Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல் 55

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 55

அத்தியாயம் – 55

‘இப்பவே பொருக்கி புத்திய பாரு… அப்படியே அப்பன் குணம்..’ – ‘இவன் வளர்ந்து எத்தனை பொண்ணுங்களை சீரழிக்க போறானோ!’ – ‘அப்பாவுக்கு தப்பாத புள்ள…’ – ‘அப்பா மாதிரிதானே வருவான்…’ – ‘பரம்பரை புத்தி மாறுமா?’ – எத்தனையோ குரல்கள்… அந்த பிஞ்சு மனதை ரணமாக்கிய எத்தனையோ சந்தர்ப்பங்கள்… அழியா வடுவாய் அவன் நெஞ்சை உருத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ தருணங்கள்… அனைத்தையும் இன்று பின்னுக்குத் தள்ளிவிட்டது மதுராவின் வெறுப்பு நிறைந்த வார்த்தை. என்ன பாவம் செய்தான்! அவருக்கு பிள்ளையாய் பிறந்ததை தவிர வேறு என்ன குற்றத்தை இழைத்தான். ஏன் இந்த தண்டனை… வலிக்கும் மனதிற்கு மருந்தைத் தேடி ஓடினான். எங்கு கிடைக்கும்… இந்த வேதனை எப்படி தீரும்! மனதிற்குள் ஒரு பெரிய வலி… உடலெல்லாம் நடுங்கியது… ஸ்டியரிங் வீலை இறுக்கிப் பிடித்தான். கட்டுப்பாடு தளர்ந்தது… வண்டியை எங்கோ கொண்டுச் சென்று மோதப்போகிறோம் என்று தோன்றியது. முயன்று மனதை ஒருநிலைப்படுத்தி கவனத்தை சாலைக்கு கொண்டுவந்தான்.

‘நீங்களும் உங்க அப்பா மாதிரிதான்…’ – வெறுப்பு மண்டிய முகத்துடன் சாலையில் தோன்றினாள் மதுரா. சடன் பிரேக் அடித்து ‘க்ரீச்’ என்கிற சத்தத்துடன் வண்டியை நிறுத்தினான். பின்னால் வந்த கார்களெல்லாம் பெருத்த ஹாரன் ஒலியுடன் பிரேக் அடித்து நின்றன. பிறகு டிராக் மாறி இவனை ஓவர் டேக் செய்து திட்டிக் கொண்டே சென்றன. இவன் எதையும் உணரவில்லை. தன்னிலை மீறி ஸ்டியரிங் வீலில் தலையை சாய்த்துவிட்டான். ‘டொக்…டொக்…’ – சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். டிராபிக் போலீஸ் ஜன்னலை தட்டிக் கொண்டிருந்தார்.

“என்ன சார் பண்ணிக்கிட்டு இருக்கீங்க? வண்டியை எடுங்க… பின்னாடி டிராபிக் ஆகுது பாருங்க” – குரலை உயர்த்தினார். தேவ்ராஜ் எதுவுமே சொல்லவில்லை. வண்டியை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு ரஹீமிற்கு அலைபேசியில் அழைத்து, தான் இருக்கும் இடத்தைக் கூறி ட்ரைவரை அழைத்துக் கொண்டு உடனே வரும்படிக் கூறிவிட்டு, மீண்டும் ஸ்டியரிங் வீலில் தலையை சாய்த்துக் கொண்டான்.

அடுத்த அரைமணிநேரத்தில் ட்ரைவரோடு அங்கு வந்து சேர்ந்தான் ரஹீம். “ஏன் இவ்வளவு லேட்?” சோர்வுடன் கேட்டான்.

“நீங்க கால் பண்ணின உடனே கிளம்பிட்டோம் சார்…” – ரஹீம்.

“சரி வந்து வண்டியை எடு…” என்று டிரைவரிடம் கூறியபடி டிரைவிங் சீட்டிலிருந்து இறங்கினான்.

‘இப்படி பாதி வழியிலேயே வண்டியை நிறுத்திவிட்டு ட்ரைவரை வர சொல்கிற அளவிற்கு என்ன பிரச்சனையாக இருக்கும்!’ – “என்ன ஆச்சு சார்?” – ரஹீம் குறுக்கிட்டான்.

