கனல்விழி காதல் – 52
10227
12
அத்தியாயம் – 52
உறக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது. கிஷோர் பக்கத்தில் மதுரா… அவனோடு நெருக்கமாக… அவன் தோளில் சாய்ந்துக் கொண்டு… அந்த படத்தை நினைத்துப் பா…ர்…த்…தாலே…!!! – கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, இரண்டுகைகளாலும் தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டான் தேவ்ராஜ். தலை வெடித்துவிடும் போலிருந்தது.
“எக்ஸ்கியூஸ் மீ சார்… திஸ் டாக்குமெண்ட் நீட்ஸ் டு பி…” – “கெட் அவுட்…” – சீற்றத்துடன் இடைவெட்டிய தேவ்ராஜின் வேகத்தில் திகைத்துப் போனான் ரஹீம் கான்.
முற்றிலும் மாறிவிட்டான். சிறிதும் நிதானமில்லை… வேலையிலும் பல குளறுபடிகள்… இது தேவ்ராஜின் இயல்பே அல்ல… என்னவாயிற்று திடீரென்று! – சிந்தனையுடன் முதலாளியைப் பார்த்தவன், “சார்… இன்னைக்குதான் லாஸ்ட் டேட்…” என்றான் தயக்கத்துடன்.
“வச்சுட்டு போ…” – கையிலிருந்த கோப்பை மேஜையில் வைத்துவிட்டு வெளியேறினான் ரஹீம்.
‘அவள் மீது எந்த தவறும் இல்லை… வீட்டில் முடிவு செய்த மாப்பிள்ளையை ஏற்றுக் கொண்டாள். அவளை குற்றம் சொல்ல முடியாது. ஆனால் நீ! நீ தான் அந்த கிஷோர் அவளிடம் நெருங்கியதற்குக் காரணம். உன்னுடைய பிசினஸ் புத்திதான் காரணம்…’ – மனசாட்சி அவனை குத்தியது.
இண்டர்காமை எடுத்து நம்பரை தட்டி, “ஒரு காபி” என்றான். நொடியில் காப்பி கோப்பையை கொண்டுவந்து அவன் மேஜையில் வைத்துவிட்டுச் சென்றாள் ஒரு பெண். அதை எடுத்து சுவைத்தான். கருப்பு காப்பியின் கசப்பை அவன் நா உணரவில்லை. அதைவிட கசப்பான நினைவுகள் அவன் மனதை ஆக்கிரமித்திருந்தன.
அதிலிருந்து விடுபடவே முடியவில்லை. பெருமூச்சுடன் ரஹீம்கான் கொண்டுவந்து வைத்திருந்த கோப்பை புரட்டினான். ஒன்றுக்கு மூன்று முறை படித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயத்தில் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று தெளிவு கிடைக்கவில்லை. எரிச்சல்களுடன் பைலை மூடிவிட்டு கண்களை மூடி அமர்ந்தான். மனதை ஒருநிலைப்படுத்தி என்ன முடிவெடுப்பது என்று யோசித்தவனுக்கு விடை கிடைத்தது. ரஹீமை அழைத்து விபரத்தை கூறிவிட்டு, மணிக்கட்டை திருப்பிப் பார்த்தான். எட்டு மணியானது.
“டைம் ஆச்சு… மெயில் போட்டுட்டு நீ கிளம்பு. நாளைக்கு பார்த்துக்கலாம்…” – ரஹீமிற்கு விடைகொடுத்து அனுப்பினான். தனிமையும் வெறுமையும் அவனை மீண்டும் சூழ்ந்துக் கொண்டது. வீட்டிற்கும் செல்ல பிடிக்கவில்லை. ‘அங்கு போய் எதை கிழிக்கப் போகிறோம்’ என்கிற விரக்தியில் காரை எடுத்துக் கொண்டு பாருக்குச் சென்றான். மூக்குமுட்ட குடித்தான்… நாகரீகத்திற்காக மதுக்கோப்பையை வாயில் வைத்து எடுக்கும் சோசியல் டிரிங்கராக இருந்தவன், மொடாக்குடிகாரனைப் போல மண்டிக் குடித்தான். ட்ரைவரை உடன் அழைத்து வரவில்லை என்கிற கவலையெல்லாம் இல்லை. அவனை நேரத்திற்கு வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அக்கறைப்பட்டவன் தன்னுடைய பாதுகாப்பைப் பற்றி சிறிதும் சிந்திக்கவில்லை.
