கனல்விழி காதல் – 43
9049
9
அத்தியாயம் – 43
மனிதனை மிகவும் கோரமாக தாக்கும் வல்லமை கொண்ட ஆயுதம் வார்த்தை… அந்த வார்த்தையை சரியாக பிரயோகித்து அவளை சுக்கு நூறாக நொறுக்கிவிட்டான் தேவ்ராஜ். அவள் மனம் புழுங்கியது. வேதனையில் துவண்டது. அவமானத்தில் குன்றியது. கூனிக்குறுகி தனக்குள் ஒடுங்கி கட்டிலில் சுருண்டு படுத்தாள். கண்ணீர் கரகரவென்று வழிந்தது. துடைக்கக் கூட தோன்றவில்லை. ‘ஏன் கல்யாணத்த நிறுத்தின கிஷோர்? ஏன் இப்படி பண்ணின? நா உன்ன சபிக்கிறேன். என்னோட கண்ணீருக்கு நீ பதில் சொல்லணும்… சொல்லித்தான் ஆகணும்…’ – முதல் முறையாக கிஷோரை நினைத்து அழுதாள்.
இதுவரை அவள் கிஷோரை பற்றி நினைத்ததே இல்லை. ஆனால் தேவ்ராஜ் மறக்க விடவில்லை. பிரச்சனை வரும் பொழுதெல்லாம் அவனை ஊறுகாய் போல தொட்டுக்கொள்கிறான். அனுபவமின்மையால் அவள் ஏற்கனவே பலகீனமாகத்தான் இருக்கிறாள். அவளை இன்னும் பலகீனப்படுத்த அவன் எடுக்கும் ஆயுதம், நின்று போன அவளுடைய திருமணம். இது எந்த வகையில் நியாயம்!
பூஞ்சை மனம் கொண்ட மதுரா அவனுடைய கொடும் சொற்களை தாங்கமுடியாமல் கண்ணீரில் கரைந்துபோனாள். கண்ணீர் வற்றிப்போன பின்பும் அவள் துயரம் தீரவில்லை. ஏதோ செய்யக்கூடாத பெரும் பாவத்தை செய்துவிட்டது போல் மனம் கனத்துப்போயிருந்தது. மனம் சோர்ந்து போய் படுத்திருந்தவள் அப்படியே கண்ணயர்ந்துவிட்டாள்.
மதிய உணவிற்கு கீழே வராத மதுராவை தேடி மாடிக்கு வந்தாள் இராஜேஸ்வரி. மாமியாரை கண்டதும் எழுந்து அமர்ந்த மதுராவின் முகலமெல்லாம் சிவந்து வீங்கியிருந்தது. தேவராஜ் ஏதோ பெரிதாக சண்டை போட்டிருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்டவள், மருமகளுக்கு அருகில் அமர்ந்து ஆதரவாக கையைபிடித்துக் கொண்டாள்.
“என்ன சொன்னான்? ரொம்ப திட்டிட்டானா?” என்றாள் இராஜேஸ்வரி. அவள் மறுப்பாக தலையாட்டினாள். பட்ட அவமானத்தை வெளியே சொல்ல அவள் விரும்பவில்லை என்பதை புரிந்துக் கொண்டவள், “அவன் அப்படித்தான்… கோவம் வந்துட்டா என்ன பேசுறோம்னு யோசிக்கவே மாட்டான். நம்மளோட கஷ்டமெல்லாம் ஆம்பிளைங்களுக்கு புரியவே புரியாது… விடு… எழுந்து சாப்பிட வா” – மருமகளை சமாதானம் செய்து சாப்பிட அழைத்த்தாள்.
“இல்ல ஆண்ட்டி… நா சாப்பிடற மனநிலையில இல்ல.. என்னோட மைண்ட் கொஞ்சம் காம் டௌன் ஆகட்டும். நானே வர்றேன்…” என்றாள். அவளை புரிந்துக் கொண்டு அவளுக்கு தேவையான தனிமையை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றாள் இராஜேஸ்வரி.
