமா?” என்றாள் குத்தலாக.
“ம்ம்ம்… இல்ல… வேற ஒண்ணும் இல்ல…” – தடுமாற்றம் தெரிந்தது அவன் குரலில்.
“ஓகே தென்… பை…” – “ஹேய்…! மதுரா… ஒன் மினிட்…” – அழைப்பை துண்டிக்க எத்தனித்தவளை அவசரமாகத் தடுத்தான்.
“………………” – மதுரா மெளனமாக இருந்தாள்.
“ஐ நோ… நீ… திலீப் கூடத்தான் பேசிகிட்டு இருக்கேன்னு எனக்கு தெரியும். நா வேற எதையும் நெனச்சு உனக்கு கால் பண்ணல… அவன் உன்னோட அண்ணன்தானே… நம்ம வீட்டுக்கு வந்து உன்கிட்ட பேசலாமேன்னுதான்… ரியலி… நா வேற ஒண்ணும் நினைக்கல மதுரா…” – சிரமப்பட்டு வார்த்தைகளை கோர்த்தான். அவனுடைய குரலில் வருத்தம் இருந்தது.
“ஓகே…” – ஆரா மனதுடன் அழைப்பை துண்டித்தாள் மதுரா.
“என்னவாம்?” – முகம் கடுக்க கேட்டான் திலீப்.
“நத்திங்… நத்திங் பாய்…” புன்னகைக்க முயன்றாள். தன் தங்கை மகிழ்ச்சியாக இல்லையோ என்கிற எண்ணத்தில் திலீப்பின் முகம் கறுத்தது.
அன்று மாலை வீட்டிற்கு வரவே தேவ்ராஜிற்கு தயக்கமாக இருந்தது. அவள் முகத்தை பார்க்க சங்கடப்பட்டான். முதல் முறையாக அவள் தன்னை தவறாக நினைத்திருப்பாளோ என்று எண்ணியவனுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு புதுவித உணர்வு… என்ன இது! ஏன் இப்படி உணர்கிறோம் என்று யோசித்தவன் திடுக்கிட்டான்.
‘பயப்படுகிறோமா! போயும் போயும் மதுராவிற்கு!’ – குழப்பத்துடன் நெற்றியை நீவினான். மேஜையிலிருந்த தண்ணீர் நிறைந்த கண்ணாடி தம்ளர் அவளை பார்த்து கேலியாக கண்ணடித்தது. எரிச்சலுடன் அதை எடுத்து மடமடவென்று காலி செய்துவிட்டு எழுந்தான்.
‘யாருக்கு யாரு பயப்படறது! ஹா…’ – அகங்காரமாக எண்ணியவன் விறுவிறுவென்று அலுவலகத்திலிருந்து வெளியேறி காரில் வந்து ஏறினான்.
தான் உண்டு தன் வேலை ஊன்று என்று அலமாரியை குடைந்துக் கொண்டிருந்த மதுரா அவன் உள்ளே நுழைந்ததை அறிந்திருந்தும் கண்டுகொள்ளவில்லை. கையிலிருந்த கோட்டை கட்டிலில் கடாசியவன், அலமாரிக்குச் சென்று வேண்டுமென்றே அவளை உரசிக் கொண்டு மாற்றுடையை தேடினான்.
அழகாக அடுக்கி வைத்த துணிகளையெல்லாம் தாறுமாறாக கலைத்துக் கொண்டிருக்கும் கணவனை முறைத்துப் பார்த்தவள், “என்ன வேணும்?” என்றாள் வெடுவெடுப்பாக.
“டிரஸ்…” – அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு தோளை குலுக்கினான்.
“அதை எதுக்கு இங்க வந்து தேடறீங்க. உங்க ஷெல்ஃப் அந்த பக்கம்”
“ஓ! இது ஃபுல்லா உன்னோட ஏரியாவா? சா…ரி…” என்றான் அந்த ‘சாரி’யை அழுத்தி ராகம் போட்டபடி.
அவளுக்கு புரிந்தது…. ‘செஞ்ச தப்புக்கு நேரடியா மன்னிப்புக் கேட்டா கெளரவம் குறைஞ்சிடும்… ஜாடையா கேட்பாங்க… நாம உடனே பல்லை காட்டணும்…’ – எள்ளும் கொள்ளும் வெடித்தது அவள் முகத்தில்.
