Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 3

.

அத்தியாயம் – 3

 

“அம்மா ஒரு ஐநூறு ரூபா இருந்தா குடும்மா…?” ஜீவன் அவனுடைய தாயிடம் கேட்டான்.

 

“எதுக்குடா ஐநூறு ரூபா…? ஆமா… ஸ்கூல் போகலையா நீ…? என்ன இந்த நேரத்துல வீட்டுக்கு வந்து நிக்கிற?”

 

“இப்ச்… சும்மா நசநசன்னு கேள்வி கேட்டு கொல்லாதம்மா… ரெக்காட் நோட்டு வாங்கணும்… பையாலஜி சார் வெளிய அனுப்பிட்டாரு… நோட்டு வாங்கிட்டு போனாதான் கிளாஸ்குள்ள போக முடியும். இப்ப நீ காசு தர்றியா இல்லையா…?” கடுகடுப்புடன் கேட்டான்.

 

“டேய் ஜீவா… இப்படி திடீர்ன்னு கேட்டா எப்படிடா…? முன்னாடியே சொல்லியிருக்க வேண்டாமா…?”

 

“மறந்துட்டேன்ம்மா… நீ குடு…”

 

“சீட்டு பணம் கட்டத்தான் ஆயிரம் ரூபா வச்சிருக்கேன். சரி அதை வாங்கிட்டு போ… சீட்டுக்கு நான் வேற ஏதாவது ஏற்ப்பாடு பண்ணிக்கிறேன்…” என்று முணுமுணுத்துக் கொண்டே பீரோவை திறந்து ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை மகனிடம் எடுத்துக் கொடுத்தாள் அவன் தாய்.

 

 

அந்த ஐநூறு ரூபாயுடன் நேராக சரவணா டிப்பாட்மெண்ட் ஸ்டோர்ஸ்க்குள் நுழைந்து செராமிக்கால் ஆன வெள்ளை தாஜ்மகால் ஒன்றை வாங்கி கிஃட் பார்சல் செய்து எடுத்துக் கொண்டு ஆட்டோ ஸ்டாண்டிற்கு மீண்டும் வந்தான்.

 

அவனுடைய கைகடிகாரத்தில் ஒரு மணி அடித்தது. அவன் விழிகள் சாலையை நோக்கின. சிறிது நேரத்தில் புனிதா அவன் கண்ணில் பட்டாள். இவன் எழுந்து சென்று பழையபடி அவளை வழி மறித்து சாலையோரம் அழைத்து சென்றான்.

 

கையில் இருந்த பார்சலை அவளிடம் நீட்டினான். புன்னகையுடன் நன்றி தெரிவித்துவிட்டு அவள் வாங்கிக் கொண்டாள்.

 

அனுப்புனர் முகவரியில் அவனுடைய பெயருக்கு பதில் மிஸ்டர் எக்ஸ் என்று அவனுடைய கைபேசி எண்ணுடன் குறிப்பிடப்பட்டிருந்தது. பெறுனர் முகவரியில் ஸ்வீட் பம்கின்(Pumpkin) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை பார்த்ததும் அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

 

“பம்கினா…! என்ன பார்த்தா அப்படியா தெரியுது…?” என்றாள் செல்ல கோபத்துடன்.

 

அவன் தன்னுடைய இரண்டு கன்னங்களையும் தட்டிகாட்டி பின் அவளை சுட்டிக்காட்டி “ச்…வீ…ட்… பம்கின்…” என்றான் ரசனையுடன்.

 

அவளுக்கு வெக்கம் வந்துவிட்டது. சிவந்த முகத்துடன் தலை குனிந்தாள். பின் உடனே நிமிர்ந்து “அது என்ன எக்ஸ்…? உங்க வீட்ல ஏபிசின்னுதான் பேர் வைப்பாங்களா…?” என்றாள் கிண்டலாக.

 

அவளுடைய பேச்சை ரசித்து அவன் சிரித்தான்.

 

“ஹேய் பம்கின்… இவ்வளோ பேசுவியா நீ…! எக்ஸ்ன்னா என் பேரே அதுதான்னு முடிவு பண்ணிடுவியா…? ஒழுங்கா என்னோட பேர் என்னன்னு நாளைக்கு விசாரிச்சுட்டு வர்ற…?”