அன்று இரவும் தாமதமாகத்தான் வீட்டிற்கு வந்தான் தேவ்ராஜ். அவனுக்காக காத்திருந்து மகனை கண்டித்தாள் இராஜேஸ்வரி. “எங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்கற விஷயத்துல நீங்க தலையிடாதீங்க” என்று ஒரே வாத்தையில் தாயிடம் முடித்துவிட்டவன், “கம்பளைண்ட் பண்ணுறீயா?” என்று மதுராவிடம் வந்து சீறினான். அவள் வெறுத்துப்போனாள். பேச்சை குறைத்துக் கொண்டாள். அதுவும் அவன் கண்களுக்கு குற்றமாய் பட்டது. கைபட்டால் குத்தம் கால்பட்டால் குத்தமென்று வார்த்தையால் குத்திக்கொண்டே இருந்தான். இருவருக்குமிடையில் விரிசல் வளர்ந்தது.
இந்தமுறை அவளை சமாதானப்படுத்த அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. என்னதான் பிரச்சனை இருந்தாலும் ‘டைவர்ஸ்’ என்கிற வார்த்தையை அவள் எடுத்திருக்கக் கூடாது என்று அழுத்தமாக நம்பினான். பெற்றோருக்காக தன்னை டைவர்ஸ் செய்கிற அளவுக்கு பேசிவிட்டாளே என்கிற கோபம் அவனுக்குள் தங்கிவிட்டது.
நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. திலீப்பின் திருமண நாள் நெருங்கியது. மதுராவின் வீட்டிலிருந்து மாப்பிள்ளைக்கும் மகளுக்கும் புத்தாடை எடுத்துக் கொண்டுவந்து மீண்டும் ஒருமுறை திருமணத்திற்கு அழைத்தார்கள். அப்போதும் தேவ்ராஜ் மதுராவின் பெற்றோரை சந்திக்கவில்லை. வேண்டுமென்றேதான் தவிர்த்தான். நாளை திருமணம்… இன்னும் மதுரா பிறந்த வீட்டிற்கு செல்லவில்லை. ஒன்றுக்கு நூறு முறை போன் செய்து அழைத்துவிட்டான் திலீப்.
‘இதோ வர்றேன்… அதோ வர்றேன்… கிளம்பறேன்… கிளம்பிட்டேன்…’ என்று ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பதிலை சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தவள் ஒருகட்டத்தில் திணறிப்போய் மாமியாரின் உதவியை நாடினாள்.
“எப்போ கிளம்பறோம் ஆண்ட்டி…? எல்லாரும் மண்டபத்துக்கு கிளம்பீட்டாங்க. ரிசப்ஷன் ஆரம்பிச்சிடும்”
“நீ ரெண்டு நாள் முன்னாடியே போயிருக்கணும். சொல்லச்சொல்ல கேட்கல. இப்போ வந்து புலம்பற. தேவ்க்கு போன் பண்ணி பார்த்தியா? எப்போ வருவானாம்?” – அவளுக்கும் பதட்டம் தான். அண்ணன் வீட்டு திருமணம். இரண்டு சம்மந்தமும் போட்டிருக்கிறாள். இவ்வளவு தாமதமாக செல்வதென்றால்… எல்லோரும் என்ன நினைப்பார்கள்.
“இல்ல… நான் போன் பண்ணல…”
“பண்ணலையா! ஏன்?” – நேரில் பார்க்கும் போதே ஒதுங்கிப் போகிறவளுக்கு போனில் எப்படி பேச முடியும்? பதில் சொல்லாமல் தலை குனிந்து நின்றாள்.
மருமகளின் மீதும் கோபம் வந்தது அவளுக்கு. எரிச்சலுடன் தன்னுடைய கைபேசியை எடுத்து மகனுக்கு டயல் செய்தாள். நல்லவேளை… உடனேயே எடுத்துவிட்டான்.
“சொல்லுங்க…”
“என்னப்பா பண்ணிட்டு இருக்க?”
“என்னம்மா கேள்வி இது? ஆபீஸ்ல என்ன பண்ணுவாங்க…”
“ப்ச்… இன்னும் ஆபீஸ்ல தான் இருக்கியா? லேட் ஆச்சு பாரு… எப்ப வருவ? உன்னால நாங்களும் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்…”
“வெயிட் பண்ணுறீங்களா! எதுக்கு?”
“என்ன எதுக்குன்னு கேட்கற! இன்னைக்கு ஈவினிங் திலீப் ரிஷப்ஷன்ப்பா… காலையிலேயே உன்கிட்ட சொன்னேன்ல…”
“ஓ! ஆமா… சொன்னீங்க…”
“என்ன ஓ… ஆ… ன்னு இழுக்கற… உடனே கிளம்பி வா…” – வெடுவெடுத்தாள்.
