Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 54

அத்தியாயம் – 54

இன்னொரு முறை அந்த தவறு நடக்கக் கூடாது என்று உறுதியாக முடிவெடுத்தான் தேவ்ராஜ். அவளை காயப்படுத்திவிட்டு அவன் மட்டும் நிம்மதியாகவா இருக்கிறான். இருவருக்குமே வேதனைதான்… கட்டுப்படுத்தியாக வேண்டும்… இனி ஒருமுறை அவனுடைய கோபத்தை அவள் சந்திக்கக் கூடாது… முதல் நாள் மதுராவை கன்னத்தில் அறைந்துவிட்டதை நினைத்து வெகுவாய் வருந்திய தேவ்ராஜ், ‘ஆங்கர் மேனேஜ்மென்ட் கோர்ஸ்’ எடுத்துக்கொள்வது என்று முடிவு செய்து, அந்த துறையில் வல்லுனரான டாக்டர் மேதா சௌத்ரியிடம் உடனடியாக அப்பாயின்மெண்ட் வாங்கினான்.

 

வாரத்திற்கு நான்கு சிட்டிங்ஸ்… மொத்தம் பத்து மணிநேரம்… அவளுடைய கிளினிக்கிற்கு செல்ல இவனுக்கு விருப்பமில்லை. எனவே மேதாவிடம் தன்னுடைய வீட்டிற்கு வரும்படி கேட்டுக் கொண்டான். அவளும் சம்மதித்து தினமும் மாலை ஆறு மணிமுதல் ஏழு மணிவரை அவனுக்கு கவுன்சிலிங் கொடுக்க துவங்கினாள்.

 

“சொல்லுங்க தேவ்… எந்த விஷயத்துல உங்களுக்கு அதிகமா கோபம் வருது?”

 

‘என்னோட மனைவி விஷயத்துல’ என்று சொல்ல முடியாமல் “எல்லா விஷயத்துலேயும்…” என்று இழுத்தான்.

 

“ஓஹோ… பிசினஸ்ல ப்ராப்லம்ஸ் இருக்கா?”

 

“ம்ம்ம்… இல்லாம எப்படி?”

 

“எப்படி ஹாண்டில் பண்ணறீங்க?”

 

“தட்ஸ் நாட் எ பிக் டீல்… என்னோட ப்ராப்லம் பிசினஸ் இல்ல… அது என்னன்னா…” – உடைத்துப் பேச முடியாமல் திணறினான்.

 

“ம்ம்ம்… சொல்லுங்க…” – ஊக்கப்படுத்தினாள்

 

“என்னால யார்கூடையும் நட்பா பழக முடியல… ரிலேஷன்ஷிப் மெயின்டன் பண்ண முடியல… சின்ன விஷயம்னு தெரிஞ்சாலும் ஏத்துக்க முடியில… ரொம்ப டென்ஷன் ஆயிடறேன். கண்ட்ரோல் பண்ண முடியாம…” – படபடவென்று கொட்டியவன் சட்டென்று தயங்கி நின்றான்.

 

“கண்ட்ரோல் பண்ண முடியாம?” ஊக்கப்படுத்தினாள். அவன் பேசாத தயங்கினான்.

 

“பேசுங்க… யு நீட் டு டாக்…”

 

“ம்ம்ம்… கண்ட்ரோல் பண்ண முடியாம போயிடுது…” – சமாளித்தான்.

 

“ஓகே… ஆனா நீங்க ஒரு குடும்பத்துக்குள்ளதான் இருக்கீங்க இல்லையா?”

 

“ஆமாம்… ஆனா எல்லாரும் என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போறாங்க”

 

“சரி கோபம் வரும் போது என்னல்லாம் செய்யறீங்க?” – அவள் மெல்ல பேச்சுக்கு கொடுத்தாள். அவன் பதில் சொல்லவில்லை. அவள் காத்திருந்தாள். அவன் பேசவே இல்லை…

 

“பிரண்ட்ஸ் இருக்காங்களா?” – பேச்சின் திசையை மாற்றினாள்.

 

“நோ பர்சனல் பிரண்ட்ஸ்”
“சரி… இப்போ என்னை உங்க ஃபிரண்டா நெனச்சுக்கோங்க. கைய கொடுங்க…”- அவன் தயங்கினான்.

 

“ம்ம்ம்…. கொடுங்க… ஜஸ்ட் டு கம்ஃபோர்ட் யு…” என்று கூறியபடி அவனுடைய கையை தன்னுடைய கைகளுக்குள் கொண்டுவந்து மெல்ல வருடிக் கொடுத்தபடி கேட்டாள்.

“சொல்லுங்க… கோபம் வந்தா என்ன செய்வீங்க?”

