Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல் - 20

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 50

அத்தியாயம் – 50

என்னோட வைஃப் எவ்வளவு ரொமான்டிக்னு நா தெரிஞ்சுக்கணும்…” என்று ஏளனம் செய்து அவளை அவமதித்த தேவ்ராஜ், தன்னுடைய டெக்கினிக்கல் டீமில் வேலை செய்யும் ஒருவனுக்கு அலைபேசியில் அழைத்துப் பேசினான்.

 

“எனக்கு ஒரு வேலை பண்ணனும் நீ” – மது போதையின் தாக்கம் தெரிந்தது அவன் பேச்சில்.

 

“பண்ணிடலாம் சார்…”

 

“ரெண்டு போன் நம்பர் சொல்லுவேன். அந்த ரெண்டு போன் நம்பருக்கும் இடையில நடந்த கான்வர்சேஷன் மொத்தமா எனக்கு வேணும்…” – அதிர்ந்து போனாள் மதுரா. என்ன பேசிக் கொண்டிருக்கிறான்!

 

“ஓகே சார்…”

 

“எப்போ கிடைக்கும்?”

 

“அந்த ரெண்டு போன்ல ஏதாவது ஒண்ணு இருந்தா ஈஸியா இருக்கும் சார்”

 

“சரி… இன்னும் அரை மணிநேரத்துல ஆபீஸ் வந்துடு” – நட்டநடு ராத்திரியில் உறங்கி கொண்டிருந்தவனை எழுப்பி அலுவலகத்திற்கு வர சொன்னான்.

 

“சார்?” – தயக்கத்துடன் கேட்டான்.

 

“நா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஐ மீன் இட்…” – அழுத்தமாகக் கூறி அவனுடைய பதிலுக்கு காத்திராமல் அழைப்பை துண்டித்தான்.

 

“நோ தேவ்… தப்பு… ப்ளீஸ்… இப்படி பண்ணாதீங்க” – அவனை தடுத்தாள் மதுரா.

 

“சரி தப்பை பத்தி நீ பேசாத… உனக்கு அந்த தகுதி இல்ல” – பற்களைக் கடித்துக் கொண்டு சீறினான் தேவ்ராஜ். பதில் பேசமுடியாமல் திகைத்து நின்றுவிட்டாள். கார் சாவியையும் அவளுடைய அலைபேசியையும் கையிலெடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

“நோ… டோண்ட் டூ திஸ் டு மி… தேவ்…” – அவளுடைய அலறல் அவன் செவியில் ஏறவேயில்லை. இயலாமையுடன் தளர்ந்து போய் தரையில் சரிந்து அமர்ந்த மதுரா, முழங்காலில் முகம் புதைத்தாள். அவளை அம்பலப்படுத்த புறப்பட்டுவிட்டான்… செய்யாத பாவத்திற்கு அவள் மீது சிலுவையை சுமத்த தயாராகிவிட்டான்… அவப்பெயருக்கும், இழி சொல்லுக்கும் அவளை ஆளாக்க துணிந்துவிட்டான்… அவள் மனம் புழுங்கியது… கண்ணீர் கசிந்தது…

 

விடியும்வரை தேவ்ராஜ் வீட்டிற்கு வரவே இல்லை. கிரீச்சிடும் குருவிகளின் குரல் கேட்டு கண்விழித்து நிமிர்ந்தாள் மதுரா. நேற்று இரவு வெகு நேரம் அவனோடு போராடிவிட்டு மனஉளைச்சலுடன் அமர்ந்திருந்தவள், எந்த நொடியில் என்று தெரியவில்லை… அமர்ந்த நிலையிலேயே உறங்கிவிட்டிருக்கிறாள்.

 

சூரிய வெளிச்சம் அறைக்குள் எட்டிப் பார்த்ததையடுத்து எழ முயன்றவள், மரத்துப் போயிருந்த கால்களை நகர்த்த முடியாமல் தடுமாறினாள். மெல்ல முயன்று அடியெடுத்து வைத்து மெத்தைக்கு வந்து அமர்ந்தவளின் கண்கள் அவனைத் தேடின. எங்கும் காணவில்லை… கால்களை தட்டி சரி செய்து கொண்டு குளியலறை, டெரஸ் என்று எங்கும் சென்று பார்த்தாள். அவன் வீட்டிலிருக்கும் அறிகுறியே இல்லை. மனம் சோர்ந்து மீண்டும் கட்டிலில் வந்து அமர்ந்தாள்.