“நத்திங்…” – பின் சீட்டிற்கு சென்றான்.

“சார்… யு ஆர் நாட் ஆல்ரைட்… நாம மேதாவோட கிளினிக்கிற்கு ஒருதரம் போயிட்டு வருவோம்” – தேவ்ராஜின் நடுங்கும் விரல்களையும் சோர்வும் குழப்பமும் நிறைந்த முகத்தையும் கண்டு பயந்தான் ரஹீம்.

“தேவையில்லை…” – ஒரே வார்த்தையில் மறுத்துவிட்டு காரில் ஏறினான்.

“இல்ல சார்… ஐ திங்க் யு நீட் இட்…” – மனம் கேட்கவில்லை அவனுக்கு.

சட்டென்று ரஹீமின் பக்கம் திரும்பிய தேவ்ராஜ், “ஸ்டே ஆன் யுவர் லிமிட்” – என்றான் இறுகிய முகத்துடன். அவ்வளவு எளிதாக யாரும் அவனுடைய முடிவுகளில் குறுக்கிட்டுவிட முடியாது… மீறினால் இப்படித்தான் அவமானப்பட வேண்டியிருக்கும். அவமானப்பட்டாலும் பரவாயில்லை… அவன் இவ்வளவு கடினமான சூழ்நிலையில் இருக்கும் போது அவனுக்கு ஆலோசனை கூறியே ஆகவேண்டும் என்கிற பிடிவாதத்துடன், “சார் ப்ளீஸ்… ரொம்ப ஸ்ட்ரெஸ்டா தெரியிறீங்க…” என்றான்.

“என்னை எப்படி ரிலாக்ஸ் பண்ணிக்கறதுன்னு எனக்கு தெரியும். நீ மேதாவுக்கு கால் பண்ணி, இனி அந்த டிரீட்மெண்ட் எனக்கு வேண்டாம்னு சொல்லிடு” என்றான் முடிவாக.

“சார்!!!”

“டூ அஸ் ஐ ஸெட்…” – பேச்சை முடித்துவிட்டு காரில் ஏறியவன், “ஸ்டார் நைட் போ…” என்றான் டிரைவரிடம். அது ஒரு நைட் க்ளப்… மனதை திசைதிருப்ப தகுந்த இடம்.

மது மாது சூது என்று அனைத்தும் அரசின் அனுமதியோடு ஒன்றாக சங்கமிக்கும் இடம்தான் ஸ்டார் நைட். வெகு பொருத்தமான பெயர் கொண்ட அந்த கேளிக்கை கூடம் இரவெல்லாம் பாலிவுட் நட்சத்திரங்களால் ஜொலிப்பதென்னவோ உண்மைதான். அரைகுறை ஆடையுடன் வந்து அலைமோதும் அழகிகளை ஒதுக்கிவிட்டு, கார்னர் டேபிளில் சென்று அமர்ந்தான். வெயிட்டரை அழைத்து தேவையான பானத்தை ஆர்டர் செய்து நிதானமாக அருந்தினான்.

மனம் காற்றில் மிதக்கத்துவங்கியது. உள்ளே அழுத்திக் கொண்டிருந்த பாரத்திலிருந்து தற்காலிக விடுதலை கிடைத்தது. மீண்டும் மீண்டும் குடித்தான். இப்போது அழகிகளை ஒதுக்கத் தோன்றவில்லை. ‘ஏன் ஒதுக்க வேண்டும்? அவள்தான் நம்மை தவறானவன் என்று முடிவே செய்துவிட்டாளே! இனி ஒழுக்கமானவனாக இருந்தால் என்ன… இல்லையென்றால் என்ன…?’ – ஏளனமாக எண்ணினான். அதே நேரம் ஓர் அழகி அவனிடம் நெருங்கி இழைந்தாள். அவனுடைய முகம் மாறியது… கண்கள் தீவிரமானது… “வாட்ஸப் ஹனி?” – அவனுடைய பார்வையின் அர்த்தம் புரியாமல் குழைந்தாள்.