“சரி வா…. வந்து எனக்கு ஒரு ட்ரெஸ்ஸை எடுத்து கொடு ப்ளீஸ்…” என்றபடி கட்டிலில் சாய்ந்தான். ஷூவை கழட்டாத கால்கள் தரையில் பதிந்திருக்க, கட்டிலில் மல்லார்ந்து கிடந்தவனின் கைகள் இரண்டும் பின்னந்தலைக்கு கீழே தலையணையாய் மாறியிருந்தது. அவள் அவனை திரும்பிக் கூட பார்க்கவில்லை.
“மதுரா… நாந்தான் சாரி சொல்லிட்டேனே. இன்னமும் ஏன் கோவமா இருக்க?” – சட்டென்று அவனை திரும்பிப் பார்த்தவள், “எதுக்கு சாரி சொன்னீங்க?” என்றாள்.
‘பாவி! எல்லாத்தையும் விளக்கமா கேட்பா’ – திருத்திருத்தவன், “உன்னோட ஷெல்ஃபை காலச்சுவிட்டுட்டேனே… அதுக்குத்தான்…” என்றான்.
“சோ… என்னை ஸ்பை பண்ணினதுக்கு நீங்க வருத்தப்படல?” – கரகரத்த குரல் உடைந்துவிட துடித்தது.
குற்ற உணர்வுடன் உதட்டை மடித்துக் கடித்தவன், மெல்ல மனைவியை திரும்பிப் பார்த்தான். அவளுடைய பார்வை அவனுடைய கண்களுக்குள் ஊடுருவியது.
“நா உன்ன ஸ்பை பண்ணல ஸ்டராபி… நம்பு…” – அவளிடம் கெஞ்சியது அவன் குரல். அவள் கண்களில் கண்ணீர் பளபளத்தது. சட்டென்று எழுது அவளிடம் நெருங்கியவன், அவள் மென்கரத்தை தன் கைகளுக்குள் கொண்டுவந்து வருடிக் கொடுத்தபடி “ப்ளீஸ்… பீல் பண்ணாத…. உன்ன புண்படுத்தணும்னு நா நினைக்கல. நீ சேஃபா இருக்கியான்னு எனக்கு தெரியணும். அவ்வளவுதான்… தனியா ட்ரைவ் பண்ணற இல்ல… ஐம் சாரி…” என்றான்.
வெடுக்கென்று அவனிடமிருந்து தன்னுடைய கையை உருவிக் கொண்டவள், “எப்போதிலிருந்து இப்படி?” என்றாள் ஆத்திரம் அடைக்க.
பதில் சொல்ல சங்கடப்பட்டு ஓரிரு நொடிகள் அமைதியாக இருந்தவன், “புது கார் வாங்கினதுலேருந்து” என்றான் மெல்ல.
“அப்படின்னா! நா வெளியில போக ஆரம்பிச்சதுலேருந்து…! அவ்வளவு நம்பிக்கை எம்மேல…”
“காட்…! ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிற? சிட்டிக்குள்ள நீ புதுசா ட்ரைவ் பண்ணற. நா எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்?” – ஆற்றாமையுடன் கேட்டான்.
அவள் இல்லை என்பது போல் தலையசைத்தாள். “நா நம்ப மாட்டேன்”
அந்த ஒரு வார்த்தையில் காயப்பட்டுப் போனான் தேவ்ராஜ். “நீ என்னைக்கு என்ன நம்பியிருக்க” – கடுகடுவென்று மாறியது அவன் முகம்.
“உங்களுக்கு கொஞ்சம் கூட எம்மேல நம்பிக்கை இல்ல…” – கண்ணீர் வடிந்தது.
“நோ…” – உடனடியாக மறுத்தான். அவனுக்குள் ஒருவித படபடப்பு ஊடுருவியிருந்தது. அவளை எப்படியாவது சமாதானம் செய்தே ஆக வேண்டும் என்கிற தவிப்பு எழுந்தது.
“எஸ்… நீங்க என்னை நம்பல… நீங்க என்னை மதிக்கல…” – ஆத்திரத்துடன் மொழிந்தவளின் நுனி மூக்கு சிவந்துவிட்டது… குரல் நடுங்கியது… கண்ணீர் தாரை தாரையாய் வடிந்தது.
