கனல்விழி காதல் – 49
12122
15
அத்தியாயம் – 49
மதுராவின் அலைபேசியில் இருந்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டே வந்த தேவ்ராஜ், திடீரென்று அதிர்ச்சியடைந்தான். நொடியில் முகம் கடுமையாக மாற, அலைபேசியை விட்டெறிந்துவிட்டு, பொத்தென்று மெத்தையில் அமர்ந்தான். முகம் ஜிவு ஜிவுவென்று சிவந்துவிட்டது… வியர்த்துக் கொட்டியது… ‘அப்படி எதை பார்த்தான்! திடீரென்று ஏன் இவ்வளவு பதட்டமானான்!’ – ஒன்றுமே புரியவில்லை மதுராவிற்கு. அவனை பார்க்கவே பயமாக இருந்தது.
“தேவ்…!” – மெல்ல அழைத்தாள். கைகள் இரண்டையும் கட்டிலில் ஊன்றி தலை குனிந்து அமர்ந்திருந்தவன், அவளுக்கு பதில் சொல்லவில்லை.
“என்ன ஆச்சு தேவ்? ஏன் திடீர்ன்னு இவ்வளவு டென்ஷனாயிட்டீங்க?” – கணவனிடம் நெருங்கி அவன் தோள் மீது கைவைத்தாள். தீ சுட்டது போல் அவள் கையை தட்டிவிட்டு எழுந்தவன், “டோன்ட் டச் மி யு ப்ளடி ஹெல்…” என்று அவள் தோள்கள் இரண்டையும் பிடித்து பின்னால் தள்ளிவிட்டான். “ஆ…” – கனபொழுதில் தடுமாறிச் சென்று சுவற்றில் மோதி விழுந்தாள் மதுரா.
அதிர்ச்சியென்றால் பேரதிர்ச்சி… ‘என்ன நடந்தது இப்போது! ஏன் கீழே கிடக்கிறோம்! தலை ஏன் வலிக்கிறது!’ – சூழ்நிலையை உணர்வதற்கே ஓரிரு நிமிடங்கள் பிடித்தது அவளுக்கு. அடிபட்ட வலி உயிர்போனது. அதை ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு கணவனை நிமிர்ந்து பார்த்தாள். நெருப்புத்தணல் போல் சிவந்த விழிகளுடன் உக்கிரமாக முறைத்தான்.
தன் ஆறடி உயரத்திற்கும் நிமிர்ந்து, ஆஜானுபாகுவாக நிற்பவனை நிமிர்ந்து பார்த்தவள், கீழே கிடக்கும் தன்னை ஒரு துரும்பாக உணர்ந்தாள்.
‘என்ன நடந்தது! ஏன் இவ்வளவு கோவப்படுகிறான்! என்ன செய்ய போகிறான்!கடவுளே!’ – அடி வயிற்றிலிருந்து உருண்டு வந்த பயப்பந்து அவள் நெஞ்சை அடைத்தது. இரத்தபசையற்று முகம் வெளிறிப்போக… வெடவெடவென்று உடல் நடுங்க… மிரட்சியுடன் அவனை பார்த்தாள்.
“எழுந்திரு…. கெட்… அப்…” – காட்டுக்கத்துக் கத்தினான். விரண்டடித்துக் கொண்டு எழுந்தாள் மதுரா. நிற்க முடியாமல் காலெல்லாம் நடுங்கியது… இதயத்துடிப்பு எக்குத்தப்பாக எகிறியது.
கனல் கக்கும் விழிகளோடு அவளை வெறித்துப் பார்த்தவன், சட்டென்று திரும்பி எதையோ தேடினான். எங்கே? எங்கே அது…? சுற்றுமுற்றி பார்த்தவனின் கண்ணில் அது தென்பட்டது. அவளுடைய அலைபேசி… கட்டிலின் ஒரு மூலையில் கிடந்தது. சட்டென்று குனிந்து அதை எடுத்தவன், திரையை அவள் பக்கம் திருப்பிக் காட்டி, “என்ன இது?” என்றான்.
திரையை ஊன்றி பார்த்த மதுராவிற்கு தலை சுற்றியது… ‘இது… இந்த போட்டோ… இது இன்னமும் அவ போன்ல இருக்கா! எப்படி!’ – தெரித்துவிழும் அளவிற்கு விரிந்தன அவள் விழிகள்.