“இன்னொருத்தரம் உன் கை எம்மேல பட்டுச்சு… தொலைச்சுடுவேன்…” என்றான் புலிப்பார்வை பார்த்தபடி. திகைத்துப்போய் ஒரு நொடி விழித்தவள் சட்டென்று அவனிடமிருந்து விலகினாள். அந்த பார்வையும் குரலும் காட்! அடிவயிற்றிலிருந்து கிளம்பிய பயப்பந்து அவள் நெஞ்சை அடைத்தது. “போ இங்கிருந்து… திரும்பிக் கூட பார்க்காத…” – மீண்டும் ஒருமுறை எச்சரித்தான். அவள் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.

தவறு செய்ய வேண்டும் என்று நினைத்தாலும்… சனியனை செய்து தொலைக்க முடியவில்லை. அப்படி ஒழுக்கமாக இருந்து எதை கிழித்தோம் என்கிற எரிச்சலுடன் போதையை இன்னும் கொஞ்சம் ஏற்றிக் கொண்டான். மது கோப்பையும் கையுமாக முக்கால்வாசி இரவை அந்த கேளிக்கை விடுதியிலேயே கழித்துவிட்டு முழு போதையுடன் வெளியே வந்தான். ட்ரைவர் தயாராகக் காத்துக் கொண்டிருந்தான்.

“வீட்டுக்கா சார்…”

“நோ… நோ மேன்… வீட்டுக்கு போக முடியாது… அவ இருப்பா… நீ வேற எங்கேயாவது போ… அவ இருக்க இடத்துக்கு நா போக மாட்டேன்… போ…கவே மாட்டேன்…” – தடுமாற்றத்துடன் கார் கதவை திறந்து உள்ளே அமர்ந்தான்.

‘வேற எங்கேயாவதா!’ – விழித்தான் ட்ரைவர். வேறு எங்காவது என்றால் எங்கே செல்வது! பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவன், இப்போது இப்படி நிலைகொள்ளாமல் குடித்துவிட்டு உளறுகின்ற அளவிற்கு வந்துவிட்டானே என்று மனம் வருந்தி, “சார்… வேற எங்க போகணும்?” என்றான். தேவ்ராஜின் மிதக்கும் விழிகள் அவனை ஏறிட்டுப் பார்த்தன.

“தாஜ்…”

“ஹோட்டலா சார்?”

“ம்ம்ம்…”

“இங்கிருந்து தூரமாச்சே சார்…”

“ம்ம்ம்… ஓஹ்!!! ரைட்… கிங் டவர்ஸ் போ…” என்றான். அடுத்த பத்து நிமிடத்தில் ஹோட்டல் கிங் டவர்ஸில் ஓர் அறையில் மெத்தையில் கவிழ்த்துக் கிடந்தான். ரஹீமின் உத்தரவுப்படி, அவனுக்கு காவலாக விடியும்வரை ட்ரைவர் அங்கேயே இருந்தான்.

மறுநாள் அவன் கண்விழிக்கும் போது வெயில் உச்சிக்கு ஏறியிருந்தது. அலுவலகத்தில் அவனுடைய இன்றைய வேலை திட்டம் அனைத்தும் குளறுபடியாகிவிட்டது. “காட்…!” – மணியைப் பார்த்துவிட்டு பதறியவன், அதிவேகமாக போர்வையை விளக்கித் தள்ளிவிட்டு எழுந்தான். ‘எங்கே இருக்கிறோம்! எப்படி இங்கு வந்தோம்!’ – கண்களை மூடி யோசித்தான். நேற்று நடந்த அனைத்தும் தெளிவற்ற குறும்படம் போல் மனதில் ஓடியது. அலைபேசியை தேடினான். மேஜையில் இருந்தது. அருகிலேயே புதிய சூட் ஒன்றும் இருந்தது. அதை யோசனையுடன் பார்த்தபடியே டிரைவருக்கு அழைத்தான்.

“எங்க இருக்க?”

“கீழ பார்க்கிங்ல இருக்கேன் சார்…”

“சூட் நீதான் கொண்டுவந்து வச்சியா?”

“ரஹீம் சார் கொண்டுவந்தார் சார்…”

“அவன் எங்க இப்ப?”

“அங்கதான் சார்… ரூம்ல…”

“இங்கேயா!”