சட்டென்று அவளை இழுத்து, “பைத்தியம்…” என்று இறுக்கி அணைத்துக் கொண்டான். அவனுடைய இதயத்துடிப்பை அவளால் உணர முடிந்தது. தன்னை மறந்து ஓரிரு நொடிகள் அவன் அணைப்பில் கட்டுண்டு நின்றவள் பின் தன்னிலைக்கு மீண்டு விலக முயன்றாள். அவன் விடவில்லை.
“விடுங்க…”
“முடியாது”
“ஐ ஹேட் யு…” – ‘நா உங்கள வெறுக்கறேன்’ என்று சொல்லிக் கொண்டே அவனுக்குள் அடங்கினாள்.
“நானும்தான்…” – அவளை இன்னும் இறுக்கமாக அனைத்துக் கொண்டே கூறினான்.
“அப்புறம் எதுக்கு என்னை இப்படி இறுக்கமா பிடிச்சு வச்சிருக்கீங்க?”
“தெரியல… பிடிச்சுக்கணும்னு தோணுது….” – அவள் ஊடலாக அவன் நெஞ்சில் குத்த அவன் மகிழ்சசியாக சிரித்தான்.
*******************
ஞாயிற்று கிழமைகளில் தேவ்ராஜ் கண்டிப்பாக வீட்டில்தான் இருப்பான் என்பதை கணக்கில் கொண்டு மதுரா தன் பெற்றோரை அன்று பத்திரிகை கொடுக்க வர சொன்னாள். இராஜேஸ்வரியும் அதையே ஆமோதித்ததால் நரேந்திரமூர்த்தி தன் மனைவி பிரபாவதியோடு ‘பாலி ஹில்’ வந்தார். வழக்கம் போல் இராஜேஸ்வரி அண்ணனையும் அவர் மனைவியையும் பிரமாதமாக வரவேற்க, உள்ளே இருக்கும் பதட்டத்தை மறைத்துக் கொண்டு உற்சாகமாக பெற்றோரை எதிர்கொண்டாள் மதுரா. வெகு நேரமாகியும் தேவ்ராஜ் கீழே வரவே இல்லை என்பது நரேந்திரமூர்த்தி தம்பதிக்கு உறுத்தலாக இருந்தாலும், மகளின் மனம் கோணக்கூடாதே என்பதற்காக எதையும் காட்டிக்கொள்ளாமல் சிரித்துப் பேசிக் கொண்டிருதார்கள். திருமண வேலைகள், சடங்குகள் மற்றும் பெண் வீட்டைப் பற்றிய சமாச்சாரங்கள் அனைத்தையும் பேசி முடித்த பிறகு வேறு வழியில்லாமல், “தேவ் எங்கம்மா?” என்றார் நரேந்திரமூர்த்தி.
“மேல… ஒரு மீட்டிங் டாடி… போன்ல… வர சொல்றேன்… பேசிட்டு இருங்க” – தடுமாற்றத்துடன் கூறிவிட்டு மாடிக்குச் சென்றாள். டெரஸில் உள்ள செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தான் தேவ்ராஜ்.
“அப்பம்மா வந்து அரைமணிநேரம் ஆச்சு…” – அதிருப்தி அப்பட்டமாய் தெரிந்தது அவள் குரலில்.
“சோ வாட்?” – அலட்சியமாக கேட்டான் தேவ்ராஜ். அவள் கொண்டுவந்த செய்தி… செய்தியை சொன்ன விதம்… இரண்டையுமே அவன் ரசிக்கவில்லை.
“அவங்க உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணறாங்க”
“எதுக்கு?” – செடிக்கு நீர் ஊற்றுவதை நிறுத்திவிட்டு அவள் பக்கம் திரும்பினான்.
“பத்திரிக்கை கொடுக்க வந்திருக்காங்க. கீழ வந்து அவங்களை ரிஸீவ் பண்ணுங்க” – கெஞ்சுதலாக கூறினாள்.
“அம்மாகிட்ட கொடுத்துட்டு பேகட்டும்னு அன்னைக்கே உன்கிட்ட சொல்லிட்டேன்ல. அவங்கள ஏன் இன்னைக்கு வர சொன்ன? கார்னர் பண்ணுறியா என்னை?” – கைமுஷ்ட்டி இறுக நாசியை விடைத்துக் கொண்டு சீறினான்.