****************
குடித்துவிட்டு நிலைகொள்ளா போதையோடு தினமும் நள்ளிரவை தாண்டி வீட்டுக்கு வரும் கணவனுக்காக, படபடக்கும் இதயத்தோடு காத்திருந்தாள் மதுரா. அவன் குடிப்பது பெரிதல்ல… வீட்டிற்கு வந்து அவளை வார்த்தையால் வதைப்பது கூட பெரிதல்ல… பாதுகாப்பாக வந்து சேர வேண்டுமே என்கிற பயம்தான் அவளை ஆட்டிப்படைத்தது.
கடந்த ஒரு வாரமாக அவன் நேரத்திற்கு வீட்டுக்கு வருவதில்லை… ஒழுங்காக உறங்குவதில்லை… அனைவரிடமும் எரிமலை போல் சீறுகிறான்… அவளை தேளாகக் கொட்டுகிறான்… இதெல்லாம் எப்போது சீராகும்! அவன் மனம் எப்போது மாறும்… நொந்து போன மனதுடன், டெரஸிலிருந்து வாசலை எட்டிப் பார்த்தாள். ம்ஹும்… அவன் வந்தபாடில்லை. ‘போன் செய்து பார்க்கலாமா..’ – பயம் கொண்ட மனம் அவளை உந்தியது. போதையோடு வண்டி ஓட்டுகிறானே என்று தவித்தது.
‘போன் பண்ணினா நடிக்கிறியா என்பான்… பண்ணலேன்னா கொஞ்சமாவது அக்கறை இருக்கா என்பான். எதற்கு ஆளாவது…’ – உள்ளம் புலம்பியது. மீண்டும் ஒருமுறை வாசல்பக்கம் எட்டிப் பார்த்தாள். கேட்டிற்கு வெளியே ஏதோ ஒரு காரின் ஹெட்லைட் வெளிச்சம் தெரிந்தது. உற்றுப் பார்த்தாள். மெர்சிடிஸ்… அவனேதான்… வந்துவிட்டான்… ‘ஹப்பாடா…’ – நிம்மதி பெருமூச்சுடன் அவசர அவசரமாக அறைக்குள் வந்தவள், கட்டிலில் படுத்து கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள். விழித்திருந்தால்தானே விதண்டாவாதம் செய்து வம்பிழுப்பான். உறங்கிவிட்டால்!
அறையில் நுழைந்ததும் முதலில் அவன் பார்வை மதுராவைத்தான் தேடியது. “ஓ! ஹனி தூங்கிடிச்சா!” என்றபடி கட்டிலுக்கு அருகில் வந்து அவளை உற்றுப் பார்த்தவன், “ஹனி!!! யாரோட ஹனி… ஹா… அதுதானே டாப் மோஸ்ட் சீக்ரெட்… யாருக்கும் தெரியாது… எனக்கும் தெரியாது… குட்…” என்றான் சட்டை பொத்தானை கழட்டியபடி.
“தூங்கு… நல்லா தூங்கு… புருஷன் வந்தானா… போனானா… சாப்பிட்டானா… தூங்கினானா… எந்த அக்கறையும் இல்ல… யு ஆர் ஜஸ்ட் என்ஜாயிங் யுவர் லைஃப்… என்ஜாய்…” என்று வெறுப்புடன் வாழ்த்தினான்.
மதுரா மூடிய கண்களை திறக்காமல் இறுகிப்போய் படுத்திருந்தாள். நறநறவென்று பற்களை கடித்த தேவ்ராஜ், டிவியை ஓடவிட்டு சத்தத்தை அதிகப்படுத்திவிட்டு கோச்சில் சாய்ந்து அமர்ந்தான். மனம் பரபரவென்றிருந்தது. மனைவியை திரும்பிப் பார்த்தான். தான் இப்படி உறக்கமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது அவள்மட்டும் நிம்மதியாக உறங்குகிறாளே என்று எரிந்தது.
“மதுரா…” – சத்தமாக அழைத்தான். அவள் அசையவில்லை. “ம..து..ரா…” – கடுமையாக குரலை உயர்த்தினான். வேறு வழியே இல்லை. இதற்கு மேலும் நடிக்க முடியாது. தலையை மெல்ல திருப்பி அவனைப் பார்த்தாள்.
“அதுக்குள்ள என்ன தூக்கம்?” – கடுப்படித்தான். அவள் சுவர்கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “மணி ரெண்டாகுது” என்றாள்.
“பசிக்குது… சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வா…” – ஆணையிட்டான்.