“ஆமாம் சார்…” – ட்ரைவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே படுக்கையறையை அடுத்துள்ள கெஸ்ட் ஹாலுக்குள் நுழைந்தான் தேவ்ராஜ். எதிர்பார்த்தபடியே ரஹீம் அங்கு இருந்தான்.

“குட் மார்னிங் சார்” என்றான் புத்துணர்ச்சியுடன்.

“எத்தனை மணிக்கு வந்த?”

“ஏழு மணிக்கு…”

“ஏழுமணிக்கா! அப்புறம் எதுக்குடா என்னை எழுப்பல?” என்று கோபத்துடன் பாய்ந்தான்.

“உங்களுக்கு ரெஸ்ட் தேவைன்னு நினச்சேன் சார்”

“அதை எப்படி நீ முடிவு பண்ணின? இன்னைக்கு இருந்த ஷெடியூல்டு மீட்டிங் எல்லாம் என்ன ஆச்சு?” – ரஹீம்கான் பதில் சொல்லவில்லை. “ஸ்பீட் அவுட் யு டாமிட்…” – கத்தினான்.

“கேன்சல்ட் சார்…” – மெல்ல கூறினான்.

“காட்… எள்ளளவு பெரிய முட்டாள்தனம் ரஹீம்… நாம பணத்தை இன்வர்ஸ்ட் பண்ணியிருக்கோம். கேர்லெஸா இருக்க முடியாது. மீட்டிங்ஸ் எல்லாம் கேன்சலே பண்ணீட்டியா… இல்ல ரீ ஷெடியூல் பண்ணியிருக்கியா?”

“ரெண்டு மீட்டிங் கேன்சல்ட்… ஒரு மீட்டிங் ரீ ஷெடியூல்ட்…”

“ஏன் அதையும் கேன்சல் பண்ணியிருக்க வேண்டியதுதானே? முட்டாள்… நீயெல்லாம் எதுக்குடா வேலைக்கு வர்ற? யூஸ்லெஸ்…” – திட்டிக் கொண்டே மீண்டும் படுக்கையறைக்குள் நுழைந்தவன் பத்து நிமிடத்தில் குளித்து முடித்து தயாராகி வெளியே வந்தான்.

“ட்ரைவர் நைட் வீட்டுக்கு போனானா இல்லையா?” – நடந்து கொண்டே கேட்டான்.

“நோ சார்…”

“ஏன் போகல…?”

“நீங்க கொஞ்சம்… கண்டிஷன் சரியில்லாம…” – சட்டென்று நின்று அவனை முறைத்தான். “ஆம் ஐ எ கிட்? என்ன புதுசா இந்த மாதிரியெல்லாம் பண்ணிட்டு இருக்க?” எரிச்சலுடன் கேட்டான்.

‘உங்க கோவத்தை கூட தாக்கலாம் சார்… ஆனா உங்க வைஃபோட நச்சரிப்பை தாங்க முடியல… தயவு செஞ்சு வீட்டுக்கு போங்க…’ என்று சொல்ல முடியாமல் மௌனம் காத்தான். அவனிடம் அதற்கு மேல் எதையும் கேட்க முடியாது… கேட்டாலும் பதில் வந்து தொலைக்காது என்கிற நினைவில் அலுவலகத்திற்கு விரைந்து செல்வதில் முனைப்பானான் தேவ்ராஜ்.

22 Comments

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sow Dharani says:

    சூப்பர் ஸ்டோரி வெரி இன்டெரெஸ்டிங்

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Subha Mani says:

    Hi mam plz quickly upload nxt ud am waiting eagerly

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Jaya Bharathi says:

    Super….

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rozani Banu says:

    Super story

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    jayashree swaminathan says:

    Thanks for a super update.You rock as usual

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    தேவ் செய்வது சரியில்லை,பெண்டாட்டி கூட கோபம் என்றால் வீட்டில் இருந்து கோபத்தை சந்திப்பது அதைவிட்டுவிட்டு அதென்ன வெளியில் தங்குவது,மதுரா இப்படி கோபித்துக்கொண்டு சொல்லாமல்கொள்ளாமல் வெளியில் தங்கினார் எப்படியிருக்கும் உங்களுக்கு ,அதே மாதிரிதான் மதுவுக்கும் இருக்கும் , எப்போ மதுராவை புரிந்துகொள்ளப்போகின்றார்.