மதுரா புதிராக அவனை பார்த்தாள். அவனுடைய விசித்திரமான நடவடிக்கைக்கு காரணமே புரியவில்லை அவளுக்கு. “என்ன பிரச்சனை உங்களுக்கு? ஏன் இப்படி நடந்துக்குறீங்க?” என்றாள் தளர்ந்துபோய்.
அவளை முறைத்துப் பார்த்துவிட்டு விட்ட வேலையை மீண்டும் தொடர்ந்தான் தேவ்ராஜ்.
“தேவ் ப்ளீஸ்… ப்ளீஸ்… அவங்கள இன்ஸல்ட் பண்ணாதீங்க…” – கெஞ்சினாள். அவன் அவளை திரும்பியும் பார்க்கவில்லை.
“என்னால உங்கள புரிஞ்சுக்க முடியல” – அப்போதும் அவன் திரும்பவில்லை.
“தேவ்… என்னை பாருங்க… நா சொல்றத புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க” – அவள் குரல் உடைந்தது.
மெல்ல அவள் பக்கம் திரும்பியவன், “உன்னோட நேரத்தை வீணாக்காத. நா இப்படித்தான்… இது என்னோட சுபாவம்” என்று தோள்களை குலுக்கினான்.
‘சுபாவமா!’ – அவளால் நம்பமுடியவில்லை. தொடர்ந்து குறிவைத்து அவளுடைய பெற்றோரை அவமதிக்கிறான். கேட்டால் சுபாவம் என்கிறான். இதுதான் அவனுடைய சுபாவமா! அவள் வாய்பிளந்தபடி அவனை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, “கீழ போயி அவங்கள சீக்கிரம் இங்கேருந்து அனுப்பு… அப்புறம்… இன்னொன்னு… இனி யாரும் என்னை தேடி மேல வர கூடாது. குறிப்பா அம்மா…” என்றான் எச்சரிக்கும் பார்வையுடன்.
மதுராவின் கண்களில் கண்ணீர் திரண்டது. “போ…” – விரட்டினான். ஓரிரு நொடிகள் அவனை வெறித்துப் பார்த்த மதுரா, கண்களை இறுக்கமாக மூடி தன்னுடைய உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவந்து, நீண்ட பெருமூச்சுடன் அங்கிருந்து வெளியேறினாள்.
கீழே வந்து அவன் முக்கியமான மீட்டிங்கில் இருப்பதாக சொல்லி சமாளித்தாள். யாரும் நம்பவில்லை. ஆனால் நம்பியது போல் பாவனை செய்து கொண்டார்கள். மதுராவின் மனம் கோணக்கூடாதே! கனத்த மனதுடன், பூ பழ தட்டில் பத்திரிக்கையை வைத்து இராஜேஸ்வரியிடம் கொடுத்துவிட்டு கிளம்பினார்கள்.
அவர்கள் புறப்பட்ட பிறகு மருமகளிடம், “அப்படி என்ன மீட்டிங்ல இருக்கான்! வீட்டுக்கு வந்தவர்களை வாங்கன்னு கூட கூப்பிட நேரமில்லாத அளவுக்கு?” என்று எரிச்சலுடன் கேட்டாள் இராஜேஸ்வரி.
அவளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. “எனக்கு தெரியல…” என்று முணுமுணுத்துவிட்டு மாடிக்கு வந்து மெத்தையில் ஏறி முழங்காலை கட்டிக்கொண்டு தலை சாய்ந்து அமர்ந்தாள்.
அவனுக்கு என்னதான் பிரச்சனை என்கிற சிந்தனை அவள் மண்டைக்குள் ஓடியது. அவளை திருமணம் செய்துகொள்வதில் அவனுக்கு ஆரம்பத்திலிருந்தே விருப்பமில்லை. சூழ்நிலையின் கட்டாயத்தினால்தான் அவர்கள் இணைந்தார்கள். ஆனாலும் திருமணத்திற்கு பிறகு மாறிவிட்டான் தானே! அவளோடு சந்தோஷமாகத்தானே வாழ்கிறான்! ஒருவேளை இல்லையோ! – அவளுக்கு சந்தேகம் வந்தது.