“இவ்வளவு நேரம் சாப்பிடலையா நீங்க?”
“வாட்! என்ன கேட்ட?”
“இன்னும் சாப்பிடலையான்னு கேட்டேன்…”
“இது அக்கறையா… இல்ல அலுப்பா?” – நக்கலாகக் கேட்டான். அவள் பதில் சொல்லாமல் அறையிலிருந்து வெளியேறினாள்.
“ஐம் சாரி… நீ உன்னோட எக்ஸ் கூட ட்ரீம்ல இருந்திருப்ப. டிஸ்டர்ப் பண்ணிட்டேன்… எனக்கு சாப்பாட்டை மட்டும் கொடுத்துட்டு நீ போயி கன்டினியூ பண்ணு… அவனை காக்க வைக்கக் கூடாது… ஹி வில் கெட் ஆங்கிரி…” – அவனுடைய விஷம் தோய்ந்த வார்த்தைகள் அவளை துரத்திக் கொண்டு வந்தன.
உணவு தட்டோடு மீண்டும் மதுரா மேலே வரும் பொழுது அறை அலங்கோலமாக காணப்பட்டது. அலமாரியில் இருந்த துணிகளெல்லாம் கீழேக் கிடந்தன. டீப்பாய் எக்குத்தப்பாக உருண்டுக் கிடந்தது. அதன் மீது வைக்கப்பட்டிருந்த பொருட்களெல்லாம் கீழே சிதறி கிடந்தன. கோபத்தில் உதைத்துத் தள்ளியிருக்கிறான் என்று புரிந்தது.
“ஒரு டிரஸ்… என்னோட ஒரு ட்ரெஸ்ஸை ஒழுங்கா எடுத்து வைக்க முடியல உனக்கு. அப்படி என்ன வேலை நாள் முழுக்க?” எரிந்து விழுந்தான்.
“எந்த டிரஸ்?”
“எதையாவது ஒண்ணை எடு… இந்த ட்ரெஸ்ஸோடையே தூங்குவேனா?”
கையிலிருக்கும் தட்டை எங்கு வைக்கலாம் என்று பார்த்தாள். உருண்டுக் கிடக்கும் டீப்பாயில் வைக்க முடியாது… மேஜையில் வைத்துவிட்டு, குவிந்துக் கிடக்கும் ஆடை மலையிலிருந்து அவனுடைய இரவு உடையை தேடி எடுத்துக் கொடுத்தாள்.
அவன் உடைமாற்றிக் கொண்டு வந்த பின் “சாப்பிடுங்க” என்றாள். அதற்குள் டீப்பாயை நிமிர்த்தி அவன் சாப்பிடுவதற்கு வசதியாக சோபாவுக்கு எதிரே இழுத்துப் போட்டு, அதன் மீது உணவையும் தண்ணீரையும் ரெடியாக வைத்திருந்தாள். அவன் பேசுவதற்கே இடம் கொடுக்கக் கூடாது என்பதுதான் அவளுடைய எண்ணம். ஆனால் அது பலிக்கவில்லை. அவனுடைய நாவிடமிருந்து அவளால் தப்பிக்க முடியவில்லை.
“ஹௌ ஸ்வீட் யு ஆர் ஹனி… எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சிருக்க!” – ‘ஹனி’ யில் அழுத்தம் கொடுத்து ஆச்சரியப்பட்டான். உயிர் போவது போல் இருந்தது அவளுக்கு. ஹனி… பேபி… ஸ்வீட் ஹார்ட்… போன்ற வார்த்தைகளெல்லாம் கசந்தன. இவையெல்லாம் கிஷோரை நினைவில் கொண்டு அவன் கூறுபவை. அவளை குத்திக் கொல்லும் ஆயுதங்கள். உதட்டைக் கடித்துக் கொண்டு அமைதியாக நின்றாள்.
“நீ பார்க்கத்தான் சாஃப்ட்… ஆனா உண்மையிலேயே அப்படி இல்ல… ரொம்ப ஸ்ட்ராங்ல்ல…” என்று அவளை நிமிர்ந்து பார்த்தவன், “என்கிட்டயே… ம்ம்ம்?” என்று சிவந்திருந்த விழிகளை உருட்டினான். மதுராவின் உடலும் மனமும் மிகவும் சோர்ந்து போயிருந்தது. நிற்க கூட தெம்பில்லை. தினமும் இப்படியே செய்து கொண்டிருந்தால் எத்தனை நாட்களுக்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும்? வேதனையுடன் கண்களை மூடினாள்.
