கனல்விழி காதல் – 46
8969
7
அத்தியாயம் – 46
திருமணம் முடிந்து விருந்தினர்களெல்லாம் புறப்பட்ட பிறகு மண்டபத்திலிருந்து கிளம்பிய மணமக்கள் முதலில் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்தார்கள். பிறகு பெண்வீட்டிற்குச் சென்று அங்குள்ள சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தார்கள். அவர்களோடு கூடவே மதுராவையும் அவள் வயதை ஒத்த உறவுக்கார பெண்கள் இருவரையும் கோர்த்துவிட்டிருந்தார்கள்.
நெருங்கிய உறவினர்கள் அனைவரும் வீட்டில் குழுமியிருந்தார்கள். கேலியும் கிண்டலுமாக கும்மாளமிட்டார்கள். சிறப்பான இரவு விருந்திற்கு பின் மூத்த பெண்மணிகள் தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டார்கள். அதை கவனித்துக் கொண்டிருந்த இளசுகள் இரகசிய புன்னகையுடன் கண்களால் பேசிக் கொண்டார்கள். இறுதியில் இரண்டு கூடையில் ரோஜாவும் மல்லிகையும் வந்து இறங்கிய போது அனைவருக்கும் அனைத்தும் வெட்ட வெளிச்சமானது.
மலர் கூடையை பார்த்ததும் கூடியிருந்த இளம் பெண்கள் கொல்லென்று சிரிக்க… சிலர் சம்மந்தப்பட்ட சினிமா பாடலை முணுமுணுத்து மணமக்களை கிண்டலடித்தார்கள். சந்தோஷத்தில் கலகலத்தது வீடு. மதுராவிற்கு அங்கிருந்து கிளம்பவே மனமில்லை. தெரிந்துதான் ‘இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வரட்டும்’ என்று இராஜேஸ்வரி கூறியிருக்கிறாள். இவள் தான் புரியாமல் இன்றே வந்துவிடுவதாக கணவனுக்கு வாக்கு கொடுத்துவிட்டாள். இராஜேஸ்வரி கிளம்பத் துவங்கியதும், என்ன செய்வதென்று விளங்காமல் கையை பிசைந்தாள்.
“கிளம்புவோமா மதுரா?” – இராஜேஸ்வரி.
“அவளை எங்க கூப்பிடறீங்க? நீங்களே ரெண்டு நாள் தங்கியிருக்கணும். இருக்க மாட்டேங்கறீங்க? அவளையும் கையோட கூட்டிட்டு போகணுமா?” – முகத்தில் அடித்தது போல் பேசினாள் பிரபாவதி. அவளுடைய இந்த குணம் மட்டும் மாறவே இல்லை. அதிலும் இராஜேஸ்வரி என்றால் சற்று மட்டமாகத்தான் பார்ப்பாள்.
“ம்மா… ஆண்ட்டி கூப்பிடலம்மா. நான்தான் வர்றேன்னு சொன்னேன்”
“ஏன்? இன்னைக்குத்தான் வந்த. கல்யாணம் முடிஞ்சதும் உடனே கிளம்பிடணுமா? இங்க இவ்வளவு பேர் தங்கியிருக்காங்களே… இவங்களையெல்லாம் விட நீ ரொம்ப தூரத்து சொந்தமா?” – கடுப்படித்தாள்.
“அது இல்லம்மா… நா தேவ்கிட்ட வர்றேன்னு சொல்லிட்டேன்”
“இப்போ போன் பண்ணி வரலன்னு சொல்லு”
“அது வந்து… எப்படிம்மா…” – தயங்கினாள்.
“உன் புருஷனுக்கு உன்ன கல்யாணம்தான் பண்ணி கொடுத்திருக்கோம். அடிமையா எழுதிக் கொடுக்கல… புரியுதா?” – பட்பட்டென்று தெறிக்கும் வார்த்தைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல், “மதுரா, நீ இரு… நா தேவ்கிட்ட சொல்லிக்கறேன்” என்று மருமகளுக்கு சமாதானம் சொன்ன இராஜேஸ்வரி அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினாள்.