“ப்ச்… எனக்கு வேலை இருக்குமா. என்னால வர முடியாது. நீங்க போயிட்டு வாங்க”
“வர முடியாதா! விளையாடுறியா நீ?
“விளையாடறதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லம்மா… புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க… போனை வைங்க…” – அழைப்பை துண்டித்துவிட்டான்.
திகைத்துப்போய் கையிலிருக்கும் போனையே பார்த்துக் கொண்டிருந்தாள் இராஜேஸ்வரி.
“என்ன சொன்னாங்க?” – மதுரா அவள் சிந்தனையை கலைத்தாள். மருமகளை மெல்ல திரும்பிப் பார்த்தவள், “நீ ரெடியாகு… சீக்கிரம்” என்றாள்.
“தேவ் வர்றாரா?”
“அவனை பற்றி கவலை படாத. நீ கிளம்பு…” – திட்டவட்டமாகக் கூறினாள். மதுராவின் பார்வை மாமியாரின் முகத்தை படித்தது.
“எதையும் யோசிக்காத மதுரா. நாம பிறந்த வீட்டில நடக்கற பெரிய ஃபங்ஷன் இது. என்னைய விடு… நீ அங்க இல்லன்னா அது தனியா தெரியும். கேக்கறவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. உடனே ரெடியாகு. நாம ரெண்டு பெரும் கிளம்பறோம். அவன் வந்தா வரட்டும் இல்லன்னா இருக்கட்டும்” என்று கூறி மருமகளை அவளுடைய அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு தானும் தயாரானாள்.
***************
மகளுக்காக காத்திருந்து ஏமார்ந்து போன பிரபாவதி தேவ்ராஜ்தான் ஏதோ பிரச்சனை செய்கிறான் என்பதை புரிந்துக் கொண்டாள். மகள் வருவாளோ மாட்டாளோ என்கிற பதட்டத்தில் கணவனை மீண்டும் ஒருமுறை பாலி ஹில் அனுப்பி வைத்தாள். எப்படியாவது அவனை சமாதானம் செய்து அவர்களை விழாவிற்கு அழைத்துக் கொண்டு வர வேண்டும் என்பதே கணவனிடம் அவள் வைத்த கோரிக்கை.
தேவ்ராஜ் இப்படியெல்லாம் நடந்துகொள்வான் என்று நரேந்திரமூர்த்தி நினைக்கவே இல்லை. திலீப்பின் திருமண பேச்சு ஆரம்பித்ததிலிருந்தே அவனை அவரால் சந்திக்க முடியவில்லை. திறமையாக அவரை தவிர்த்துவந்தான். ஆனால் ஏன்? பாரதியை திருமணம் செய்துகொள்ள திலீப் சம்மதித்த பிறகு, அவள்தானே வேண்டாம் என்று கூறி அனைவருக்கும் முன்பாக அவனை அவமதித்தாள். அப்படி இருக்கும் போது நம் மீதோ திலீப் மீதோ கோபம்கொள்ள என்ன இருக்கிறது? எதற்காக தேவ் இப்படி செய்கிறான்! – குழப்பத்துடன் தங்கை வீட்டிற்குள் நுழைந்தார்.
சகோதரனைக் கண்டதும் திகைத்த இராஜேஸ்வரி, “என்ன அண்ணா… இந்த நேரத்துல இங்க வந்திருக்கீங்க? அங்க வர்ற விருந்தாளிகளை வரவேற்க நீங்க இருக்க வேண்டாமா?” என்று பதட்டத்துடன் அவரிடம் ஓடிவந்தாள்.
“என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க எல்லாரும் இங்க? மதுரா கிளம்பீட்டாளா இல்லையா? தேவ் எங்க?” – படபடத்தார்.
“ரெடி ரெடி… நாங்க ரெண்டு பேரும் கிளம்பிட்டோம். தேவ் லேட்டா வருவான்” – பிரச்னையை காட்டிக்கொள்ளாமல் சமாளித்தாள்.
“பாரதி?” – தயக்கத்துடன் கேட்டார்.
“இல்லண்ணா… அவ வர முடியாது… விட்டுடுங்க…” – சங்கடத்துடன் சொன்னாள். அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.
“சரி விடு… மதுராவை கூப்பிடு… சீக்கிரம்… வந்து வண்டில ஏறுங்க… டைம் ஆச்சு…” அவசரப்படுத்தினார்.
