கனல்விழி காதல் – 44
8900
9
அத்தியாயம் – 44
மகளை அழைக்கச் சென்றவர் தங்கையை மட்டும் அழைத்துக் கொண்டு வருவதைக் கண்டு முகம் கடுத்தாள் பிரபாவதி. இராஜேஸ்வரியை ‘வாங்க…’ என்று சம்பிரதாயத்துக்கு கூட அழைக்காமல், “மதுரா எங்க? நீங்க மட்டும் வந்திருக்கீங்க…” என்றாள் உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு.
இராஜேஸ்வரிக்கு பதில் சொல்ல முடியவில்லை. “வேணுன்னா நீ போயி கூட்டிட்டு வா… ரெண்டு பேரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம். பிடிவாதத்துக்கெல்லாம் மருந்து கொடுக்க முடியாது” என்று கடுப்படித்துவிட்டு “நீ வா…” என்று தங்ககையை உள்ளே அழைத்துச் சென்றார் நரேந்திரமூர்த்தி .
தாயை பார்த்ததும் மாயா வந்து அரவணைத்துக் கொண்டாள். பிரபாவதியிடம் மோடனப்பட்ட இராஜேஸ்வரியின் மனம் மாயாவை பார்த்ததும் ஆறுதலடைந்தது.
எதிர்பார்த்தபடியே விருந்தினர்கள் அனைவரும் மதுராவைப் பற்றி கேட்டார்கள். பதில் சொல்ல முடியாமல் திணறினார்கள் வீட்டுப் பெண்கள். அதோடு, தன் வீட்டு விழாவில் தன்னுடைய மகள் கலந்துகொள்ளவில்லையே என்கிற தவிப்பில் பிரபாவதியின் கண்கள் அடிக்கடி கலங்கின. அனைத்திற்கும் காரணம் தன் மகன்தான் என்கிற குற்றவுணர்ச்சியில் ஒதுங்கி அமர்ந்திருந்தாள் இராஜேஸ்வரி.
**************
‘இந்நேரம் எல்லாரும் மண்டபத்துல இருப்பாங்க. திலீப் பாய் ஸ்டேஜ்ல இருப்பாங்க. பொண்ணு வந்திருக்கும். மாலை போட்டிருப்பாங்க… கெஸ்ட் எல்லாம் வந்திருப்பாங்க. ரிஷப்ஷன் ஆரம்பிச்சிருக்கும். ஜோடிப்பொருத்தம் எப்படி இருக்கும்! எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்க. டாடியும் அம்மாவும் நம்மள ரொம்ப மிஸ் பண்ணுவாங்க…’ – நேரம் ஆகஆக மதுராவின் மனம் தவித்தது.
அவன் இல்லாமல் அங்கே போவதில்லை என்கிற முடிவை சுலபமாக எடுத்துவிட்டாள். ஆனால் சொந்த வீட்டில் நடக்கும் விசேஷத்தை தூரத்திலிருந்து கூட பார்க்க முடியாமல் போவது துரதிஷ்டம். – மெத்தையில் கவிழ்ந்து படுத்து குலுங்கி அழுதாள்.
அவனுக்கு போன் செய்து அழைப்போமா… ஒருமுறை நாமே கூப்பிட்டுப் பார்க்கலாமா… கூப்பிட்டால் வருவானா என்றெல்லாம் பலவாறாக யோசித்தாள். முன்பே இதை செய்திருக்கலாம். ஆனால் அப்போது இறங்கிப்போக மனம் வரவில்லை. எப்படியும் அவன் வந்துவிடுவான் என்கிற சிறு நம்பிக்கை மனதின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டிருந்தது. நேரம் செல்லச்செல்ல அந்த நம்பிக்கை தடம் தெரியாமல் அழிந்தது. ஆண்ட்டி சொன்னது போல் அவன் வரப் போவதில்லை. நம்மை அழைத்துச் செல்லப் போவதில்லை கடவுளே! – பிடிவாதம் தளர்ந்து ஆசை அதிகரித்தது.