“இன்னும் பார்க்கணுமா?” – அடுத்தடுத்த புகைப்படங்களை நகர்த்திக் காட்டினான். அனைத்தும் நிச்சயதார்த்த விழாவில் எடுக்கப்பட்ட படங்கள்… கிஷோருடன் நெருக்கமாக நின்று எடுத்த புகைப்படங்கள்.
அவன் கையை பிடித்துக் கொண்டு… அவன் தோள் மீது சாய்ந்து… கண்ணோடு கண் பார்த்து… இப்படி பல விதங்களில்… அப்போது தவறாக தெரியவில்லை. ஆனால் இப்போது…! கூனி குறுகினாள். அவன் கண்ணெதிரில்… அவனே காட்ட… இந்த படங்களையெல்லாம் பார்க்கும் பொழுது உயிரே போனது. பழைய படங்கள்தானே என்று ஒதுக்கித்தள்ள அவளுக்கே முடியவில்லை. அவனால் எப்படி முடியும்! அதுவும் தேவ்ராஜிற்கு!
“இதெல்லாம் இன்னும் ஏன் உன் போன்ல இருக்கு?” – அடங்கியிருந்த அவன் குரலில் சூறாவளியின் சீற்றம் ஒளிந்திருப்பதை அறிந்த மதுரா,
“தேவ்… ப்ளீஸ்… இது… இதெல்லாம் பழசு… ஐ கேன் எக்ஸ்ப்ளைன்… ப்ளீஸ் லிஸன் டு மி…” என்று பதட்டத்துடன் இறைஞ்சினாள்.
எப்படியாவது அவன் புரிந்துகொள்ள வேண்டுமே என்று தவித்தாள். அதை, கையும் களவுமாக மாட்டிக் கொண்டுவிட்ட பதட்டம் என்று நினைத்தான் தேவ்ராஜ்.
“எக்ஸ்ப்ளைன்!!!” – புருவம் உயர்த்தினான்.
“எஸ்… ஐ… ஐ கேன்…” – கோர்வையாக பேசமுடியாமல் தடுமாறினாள். நா உலர்ந்தது மேலண்ணத்தில் ஒட்டியது. “ஐ கேன் தேவ்… ஐ… எக்ஸ்ப்ளைன்” – “என்ன எக்ஸ்ப்ளைன் பண்ண போற யு ஷேம்லெஸ் டாமிட்…” – உச்சஸ்தாதியில் கத்தியபடி கையிலிருந்த போனை தரையில் ஓங்கி அடித்தான். அது சுக்கல் சுக்களாக சிதறியது.
“ஆ…” என்கிற அலறலுடன் சுவற்றோடு ஒட்டிக் கொண்ட மதுராவின் கண்களில் கண்ணீர் கரைபுரண்டது.
“வேண்டான்னு தூக்கிப் போட்டுட்டு போய்ட்டான். அவனோட போட்டோ ஏன் இன்னும் உன்னோட போன்ல இருக்கு? அதுவும் பர்சனல் ஃபோல்டர்ல… ஏன்?பதில் சொல்லு… பதில் சொல்லு மதுரா….” – தோள்களை அழுந்தப்பற்றி உலுக்கினான். கைகளிரண்டும் இற்றுப் போய்விட்டது போல் வலித்தது.
“தே…வ்….” என்று தாங்க முடியாத வேதனையுடன் உடைந்து அழுதாள். சட்டென்று அவளை தள்ளிவிட்டுவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டான் தேவ்ராஜ்.
அவ்வளவு கோபத்திலிருந்த போதும் கூட அவளுடைய பரிதாபமான முகம் அவனை என்னவோ செய்தது. அவளை பார்க்கவே பிடிக்கவில்லை. அவள் முகத்தில் விழிக்கவே பிடிக்கவில்லை. ஆனால் அந்த கேள்வி! அவன் மனதை மென்று தின்னும் அந்த கேள்வி… அதற்கு யார் பதில் சொல்வது! அவள்தானே சொல்ல வேண்டும்!
“இன்னமும் அவன் உன் மனசுல இருக்கான் இல்ல?” – உணர்வுகளற்ற வெறுமையான அவன் குரல் அவளை உலுக்கியது.
“நோ… நோ தேவ்… ப்ளீஸ் காம் டௌன்… காம் டௌன் ப்ளீஸ்….” – அவசரமாக மறுத்தாள். காரணமெல்லாம் என்னவென்றுத் தெரியாது. ஆனால் தன்னுடைய வலியைவிட அவனுடைய கோபமும் வருத்தமும் வேதனையும்தான் அவளுக்கு பெரிதாகத் தோன்றியது.