“உண்மையை சொன்னா உடம்பெல்லாம் எரியும்னு சொல்லுவாங்கல்ல…! இட்ஸ் ட்ரு… உம்முகமே சொல்லுதே!”
“ப்ளீஸ்… சாப்பிட்டுட்டு வந்து படுங்க… மூணு மணியாகுது”
“ஏன்? பாதியிலேயே விட்டுட்டு வந்த கனவை, போயி கன்டினியூ பண்ணனுமா?”
“நீங்க ஏன் இப்படி பேசுறீங்கன்னு எனக்கு புரியல… எனக்கு எந்த கனவும் இல்ல… கற்பனையும் இல்ல…” – பொறுக்க முடியாமல் பதில் பேச துவங்கினாள். அதைத்தான் அவனும் எதிர்பார்த்தான்.
“அப்புறம் ஏன் அவனோட போட்டோவை உன்னோட போன்ல வச்சிருந்த? காது குத்துறியா?”
“தேவ்… கிஷோர் சாப்டர் முடிஞ்சுப்போனது. அதை பத்தி பேசி என்னத்த சாதிக்க போறீங்க?”
“உண்மையை தெரிஞ்சுக்குவேன்”
“என்ன உண்மை தெரியணும்”
“அவன் இன்னும் உன்னோட மைண்ட்ல இருக்கான்”
“மைண்ட்ல இருந்தா? எனக்கு தெரிஞ்சவங்க எல்லாரும்தான் என்னோட மைண்ட்ல இருக்காங்க. அதுக்கு என்ன இப்போ?”
“மத்தவங்களும் அவனும் ஒண்ணு இல்ல”
“ஒண்ணு இல்லாம…? வேற என்ன? எனக்கு எந்த விதத்துலேயும் அவன் ஸ்பெஷல் இல்ல…”
“என்னால நம்ப முடியல”
“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? உங்க மனசுக்குள்ள இருக்க பிரச்சனையை நீங்கதான் சரி பண்ணிக்கணும்” – வெட்டிவிடுவது போல் பேசும் மதுராவை கொலைவெறியுடன் பார்த்தான் தேவ்ராஜ்.
‘என்னால நம்ப முடியலன்னு சொன்னா… நம்புங்க நீங்கதான் எம்மனசுக்குள்ள இருக்கீங்க’ என்று கூறி தனக்குள் எரிந்துக் கொண்டிருக்கும் தீயை அணைப்பாள் என்று அவன் எதிர்பார்த்தான். அவளோ, ‘உங்க பிரச்சனையை நீங்கதான் சரி பண்ணிக்கணும்’ என்று கூறி, எரிகிற நெருப்பில் எண்ணையை எடுத்து ஊற்றினாள்.
“அப்போ உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல… உன்னோட பிரச்சனை உனக்கு… என்னோட பிரச்சனை எனக்கு அப்படித்தானே?” – கருத்துவிட்டது அவன் முகம்.
“நா அப்படி சொல்லல…” – “வேற எப்படி சொன்ன?” – விருட்டென்று கையை உதறிவிட்டு எழுந்தான்.
“குப்ப்ப்பை மாதிரி உன்ன தூக்கியெறிஞ்சுட்டு போய்ட்டான் அந்த கிஷோர்… தி கிரேட் நரேந்திரமூர்த்தி என்கிட்ட வந்து கெஞ்சினார்… கடைசி நேரத்துல நான்… நான் உனக்கு வாழ்க்கைக்கு கொடுத்தேன். அந்த நன்றி கொஞ்சமாவது உன் மனசுல இருக்கா? ம்ஹும்… உடம்புல பிரபாவதியோட இரத்தம் ஓடுதுல்ல…! நன்றிங்கற வார்த்தைக்கு அர்த்தம் தெரியறது கூட கஷ்ட்டம்தான்…” – மதுராவின் ரெத்தம் கொதித்தது. அவளால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.
“போதும்… போதும் தேவ்…” – அவன் முகத்திற்கு நேராக கையை உயர்த்தினாள்.
“ஏன்? உண்மையை கேட்க முடியலையா?” – அலட்சியமாகக் கேட்டான். அந்த பார்வையும் தொனியும் அவளை சுக்கு நூறாக உடைத்தது. விறுவிறுவென்று டெரஸிற்கு சென்றாள். அவனிடமிருந்து விலகி, கண்காணாத தொலைவிற்கு ஓடிவிட வேண்டும் போலிருந்தது.