சட்டென்று எழுந்து அமர்ந்து தன்னுடைய கைபேசியை எடுத்தாள். ‘கால் செய்வோமா… வேண்டாமா… செய்வோமா… வேண்டாமா…’ – ஓரிரு நொடிகள் யோசித்தவள் சட்டென்று அவனுடைய நம்பரை டயல் செய்துவிட்டு காத்திருந்தாள். அழைப்பொலி முழுவதுமாக சென்று அடங்கியது. மீண்டும் ஒருமுறை முயற்சித்தாள். அப்போதும் அதுவேதான் நடந்தது. மீண்டும் மீடனும் முயற்சித்தாள். அவன் எடுக்கவே இல்லை. அன்று விருந்திற்கு வருவதாக சொல்லிவிட்டு ஏமாற்றினானே! அந்த நினைவுதான் அவளுக்கு வந்தது. இன்றும் அதே போல் தான் வேண்டுமென்றே அவளுடைய அழைப்பை தவிர்க்கிறான். – உடைந்து அழுதாள்.
அவனுக்கு அவள் மீது சிறிதும் அக்கறை இல்லை. அவளுடைய உறவுகளுக்கு மதிப்பில்லை. அவள் மனதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மோசமாக காயப்படுத்துகிறான். சிறிதளவேனும் அன்பிருந்தால் இவ்வளவு குரூரமாக நடந்துகொள்வானா! விழாவில் கலந்துகொள்ள முடியாததை விட அவன் தனக்கு மதிப்பளிக்கவில்லையே… தன் மீது அன்புகாட்டவில்லையே என்கிற ஆதங்கம்தான் அவளுக்கு அதிகமாக இருந்தது. அதை உணராமலேயே பொங்கிப் பொங்கி அழுதுகி கொண்டிருந்தாள்.
*****************
பாரதியை திலீப் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக தேவ்ராஜ் மதுராவை மறுத்தான். மதுராவை தேவ்ராஜ் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்பதற்காக திலீப் பாரதியை மறுத்தான். இருவரும் தங்களின் வெறுப்பையும் பகையையும், மற்றவரின் தங்கையின் மூலம் தீர்த்துக்கொள்ளப் பார்த்தார்கள். இறுதியில் இருவருமே தோற்றார்கள். பகையும் வெறுப்பும் அப்படியேதான் இருந்தது.
திலீப்பின் திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அவனுக்கு விருப்பமே இல்லை. அதே சமயம், மதுராவை அவன் தடுக்கவில்லை. அவளுடைய அண்ணன் திருமண விழாவில் அவள் பங்கெடுத்துக்கொள்ளட்டும் என்று ஒதுங்கிவிட்டான். ஆனாலும் உள்ளுக்குள் ஒரு உறுத்தல்… ஒரு முறை கூட அவனை சமாதானம் செய்ய அவள் முயற்சிக்கவில்லை. அவன் வருத்தத்துடன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவளுடைய அழைப்பு வந்தது. எடுத்து பேச பிடிக்கவில்லை… அலறும் அலைபேசியை வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான். பலமுறை அடித்து ஓய்ந்த அலைபேசியை சைலண்ட்டில் போட்டுவிட்டு, சிரமப்பட்டு வேலையில் கவனத்தை திருப்பினான். வீட்டிற்கு செல்ல பிடிக்கவில்லை. இல்லாத வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தான்.
