இல்லறம் இதுதான் 6
4955
1
அத்தியாயம் – 6
இரவு உணவை முடித்துவிட்டு படுக்கையறைக்கு வந்தான் மோகன். அங்கு அவனுக்கு முன்பாக வந்து அமர்ந்திருந்த லட்சுமியை பார்த்ததும் சற்று அதிர்ந்தான் மனதை திடப்படுத்திக் கொண்டு படுக்கையை சரி செய்து படுக்கப் போனவனை லட்சுமியின் குரல் தடுத்தது.
“ஒரு அஞ்சு நிமிஷம் உங்க கூட பேசணும் முடியுமா?” மனதினுள் நடுங்கினான் மோகன்.
“சீக்கிரமா பேசு தூக்கம் வருது” படுக்கையில் ஒரு ஓரமாக அமர்ந்தான்.
லட்சுமி எழுந்து வந்து அவனருகில் அமர்ந்து கொண்டாள். அவன் நெளிந்தான்.
“உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையா?” தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள்.
“பிடிச்சிருக்குன்னு சொன்னா என்ன செய்வ?”
“சந்தோஷப்படுவேன்”
“பிடிக்கலைன்னு சொன்னா?”
“பிடிக்கற மாதிரி நடந்துப்பேன்”
“எப்படியும் நீ வருத்தப்பட போறதில்ல”
“ஏன் வருத்தப்படனும்?”
“நீ என்னை கல்யாணம் செய்ததுக்காகவே வருத்தப்படனும்” அவள் சற்று அதிர்ந்தாள்.
“ஏன்?”
“எனக்கு இந்த கல்யாணம் குடும்பம் வாழ்க்கை குழந்தை இதிலெல்லாம் ஆர்வமில்லை”
“அதான் ஏன்னு கேட்கறேன்”
“அது அப்படித்தான்”
“சரி என்னை ஒரு மனைவியா நினைக்க வேண்டாம் ஒரு நல்ல தோழியா நினைக்கலாம் இல்லையா?”
“முயற்சி பண்ணறேன்”
“உங்களை பத்தி நான் தெரிஞ்சுக்க நினைக்கறேன்”
“சொல்லு என்ன தெரிஞ்சுக்கணும்?”
“உங்களுக்கு என்ன டிபன் பிடிக்கும்?”
“பூரி உருளைக்கிழங்குன்னா உயிர்”
“சாப்பாடு?”
“பிரிஞ்சி”
“ஹீரோ”
“படம் அதிகம் பார்க்க மாட்டேன்”
“பாட்டு?”
“அதுவும் கேட்க மாட்டேன்”
“கம்ப்யூட்டர்ல என்ன பிடிக்கும்?”
“எல்லாமே பிடிக்கும்”
“எனக்குத்தான் கம்ப்யூட்டர் பத்தி எதுவுமே தெரியாது”
“அப்படியா?”
“ம்ம்… ஆனா தெரிஞ்ச்சிக ரொம்ப ஆசை. சொல்லித் தருவிங்களா?”
“நிச்சயமா. நாளைக்கு வேலை முடிஞ்சு வந்ததும் ஒரு மணிநேரம் கிளாஸ்… ஓகே?”
“தேங்க்ஸ்…”
“இப்போ எனக்கு தூக்கம் வருது.. தூங்கலாமா?”
“ஓ… தூங்கலாமே” இவன் இவ்வளவு பேசுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. சந்தோஷத்தில் மிதந்தாள். உறக்கம் வராமல் தத்தளித்தாள்.
காலை 7.00 மணிக்கெல்லாம் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டவள் மோகனின் செல்போனை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள். சிவாவின் நம்பரை அழுத்தினாள். ரிங் சென்று பிறகு போன் பிக் அப் செய்யப்பட்டது.
“சொல்லுங்க அத்தான். என்ன இவ்வளவு காலையில?” கொட்டாவிவிட்டுக் கொண்டே கேட்டாள்.
“நான் லட்சுமி பேசறேன்”
“அக்கா…! நீங்க எப்படி அத்தான் செல் போன்ல?”
“அவர் தூங்கிட்டு இருந்தார். நான் அவர் போனை எடுத்துட்டு வந்துட்டேன்”
“நான் என்னமோன்னு நினச்சேன்”
“இப்போ நீ என்ன பண்ர?”