சஞ்சய் மஞ்சரேக்கர் எழுதிய ‘இம்பர்ஃபெக்ட்’ புத்தகத்துடன் விருந்தினார் கூடத்தில் அமர்ந்திருந்தான் தேவ்ராஜ். மேலோட்டமாய் வாசித்து பக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தாலும் அவன் மனம் வேறெங்கோ இருந்தது. கார் வந்தால்தான் சத்தம் காதில் விழுமே என்று அறிவு கூறினாலும் கண்கள் அனிச்சையாய் அடிக்கடி வாசல்பக்கம் சென்று மீண்டன. வெகுநேர காத்திருப்புக்கு பலன் கிடைத்தது போல் இராஜேஸ்வரியின் ஆடி, பூனை போல் வந்து போர்டிக்கோவில் நின்றது.
தாமதமானாலும் அவள் வந்துவிடுவாள் என்கிற நம்பிக்கையில் உறங்காமல் காத்திருந்த தேவ்ராஜ், தாய் மட்டும் தனியாக காரிலிருந்து இறங்குவதைக் கண்டு புருவம் உயர்த்தினான்.
“தூங்கலையாப்பா” – உள்ளே வந்தவள் மகனைப் பார்த்ததும் கேட்டாள்.
“மதுரா எங்க? தனியா வந்திருக்கீங்க?”
“தனியா எங்க வந்தேன்! ட்ரைவரோடதானே வந்தேன்” – புன்னகையுடன் கூறி அவனுடைய மனநிலையை சற்று லேசாக்க முயன்றாள். அவன் இதழ்கடையோராம் தோன்றிய சிறு வளைவு அவளுடைய முயற்சியை அங்கீகரித்தது.
“ஐ நோ… ஆனா அவ எங்க?”
“நான்தான் சொன்னேல்லப்பா… ரெண்டு நாள் இருந்துட்டு வரட்டும்” – சட்டென்று அவன் முகம் கூம்பியது.
“வந்துடறேன்னு சொன்னாளே!”
“விசேஷ வீடு இல்லப்பா… கசாமுசான்னு ஒரே கூட்டம்…”
“அதுக்குதான் சொன்னேன். நைட் வீட்டுக்கு வந்துட்டு காலையில போயிருக்கலாம்ல” என்றான் எரிச்சலுடன்.
“கூட்டம்ன்னா அது என்ன சந்தைக்கடையா… சொந்தக்காரங்கப்பா… பேசி சிரிச்சு சந்தோஷமா இருந்துட்டு வரட்டும் விடு” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் தாய். அவள் செல்வதை வெறித்துப் பார்த்தபடியே நின்றுக் கொண்டிருந்தான் மகன். ‘அங்கேயே தங்கிட்டாளா! அப்புறம் என்ன கருமத்துக்கு நம்மகிட்ட வர்றேன்னு சொன்னா!’ – மனம் புகைந்தது. அந்த நிமிடமே அவளிடம் சண்டை போடவேண்டும் போல் இருந்தது.
அலைபேசியை எடுத்து அவளுடைய எண்ணை டயல் செய்தான். தோழிகளுடன் கலகலத்துக் கொண்டிருந்தவளை அலைபேசியின் ஆழைப்பொலி எட்டவில்லை. இரண்டு மூன்று முறை மீண்டும் மீண்டும் முயற்சித்துப் பார்த்துவிட்டு வெறுப்புடன் அலைபேசியை தூக்கிக் கடாசிவிட்டு, தலையை கோதியபடி சோபாவில் அமர்ந்தான். இப்போது அவள் வீட்டிற்கு வராத கோபத்தைவிட அவனுடைய அழைப்பை ஏற்கவில்லையே என்கிற கோபம்தான் அவனை தின்றது.
‘அப்படி என்ன வேலை… நம்ம போன் பண்ணறதை கூட கவனிக்காத அளவுக்கு…’ – நறநறவென்று பல்கலைக் கடித்தான். வெகுநேரம் அவள் நினைவுகளிலேயே உழன்றுக் கொண்டிருந்துவிட்டு பின்னிரவில்தான் மாடிக்குச் சென்று படுக்கையில் சாய்ந்தான். அவள் இல்லாத வீடு ஏதோ வெறிச்சென்று இருப்பது போல் தோன்றியது. ‘இது என்ன பைத்தியக்காரத்தனமா இருக்கு…’ என்று தன்னைத்தானே கடித்துக் கொண்டு கண்களை இறுக மூடி தூங்க முயன்றான்.