‘இல்லையில்லை… நிச்சயமாக இல்லை… ‘ஸ்டராபி… ஸ்டராபி…’ என்று குழைகிறானே! அது அன்புதானே! ஒருவேளை இல்லையா! நம்மை ஈர்க்க வேண்டும் என்பதற்காக நடிக்கிறானா! – குழம்பியவளின் கண்களில் கண்ணீர் வடிந்தது. அவள் மனம் அவன் பக்கம் சாய்ந்துவிட்டது. அதனால்தானோ என்னவோ அவன் மனதில் தனக்கு இடம் இருக்கிறதா என்கிற சிந்தனையும்… இல்லையோ என்கிற பயமும் அதிகமாகிவிட்டது. போராடும் உணர்வுகளை வெல்ல கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள். அப்போதும் அவனுடைய இறுகிய முகம்தான் அவளுக்கு தெரிந்தது. முகம் இறுகித்தான் இருந்தது… ஆனால் கண்கள்! அது வேறு கதை சொன்னது… அது எப்படி பொய்யாக முடியும்! கண்கள் பொய் சொல்லாது என்றால் அவள் மனதை எப்படி அவனால் காயப்படுத்த முடிந்தது! அவளுடைய பெற்றோரை எப்படி அவமதிக்க முடிந்தது! – யோசித்து யோசித்து தலைசுற்றியது.
**********
இரண்டு சிறுவர்கள்… ஒருவனுக்கு எட்டு வயது, மற்றொருவனுக்கு ஆறு வயது… ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டார்கள். ஒருவன் அடித்தான்… மற்றொருவன் குத்தினான்… அவன் பதிலுக்கு உதைத்தான்… இவன் சட்டையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளினான். இருவரும் கட்டிப்புரண்டார்கள்… வீட்டிலிருந்த பெரியவர்கள் இருவரையும் ஆளுக்கொரு திசையில் இழுத்து பிரித்துவிட்டார்கள்.
தன் மகனை கையில் பிடித்துக் கொண்டு, “ரௌடி பய மாதிரி ரகள பண்ணற! கொன்னுடுவேன் ராஸ்கல்” என்று நாத்தனார் மகனைப் பார்த்து கண்களை உருட்டி சீறினாள் பிரபாவதி.
“அவன்தான் முதல்ல வம்பிழுத்தான்” – தேவ்ராஜ் பதிலுக்கு முறைக்க, “வாயை மூடுடா” என்று மகனை இரண்டு அடி போட்டு அடக்கினாள் இராஜேஸ்வரி.
“அவன் வம்பிழுத்தா என்கிட்டத்தான் வந்து சொல்லணும். சின்ன பையன நீ எதுக்குடா அடிச்ச?”
“அவன்தான் முதல்ல அடிச்சான்” – “பேசாதேன்னு சொல்றேன்ல… எதுக்குடா பதிலுக்கு பதில் பேசற?” – ரோஷம் பொறுக்க முடியாமல் மகனை கன்னத்தில் பளார் பளாரென்று அறைந்தாள் இராஜேஸ்வரி.
“ம்மா… நா ஒண்ணும் பண்ணலாமா… அவந்தாம்மா…” – “பேசாத… நிறுத்து… நிறுத்து…” – மகனை பேசவிடாமல் அடி நொறுக்கினாள். அவ்வளவு அடியையும் வாங்கி கொண்டு பிரபாவதியையும் திலீப்பையும் முறைத்தபடி நின்றான் தேவ்ராஜ்.
“எப்படி நிக்கிறான் பாரு… அவ்வளவு நெஞ்சழுத்தம். அப்படியே அப்பன் புத்தி…” பிரபாவதி சொல்லி முடிப்பதற்குள் எங்கிருந்துதான் வந்ததோ அவனுக்கு அவ்வளவு கோபம்…! சட்டென்று கையில் கிடைத்த எதையோ எடுத்து தூக்கி அடித்தான். நேராகச் சென்று பிரபாவதியின் நெற்றியை பிளந்தது அந்த பீங்கான் பூக்குவளை. இரத்தம் கொட்டியது. இராஜேஸ்வரி பதறி தவித்தாள். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றவளை உதறித்தள்ளினாள் பிரபாவதி.
“உன் புருஷனுக்கு மேல பத்து மடங்கு வருவான் உன் மகன். கொலைகாரன்… போ இங்கேருந்து…” கத்தினாள்.