 

“விசாரிக்கிறதா…? நான் யார்கிட்ட போயி விசாரிக்கிறது…?

“அதெல்லாம் எனக்கு தெரியாது… நாளைக்கு உன்ன பார்க்கும் போது என்னோட பேர் என்னன்னு நீ சொல்லணும்… சரியா…?”

 

“ம்ம்ம்… ட்ரை பன்றேன்…” என்று சொல்லிவிட்டு கையிலிருந்த சாக்லேட்டை அவனிடம் நீட்டினாள். அவன் அதை வாங்கி பிரித்து பாதியை உடைத்து அவளிடம் கொடுத்துவிட்டு மீதியை உண்டான். பின் கவரை அவளிடம் நீட்டினான்.

 

“இது எதுக்கு…?”

 

“ஏதாவது பண்ணு… அதோ… அங்க தெரியுது பார் ஒரு குப்பை தொட்டி… அதுல போட்டுட்டு போயேன்.” என்றான் சாதரணமாக.

 

“சரி… நான் கிளம்புறேன்…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் புனிதா.

 

ஜீவன் அவள் செல்வதை பார்த்துக் கொண்டே இருந்தான். அவளுடைய சைக்கிள் குப்பை தொட்டியை கடக்கும் பொழுது அவள் சாக்லேட் கவரை தூக்கி எரியவில்லை.

 

அவன் கையெழுத்திட்டிருந்த பேப்பரை அவள் தூக்கி எரியவில்லை என்கிற மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே நண்பர்களிடம் நெருங்கினான்.

 

“மாப்ள… தங்கச்சி பிறந்த நாளுக்கு எங்களுக்கெல்லாம் ட்ரீட் இல்லையா…?” என்றான் ஜீவனைவிட ஐந்து வயது மூத்த ஒரு ஆட்டோ டிரைவர்.

 

“கண்டிப்பா உண்டு மச்சான்… தலைப்பாக்கடை பிரியாணி சாப்பிடலாமா…?” என்றான்.

 

“அதெல்லாம் ஒரு ட்ரீட்டா… என்ன மாப்ள நீ…?”

 

“சரி… வேற என்ன வேணும்…? நீயே சொல்லு…” என்று அப்பாவியாக கேட்டான் ஜீவன்.

 

மற்ற ஆட்டோ டிரைவர்களுக்கும் சேர்த்து அவன் தண்ணி பார்ட்டி கேட்டான். கையில் போட்டிருந்த அரை பவுன் மோதிரத்தை அடமானம் வைத்து பிரமாதமாக ட்ரீட் கொடுத்தான் ஜீவன்.

 

# # #

அன்று இரவு வீட்டில் பெற்றோருக்கு தெரியாமல் புனிதா ஜீவன் கொடுத்த பரிசை எடுத்து பார்த்தாள். கவரில் எழுதியிருந்த கைபேசி எண்ணை மனதில் பதிய வைத்துக் கொண்டு பரிசை பிரித்தாள். உள்ளே இருந்த தாஜ்மகாலை பார்த்ததும் உள்ளம் பூரித்தது… உடல் சிலிர்த்தது… பசி… தூக்கம் எல்லாம் மறந்தது… விடிய விடிய கனவுகளுடன் கொட்ட கொட்ட விழித்து… படிப்பது போல் பாவனை செய்து கனவிலும் கற்பனையிலும் நேரத்தை கடத்திவிட்டு விடியலில் கண்ணயர்ந்தாள்.

 

“நைட் ஃபுல்லா கண்ணு முழிச்சு படிச்சா உடம்பு என்னத்து ஆகும்…? காலயில நாலு மணிக்கு எழுந்து படின்னு சொன்னா கேக்கறதே இல்ல…” அவளுடைய தாய் மகளை கடிந்து கொண்டாள்.