போடவேண்டிய கொண்டாட்டமெல்லாம் போட்டுவிட்டு அசந்து போய் படுத்துவிட்டாள் இளையவர்கள். ஊர் கதை உறவுக்கதையெல்லாம் பேசிவிட்டு சோர்ந்து போய் உறங்கிவிட்டார்கள் பெரியவர்கள். வீடு வெகு அமைதியாய் இருந்தது. நேரந்திரமூர்த்திக்கு மட்டும் உறக்கம் வரவில்லை. மூன்று பிள்ளைகளுக்கும் பொருத்தமான திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்ட திருப்தியுடன் பால்கனியில் போடப்பட்டிருக்கும் சேரில் வந்து ஓய்ந்து அமர்ந்தார். என்னதான் வேலைகளை பிரித்துக் கொடுத்திருந்தாலும் கடைசி நேரத்தில் செய்ய வேண்டியிருந்த வேலைகளே அவருடைய முதுகெலும்பை முறித்துவிட்டன.
‘அப்பாடா…’ – சில்லென்று வீசும் தென்றல் காற்றை அனுபவித்து ரசித்தார். தளர்ந்து போய் அமர்ந்திருந்தவரின் சோர்வை போக்கி உற்சாகத்தைக் கொடுத்தது அந்த மெல்லிய கற்று.
“என்ன இங்க வந்து உட்கார்ந்துடீங்க?” – புன்சிரிப்புடன் பால்கனிக்கு வந்தாள் பிரபாவதி. மனைவியை பார்த்ததும் அவருடைய உற்சாகம் இருமடங்காக பெருகியது.
“வா வா… இப்படி வந்து உட்காரு” என்று மனைவியை எதிரில் கிடந்த நாற்காலிலயில் அமரச் சொன்னவர், “எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. நம்மளோட மூணு குழந்தைகளும் சந்தோஷமா இருக்காங்க. நம்மளோட கடமையை சரியா முடிச்சுட்டோம் பிரபா…” என்றார் நிறைவுடன்.
அவர் மனதிலிருந்த நிறைவு பிரபாவதியிடம் இல்லை. தேவ்ராஜ் அவளை உருத்திக் கொண்டேதான் இருந்தான். ஆனால் அதை இந்த நேரத்தில் கணவனிடம் காட்டக்கூடாது என்கிற முன்யோசனையுடன், “பிள்ளைங்க எல்லாருக்கும் கல்யாணம் பண்ணியாச்சு. இனி அவங்களுக்கு குழந்தைங்க பிறப்பாங்க… நாம அவங்கள வளர்க்கணும்… ஏங்க… நமக்கு வயசாயிடிச்சா என்ன? குட்டிமா மாதிரி இன்னும் ரெண்டு வண்டு சிண்டு வந்து உங்கள தாத்தான்னு கூப்பிட்டா நீங்க கிழவனா ஃபீல் பண்ண மாட்டீங்க? கடவுளே! நானும் கிழவியா ஆயிடுவேனா?” என்றாள் சிரித்துக் கொண்டே.
மனைவியின் பேச்சைக் கேட்டு சத்தமாக சிரித்த நரேந்திரமூர்த்தி எனக்கெல்லாம் எப்பவும் வயசாகாது… “இதோ… லேசா நரைச்சிருக்க இந்த மீசைக்கு மட்டும் கொஞ்சம் டை போட்டேன்னா, துருவனுக்கு அண்ணன் மாதிரி இருப்பேன்… நீதான் வெயிட்டை குறைக்கணும் பார்த்துக்க” என்றார் மனைவியை சீண்டும் விதமாக.
அவர் தோளில் வலிக்காமல் ஒரு தட்டு தட்டியவள், “நா என்ன அவ்வளவு குண்டாவா இருக்கேன்” என்றாள்.
“கண்ணாடி பார்க்கறது இல்லையா நீ?” – அவள் அப்படி ஒன்றும் பூசணிக்காய் சைஸ் இல்லை என்றாலும் இனிமையாய் கிடைத்த தனிமையும் மனதிலிருந்த உற்சாகமும் அவரை இளைஞனாய் மாற்றியிருந்தது.