    நன்றி

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kaviram Ram says:

    Super sis

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kayalvizhi Ravi says:

    மது வார்த்தைகள் கொடுத்த காயங்கள் ஆற தேவ் எடுக்கும் முயற்சி அந்தோ பாவம். Heis too good.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Veni Karna says:

    Super update I’m waiting for next updates

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    tamilarasi senthilkumar says:

    vry suprr mam tday only i read this story . suprr. dev angry person eppavume eppidie irupana.marave matana

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    vijaya muthukrishnan says:

    very very super update. eagerly waiting for your next ud

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    NICE UD SIS

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    admin says:

    ஹாய் ஃபிரண்ட்ஸ்…

    கதை எழுதி ரொம்ப நாள் ஆச்சு… பல முறை எழுத முயற்சி பண்ணி பாதியிலேயே விட்டுட்டேன்… இனி எழுத முடியுமான்னு கூட சந்தேகம் வந்துடுச்சு… நீங்க எழுதியே ஆகணும்னு இந்திராவும் சசியும் பிடிவாதம் செய்தாங்க. ரொம்ப சிக்கலான கதை கருவையெல்லாம் எடுக்காம ரொம்ப சிம்ப்ளிளான கதையா எடுத்து ட்ரை பண்ணுவோம்னு தான் இந்த கதையை எழுத ஆரம்பிச்சேன். ஆனாலும் ஆன்லைன்ல போட பயம்… நல்ல வந்திருக்கா இல்லையான்னு தெரியல… கதையை முடிப்போமான்னு தெரியல… ரொம்ப குழப்பமா இருந்தேன். பொன்ஸ் அக்கா ஒரு நாள் போன்ல நம்பிக்கை கொடுத்தாங்க.

    ஒரே ஒரு ரீடர் வந்து படிச்சா கூட அவங்களுக்காக கதையை தொடர்ந்து எழுதி முடிக்கணும் என்கிற எண்ணத்தை மனசுல உறுதியா பதிய வச்சுக்கிட்டு தான் எழுத ஆரம்பிச்சேன். ஆனா நான் எதிர்பார்த்ததைவிட நிறைய பேர் சப்போர்ட் கொடுத்திருக்கீங்க. உங்களோட கமெண்ட்ஸும் லைக்ஸும் ரொம்ப பெரிய நம்பிக்கையை கொடுக்குது… அதுத்தடுத்த அப்டேட்டை சீக்கிரம் கொடுக்கணும்னு தோணுது… என்னால முடிஞ்ச அளவுக்கு நேரத்தை இந்த கதைக்காக செலவழிக்கிறேன்…

    மனம்கனிந்த நன்றி…
    நித்யா கார்த்திகன்

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Mary G says:

      Supera poguthu mam.eve thaan post varum nu therinjalum mor lenthu refresh panitae irupen. 😘Ud matm knjm perusa thaangalen.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Sudhakar Sundarachari says:

      Hi Sis, This is Jayanthi and I just want to say you that not only this “Kanal vizhi Kaadhal”, Unakkul Naan is also going good and makes me to wait eagerly for next uds. Just now started “Irumbin Idhayam” and we need more stories from you Sissy.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Niveta Mohan says:

      Enna kka Ippidi sollitinga… Eppovum. U story spl thaan… Neenga neraiya ezhuthanum Naan irukken read panna.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Sujatha A says:

      Mam next episod? I’m
      waiting eagerly

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    Pavam rahim….mathalathuku rendu pakkamum Adi maadhiri ivan nilaimai….Madhura eppadi ma purushanum pondatiyum seiradhellam senjitu appuram kavalai padreenga…..mudiyala

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    Hahahaha… Dav kovathai kooda thangalam… Madhu nacharippai thanga mudiyatha… Hahaha … Madhu enna ma panna payapulla ippadi nadunguthu 😜😜

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Juleesakthi Julee says:

    Nice ud

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kanimozhi Ramesh says:

    Super sis dev evlo kovakarana irunthalum avanoda behaviour sema ladieskita avan manners superb he is so gentle sis like him

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pon Mariammal Chelladurai says:

    செய்றதையும் செய்துட்டு…போம்மா

You cannot copy content of this page