மருமகளை தேடி மாடிக்குச் சென்ற இராஜேஸ்வரி திகைத்தாள். உடை கூட மாற்றாமல் அப்படியே படுத்திருக்கிறாள்! என்னவாயிற்று இவளுக்கு! “மதுரா!” – அதட்டினாள்.
சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள் மதுரா. “எதுக்கு இப்படி அழுது டைம் வேஸ்ட் பண்ணற. அவன் அப்படித்தான் இருப்பான். தேவையில்லாத நேரத்துல தேவையில்லாத விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரச்னையை பெருசாக்காதேன்னு சொன்னா கேட்க மாட்டியா நீ? நாம போகலைன்னதும் அண்ணன் வந்துட்டாரு. நீ ரெடியாயிட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். இப்போ போயி நான் என்ன சொல்லறது?” – கோபத்தில் வெடித்தாள்.
“அப்பாவா!” – திகைப்புடன் கேட்டாள்.
“ஆமாம்…”
சற்று நேரம் மெளனமாக இருந்தாள். பிறகு, “இல்ல… நா வரல…” – மதுராவின் மெல்லிய குரலில் அளவில்லா பிடிவாதம் தெரிந்தது. அதிர்ந்துபோனாள் இராஜேஸ்வரி.
“மதுரா ப்ளீஸ்… சின்ன குழந்தை மாதிரி பிடிவாதம் பிடிக்காத. உன்னோட பிடிவாதம் எங்க எல்லாரையும் அவமானப் படுத்தப்போகுது. சொன்னா கேளு… சீக்கிரம் ஏதாவது ஒரு ட்ரெஸ்ஸை மாத்திக்கிட்டு கீழ வா…” – கிட்டத்தட்ட கெஞ்சினாள். அவளோ அழுத்தமாக அமர்ந்திருந்தாள்.
“இங்க பாரு… தேவ் அங்க இல்லன்னா அது ரொம்ப தெரியாது. ஆனா உன்ன எல்லாரும் கேட்பாங்க. புரிஞ்சுக்க…” – பதில் சொல்லாமல் இறுகிப்போய் அமர்ந்திருந்தாள். இராஜேஸ்வரியின் பதட்டம் அதிகரித்தது. உடனே மகனுக்கு அலைபேசியில் தொடர்புகொண்டாள்.
முதல் இரண்டு முறை அழைப்பை ஏற்காமல் அழுத்தம் செய்தவன், மூன்றாவது முறை “என்னம்மா உங்க பிரச்சனை?” என்று போனை எடுத்ததும் எரிந்து விழுந்தான்.
“நீதான் வரல… வேலை இருக்குன்னு சொல்லிட்ட. மதுராவையாவது கிளப்ப சொல்லு” என்று வெடுவெடுத்தாள். தேவ்ராஜிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
“தேவ்?”
“ம்ம்ம்”
“என்ன ஒண்ணும் பேசாம இருக்க?”
“இல்ல… ஒண்ணும் இல்ல…”
“மதுராவை கிளம்ப சொல்லு”
“அவளை நா தடுக்கல… போகணும்னா கிளம்பி போக வேண்டியது தானே? எதுக்கு அங்க உட்கார்ந்துகிட்டு ஸீன் கிரியேட் பண்ணிட்டு இருக்கா?” – கடுப்படித்தான்.
“அவ கிளம்பினா உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லைல?”
“எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. தயவு செஞ்சு போனை வைங்க…” – பட்டென்று வைத்தான். அதையெல்லாம் கண்டுகொள்ள நேரமில்லை. மதுராவை கிளப்பியாக வேண்டும். அதுமட்டும்தான் அவளுடைய நோக்கமாக இருந்தது.
“தேவ் சொல்லிட்டான்… கிளம்பு… இனி எந்த பிரச்சனையும் இல்ல…” – பரபரத்தாள். மதுரா அழுத்தமாகவே அமர்ந்திருந்தாள்.
“என்ன?” – அலுப்புடன் கேட்டாள் இராஜேஸ்வரி.
“அவர் வரலையா?”
“கடவுளே! பைத்தியம்-கியித்தியம் புடிச்சிடுச்சா உனக்கு? அவன்தான் வரமாட்டேன்னு சொல்லிட்டானே. அவனை எதுக்கு எதிர்பார்க்கற?” – எரிச்சலுடன் கேட்டாள். மதுரா பதில் சொல்லவில்லை.