அனைவரும் மண்டபத்திற்கு சென்றிருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்புடன், இரவு பத்து மணிக்கு மேல் வீட்டிற்கு வந்தான் தேவ்ராஜ். வழக்கம் போல் வீட்டிற்கு வெளியே காவலர்கள் விழித்திருந்தார்கள். மந்தமான வெளிச்சத்தில் மூழ்கியிருந்த வீடு மௌனமாய் உறங்கி கொண்டிருந்தது. மனம் சற்று கனமாக இருந்தது. படியேறி மாடிக்கு வந்தான். படுக்கையறை இருண்டு கிடந்தது. சுவிட்ச்சை தட்டி வெளிச்சத்தைக் கொண்டு வந்தவன், கட்டிலில் சுருண்டுக் கிடந்தவளைப் பார்த்து திகைத்து நின்றுவிட்டான்.
திடீரென்று அறையில் பரவிய வெளிச்சத்தை உணர்ந்து தலையை தூக்கிப்பார்த்த மதுரா, கணவனைக் கண்டுவிட்டு மீண்டும் படுத்து கொண்டாள். அவள் முகமெல்லாம் சிவந்திருந்தது. கண்கள் வீங்கியிருந்தன. பயங்கரமாக அழுதிருக்கிறாள் என்று தெரிந்தது.
மெளனமாக உள்ளே வந்து செல் போன், கார் சாவி, பர்ஸையெல்லாம் உரிய இடத்தில் வைத்துவிட்டு உடை மாற்றிக் கொண்டு வந்தான். அவள் அசையாமல் படுத்திருந்தாள். அவள் உறங்கவில்லை என்று அவனுக்கு தெரியும். அவ்வளவு சீக்கிரம் அவளால் இன்று உறங்க முடியாது… – பெருமூச்சுடன் கட்டிலை சுற்றிக் கொண்டு வந்து படுத்தான். அவளிடம் பேச வேண்டும் என்று மனம் உந்தியது.
“ஏன் நீ போகல?” – கனத்த மௌனத்தை உடைத்தது அவன் குரல். அவள் பதில் சொல்லவில்லை. அவன் மீது அவ்வளவு கோபமிருந்தது அவளுக்கு.
சற்று நேரம் அவளுடைய பதிலுக்காக காத்திருந்தவன், “மீட்டிங்ல இருந்தேன். போன் சைலண்ட்ல இருந்தது… அம்மாவோட கிளம்ப சொன்னேனே! போயிருக்கலாமே!” என்றான். அவள் பதில் சொல்லவில்லை. அவனுடைய முகம் கடுகடுவென்று மாறியது. இது போன்ற உதாசீனங்களை அவனால் பொறுத்துக்கொள்ள முடிவதே இல்லை.
“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு” என்று அதட்டினான்.
“என்ன சொல்லணும்?” என்று முணுமுணுத்தவளின் குரலிலிருந்த நடுக்கம் அவனுடைய கோபத்தை தனித்தது. ஓரிரு நொடிகள் அமைதியாக இருந்தவன், “ஏன் ரிசப்ஷனுக்கு போகல?” என்றான்.
“நீங்க ஏன் வரல?”
“வேலை இருந்தது”
“தனியா போக பிடிக்கல” – ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.
“அப்போ நாளைக்கு?”
“தனியா போகமாட்டேன்” – உறுதியாக சொன்னாள். எரிச்சலுடன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், “உன் இஷ்ட்டம்” என்று கூறிவிட்டு மறுபக்கம் திரும்பிப் படுத்து கொண்டான்.
விடியவிடிய உறக்கம் வராமல் விழித்துக் கிடந்த மதுரா மறுநாள் விடிவதற்கு முன்பாகவே எழுந்துவிட்டாள். கணவன் எப்போது எழுந்திருப்பான்… திருமணத்திற்கு வருவானா மாட்டானா… மண்டபத்தில் எல்லோரும் விழித்திருப்பார்களா! என்றெல்லாம் பலவித சிந்தனைகளில் அமர்ந்திருந்தாள். விடிந்ததும் வழக்கம் போல எழுந்து குளித்து முடித்து உடைமாற்றி அலுவலகத்திற்குத் தயாரானான் தேவ்ராஜ்.
