Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

இல்லறம் இதுதான்

Share Us On

[Sassy_Social_Share]

இல்லறம் இதுதான் – 15

அத்தியாயம் – 15

மோகன் லட்சுமியை பற்றி அதிகமாக சிந்திக்க துவங்கினான். அவளுக்குப் பிடித்தவற்றை தெரிந்துக்கொள்ள முயற்ச்சித்தான். அவள் அவனுக்காக சாத்துக்குடி ஜூஸ் பிழிந்துக் கொண்டிருந்தாள்.

 

“லட்சுமி” மென்மையாக அழைத்தான்.

 

“என்னங்க?”

 

“இப்படி வந்து உட்காறேன்” சோபாவைக் காட்டினான். அவளும்  அமர்ந்தாள்.

 

“உனக்கு பிடிச்ச டிபன் என்ன?”

 

“தோசை”

 

“சாப்பாடு?”

 

“சாம்பார் ரைஸ்”

 

“பூ”

 

“மல்லி”

 

“ஹீரோ”

 

“விஜய்”

 

“ஹீரோயின்”

 

“ஜோதிகா”

 

“டைரக்டர்”

 

“சங்கர்”

 

“பாடல்”

 

“இளையராஜா பாட்டு எல்லாமே பிடிக்கும். ஏன் கேட்கறிங்க?”

 

“சும்மாதான். உன் டேஸ்ட் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்க நினச்சேன்”

 

அவன் வேலைக்கு செல்ல ஆரம்பீத்துவிட்டான். தினமும் அவள் கூறும் ஒரே அட்வைஸ் “மெதுவா… மெதுவாங்க.. வண்டில போகும் பொது போனை ஆப் பண்ணி வைங்க…”

 

ஒரு நாள் அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வந்துவிட்டான். லட்சுமி என்னவோ ஏதோவென்று பதறிவிட்டாள்.

 

“என்னங்க ஆச்சு? உடம்பு ஏதும் சரியில்லையா?”

 

“அதெல்லாம் ஒன்னும் இல்லை.. நீ சீக்கிரமா கிளம்பு. ஒரு இடத்துக்குப் போகணும்”

 

“எங்க?”

 

“சொன்னாதான் கிளம்புவியா?”

 

“அதெல்லாம் இல்ல… இதோ  ஒரு நிமிச்ஷத்துல ரெடியாயிடறேன்” சொன்னபடியே தயாராகி வந்தாள். அவன் அவளை வண்டியில் ஏற்றிக் கொண்டு பறந்தான்.

 

“மெதுவாதான் போங்களேன்” அவள் கடிந்துக் கொண்டே அவனோடு நெருங்கி அமர்ந்தாள்.

 

பூக்கடை ஒன்றைக் கண்டான். அருகில் சென்று நிறுத்தி “மூணு முழம் மல்லி கொடுங்க” ரூபாய் நோட்டை எடுத்து நீட்டியபடி கேட்டான். பூவை வாங்கி அவளிடம் கொடுத்தான். அவள் ஒருவித சிலிர்ப்புடன் அதை வாங்கிக் கொண்டாள்.

 

அவனுடைய வண்டி ஒரு தியேட்டர் முன்பாக சென்று நின்றது.

 

“என்னங்க இங்க வந்திருக்கிங்க?”

 

“விஜய் படம் ரிலீஸ் ஆகியிருக்கு. உனக்கு பிடிக்கும்ல… அதான்” அவளுக்கு காற்றில் பறப்பது போல் இருந்தது.

 

படத்தின் நடுவில் எதுவும் பேசவில்லை. இடைவேளையில் கூட எதுவும் பேசவில்லை. படத்தின் முடிவு சுபமாக இருந்தது. அவர்களுடைய வாழ்க்கையிலும் இனி சுபம் தான் என்று அவளுக்குத் தோன்றியது.

 

படம் முடிந்து அனைவரும் வெளியே வந்தார்கள்.

 

“படம் எப்படி இருந்தது லட்சுமி?”

 

“வர்ணிக்க முடியலைங்க. அற்புதம்”

 

“நான் பார்த்த முதல் படம் இதுதான். மறக்கவே முடியாத படம். ரொம்ப அருமையா இருந்தது”

 

இருவரும் பேசிக் கொண்டே கிளம்பி வந்து ஒரு ஹோட்டலின் முன் வண்டியை நிறுத்தினார்கள்.

 

“என்ன சாப்பிட்ரிங்க?” பேரர் வந்து கேட்டான்.

 

அவளுக்கு பிடித்த உணவை இவன் ஆர்டர் செய்தான்.

 

அவளுக்கு அதிசயமாய் இருந்தது. ஆளே மாறிப் போயிட்டானே.

 

“எப்படிங்க எனக்கு பிடிச்சதெல்லாம்..” அவள் கூறி முடிக்கும் முன்… “புரியிலையா?” கண்களில் காதலுடன் கேட்டான்.

 

அவள் வாயடைத்துப் போனாள். இதற்க்கு முன் இவன் இப்படியெல்லாம் பார்க்க மாட்டானே! மனதிற்குள் ஒரே குறுகுறுப்பு. அவனை நிமிர்ந்துப் பார்க்க முடியாமல் தடுமாறியவள் மேலே பேச்சுக் கொடுக்காமல் உணவை உள்ளே தள்ளினாள். பிடித்த  உணவுதான்… ஆனால் இன்ப படபடப்பில் ஏனோ உள்ளே இறங்க மறுத்தது… அதனால் தான் தள்ள வேண்டிய நிலைக்கு அவள் தள்ளப்பட்டாள்.




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    ஒரு வழியாய் மோகன் மனம் தெளிந்துவிட்டது.

    நன்றி

You cannot copy content of this page