காட்டுப்பூண்டு போல் மனம் முழுக்க நேசம் மண்டிக் கிடந்தாலும், அவள் மனதில் மலர்ந்திருக்கும் காதலை அவனால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. பூட்டிக்கிடக்கும் அவன் மனதிற்குள் புரையோடி போயிருக்கும் காயத்தை அவளும் அறியவில்லை. தரைக்கும் தண்ணீருக்குமாக எதிரெதிர் திசையில் இருவரும் வாழ்க்கையை இழுத்துக் கொண்டிருந்தார்கள்.
‘காம் டௌன்… காம் டௌன் ப்ளீஸ்….’ என்று தன்னை அமைதிப்படுத்த முயன்றவளை, துளைத்துவிடுவது போல் பார்த்தவன், “எங்கிட்ட ட்ரிக் பண்ண ட்ரை பண்ணாத மதுரா. செத்துடுவ…” என்று கடுமையாக எச்சரித்தான்.
“இல்ல தேவ்… இதெல்லாம்… இந்த போட்டோஸ் எல்லாம்… போன்ல இருந்ததையே நா மறந்துட்டேன் தேவ்… சுத்தமா மறந்துட்டேன்… நம்புங்க…” – கெஞ்சினாள்.
“ஹா… ஹா…” – உள்ளே உறங்கி கொண்டிருந்த அசுரன் வெளியே எட்டிப்பார்த்தான். அவனுடைய வெடி சிரிப்பில் அறையே கிடுகிடுத்தது. பயந்து நடுங்கினாள் மதுரா.
‘கடவுளே! இதை எப்படி சரி செய்ய போறோம்!’ – அவள் உள்ளம் கலங்கி தவித்தது.
“சொல்லு… இன்னும் என்னென்ன ரகசியம் இருக்கு உங்கிட்ட… உங்களோட நெருக்கம் இந்த அளவுக்குத்தானா… இல்ல இதுக்கும் மேலையும்?” – குரூரமாகக் கேட்டான். அவளால் பொறுக்க முடியவில்லை. சட்டென்று அவளுடைய தன் அகங்காரம் வெளிப்பட்டது.
“போதும்… போதும் தேவ்…” – முகமும் குரலும் இறுகிப்போக அவன் முகத்திற்கு நேராக கையை உயர்த்தினாள்.
“அசிங்கமான வேலையை செஞ்சுட்டு திமிரா முறைக்கிற?” – அவனுடைய வார்த்தைகள் அவளை நிலைகுலைய செய்தன. அகங்காரம் திமிரெல்லாம் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறின.
“என்ன அசிங்கம்? எனக்கும் கிஷோருக்கும் நடந்த நிச்சயம் உங்களுக்கு தெரியும்தானே? இதெல்லாம்… இதெல்லாம்… உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்… ஏத்துக்க முடியாதுன்னா… ஏன் என்னை கல்யாணம் பண்ணுனீங்க?” – கண்ணீரும் கம்பலையுமாக என்றாலும், படபடவென்று கேட்டுவிட்டாள்.
“என்ன தைரியம்டீ உனக்கு…!” – பாய்ந்து வந்தவனின் விரல்கள் அவள் கன்னத்தில் அழுத்தமாக பதிய, அடுத்த நொடியே அரைமயக்கத்தில் கீழே கிடந்தாள் மதுரா. தீயால் சுட்டது போல் கன்னம் எரிந்தது… கண்களில் பூச்சி பறந்தது… ‘ஓ’ என்கிற ஓசை செவிப்பறைக்குள் ஓங்கி ஒலித்தது… எங்கோ தூரத்தில்… ஏதோ ஒரு இருள் தேசத்திற்குள் பிரவேசித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது.
“யு ஆர் சோ க்ரூயல்… எனக்கு புரியல… அதெல்லாம் பழசு… ஏன் உங்களுக்கு புரியல… இனி முடியாது… என்னால முடியாது…” – கண்ணீருடன் முணுமுணுத்தாள். சிவந்த விழிகளுடன் ரௌத்திரமாக அவளை முறைத்து கொண்டிருந்தவனின் உள்ளம் கொதித்தது.
‘எனக்கும் கிஷோருக்கும் நடந்த நிச்சயம் உங்களுக்கு தெரியும்தானே? ஏன் என்னை கல்யாணம் பண்ணுனீங்க? யு ஆர் சோ க்ரூயல்…’ – அவளுடைய வார்த்தைகள் நாராசமாக அவன் செவிகளில் எதிரொலித்தன.