“சாரி அண்ணி… ப்ளீஸ்… ரெத்தம் போகுது… ஹாஸ்ப்பிட்டல் வாங்க… அண்ணி ப்ளீஸ்…” – கெஞ்சி கதறினாள். அவள் சிறிதும் இளகவில்லை. வேலைக்காரியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றாள்.
அனைவருக்கும் முன் கொடூர குற்றவாளியாக நின்றான் தேவ்ராஜ். அன்று இரவு நரேந்திரமூர்த்தி, “பிள்ளையா வளர்த்திருக்க! ரௌடி மாதிரி பிஹேவ் பண்ணியிருக்கான். எப்படி இவனை ஒழுங்குபடுத்தி கொண்டுவர போற?” என்று இராஜேஸ்வரியை பயங்கரமாக திட்டினார்.
தாய் கூனி குறுகி கண்ணீர் விடுவதை கண்ட மகனின் மனம் எரிந்தது. இப்போதும் தன் மீது எந்த தவறும் இல்லை என்றே அவன் நினைத்தான். மூச்சுக்கு முன்னூறு முறை ‘அப்பன் மாதிரி… அப்பன் மாதிரி…’ என்று ஒரு ஒழுக்கம்கெட்ட தந்தையை ஒப்பிட்டு சொல்லிக் கொண்டே இருப்பதை எவ்வளவு நாட்களுக்குத்தான் பொறுத்து கொண்டிருப்பான் ஒரு சிறுவன்.
தாயிடமிருந்து கற்றுக்கொண்ட அதே வார்த்தையைத்தான் திலீப்பும் சொன்னான். இவன் முறைத்தான். அவன் அடித்தான். இவன் திருப்பி அடித்தான். சண்டை பெரிதாகி மொத்த பழியும் இவன் மீது விழுந்துவிட, பெற்றவள் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். தேவ்ராஜ் அழுதான்… அன்றுதான் அவன் கடைசியாக அழுதது. அடுத்த ஒரு வாரத்திலேயே இராஜேஸ்வரி குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனியாக வந்துவிட்டாள். நரேந்திரமூர்த்தி தடுத்துப் பார்த்தார். அவள் கேட்கவில்லை. அவருக்கும் அது வசதியாகிவிட்டது. தங்கைக்கும் மனைவிக்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவிக்க தேவையில்லையல்லவா. எனவே அமைதியாக இருந்துவிட்டார். எவ்வளவு நல்லவர்! – பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த தேவ்ராஜின் உதடுகள் இகழ்ச்சியில் வளைந்தன.
பிரபாவதியை அவனுக்கு சுத்தமாக பிடிக்காது. அவளுடைய மறு பிரதிதான் திலீப். அன்றிலிருந்து இன்றுவரை அவனுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருப்பவன். அவனுடைய தங்கையின் மனதை கலைத்தவன். ஆணவம் பிடித்தவன். அவனுடைய திருமணத்தை இவன் கொண்டாடுவதா! ஹா… நடக்காது… – தனக்குத்தானே உறுதியெடுத்துக் கொண்டான்.
வெகுநேரம் டெரஸிலேயே அமர்ந்துவிட்ட தேவ்ராஜ், மீண்டும் அறைக்குள் வரும் பொழுது அவள் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தாள். சற்று நேரம் அவளை பார்த்துக்கொண்டே நின்றவன், தலையை உலுக்கிக் கொண்டு அலமாரியில் எதையோ தேடினான். அறையில் அரவரம் கேட்டு நிமிர்ந்து பார்த்த மதுரா கணவனை கண்டதும் சீற்றத்துடன், “அப்படி என்ன என்னோட அப்பாம்மா மேல உங்களுக்கு வெறுப்பு?” என்றாள்.
சட்டென்று அவளை திரும்பி முறைத்தவன் அவளுடைய குடும்பத்தின் மீது அவ்வளவு ஆத்திரத்தில் இருந்தான். அதையெல்லாம் அவளிடம் கொட்டிவிடக் கூடாது என்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மீண்டும் தன் வேலையை தொடர்ந்தான்.
“எனக்கு தெரியும். இது எல்லாமே என்னாலதான். என்னை பிடிக்கலைன்னா டைவர்ஸ் கொடுத்துடுங்க. உங்களுக்கு பிடிச்சமாதிரி யாரையாவது பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க. நா எதுக்கும் தடையா இருக்க மாட்டேன். தேவையில்லாம என்னோட அப்பாம்மாவை அவமான படுத்தாதீங்க” என்றாள்.