சில்லென்று வீசும் குளிர்காற்று அவளுடைய மனப்புழுக்கத்தை சிறிதும் குறைக்கவில்லை. கலங்கி நிற்கும் கண்ணீர் கீழே வடிந்துவிடக் கூடாது என்கிற பிடிவாதத்துடன் மனதை கல்லாக்கிக் கொள்ள முயன்றாள். அவளுடைய முயற்சியை முறியடிக்கும் விதத்தில் அவளை தொடர்ந்து வந்தான் தேவ்ராஜ்.
“ஓடி ஓளிஞ்சுட்டா உண்மை இல்லைன்னு ஆயிடுமா?”
“கடவுளே…!!!” – தினம் தினம் இதே சித்திரவதைதான். எப்படி தங்குவது… மதுராவின் இரத்த அழுத்தம் எக்குத்தப்பாக எகிறியது. உடல் நடுங்கியது… உள்ளம் குமுறியது…
“ஒரு விஷயத்தை பத்தி நீ யோசிக்கணும் மதுரா… என்னோட தகுதிக்கும் திறமைக்கும்… நீ… பொருத்தமானவதானா? உனக்கு அப்படி தோணுதா?” – வேண்டுமென்றே அவளை நோகடித்தான்.
“உங்களுக்கு அப்படி தோணலைன்னா என்னைய அனுப்பிடுங்க. தியாகம் பண்ணி நீங்க என்னோட வாழ வேண்டாம். எனக்கும் கிஷோருக்கும் நிச்சயம் நடந்தது உண்மை. அவன் கூட நா பழகினது… போட்டோ எடுத்துக்கிட்டது எல்லாமே உண்மை. நடந்த எதையும் மாத்த முடியாது. எல்லாம் தெரிஞ்சுதான் கல்யாணம் பண்ணுனீங்க.. திரும்பவும் சொல்றேன்… பிடிக்கலைன்னா விட்டுடுங்க. உங்க திறமைக்கும் தகுதிக்கும் ஏத்த மாதிரி பொண்ணு யாரையாவது பார்த்து கல்யாணம் பண்ணிகோங்க. தேவையில்லாம என்னையும் என் குடும்பத்தையும் பற்றி தப்பா பேச வேண்டாம்…” – மேல்மூச்சு வாங்க படபடவென்று கொட்டித் தீர்த்துவிட்ட மனைவியை வெறித்துப் பார்த்தான் தேவ்ராஜ்.
12 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Saravana Kumari says:
Dev chlm un kadhalai 10% kuda Madhura darlingku unarthamal , aval unnidam urimai kadhal kaatanum yethirpatha yepadi. First husband ah pesu , athigaram pannatha , aprm avaluku verupputha varum
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Jaya Bharathi says:
Nice
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Skanatharajah Sutha says:
Nice
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Mary G says:
உனக்கு என்ன தான் பா வேணும். நீ சிரிச்சா சிரிக்க அழுதா அழ நீ சாப்பிட சொன்னா சாப்பிட நீ நினைக்கிறத சொல்ல self respect உள்ள ponala எப்பவும் முடியாதே. மாறனும் thambi
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sabeena Begam says:
Mathuravin kobathil tavarillai anal athai.katum vitham tavaru
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
மதுரா பேசுவதில் தப்பேயில்லை ,எதுவும் மறைத்து இவர்களது திருமணம் நடைபெறவில்லை,தேவ்வின் மனம் நிதானமாக எதையும் சிந்திக்க முடியாமல் உரிமையுணர்வு காரணமாக இப்படி காயப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்,பிடிக்கல்ல என்றால் விலகுவதில் தப்பில்லை.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
hayooooo innumm avaan kobathai visree vidathaaaaaa
avan thann nilayil illai madhuraa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Uma Deepak says:
Ivanai thirutha mudiyaathu … Dei nee ava pona piragu thaan realise panna pora.. madhura arumai theriyavillai pola avanukku.. antha idathil veru ponnu iruntha inneram periya sandai pottu iruppa..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
இப்ப இவனுக்கு என்னதான் வேனும்? அவளை வார்த்தையால் எப்படி வதைக்கிறான்? இந்த மதுராவும் அமைதியா இருக்க ரொம்ப பேசறான்…, பொங்கிறு மதுரா
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sudha Ravi says:
சரியான கிறுக்கன்…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
மது தெளிவாக பேசிட்டாள்.
போடா…போ…யார் மேலேயோ உள்ள கோபத்தை அவ மேல காண்பிக்கிற…மட்டி..மட்டி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ambika V says:
Super 👌 epi