அந்த நிச்சயதார்த்தம் அவனுக்கு தெரிந்ததுதான்… புகைப்படங்கள் எடுப்பது கூட இயல்புதான்… ஆனால் அது ஏன் இவ்வளவு நாட்களாக அவளுடைய அலைபேசியில் இருக்கிறது? அதுதானே அவனுடைய கேள்வி! அதை புரிந்துக்கொள்ளாமல், ஏன் என்னை திருமணம் செய்துகொண்டாய் என்று கேட்கிறாளே! என்ன திண்ணக்கம்!
முரட்டுத்தனமாக அவள் தோளைப்பிடித்துத் தூக்கி நிறுத்தினான். புயலிடம் சிக்கிய பூந்தளிர் போல் துவண்டாள் மதுரா. “நில்லு…” – உறுமினான். தலை கிறுகிறுத்து… கால்கள் பலமிழந்து நலிந்தன… கண்கள் மெல்ல மெல்ல இருளில் மூழ்கிக் கொண்டிருந்தன. அனைத்தையும் ஓரம்கட்டிவிட்டு அவன் பிடியையே பற்றாகக் கொண்டு நின்றாள்… இல்லையில்லை… நிற்க முயன்றாள்.
“என்ன சொன்ன இப்போ? திரும்ப சொல்லு…” – உலுக்கினான்.
“என்ன?” – புரியாமல் கேட்டாள்.
“இப்ப ஏதோ சொன்னியே! அதை திரும்ப சொல்லு…” – அப்போதும் அவளுக்கு புரியவில்லை. என்ன சொன்னோம் என்பதே அவள் நினைவிற்கு வரவில்லை. ‘பைத்தியம் பிடித்துவிட்டது இவனுக்கு… நம்மை கொலைதான் செய்ய போகிறான்.. கடவுளே!’ அச்சத்துடன் அவனை பார்த்தவள்,
“தேவ் ப்ளீஸ்… கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க… ப்ளீஸ்…” என்று அவனை அமைதிப்படுத்த முயன்றாள்.
அவளுடைய பரிதாபமான முகத்தில் வெகுண்டான். “டோன்ட்… டோன்ட் ட்ரை டு ட்ரிக் மி…” – அழுந்த பிடித்த அவன் பிடியில் அவள் முகம் கசக்கியது.
“நா கொடுமைக்காரனா? நா உன்ன கல்யாணம் பண்ணியிருக்கக் கூடாதா? எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டையே இப்படி பேசுவ!” – “தேவ்… என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்படிலாம் செய்யிறீங்க? விடுங்க என்னை… விடுங்க….” – தன்னை விடுவித்துக்கொள்ள போராடினாள்.
“சொல்லு… அந்த போட்டோஸ் எல்லாம் ஏன் பர்சனல் ஃபோல்டர்ல இருந்தது?”
“அது அப்போ வச்சது”
“ஏன் டெலிட் பண்ணல?” – ஆவேசப்பட்டான்.
“மறந்துட்டேன்…”
“நோ…” – கத்தினான். எவ்வளவு மட்டமான பொய்! அவளை கொலை வெறியுடன் பார்த்தவன், “எனக்கு எல்லாம் தெரியணும்” என்றான். பளபளத்த அவன் கண்களை பார்த்தவளுக்கு அடிவயிறெல்லாம் கலங்கியது.
“என்ன தெரியணும்?” – பீதியுடன் கேட்டாள்.
சட்டென்று அவளை தள்ளிவிட்டவன், “எடு உன் போனை” என்றான்.
‘போனா! அது எங்க!’ – அவளுடைய பார்வை தரையில் ஊர்ந்தது… செல்போனின் பாகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறி கிடந்தன.
மிரட்சியுடன் அனைத்து பாகங்களையும் சேகரித்து, ஒன்றாக கோர்த்துப் பார்த்தாள். நடுங்கும் கைகள் ஒத்துழைக்க மறுத்தன. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தாள். முடியவில்லை.