அவ்வளவுதான்… ஜிவுஜிவுவென்று சிவந்தது அவன் முகம். கண்களில் ரெத்தம் தெறித்தது. “அடிக்கடி மாப்பிள்ளையை மாத்தறது உனக்கு வேணுன்னா பழக்கமா இருக்கலாம். எனக்கு அதெல்லாம் தெரியாது. சாகறவரைக்கும் ஒருத்திதான்” என்றான் காட்டமாக. கூடை நெருப்பை அள்ளித் தலையில் கொட்டியது போல் துடித்துப் போனாள் மதுரா. என்ன வார்த்தை சொல்லிவிட்டான்!
அவன் சொன்னதை முழுமையாகக் கூட கிரகிக்க முடியவில்லை அவளால். ‘அடிக்கடி மாப்பிள்ளையை மாத்தறது உனக்கு வேணுன்னா பழக்கமா இருக்கலாம்’ என்ற இடத்திலேயே அவள் மூளை மரத்துப்போய்விட்டது. ‘சொல்லிக் காட்டிவிட்டானே!’ – அப்படியே உறைந்துப்போய் அமர்ந்துவிட்டாள்.
‘அடிக்கடி மாப்பிள்ளையை மாற்றுகிறோமா! அதற்கு என்ன அர்த்தம்!’ – வலித்தது அவள் இதயம். மேலே சிந்திக்க முடியவில்லை.
“டைவர்ஸ் எல்லாம் அவ்வளவு ஈஸியா போச்சு உனக்கு? அப்பன் சுயநலம் புடிச்சவன்… அம்மா ஒரு பஜாரி… அப்புறம் நீ எப்படி இருப்ப! ஃப்ராடு… ஏமாத்துக்காரி… மூஞ்ச அப்டியே அப்பாவி மாதிரி வச்சுக்க. உன்னைய நம்பி தாலி கட்டினேன் பாரு… எம்புத்திய சொல்லணும். டைவர்ஸ் வேணுமாம் டைவர்ஸ்… கொன்னு போட்டுடுவேண்டி உன்ன…” – வாயே வலிக்கவில்லை அவனுக்கு. ஒரு மணிநேரம் இடைவிடாமல் விளாசித்தள்ளினான். அவன் பேசிய விதத்திலேயே தெரிந்தது… ‘குடித்திருக்கிறான்!’ – மதுராவின் மனம் கசந்தது.
“அது சரி…! டைவர்ஸ் வாங்கிட்டு போயி என்ன பண்ண போற? யாராவது வெயிட் பண்ணிட்டு இருக்காங்களா?” – குரூரமாக குத்தினான்.
கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள். அவனை பார்க்கப் பிடிக்கவில்லை. அவன் பேசுவதை கேட்கப் பிடிக்கவில்லை. முகமெல்லாம் சிவந்து… உதடுகள் துடித்தன. ஆத்திரத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள். கொதிப்பு அடங்கும்வரை கொட்டித்தீர்த்தவன், கார் சாவியை கையிலெடுத்துக் கொண்டு கதவை ஓங்கி அடித்து சாத்திவிட்டு வெளியேறினான்.
23 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Madhini Jayakumar says:
Hi Nithya
Update superb … devaraj varthaiyil nerupai alli vesitu poitan paavam madhu avaluku endrum azhugai than thunnaiya
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
uma manoj says:
அவனின் செயலுக்கு
நினைத்தது போல வலுவான பிண்ணனி கதை இருக்கு தேவ் இடம். ..
மது க்கு வாயிலே தான் சனி போல. .
அடேய். .அவ டைவர்ஸ் கேட்டா பொறுமையா சொல்ல கூடாதா. .பொறுமை!!!!அது சரி ..கூடப் பிறக்காத குணத்தை கேட்டா இருக்குமா?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya karthigan says:
Hi Uma,
“Porumai!!! thamizhla enakku pidikkaadha vaarththai…” – Dev.
