Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

இல்லறம் இதுதான்

Share Us On

[Sassy_Social_Share]

இல்லறம் இதுதான் – 11

அத்தியாயம் – 11

மாலை மணி ஏழு. லட்சுமி இரவு உணவு தயாரித்துக் கொண்டிருந்தாள். ஹாலில் ‘வேளைக்கொரு முத்தம் என் தேகம் எங்கும் கொட்டிக் கொட்டித் தந்தான்’ என்று டிவியில் ரீமாசென் செல்லமாக ஆடிக் கொண்டிருந்தாள்.

 

லட்சுமியின் உதடுகள் அந்தப் பாடலை முணுமுணுத்தது. உள்ளம் ஏக்கத்தில் வாடியது. இப்போவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஏதும் விசேஷம் இல்லையா லட்சுமி என்று கேட்டு நச்சரிக்கின்றார்கள். இது என்று முடிவிற்கு வரும் என்று தெரியவில்லை. வாழ்க்கையே வெறுமையாகத் தோன்றியது. போதாததற்கு  அத்தையும் மாமாவும் வேறு வீட்டில் இல்லை. ஒரு திருமணத்திற்காக திருச்சி சென்றிருக்கிறார்கள். இப்போதைக்கு அவளுக்கு துணை வேலையும் டிவியும் தான்.

 

கதவு வேகமாகத் தட்டப்பட்டது. லட்சுமி கலவரமானாள். காலிங் பெல் இருக்கும் பொழுது யார் கதவை தட்டுவது. அதுவும் இத்தனை வேகமாக. ஜன்னலோரம் சென்று எட்டிப் பார்த்தாள். வியர்க்க விறுவிறுக்க மோகன் நின்றிருந்தான். உடனே கதவைத் திறந்தாள்.

 

“கதவைத் தட்டினா உடனே திறக்கத் தெரியாதா. எல்லாம் என் தலை விதி” தலையிலடித்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டான். லட்சுமி விக்கித்துப் போய் நின்றாள். காலிங் பெல்லை அடிக்காமல் கதவை தட்டி அவளை பயமுறுத்தியது அவன் குற்றம். அப்படி இருக்கையில் இவள் மீது எரிந்துவிழுந்துவிட்டு போகிறானே.

 

சமையலறையில் மீதி வேலைகளை முடித்துவிட்டு அவள் படுக்கையறைக்கு வரும் பொழுது அவன் படுக்கையில் மல்லார்ந்துக் கிடந்தான். ஷூவைக் கூட கழட்டவில்லை. அவள் கழட்ட முயன்றாள். அவளை உதறிவிட்டு எழுந்தான்.

 

“ஷூவோட பெட்ல படுத்தா பெட் அழுக்காயிடாதா?” – பொறுமையாகக் கேட்டாள்.

 

“பொண்ணுக மனசுல இருக்க அழுக்கை விட என் ஷூ அழுக்கு ஒன்னும் பெருசு இல்ல…” கடுமையாகப் பேசினான்.

 

“யாரை சொல்றிங்க?”

 

“பொம்பளைங்கள தான் சொல்றேன். ஆம்பளைங்க செத்துட்டு இருக்கோம்”

 

“என்ன!?”

 

“ஒருத்தன் அங்க செத்துட்டு இருக்கான். இதுக்கு மேல ஏதாவது பேசின கொன்னுடுவேன்” என்று கழுத்தைப் பிடித்தான். முகம் வெளிறிப் போன லட்சுமி அவனிடமிருந்து விடுபட்டு அறையைவிட்டு வெளியே வந்தாள். மோகனின் செயலை சிந்தித்துக் குழம்பிப் போய் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர் தானாக வடிந்தது. சமைத்த உணவு உண்பார் எவருமின்றி காய்ந்தது.

 

காலையில் எழுந்து டிபன் கூட சாப்பிடாமல் மோகன் கிளம்பிவிட்டான். அவன் பின்னால் லட்சுமியும் வீட்டைப் பூட்டிவிட்டு ஸ்கூட்டியில் சென்றாள். அவனுடைய அலுவலகத்தில் என்ன நடந்தது என்று அவனுடைய நண்பனைக் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் என்று நினைத்தாள். ஆனால் அவன் ஒரு ஹாஸ்பிட்டலின் முன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே செல்லவும் குழப்பத்துடன் அவனை பின் தொடர்ந்தாள்.