 

சட்டென்று அவளுடைய பிடியிலிருந்து தன்னுடைய கரத்தை உருவிக் கொண்டவன், “நா ஒரு குழந்தையோ… மோசமான பேஷண்ட்டோ இல்ல… நீங்க என்னை இவ்வளவு கைண்டா ட்ரீட் பண்ணனும்னு அவசியம் இல்ல… என்ன கேட்கணுமா கேளுங்க… ஐ வில் ஆன்சர் யு… கோபத்தை கண்ட்ரோல் பண்ண உங்க அட்வைஸ் மட்டும் கொடுத்தா போதும்…” என்றான் சிடுசிடுப்புடன். அவளுடைய கனிவான முகத்தில் புன்னகை மாறவில்லை.

 

“நீங்க என்னை நம்பனும்… நா உங்க ஃபிரண்ட்… உங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்திருக்கேன்”

 

“ப்ளீஸ் டோண்ட் ஸே தட் அகைன்… நீங்க என்னோட ஃபிரண்ட் இல்ல… யு ஆர் மை டாக்டர்… ஐம் யுவர் பேஷண்ட் தட்ஸ் இட்…”

 

“ஓகே… நா ஒரு டாக்டர்… டாக்டர்கிட்ட உங்களால மனசுவிட்டு பேச முடியுமா?”

 

“ஏன் பேசணும்?”

 

“அப்போதான் என்னால உங்க பிரச்னையை புரிஞ்சுக்க முடியும்”

 

“சரி சொல்லுங்க… என்ன தெரியணும்?”

 

“கோவம் வரும் போது என்ன செய்வீங்க?”

 

“பர்ஸ்ட் அவுட் ஆயிடுவேன்…”

 

“சத்தம் போடுவீர்களா?”

 

“சில நேரங்கள்ல அதுக்கும் மேல….” – கீழே குனிந்துக் கொண்டான். அவன் முகத்தில் தெரிந்த வருத்தத்தையும் குற்றவுணர்வையும் அவளால் படிக்க முடிந்தது.

 

“ஓஹோ….”

 

“பட் ஐம் நாட் ரியலி ஹாப்பி அபௌட் இட்…”

 

“என்னால புரிஞ்சுக்க முடியுது”

 

“நா அவளை காயப்படுத்தணும்னு நெனைக்கிறது இல்ல… ஆனா… செஞ்சுடறேன்… அப்புறம் வருத்தப்படறேன்… எனக்கு இது வேண்டாம்… நா மாறனும்… நிச்சயமா மாறனும்…” – தன்னையறியாமல் மனதைக் கொட்டினான். அதை அவன் உணரவே இல்லை… மேதா அவன் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

 

“தனியா இருக்க மாதிரி இருக்கேன். யாரோடையும் நெருங்க முடியல… ஏதோ ஒரு தடை… என்னவோ ஒரு பீலிங்… அம்மா தங்கச்சிங்களோட கூட… நா ஒரு தனி தீவுல வாழ்ந்துட்டு இருக்கேன்… என்கூட யாருமே இல்ல… ஐம் அலோன்…” – சற்று நேரத்திற்கு முன் முரட்டுத்தனமாக பேசியவன் இப்போது உறக்கத்தில் உளறும் குழந்தை போல் மனதில் தோன்றுவதையெல்லாம் கொட்டினான். மேதா அவனுடைய கையை பிடித்துக் கொண்டாள். வருடிக் கொடுத்தாள். இப்போது அவன் மறுக்கவில்லை. முரண்டு பிடிக்கவில்லை…

 

“சொல்லுங்க… உங்களோட சின்ன வயசு நினைவுகளை பத்தி என்கிட்ட என்ன ஷேர் பண்ணனும்னு நினைக்கிறீங்க?” – அவள் எடுத்துக் கொடுத்ததும் அவன் பேச ஆரம்பித்தான். தன்னுடைய மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை மலர்ந்த முகத்தோடு பகிர்ந்து கொண்டவன் அதன் பிறகு வந்த சங்கடமான காலகட்டத்தைப் பற்றி எண்ணியதும் இறுகிப்போய்விட்டான். அவ்வளவு சுலபமாக அவனை பேச வைக்க முடியவில்லை.

 

தன்னுடைய ஒட்டுமொத்த திறமையையும் பயன்படுத்தி இரண்டு நாட்கள் போராடி அவனுடைய கடந்தகாலத்தை பற்றி பேச வைத்தாள் மேதா. தந்தையின் துரோகத்தையும், அதனால் அவன் பட்ட அவமானங்களையும் ஒவ்வொன்றாக விவரித்துக் கொண்டே வந்தவனின் கண்களில் பலமுறை கண்ணீர் திரண்டது. குரல் உடைந்தது… ஆண்டு கணக்காக உள்ளே அடக்கி வைத்திருந்த உணர்வுகளெல்லாம் மேலெழுந்து அவனை வதைத்தது. அந்த துன்பத்திலிருந்து விடுபடுவதற்கு சில அறிவுரைகளை வழங்கியதோடு அவனை அமைதிப்படுத்துவதற்கு ஒரு மாத்திரையையும் பரிந்துரைத்தாள் மேதா.