Thank you so much Uma… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Mercy Aruna says:
Dev was deeply hurt by his father and relatives in his childhood so that he is such arrogant , you are interestingly moving the story Nithya.super epi
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya karthigan says:
Hi Aruna,
Very Happy to see you again… thank you so much… adikkadi vaanga… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
Sema episode
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya karthigan says:
Hi Vatsala,
Thank you so much… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vijaya Santhi says:
அடப்பாவி….இப்படி ஒரு கேள்விய அந்தப்பிள்ளையப் பாத்து கேட்டுப்புட்டியே. காயப்படுத்தக் கூடாது காயப்படுத்தக் கூடாதுனு இப்படி உயிரோட கொன்னுட்டியே. சூப்பர் எப்பி சிஸ்…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya karthigan says:
Thank you sis…. Daily vanaga… interact with us…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
தேவ்விற்கு மதுராவை வருத்துவது வருத்தமாகத்தான் இருக்கின்றது,பின்பு ஏன் வருத்தணும்,அவர்களுக்குள் மதுரா குடும்பத்தையிட்டுத்தான் சண்டை வருகின்றது ,தேவ்விற்கு சின்ன வயதில் மதுரா வீட்டிலிருந்த போது ஏற்பட்ட வலிகள் அதற்கு காரணம்,அப்போ அந்தக் காரணத்தை மதுராவிடம் சொன்னால் மதுரா புரிந்துகொண்டு சில விடயங்களை தேவ்விற்காக தவிர்த்துக்கொள்வாரே,அதே ஏன் செய்ய மீட்டேன்கிறாரே,வாயில் தேவையில்லாததுகள் எல்லாம் வருகின்றது இது வராதோ,ஒரு பெண் இருந்தால் எல்லா இடங்களில் இருந்தும் திருமணம் பேசி வருவதும் திருமணம் கை கூடி நின்று போவதும் நடப்பதுதானே,அதற்கு ஏதோ மதுரா வேண்டுமென்றே மாப்பிள்ளைகளை மாற்றியது போல் குத்தலாக பேசுகின்றார்,மதுரா ரொம்ப கலங்கிப்போய்யிருக்கின்றார்,விவாகரத்து கேட்டால் தன்மையாக மறுக்கலாம் அல்லது கோபமாக கூட மறுக்கலாம் ஆனால் இப்படி பெண்டாட்டியை இழிவு படுத்துகின்ற மாதிரி செய்யக்கூடாது,தேவ் வேதாளம் முருங்கை மரத்தில் மீண்டும் ஏறிவிட்டது,மதுரா பாடு இனிமேல் திண்டாட்டம்தான்.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya karthigan says:
Hi Thadsayani,
Kuththalaaga pesa oru kaaranam vendumallavaa… avalidam endha kuraiyum illai… adhanaalthana nindru pona thirumanaththai thottukkolgiraan…
Thank you so much… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
வெடிச்சுட்டா….இரண்டும் முட்டிக்குது..
பழம் நினைவுகள் ..ஓரளவு நான் நினைத்தது போல தான்…வந்திருக்கு.
திலீப் அவனோட அம்மா போலவா…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya karthigan says:
Hi ka,
Evvalavu naal thaan poruththukk amudiyum….
Thank you… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
sujatha subbiah says:
super episode
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya karthigan says:
Hi Sujatha,
Thank you so much… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Semma semma .. Dev bayamma unakku 😁🤔
Appapa Ivan naakku enna thelkodukka ippadi kotturan 😈
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya karthigan says:
Hi Lakshmi,
He is also a Husband right… Bayam irukkum thane 😉 Thanks for your interaction my friend…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
barathy ruban says:
Nice ud
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya karthigan says:
Hi Barathy,
Thank you so much… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
Wow sema epi.,…Dev madhura ku bayapadrana…..nambamudiyavillai….illai….lai….avala samadhana padithuradhu so sweet….ippadi nalla dhaana pochi thirumba Dilip kalyana pechi vandhu muttikuranga….Ivan open ah manasila ulla aadangatha madhura kitta sollavendiyadhudhaana ava purinjipa…..adhu illama avala kaayapaduthuradhe velaya pochi….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya karthigan says:
Hi Hadijha,
Namba mudiyavilai… illai… lai… 😀 😀 Thank you so much my friend…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sumi Rathinam says:
Madhura, u have to realize the reason for his anger towards her parents n her brother… He doesn’t have any issues with her elder brother… So she has to understand n try to help him to come over his pain….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya karthigan says:
Hi Sumi Rathinam,
Thank you so much…. 🙂