“ஏன் பார்க்காம என்ன? நா ஒன்னும் உங்க தங்கச்சியை விட குண்டு இல்ல…” – அவர் விளையாட்டுக்குத்தான் பேசுகிறார் என்று தெரிந்தும், பதிலுக்கு பதில் பேசியாக வேண்டும் என்கிற முனைப்புடன் தேவையில்லாமல் இராஜேஸ்வரியை இழுத்தாள்.
அவருடைய முகம் சட்டென்று வாடியது. ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தார். தங்களுடைய இனிமையான பொழுதை, இராஜேஸ்வரியின் பெயரை சொல்லி தானே பாழாக்கிக் கொண்டோம் என்று அப்போதுதான் பிரபாவதிக்கு உரைத்தது.
“என்ன யோசிக்கிறீங்க? நாளைக்கு பொண்ணு வீட்ல விருந்து. அதை பத்தி நெனச்சுட்டு இருக்கீங்களா?”
“ம்ஹும்…” – மறுத்தார். வீடு நிறைய உறவுணர்கள் தாக்கியிருந்தாலும் அனைவரும் பிரபாவதியின் சொந்தங்கள்தான். தன்னுடைய ஒரே தங்கைக்கு இந்த வீட்டில் இடமில்லாமல் போய்விட்டதே என்கிற நினைவு அவன் மனதை வருத்தியது.
“நீ நேத்து ராஜிகிட்ட நடந்துக்கிட்டது சரியில்ல பிரபா” என்றான் இறுகிய குரலில். பிரபாவதியின் முகம் கடுகடுவென்று மாறியது.
“நம்மளோட ஒரே பொண்ணு, நம்ம வீட்ல நடக்குற கல்யாணத்துக்கு வரலைன்னா கோபம் வராதா?”
“அதுக்கு ராஜிதான் காரணம்னு நீ எப்படி முடிவு பண்ணின?”
“அவங்க காரணம் இல்லன்னா அவங்க பையன் காரணமா இருப்பான். நாம யார்கிட்ட கேட்க முடியும். பெரியவங்ககிட்டத்தானே?” படபடத்தாள். அந்த பேச்சை அதற்கு மேல் வளர்க்க அவர் விரும்பவில்லை. “சரி விடு” என்று முடித்துக் கொண்டார்.
7 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
vijaya muthukrishnan says:
super ud. eagerly waiting for your next ud
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
இந்ததனிமையில் தேவ்வின் மனம் மதுராவை தேடுகின்றது,மதுரா வீட்டில் இல்லாதபடியால் தனிமையை உணர்கின்றார் இது எதனால் என்று உணர்வாரா,தேவ்வின் தொலைபேசி அழைப்பை எடுக்காத்திற்கு மதுராவுக் வீட்டிற்கு வந்தவுடன் நல்ல மங்களம் இருக்கு என்று நினைக்கிறேன்.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Meena PT says:
தேவ் பற்றி தெரிஞ்சிருந்தும் இவ்வளவு அசால்ட்டா இருக்கலாமா மதுரா?.மதுரா லைப்ல பிரச்சனை உருவாக்க வேற யாரும் வேண்டும் பிரபாவதி போதும்.தேவ் தன் காதலை உணர்வானா இல்லை இன்னும் மதுராவுடன் சண்டையை தொடர்வானா?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kayalvizhi Ravi says:
Nice ud!
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
Madhuma ippadi sodhapittiye avane ippadhaan konjam konjama ilaga aarambichirukan but adhai kefukuradhupole neeye unnai ariyama niraiya velai senjivachirukiyema….ini enna nadakumo…..intha prabavathy magaloda vaazhkai sambanthapatiruku puriyama rajeshvariya avamanam paduthura….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
Ini kashtam Dan polave madhura ku?!
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sumi Rathinam says:
பிரபாவதிகள் இருக்கும் வரை மகள்களின் வாழ்க்கை சிறப்பாக அமையாது… மதுரா நீ தேவ் ற்கு தகவல் சொல்லி இருக்கலாம்…