 

அவன் ஐ.சி.யூவிற்கு சென்றான். வாசலிலேயே விஜய் நின்றான்.

 

“டாக்டர் என்னடா சொன்னாரு?” மோகன் கேட்டான்.

 

“இன்னும் 24 மணிநேரத்திற்கு பிறகு தான் எதுவுமே சொல்ல முடியும்னு சொல்றாரு”

 

“சரி நீ வீட்டுக்கு போ. நான் பார்த்துக்கறேன்”

 

விஜய் வீட்டை நோக்கி சென்றான். லட்சுமி அவனை பின்தொடர்ந்தாள். அவன் அவனுடைய வீட்டை அடையும் அவரை அவளால் அவனை பிடிக்க முடியவில்லை. அவன் வீட்டிற்குள் நுழையும் பொழுது தன்னை தொடர்ந்து வீட்டிற்கு யாரோ வருவதை உணர்ந்து திரும்பிப் பார்த்த விஜய் அவளை அடையாளம் கண்டுக் கொண்டான்.

 

“வாங்க வாங்க.. நீங்க மோகன் மனைவி தானே?”

 

“ஆமாம்…”

 

“உள்ள வாங்க… கவிதா யாரு வந்திருக்காங்கன்னு பாரு” – மனைவியை அழைத்தான்.

 

“உட்காருங்க”

 

“வாங்க” கவித்தா கைகூப்பினாள்.

 

“இவங்க மோகன் மனைவி” – தன் மனைவிக்கு அவளை அறிமுகம் செய்துவைத்தான்.

 

 

“அப்படியா… உக்காருங்க. என்ன சாப்பிடரிங்க” – உபசரித்து முடித்தாள். அவன் தனக்கு எதுவும் வேண்டாம் என்று மறுத்த பிறகு நலவிசாரிப்புகலெல்லாம முடிந்தது.  அப்போதுதான் கவித்தாவிற்க்கு சாரதியின் ஞாபகம் வந்தது.

 

“சாரதி எப்படிங்க இருக்கார்”

 

“24 மணிநேரம் ஆகணும் கவி… அதுக்கு பிறகு தான் நிலைமை தெரியும்”

 

“நீங்க சொல்லுங்க.. என்ன திடீர்ந்து இந்த பக்கம்”

 

“சாரதிக்கு என்ன பிரச்சனை”

 

“தற்கொலை முயற்சி”

 

“என்ன காரணம்?”

 

“உங்களுக்கு தெரியாதா? மோகன் எதுவுமே சொல்லலையா?”

 

“இல்லை”

 

“உங்கிட்டக் கூடவா அவன் எதுவும் சொல்லல?” என்று அவன் கேட்டது தான் தாமதம். அவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வடிய ஆரம்பித்துவிட்டது.

 

“அய்யய்யோ… என்னங்க… நான் எதாவது தப்பா சொல்லிட்டேனா?”

 

“இல்ல.. எனக்குக் கூடப் பிறந்தவங்க யாரும் இல்லை. உங்களை என் கூடப் பிறந்த அண்ணனா நினச்சு சொல்றேன்” என்று மேலோட்டமாக நடந்தவற்றைக் கூறினாள்.

 

“அவர் எதுக்காக இந்த மாதிரி நடந்துக்கராருனு தெரியில. ஆனா அதுக்கும் சாரதிக்கும் நிறைய தொடர்பு இருக்குன்னு மட்டும் தெரியுது”

 

விஜய் சிறிது நேரம் யோசித்தான்.

 

“மோகன் ஏன் இப்படி  நடந்துக்கரான்னு எனக்கு நல்லா புரிஞ்சிடிச்சு. எல்லாத்துக்கும் சாரதியோட வாழ்க்கை தான் காரணம்” விஜய் பழைய கதையை கூற ஆரம்பித்தான்.

 




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    சாரதி வாழ்க்கையை வைத்து மோகன் எப்படி தன் வாழ்கையை முடிவு செய்யலாம்,உலகத்தில் எல்லோரும் ஒன்று போலவா இருக்கின்றார்கள்.

    நன்றி

You cannot copy content of this page