 

“விடுங்கம்மா… இன்னிக்கு டியூஷன் கட் ஆயிடிச்சு… ஸ்கூல்க்காவது கரெக்ட் டைம்க்கு போகணும். சீக்கிரம் டிஃபனை கொண்டு வாங்கம்மா…”

 

“சரி… சரி… பறக்காத… ஒழுங்கா சாப்பிட்டுட்டு போ… தூக்கமும் இல்ல சாப்பாடும் இல்லன்னா உடம்பு கெட்டுடும்…” தாயின் அக்கரையில் மகளின் மனதில் குற்ற உணர்ச்சி முளைத்தது. அமைதியாக சாப்பிட்டு முடித்தாள்.

 

‘அவனோடு பழகுவது தவறோ…! ‘ என்கிற குழப்பத்துடன் பள்ளிக்கு கிளம்பினாள். அந்த குழப்பத்தில் இரண்டு நாள் ஜீவனை தவிர்த்தாள். மூன்றாவது நாள் அவன் அவளை டியூஷன் செண்டர் வாசலில் வழி மறித்து பேசினான்.

 

“ஏய்… பம்கின்… நில்லு…”

 

அவனுடைய அந்த அழைப்பில் அவளுடைய மன உறுதி ஊசலாடியது. தவிப்புடன் தயங்கி நின்றாள்.

 

“ஸ்கூல்க்கு எந்த வழியா போற?”

 

“அது எதுக்கு உங்களுக்கு…?”

 

“எதுக்கா…? உனக்காக நான் அங்க ஆட்டோ ஸ்டாண்ட்ல காத்துட்டு இருப்பேன்னு தெரியாது…? எதுக்கு வழிய மாத்துன?”

 

“அதை உங்ககிட்ட எதுக்கு சொல்லணும்… வழி விடுங்க… யாராவது பார்த்தா பிரச்சனையாயிடும்…”

 

“ஆனா ஆகட்டும்… நீ எனக்கு பதில் சொல்லலைன்னா நான் விட மாட்டேன்…” என்று பிடிவாதமாக சொல்லி இளம் கன்று பயமறியாது என்பதை ஊர்ஜிதப்படுத்தினான்.

 

“எனக்கு உங்கள பிடிக்கல… உங்க நடவடிக்கை எதுவும் பிடிக்கல… வழி விடுங்க…” என்றாள் பட்டென்று.

 

திகைப்புடன் அவன் ஒதுங்கிக் கொண்டான். பயங்கர எரிச்சலுடன் டியூஷன் வகுப்பிற்குள் நுழைந்தான். பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் அவள் சொல்லிவிட்டு சென்றதையே நினைத்துக் கொண்டிருந்தான்.

 

டியூஷன் முடிந்ததும் வழக்கம் போல் ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்றான்.

 

“மாப்ள… என்னடா தங்கச்சிய ரெண்டு மூணு நாளா இந்த பக்கம் காணும்…?” ஆட்டோக்கார நண்பன் கேட்டான்.

 

“பொம்பளல்ல… அதான் புத்திய காட்டிட்டா…”

 

“ச்ச… ச்ச… மாப்ள அப்படியெல்லாம் பேசாதடா… எடுத்தோன டகால்ன்னு தாஜ்மகால குடுத்துட்டல்ல… அதான் பயந்துட்டு போலருக்கு… கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாரு மாப்ள…” என்று அறிவுரை சொன்னான்.

 

“அப்டியா சொல்ற?”

 

“ஆமாம்… பின்ன வேற என்னாங்கற…?”

 

“சரி மச்சான் இனி கொஞ்ச நாளைக்கு அவளை விட்டுத்தான் பிடிக்கணும்… அப்புறம் பார்ப்போம்…” என்று சொல்லிவிட்டு பள்ளிக்கு கிளம்பினான்.

 

அன்றிலிருந்து ஒரு மாதம் புனிதாவை தவிர்த்தான். அதனால் பள்ளிக்கும்  சரியாக சென்று கொண்டிருந்தான். பாடத்திலும் ஓரளவு கவனம் செலுத்தினான். ஒரு மதத்திற்கு பிறகு மாநில அளவிலான இண்ட்டர் ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் காம்பர்ட்டிஷன் வந்து அவன் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது.

 

 




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    இந்த காலத்துல சில பசங்க இப்படி போய் வாழ்க்கையை கெடுத்துக்குறாங்க…. பாவம் தான்

You cannot copy content of this page