 

நேற்று நடந்த அனைத்தும் அவள் மனதில் படம் போல் ஓடியது. அவன் நடந்துகொண்ட விதம் சிறிதும் சரியில்லை. எவ்வளவு கடுமை… என்ன மாதிரியான வார்த்தைகள்… அடிக்கக் கூடச் செய்தான்… இப்படிப்பட்ட ஒருவனா நம் கணவன்! அவள் மனம் வலித்தது. அவளுடைய சகோதரர்களும் தந்தையும் பெண்களிடம் எவ்வளவு கண்ணியமாக நடந்துக்கொள்கிறவர்கள்… அவர்களிடம் வளர்ந்தவள் இவனை போன்ற ஒரு அசுரனிடமா வந்து சிக்கிக் கொள்ள வேண்டும்! தன்னிரக்கத்தில் கரைந்தாள். அவன் முகத்தில் விழிக்கவேக் கூடாது என்கிற முடிவுடன் குளியலறைக்குள் நுழைந்தாள்.

 

குளித்து முடித்து வெளியே வந்த உடன் மீண்டும் அவள் மனம் அவனை தேடியது. எங்கே சென்றுவிட்டான்! இரவெல்லாம் வரவே இல்லையே என்கிற கவலை தன்னைமீறி எழுந்தது. ஈரத்தலையை உலர்த்தும் நினைவு கூட இல்லாமல் நகத்தை கடித்தபடி மெத்தையில் அமர்ந்தாள். என்னவோ… ஏதோவென்று நினைவுகள் அவனையே சுற்றிக் கொண்டிருந்தன.

 

‘எங்க போயிருப்பான்! ஆபீஸ்லதான் இருப்பானா… இல்ல வேற ஏதாவது…!’ – மது அருந்திவிட்டு காரை எடுத்துக் கொண்டு சென்றானே என்கிற எண்ணம் தோன்றியதும் மனதை பயம் கவ்வியது.

 

சற்று நேரத்திற்கு முன்தான் அவன் முகத்தில் விழிக்கக் கூடாது என்று முடிவெடுத்தாள். ஆனால் இப்போது அவளுடைய உறுதி கயிற்றின் பிரிகள் மெல்ல மெல்ல இற்றுப் போய்விட, தொலைபேசியிலிருந்து அவனுக்கு அழைத்துப் பார்த்தாள். அலைபேசி அறையிலேயே வைப்ரரேட் ஆனது. ‘கடவுளே!’ – தலையில் கைவைத்துக் கொண்டவளுக்கு சட்டென்று அந்த நினைவு வந்தது. ‘நம்ம போனை எடுத்துட்டு போனானே!’ – உடனே தன்னுடைய எண்ணிற்கு தொடர்பு கொண்டாள். அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவளுடைய பதட்டம் அதிகமானது.

 

இவனுடைய குணத்தை பற்றி நன்கு அறிந்திருந்தும் அலட்சியமாக இருந்துவிட்டோமே! அந்த புகைப்படங்களை அழிக்காமல் விட்டுவிட்டோமே! என்று தலையிலடித்துக் கொண்டாள். நேற்றெல்லாம்… ஏன்… சற்று முன்புவரை கூட தவறெல்லாம் அவன் மீதுதான் என்று உறக்கக் கூறிக் கொண்டிருந்த அவள் மனம் இப்போது சுட்டுவிரலை அவள் பக்கம் திருப்பிவிட்டது.

 

அவன் கொஞ்சம் அதிகப்படியாகத்தான் கோபப்பட்டான்… ஆனால் அந்த கோபத்தில் நியாயம் இருக்கிறது… மனைவியின் அலைபேசியில் மற்றொருவரின் புகைப்படம் இருந்தால்… அதுவும் பர்சனல் போல்டரில்… யார்தான் ஏற்றுக்கொள்வார்கள்! கடவுளே! ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது! – கலங்கி தவித்தாள்.

 

யாரிடம் கேட்பது… என்ன செய்வது… என்று எதுவும் புரியவில்லை. அவனுக்கு எந்த தீங்கும் நேர்ந்திருக்கக் கூடாது ஆண்டவா என்கிற ஒரே வேண்டுதல்தான் அவள் மனம் முழுக்க நிறைந்திருந்தது. மாமியாரிடம் சென்று கேட்டுப் பார்க்கலாமா… அவர்களுக்கு ஏதேனும் விபரம் தெரிந்திருக்கலாமே! என்று நினைத்து கீழே வந்தாள்.