“கொடு இங்க…” – அவளிடமிருந்து பிடுங்கி ஒன்று சேர்த்தான். “இன்னும் ஒரு பார்ட் மிஸ்ஸிங்… தேடு…” – அவள் தேடினாள். அங்கும் இங்கும் பார்வையை அலையவிட்டாள். “கெடச்சுதா இல்லையா?” – உறுமினான். அவசர அவசரமாக தேடி ஒருவழியாகக் கண்டுபிடித்து அவனிடம் கொண்டு வந்து கொடுத்தாள். பத்து நிமிடம் போட்டு உருட்டினான். அவனுடைய விடா முயற்சியின் பலனாக அலைபேசியின் திரை ஒளிர்ந்தது. பகீரென்றது… அவன்தான் முயற்சி செய்து அதை வேலை செய்ய வைத்தான். ஆனால் இப்போது அது வேலை செய்யாமலேயே போயிருந்திருக்கக் கூடாதா என்கிற எண்ணம் வந்தது.
வேண்டாம்… இதோடு விட்டுவிடலாம் என்றுதான் நினைத்தான். ஆனால் உள்ளே இருக்கும் சைத்தான் அவனை துரிதப்படுத்தினான். மதுராவை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு, இன்பாக்சிற்குள் நுழைந்தான். எல்லாம் சமீபத்திய உள்வரவுகளாகத்தான் இருந்தது. மனம் சற்று அசுவாசப்பட்டது… இதோடு வெளியே ஓடிவிடு என்று மூளை அறிவுறுத்தியது… கைகள் தானாக இன்னும் பழைய மெசேஜூகளை தோண்டிக் கொண்டிருந்தது.
‘கிஷோர்’ – அவன் பெயரை பார்த்ததுமே இதயம் இரண்டாக பிளந்துவிடுவது போல் வலித்தது. ‘இன்னமும் காண்டாக்ட் லிஸ்ட்ல இருக்கான்!’ – வேதனையுடன் கண்களை மூடிக் கொண்டான்.
ஓரிரு நிமிடங்கள் கழித்து கண்களை திறந்தான். அந்த மெசேஜ் அவனை பார்த்து ஏளனமாக இளித்தது. அதை திறந்து பார்க்கவே அஞ்சினான். ஆனால் சைத்தான் விடவில்லை… திறந்து பார்க்கச் சொல்லி தூண்டினான். ஓரிரு நிமிட தயக்கத்திற்குப் பிறகு திறந்துவிட்டான்.
‘ஹாய் பேபி…’ என்று ஆரம்பித்திருந்தது. சுரீரென்று ஏதோ பாய்ந்தது அவனுக்குள். சட்டென்று பின்வாங்கிவிட்டான். மேலே படிக்க முடியவில்லை. மனம் வலித்தது. மோசமாக வலித்தது… தாங்க முடியவில்லை.
சட்டென்று அலைபேசியை கட்டிலில் போட்டுவிட்டு இரண்டு கைகளாலும் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டு தலை கவிழ்ந்து அமர்ந்தான். தலையிலுள்ள நரம்புகளெல்லாம் வெடித்துவிடுவது போல் தெறித்தது. ‘ஏன் இப்படி தன்னைத்தானே வேதனைப் படுத்திக்கொள்கிறான்!’ – அவள் மனம் அவனுக்காக உருகியது.
வெகு நேரம் குனிந்தபடியே தலையை பிடித்துக் கொண்டு கண்களை மூடி அமர்ந்திருந்தவன், சட்டென்று எழுந்து பிரிட்ஜை திறந்து மதுபானத்தை எடுத்து மடமடவென்று குடித்தான். மீண்டும் மீண்டும் குடித்தான். பீதியுடன் ஒடுங்கிப் போய் நின்றாள் மதுரா… ‘என்னவோ நடக்கப் போகிறது!’ – அவள் மனம் எச்சரித்தது.
மெல்ல மெல்ல அவனுடைய கண்கள் மிதக்கத் துவங்கின. கட்டிலில் கிடந்த அவளுடைய அலைபேசியை எடுத்தான். மீண்டும் அந்த மெசேஜை திறந்து முழுதாகப் படித்தான். பேபி என்கிற வார்த்தையை தவிர உறுத்தலாக வேறு ஒன்றும் இல்லை. அவன் குடும்ப கதை எதையோ சொல்லியிருந்தான். அவ்வளவுதான். அடுத்த சில உள்வரவுகளை தாண்டி மீண்டும் ஒரு மெசேஜ்… அவன் அனுப்பியது… திறந்து பார்த்தான். அதிலும் ஒரு வார்த்தை இருந்தது. ‘குட் நைட் ஹனி…’ – இப்போது ஏளன புன்னகை ஊர்ந்தது அவன் உதட்டில். இன்னும் தேடி பார்த்தான். அவ்வளவுதான்… வேறு ஒன்றும் கிடைக்கவில்லை.