மதுராவின் பார்வை அவன் செல்லுமிடமெல்லாம் சென்றது. திருமணத்துக்கு செல்லலாம் என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டானா என்று அவள் உள்ளம் தவித்தது. அவனோ அவள் பக்கம் திரும்பக் கூட இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, “எங்க கிளம்பறீங்க?” என்றாள்.
“ஆபீஸ்க்கு…”
“அப்போ கல்யாணத்துக்கு?”
“ட்ரைவரை வர சொல்றேன். கிளப்பி போ…” – கையில் கடிகாரத்தை மாட்டியபடி கூறினான்.
“ஐம் நாட் கோயிங்…” – கத்தினாள்.
“நேத்தே சொல்லீட்டேன்… உன் இஷ்ட்டம்…” – தோள்களை குலுக்கினான்.
“ப்ளீஸ்…” – கெஞ்சினாள். செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தான் தேவ்ராஜ். “ப்ளீஸ்…” – மீண்டும் ஒருமுறை கெஞ்சினாள். கண்களை மூடி ஆழப் பெருமூச்செடுத்தவன், “ஏன் பிடிவாதம் பண்ணற?” என்றான்.
“திலீப் பாய்க்கு நான் ஒரே தங்கச்சி… நீங்க என்னோட ஹஸ்பண்ட்… நாம கண்டிப்பா போகணும்…”
“ஐம் நாட் இன்டரெஸ்ட்டட்…”
“இட்ஸ் யுவர் டியூட்டி”
“நா அப்படி நினைக்கல”
“எனக்காக…”
“முடியாது” – நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டு கீழேச் சென்றான். தயாராக இருந்த காலை உணவை முடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டான். கண்ணீருடன் அவன் முதுகை வெறித்துக் கொண்டு நின்றாள் மதுரா.
9 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
HAYOOOOO
DAI ROMBA PADUTHARADAAAAAA
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
uma manoj says:
அடேய் 😈😈😈😈😈😈😈
மதுக்காகவாவது போய் இருக்கலாம். .
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
இதென்ன மோசமான பிடிவாதம்?? சொந்த விருப்பு வெறுப்புகளை துறந்தால்தான் நேசம்.. இவனுக்கு அவள் மீது அப்படி எதுவும் இல்லை
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Meena PT says:
ஆனாலும் இவ்வளவு பிடிவாதம் அழுத்தம் தேவ் க்கு இருக்க கூடாது
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
திலீப் மேல் எவ்வளவு வெறுப்பு பகை எது வேண்டுமென்றாலும் இருக்கட்டும், அதனால் திருமணத்திற்கு போகவில்லை சரி,ஆனால் மதுரா அவ்வளவு கெஞ்சுகின்றாரே அதற்காகவாவது சரி சொல்லலாம் அல்லவா தேவ்,மதுரா வருத்தமாக இருந்தால் தன்மனமும் வருத்தமடைகின்றது என்று முன்பு நினைத்தது எல்லாம் சும்மா எல்லாம் நடிப்பு,அழுத்தம் இருக்கவேண்டியதுதான் இவ்வளவு கூடாது ஒரு மனிதனுக்கு,மதுரா சொன்ன மாதிரி மதுராவில் கணவன் என்ற முறையில் போய்விட்டு வரலாம்தானே,தேவ் மதுராவிடம் மதுராவுக்காக ஏங்கும்போது வலிக்கும்ல அப்போ தெரியும் மதுராவின் ஏக்கம் வலி எல்லாம்.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sudha Ravi says:
மறுபடியும் வந்து ஸ்ட்ராபெரி அது இதுன்னு கொஞ்சட்டும் அப்படியே நடுமண்டையில கட்டையால ஒன்னு போடுறேன்…சரியான சைக்கோ……..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Enna ivloo Adam ivanukku … 😈
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
கல்லு..கல்லு…போடா
உனக்கெதுக்கு கல்யாணம்…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
சே சரியான கல் நெஞ்சக்காரன்…..