“அவனோட சேர்ந்துக்கிட்டு நீயும் கல்யாணத்துக்கு வராம இருக்க போறியா? நாளைக்கு திலீப் முகத்துல எப்படி முழிப்ப?” – மதுராவின் கண்கள் கலங்கின. முகமெல்லாம் சிவந்து போனது. பொங்கும் ஆத்திரத்தை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக்கொள்கிறாள் என்று தெரிந்தது.
“எதுக்கு இவளவு கஷ்டப்படற? எனக்கென்ன போச்சுன்னு அவன்பாட்டுக்கு போயிட்டே இருப்பான். பேசாம நா சொல்றத கேளு”
“ப்ளீஸ் ஆண்ட்டி… என்னை கட்டாயப்படுத்தாதீங்க. ஐ நோ வாட் ஐம் டூயிங்…”
அதற்குமேல் இராஜேஸ்வரிக்கு எதுவும் பேச முடியவில்லை. அந்த நேரம் பார்த்து, “என்ன பண்ணிட்டு இருக்கீங்க? எவ்வளவு நேரம் வெயிட் பண்ணறது?” என்றபடி உள்ளே வந்த நரேந்திரமூர்த்தி மகளைக் கண்டு திகைத்தார்.
“என்னம்மா! இப்படி உட்கார்ந்திருக்க! கிளம்பலையா? என்ன ராஜி…?” – மகளிடமிருந்து பார்வையை தங்கை பக்கம் திருப்பினார்.
“எனக்கு தெரியாது. நா எவ்வளவோ சொல்லிட்டேன்…” – கையை விரித்தாள்.
இராஜேஸ்வரியைவிட பத்து மடங்கு அதிகமாக மகளை சமாதானம் செய்ய முயன்றார் நேரந்திரமூர்த்தி. அவளை அசைக்க கூட முடியவில்லை.
“தேவ் வந்ததும் கூட்டிட்டு வர்றேன்….” என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள். வேறு வழியின்றி தங்கையை மட்டும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார் நேரந்திரமூர்த்தி.
9 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
NALLA MUDIVU MADHUMA
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Uma Ratnam says:
Obviously he is holding grudges with his in-laws which isn’t healthy. Yet one has to put themselves in his shoes too. Hopefully Mathura’s latest decision will make him think twice.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sumi Rathinam says:
திக் திக் திக்…….😯
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Madhini Jayakumar says:
Hi Nithya
Ud nice ma… enna aachu madhuvirku yen aval pogala …. dev eppo than avalidam kaniva pesuvan
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
மதுராவின் இச்செயல் தேவ்விற்கு சந்தோஷத்தை கொடுக்கும்,மதுரா தனக்காக காத்திருக்கின்றார் அல்லது தன் நேரடி அனுமதிக்கு பார்த்திருக்கின்றார் என்று,மதுரா தன்னை சந்தோசப்படுத்துகின்றார் என்று தானும் சந்தோசம் கொடுக்கணும் என்று தேவ் நினைக்கமாட்டாரே,அலுவலகத்தில் இருந்தது வந்தவுடன் மதுராவை பார்த்து , என்ன நாடகம் போடுகின்றாயா அம்மாவிட்டு என்னை அழைக்கின்றாயா என்று இப்படி ஏதாவது திட்டி இன்னும் மதுராவை காயப் படுத்தப்போகின்றார்,வேறு என்ன தெரியும் தேவ்விற்கு இன்னும் கிஷோர் பற்றிய பேச்சு மதுராவை எவ்வளவு காயப்படுத்தியிருக்கும் என்று உணரவேயில்லையா,அப்படி உணர்ந்திருந்தால் சமாதானப்படுத்தியிருப்பாரே.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
போச்சி… அடுத்து என்ன???!!!
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
தேவ் உனக்கு ஏத்தம்டா….அவளை பேசறதெல்லாம் பேசிட்டு சமாதானம் கூட செய்ய முற்படலை….மதுரா பிடிவாதம் சரி தான்…..அவள் பிடிவாதம் அவனை மாற்றும்னு நம்புறேன்….பார்ப்போம்
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sudha Ravi says:
அவன் அடங்க மாட்டானே…வந்து ஆடப் போறான்…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
அவன் வந்து இன்னும் என்ன செய்ய போறானோ?…இப்பவே கதி கலங்குதே