“காலங்காத்தால தூங்கிட்டு இருந்தவளை எழுப்பி இப்போ நீ என்ன பண்றேன்னு கேட்டா.. எங்க போயி இந்த அநியாயத்தை சொல்ல?”
“மணி ஏழாகுது.. தூங்கிட்டு இருந்தியா? நானெல்லாம் அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்திருக்கலைன்னா எங்க அப்பா திட்டுவாரு”
“என்னையெல்லாம் ஏழு மணிக்கு முன்னாடி எழுப்பினா நான் திட்டுவேன்”
“என்னை திட்டரதெல்லாம் அப்புறம் இருக்கட்டும், இப்போ நான் எதுக்கு போன் பண்ணினேன் தெரியுமா?”
“சொன்னாதானே தெரியும்”
லட்சுமி சகலமும் கூறினாள். “அம்மாடி.. அத்தான் இவ்வளவு பேசினாங்களா! ஆச்சர்யம் தான்”
“ஏய் கிண்டல் பண்ணின உதை விழும்”
“சரி சரி கொஞ்சநாளைக்கு இப்படி நல்ல ஃப்ரண்டாவே இருங்க. கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்”
“சரி அவர் எழுந்துடுவார். பால் கலக்கணும் வச்சுடறேன்”
“சரி சரி” நக்கலாகக் கூறினாள் சிவா.
மோகன் எழுந்து பல் தேய்த்துக் கொண்டிருந்தான். லட்சுமி போனை எடுத்துக் கொண்டு கீழே வருவதை பார்த்ததும் “யாருக்காவது கால் பண்ணினியா?” என்றான்.
“ஆமாம்”
“யாருக்கு?”
“சிவாவுக்கு”
“அந்த வாயாடிக்கா”
“ம்ம்ம்… நீங்கல்லாம் தூங்கிட்டு இருந்திங்க. எனக்கு ரொம்ப போர் அடிச்சது. அதான்”
“சரி சரி… போன்ல எவ்வளவு இருக்கு பாரு”
“ஐம்பத்து இரண்டு ரூபாய் எழுபது பைசா”
“அடப்பாவமே! நாற்பது ரூபாயை குளோஸ் பண்ணிட்டியா?”
“சரியான கஞ்சன்” காதைப் பிடித்து செல்லமாகத் திருகினாள். அவன் சிலிர்த்தான்.
மோகன் டைனிங் டேபிளில் அமரும் பொழுது சூடான பூரியும் உருளைக் கிழங்கும் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். அதன் மனம் அவனன் நாவில் உமிழ்சுரப்பை அதிகரித்தது.
“நேத்துதான் சொன்னேன். அதுக்குள்ள செஞ்சுட்டியே”
“அதைவிட எனக்கு வேறு என்ன வேலை?”
“ரொம்ப தேங்க்ஸ்”
“ஆல்வேஸ் வெல்கம்” கண்ணடித்து அழகாக சிரித்தாள்.
மோகன் அவசரமாக ஒரு வாய் எடுத்து வாயில் போட்டதுதான் தாமதம். புரையேறிவிட்டது அவள் அவன் தலையை தட்ட அதையே அவனும் செய்ய இருவரது கரங்களும் ஸ்பரிசித்துக் கொண்டன.
அவனது கை அவள் கை மீது பட்டதும் உச்சிக் குளிர்ந்தவள் வெட்கச் சிரிப்புடன் சமையலறைக்குள் ஓடிவிட்டாள். அவனோ மனைவியின் உணர்வுகளை கவனிக்காமல் உணவிலேயே கவனமாக இருந்தான்.
மோகன் வேலைக்குக் கிளம்பிச் சென்றுவிட்டான். பைக் சத்தம் கேட்டு அவசரமாக வெளியே ஓடிவந்தவளூக்கு ஏமாற்றமாக இருந்தது. கையில் டிபன் பாக்சுடன் சோர்வாக வீட்டிற்குள் சென்றாள்.
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
லட்சுமி மோகனை இயல்பாக இருக்க மாற்றிவிடுவாரென்றே நினைக்கிறேன்.
நன்றி