 

மருமகளை பார்த்ததும் மகிழ்ச்சியோடு புன்னகைத்தாள் இராஜேஸ்வரி. “வா மதுரா… காபி எடுத்துக்கோ” என்று உபசரித்தவள் கூடவே, “தேவ் எங்க… இன்னமுமா தூங்கறான்?” என்று கேட்டு பீதியை கிளப்பினாள்.

 

“இல்ல ஆண்ட்டி… ஆபீஸ்…”

 

“ஆபீஸ்கா! இவ்வளவு சீக்கிரமாவா?” – இராஜேஸ்வரியின் புருவம் சுருங்கியது. பதில் சொல்ல முடியாமல் திணறிய மதுரா, “இல்ல… நேத்து நைட்டே…” என்று இழுத்தாள்.

 

“நைட்டே போய்ட்டானா! என்ன திடீர்ன்னு? ஆபீஸ்ல எதுவும் பிரச்சனையா? இவ்வளவு நேரம் வராம இருக்கானே! போன் பண்ணி பார்த்தியா?” – கவலையுடன் படபடத்தாள்.

 

“போன் வீட்லேயே விட்டுட்டு போய்ட்டாங்க” – மதுராவின் நலிந்த குரலில் உருகிப்போன இராஜேஸ்வரி, “பயப்படாத… பயப்படாத… தேவ் இப்படித்தான்… வேலைன்னு வந்துட்டா இராப்பகல் பார்க்க மாட்டான். எல்லாத்துலயும் முரட்டுத்தனம். சின்ன புள்ளையிலேருந்தே இப்படித்தான். நீ ஒண்ணும் கவலைப்படாத… வந்துடுவான்.. இந்தா… காபி குடி” என்று மருமகளை சமாதானப்படுத்தினாள்.

 

தங்களுக்குள் நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை இந்த பெண்மணியிடம் என்னவென்று சொல்வது என்று மனதிற்குள் புழுங்கியபடி, மதுரா காபி கப்பை கையில் வாங்கிய போது ரஹீம் கான் உள்ளே வந்தான். அவனை பார்த்ததும் இராஜேஸ்வரியின் முகத்தில் கலவரம் தோன்றியது. இவன்தான் தேவ்ராஜின் வலது கை… இவன் இல்லாமல் அவன் அலுவலகத்திற்கு செல்வதா! அதுவும் இரவு முழுக்க!

 

“ரஹீம்…!” – வியப்புடன் அவனை பார்த்தாள் இராஜேஸ்வரி.

 

“குட் மார்னிங் மேம்…” – முகம் மலர்ந்த புன்னகையுடன் கூறினான். அது அவனுடைய வழக்கம்.

 

“மார்னிங்…”

 

“என்ன ஆச்சு மேம்? எனி ப்ராப்லம்?” – அவளுடைய குழப்பம் சூழ்ந்த முகத்தைப் பார்த்துவிட்டு கேட்டான்.

 

“நீ தேவ் கூட ஆபீஸ் போகலையா?”

 

“ஆபீஸா! சார் கிளம்பிட்டாங்களா?” – புரியாமல் கேட்டான்.

 

“ஏதோ அவசர வேலைன்னு நேத்து நைட்டே கிளம்பிட்டானாமே!”

 

“ஓகே மேம்… நான் செக் பண்ணிக்கிறேன்” என்று கூறிவிட்டு அவனுடைய அலைபேசிக்கு தொடர்பு கொண்டு பார்த்தான்.

 

“போன் வீட்ல இருக்கு” – மதுரா முணுமுணுத்தாள். அனைவருக்கும் முன்பாக இன்று அவமானப்படப் போவது உறுதி… யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. அவன் பத்திரமாக இருக்கிறான் என்கிற செய்தி மட்டும்தான் அவளுக்கு வேண்டும்… வேறு எதை பற்றியும் கவலையில்லை…

 

ரஹீம் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பேசிவிட்டு, “சார் அங்க இல்லையாம்…” என்றான் மெல்ல.