“பேபி…! ஹனி…! வாவ்!!! செல்ல பேரு?? நீ எப்படி ரிப்லை பண்ணுவ? டார்லிங்… ஸ்வீட் ஹார்ட்… ஆங்?” – கண்களை இறுக்கமாக மூடி அவன் கக்கிய விஷத்தை சகித்துக் கொண்டாள் மதுரா.
மீண்டும் அலைபேசியை ஆராய்ந்தான். அவள் அனுப்பிய பதில்கள் ஏதேனும் கிடைக்கிறதா என்று தேடி பார்த்தான். ஒன்றும் கிடைக்கவில்லை.
“எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்ட!” என்று போலியாக வியந்தவன், “ஆனா எனக்கு தெரியணும். என்னோட வைஃப் எவ்வளவு ரொமான்டிக்னு நா தெரிஞ்சுக்கணும்…” என்று எள்ளலாக கூறி அவளை சுக்கு நூறாக உடைத்தான். அடுத்து என்ன செய்ய போகிறான் என்று ஊகிக்க முடியவில்லை. நடுங்கிப் போய் நின்றாள் மதுரா.
15 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Jasmin jas says:
Sis 50 open aga mattenguthu pa pls
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Login pannina open aagum pa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Jasmin jas says:
Innum agala pa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
puji says:
Super
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
vijaya muthukrishnan says:
nice ud. eagerly waiting for your next ud
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Rama karupasamy says:
Ammaadiyov…Ivan kooda mathura eppadi kalam thalla poraa.
Aanalum avanum pavam than.avanoda unarvim sari than..kattum vitham than thappu
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
தேவ் மதுராவை இப்படி பேசிப்பேசியே நடை பிணமாக்கப்போகின்றார்,வார்த்தைகளை மிகத்தவறாக பிரயோகிக்கின்றார்,ஒத்துக்கொள்கிறேன் மதுரா மீதான காதலும் அவர் தனக்கு மட்டுமே என்ற உணர்விலும்தான் கண்மண் தெரியாத கோபத்தில் செய்கின்றார் ,ஏதாவது தப்பாக நடந்துவிட்டால் அதுதான் இப்போது மதுராவை தள்ளி விடும்போது சுவரில் பலமாக தலை மோதியிருந்தால் என்ன செய்வது,அதன்பின் வருத்தப்பட்டு என்ன பலன்.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Mercy Aruna says:
Mathuras position is really pathetic. What is Dev going to do next?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
கிஷோரை மிரட்டி ஓட வச்சுட்டு கல்யாணம் பண்ணனினது இவனில்லையா.
பொண்டாட்டி ரொமான்டிக் தெரிய நீ ரெமோவா இருக்கணும்…அந்நியனாக இருந்தினா..எப்படி?.
போடா…போடா…
உன்னை கட்டி போட்டு ஒரு நாள் முழுசும் விவேக்கை போல ரொமான்ஸ் படம் பார்க்க வைக்கணும்…அப்பத்தான் சரி வருவ….இன்னும் இவனொட அம்மா வேற சொன்னால்….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
அட லூசு மது நிச்சயத்தார்த்தம் நின்றதும் முதல்ல அவன் கான்ட்டேக் ஃபோட்டோஸ் தான டிலீட் பண்ணனும் இப்படியா மறந்து போவ? இப்ப பார் என்ன ஆட்டம் ஆடறான் இந்த தேவ்னு? ஆனால் இத்தனை நாள் மது கூட வாழ்ந்தும் இந்த மடையனுக்கு மனைவி மனசு புரியலையா? Do you still love him னு கேட்கிறான் மடையன்….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sudha Ravi says:
சரியான சைத்தான்…..இவன் எதுக்கு அவளை கட்டிகிட்டான்..அந்த கிஷோரை ஒட்டிவிட்டது இவனா தான் இருக்கும்…..இவனை பிடிச்சு மெண்டல் ஹாஸ்டலில் தான் சேர்க்கணும்..லூசுப்பய..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Meena PT says:
Chummave aduvan eppo kekava venum
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
HAYOOOOOOO DAILY AVALLUKKU IPDI ATHEERCHCHI KUDAKARADAAAAAAA
MDHURA NEE THAAN IPDI DELIT PANNAAMAA IRUKKLAAMAAAAA YENNA AAGUMOOOOOOO
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Haiyooo madhu ivloo periya muttala nee … Avan kovam niyayam thane …
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sumi Rathinam says:
Oh God!!! Dev u r a real monster…