 

மறுநாளே அவனுடைய உணர்வுகள் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துவிட்டதோடு மனம் லேசானது போல் இருந்தது. இதுவரை அவன் இப்படி உணர்ந்ததே இல்லை… ஏதோ ஒரு பெரிய கல்லை விழுங்கிவிட்டு நடமாடுவது போன்றே வாழ்ந்துக் கொண்டிருந்தவன், அந்த கனத்திற்கும் மனப்புழுக்கத்திற்கும் பழகிப்போயிருந்தான். இப்போது இந்த விடுதலை உணர்வு அவனுக்கு பெரிய புத்துணர்ச்சியை அளித்தது. அன்று மாலை மேதாவை புன்னகையோடு எதிர்கொண்டு நன்றி தெரிவித்தவன், அன்றைய அவளுடைய கலந்துரை வழங்களுக்கு நன்கு ஒத்துழைப்புக் கொடுத்தான்.

 

ஒவ்வொரு காலகட்டத்திலும் அவனுடைய வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்கள்… பாதிப்புகள் அனைத்தையும் நினைவுகூர்ந்துக் கொண்டே வந்த தேவ்ராஜ் நிகழ்காலத்தை நெருங்கும் பொழுது மீண்டும் தடுமாறினான்… பேசாத தயங்கினான். வேறுவழியின்றி கைப்பிடி வைத்தியத்தை அவள் கையிலெடுத்தாள். இன்முகமாக பேசி அவனை வழிக்குக் கொண்டுவந்தாள். அப்போதும் அவன் சமாளித்தானே ஒழிய மனம்விட்டுப் பேசவில்லை. அவன் சொல்லவில்லையென்றாலும் மனோதத்துவம் படித்தவளுக்கு அவனுடைய மனதை படிக்க முடியாதா என்ன…! அவனுடைய வாழ்க்கை புத்தகத்தை துல்லியமாக படிக்கவில்லை என்றாலும் ஓரளவு கணித்துவிட்டாள் மேதா. அந்த நேரத்தில்தான் புயல்போல் குறுக்கிட்டு அவனை அடித்துச் சென்றுவிட்டாள் மதுரா.

 

அவளுடைய பொறாமையையும், இவனுடைய உரிமையான உருட்டலையும் பார்த்து, ‘ரொம்ப ஈஸியா முடியற கேஸ்…’ என்று எண்ணியபடி தன்னுடைய ட்ரேட்மார்க் புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பினாள் மேதா.

 




11 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Skanatharajah Sutha says:

    Nice ud


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kanimozhi Ramesh says:

    Cho sweet of dev madhu kaga treatmnt edukuran bt ipo poi ava ipadi panitale thirumba dev change agiduvana sis


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kayalvizhi Ravi says:

    மேதா கொடுத்த மருத்துவத்தால் இந் முறை தன் தவறை திருத்திக்கொள்கிறானா பார்க்காலம்.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Subha Mani says:

    Super devraj change akura tdy knjm low ah tha iruku Tom niraya update panunga


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    nice ud sis


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    தேவ்விற்கு தன் நிலமை புரிந்துதான் இருக்கின்றது,சரியான பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளார்,கொஞ்சம் மாற்றத்தை உணர்ந்த தேவ்விற்கு வீட்டில் திருப்பியும் பிரச்சனை வந்துள்ளது,பழையபடி சண்டை போட்டாச்சுது ,பார்ப்போம் திரும்பி வரும் தேவ் இதனை எப்படி கையாளப்போகின்றார் என்று திருப்பியும் மதுராவை காயப்படுத்துவாரா,அமைதியாக தனது தரப்பை எடுத்துரைப்பாரா என்று.

    நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Mary G says:

    Avlothana🙄 consider giving big ud mam


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pon Mariammal Chelladurai says:

    ஜாடிக்கேத்த மூடி…
    இரண்டும் ஒன்று தான்…லூசுங்க


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Uma Deepak says:

      Pons akka sariya sonnenga .. ha ha .


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    Ada da thirundara time la iva potu thakitale,,,, hmmmm


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    Dev good decision….ippa dhaan sariyana padhayila poran indha madhura ippa vandhu sodhapi vachirukale…..everything will be alright tomorrow nu nambuvom….. but treatment ku avan veliya pogavendiyadhe illai madhura kitta Manam vittu pesinaan endral ellam sariya pogum..,.parpom

You cannot copy content of this page