 

“என்ன!” – அதிர்ந்தாள் இராஜேஸ்வரி. “எங்க போய்ட்டான்! உன்கிட்ட என்ன சொல்லிட்டு போனான்?” – மருமகளிடம் கேட்டாள். மதுராவிற்கு பதில் சொல்ல முடியவில்லை. “என்ன ஆச்சு மதுரா…?” – இராஜேஸ்வரி மருமகளிடம் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே, “ம்மா… நைட்டெல்லாம் அவங்க ரூம்ல ஒரே சத்தம்… சண்டைன்னு நினைக்கறேன்… தேவ் பாய் கோவமாதான் வெளியே போயிருப்பாங்க… மேடம் ஆபீஸ்குன்னு மழுப்பறாங்க” – மாடியிலிருந்து இறங்கி வந்த பாரதி அனைவருக்கும் முன்பாக போட்டு உடைத்தாள்.

 

குன்றிப்போனாள் மதுரா. வேலைக்காரர்கள் முதற்கொண்டு, ரஹீம், ரெஜினா, இராஜேஸ்வரி என்று அனைவரும், அவளை ஒரு குற்றவாளியை பார்ப்பது போல் பார்ப்பதாகத் தோன்றியது. அவளால் யாரையும் நிமிர்ந்துக் கூட பார்க்க முடியவில்லை.

 

பதட்டம் அதிகமாகமென்றாலும் நிதானமிழக்கவில்லை இராஜேஸ்வரி. “எத்தனை மணிக்கு போனான்” என்று மட்டும் மருமகளிடம் கேட்டாள்.

 

“பன்னிரண்டு… இல்ல… ஒரு மணியிருக்கும்….” – அந்த நேரத்தில் விழித்திருந்திருக்கிறான்… அதுவும் சண்டை என்றால் நிதானத்தில் இருந்திருக்க மாட்டான் என்று ஊகித்தாலும் அதை அனைவருக்கும் முன்பாக வெளிப்படுத்திக் கேட்க விரும்பாமல், பாதுகாவலர்களிடம் விசாரிக்கலாம் என்று எண்ணி வெளியே வந்தவள் சட்டென்று நின்றாள்… ‘கார் இருக்கே!’ – குழப்பத்துடன் கார்ட்ஸிடம் திரும்பி, “தேவ் வந்துட்டான்னா?” என்றாள்.

 

“எஸ் மேம்” – போன உயிர் மீண்டுவிட்டது போல் ஆசுவாசமடைந்தவள், “எப்போ?” என்றாள்.

 

“நாலு மணிக்கு…” – ‘வீட்டுக்கு வந்தவன் எங்க போனான்!’ என்கிற குழப்பத்துடன் மீண்டும் உள்ளே வந்தாள்.

 

“தேவ் வீட்டுக்கு வந்தாச்சு…” என்று கூறி மதுராவின் வயிற்றில் பாலை வார்த்தாள்.

 

“மேல இல்லையே!” – யோசனையுடன் கேட்டாள் மதுரா.

 

“ஜிம்ல பார்த்திங்களா மேம்?” என்றான் ரஹீம்.

 

 




11 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Poonkodi Mohan says:

    Next episode eppo poduvinga


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      UPDATED PA


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nirmala Sundaram says:

    Next epi eppo poduvinga


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      UPDATED…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sabeena Begam says:

    Intha barathi en ippadi iruka


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    ADAII YENFA POI PLENNCHUCHUKITAAAAADAAAAAAAA


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    மதுரா மேல் எந்த தப்பும் இல்லை என தெரிந்துக்கொண்டான் போல அதான் இவளை என்ன வார்த்தை எல்லாம் கேட்டோம் என கூனி குறுகி போய் எங்கோ ஒளிந்துக்கொண்டானு நினைக்கிறேன்


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    ஒருவேளை தேவ் car உள்ளே இருப்பாரோ,எல்லஓரஉக்கஉம் குடைச்சல் கொடுக்கின்றார் இந்த தேவ்,தேவ் அடிக்கடி முருங்கை மரத்தில் ஏறி எல்லோரையும் பயம் காட்டுவதுமல்லாமல் இப்போது பதட்டப்படவேறு வைக்கின்றார்.

    நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    Haiyooo nithyaaa 2 days iruke … 🙁😱 innaiku ennoru epi pods try pannugalen plzzzzzzz


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pon Mariammal Chelladurai says:

    பைத்தியம்…பைத்தியம்.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sumi Rathinam says:

    Thik thik thik….

    Can v have the next episode today????? Can’t wait till Monday…

You cannot copy content of this page