Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

இல்லறம் இதுதான்

Share Us On

[Sassy_Social_Share]

இல்லறம் இதுதான் – 9

அத்தியாயம் – 9

“அப்படியா சொன்னாங்க சின்னத்தான். நான் எதிர்பார்க்கவே இல்லை” கோக் பாட்டிலை வாயிலிருந்து எடுத்துவிட்டு பேசினாள் சிவா.

 

ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினால் லட்சுமி. கண்களில் கண்ணீர் தேங்கியிருந்தது.

 

“ஏன் இப்ப கண் கலங்குரிங்க. அதான் என்கிட்ட சொல்லிட்டிங்கல்ல. நான் யோசிச்சு ஒரு வழி சொல்றேன். இப்ப நீங்க நிம்மதியா வீட்டுக்கு போங்க. நான் உங்களுக்காக ஒரு மணி நேரம் தான் பர்மிஷன் போட்டிருக்கேன். ஆபீஸ் போகணும். ஏதாவது அவசரம்னா என் செல்லுக்கு கூப்பிடுங்க”

 

“சரி”

 

“வாங்க உங்களை பஸ் ஸ்டான்ட்ல ட்ராப் பண்ணிடறேன்” இருவரும் அந்த ரெஸ்டாரென்ட்டை விட்டு வெளியேறினர்.

 

மாலை ஆறுமணி. சிவாவின் செல் சிணுங்கி அவளை அழைத்தது.

 

“ஹலோ சிவா ஹியர்”

 

“நான் லட்சுமி பேசறேன்”

 

“எங்கேயிருந்து பேசுரிங்க?”

 

“அப்பா வீட்டுலேருந்து”

 

“எப்ப அங்க போனிங்க?”

 

“மத்தியானம்”

 

“சரி, என்ன விஷயம்?”

 

“சாரதா அக்கா, சங்கர் அத்தான் அத்தை மூணு பேரும் ஹாஸ்பிட்டல் போயிருக்காங்க. எனக்கு ரொம்ப போர் அடிச்சது. அதான் இங்க வந்துட்டேன்”

 

“எப்ப போனாங்க?”

 

“உன்கிட்ட வீட்டுக்கு வந்த பொது எல்லோரும் கிளம்பி ரெடியா இருந்தாங்க”

 

“நீங்க எங்க போயிருந்திங்கன்னு கேட்டாங்களா?”

 

“கோவிலுக்கு போறேன்னு சொல்லிட்டு தானே கிளம்பினேன்”

 

“நம்பிட்டாங்களா?”

 

“ஆமாம்”

 

“வேற ஏதாவது விஷயம்?”

 

“நாளை மாலை அந்த ஹாஸ்ப்பிட்டலுக்கு நாம போறோம்”

 

“எதுக்கு?”

 

“எல்லாம் விஷயமா தான். ஒரு அரை நாள் லீவ் போடு”

 

“லீவா! ரொம்ப கஷ்ட்டம்”

 

“அதெல்லாம் எனக்கு தெரியாது. லீவ் போட்டுட்டு 3 மணிக்கு சாந்தி ஹாஸ்ப்பிட்டல் வந்திடு. உனக்காக நான் அங்க வெயிட் பண்றேன். ஓகே பாய்”

 

லட்சுமி வைத்துவிட்டாள். சிவா குழம்பினாள். சரி நாளைக்கு தெரியத்தானே போகுது என்று தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொண்டாள்.

 

சாந்தி ஹாஸ்பிட்டல்… டாக்டர் முன் லட்சுமியும் சிவாவும் அமர்ந்திருந்தார்கள்.

 

“சொல்லுங்கம்மா… என்ன விஷயம்?”

 

“ஒன்னும் இல்ல சார். சின்ன விஷயம் தான். நேத்து இங்க சாரதா, சங்கர்ன்னு ஒரு தம்பதி செக்கப்க்கு வந்தாங்க. அவங்களோட ரிப்போர்ட் நாளைக்கு தர்றதா சொல்லியிருக்காங்க. ஆனா அது எங்களுக்கு இப்போவே வேணும்”

 

“அது எப்படிம்மா உரியவங்ககிட்ட கொடுக்காம உங்ககிட்ட கொடுக்கறது?”

 

“நான் பார்த்துட்டு உடனே கொடுத்துடுறேன் சார்”

 

“இதுல நிறைய பிரச்சனை வரும்மா. சிவா தெரிஞ்ச பொண்ணாச்சேன்னு உட்க்கார வச்சு பேசினா நீங்க பெரிய விஷயமெல்லாம் கேட்கரீங்க”

 

“சார் ப்ளீஸ்… எங்க வீட்டு நிம்மதி கெட்டுடக் கூடாதேன்னு தான் கேட்கறேன். முடியாதுன்னு சொல்லிடாதிங்க சார்”

 

“அதுவந்து…”

 

“சார்… உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கறேன் சார்… இது சத்தியம்”

 

சிறிது நேரம் தாடையை தடவியபடி யோசித்தார்.

 

“சரிம்மா… நீ சிவாவுக்கு வேண்டியவளா போய்ட்டதால தர்றேன். ஒரு ரெண்டு மணிநேரம் ஆகும். வெயிட் பண்ணுங்க”

 

“ஓகே சார்… ரொம்ப தேங்க்ஸ் சார்” உற்சாகமானாள் லட்சுமி.

 

“ஓகே சார். தேங்க்ஸ்” சிவா விடைபெற்றாள்.

 

“வெல்கம் சிவா” புன்னகைத்தார் டாக்டர்.

 

இரண்டு மணிநேரம் கழித்து ரிசல்ட்டை பார்த்த இருவருக்கும் முகத்தில் ஈயாடவில்லை. முகம் வெளிறியது.

அடுத்து என்ன செய்யலாம் என்று இருவரும் கலந்தாலோசித்தனர். ஒரு தீர்மானத்திற்கு வந்ததும் மீண்டும் டாக்டரிடம் சென்றனர்.

 

“என்ன சிவா? ரிசல்ட் கிடைத்ததா? எனி ப்ரொப்லம்?”

 

“ம்ம்ம்… ஆனால்…”

 

“சொல்லும்மா என்ன?”

 

“இந்த ரிசல்ட்ல சாரதா அக்காவுக்கு ப்ரொப்லம் இருக்கறதா இருக்கு”

 

“சோ வாட்?”

 

“எங்களுக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் சார்”

 

“என்னம்மா?”

 

“அதை முடிவு பண்ணி நாளைக்கு சொல்றேன் சார்”

 

“அதுக்கு முன்னாடி நாளைக்கு எங்க அத்தை… பேரு ராஜம் வந்தாங்கன்னா இன்னும் ரிசல்ட் ரெடியாகவில்லைன்னு சொல்ல முடியுமா? ப்ளீஸ்..”

 

“கண்டிப்பா சொல்லித்தான் ஆகணுமா?”

 

“ஆமாம் சார்”

 

“சரி… நான் பார்த்துக்கறேன்

 

“தேங்க்ஸ் சார்” இருவரும் விடைபெற்றனர் அத்தை வீட்டிற்கு கிளம்பினார்கள்.

 




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    இப்பகுதி நன்றாக இருந்தது.

    நன்றி

You cannot copy content of this page