குற்றப்பரிகாரம் – 1
2886
3
அத்தியாயம் – 1
அந்த இளங்காலை… (ஸ்டாப் ஸ்டாப்) வர்ணிப்பெல்லாம் வேண்டாம். காலை ஆறு… அலாரம் எழுப்பிவிட்டது…. எழுந்தேன்…. அவ்வளவுதான்.
இப்பொழுது எழுந்தால் சரியாக இருக்கும். ஒரு வாரமாக பார்த்தாயிற்று.
சாலையின் ஓரமிருக்கும் குட்டிப் பிள்ளையாருக்கு, அவசர அவசரமாய் தன் வெண்டை விரல்களால், மோவாயில் தாளம் போட்டபடி உஷா கடந்து செல்லும் போது, மணி 7.03 தான் ஆகும். (வேணும்னா கூட கொறைய ஒரு நிமிஷம் வச்சுக்கலாம்). அட்ஷர சுத்தமாக எப்படித்தான் அப்படி கடக்கிறாளோ! அது அந்தப் பிள்ளையாருக்கே வெளிச்சம் இல்லைனா ஆச்சர்யம்! அட ஏதோ ஒண்ணு வச்சுக்கங்க!
இருங்கள்.,
உங்களுடன் பேசிக் கொண்டிருந்தால், என்ன ஆவது. மணி ஆகிறதே… நான் கிளம்ப வேண்டும்.,
அவளைப் பார்க்கனும்,…பார்த்து தைரியமாக….
தைரியமாக????
இருங்கள் என்ன அவசரம்! பார்த்துப் பார்த்து எழுதியிருந்த கடிதம், காற்றில் படபடத்து அவசரப் படுவதுபோல நீங்களும் பறக்கறீங்களே! பொறுமை! பொறுமை!
போர்வையை உதறித்தள்ளி உற்சாகமாய் எழுந்தேன். உற்சாகம்? பின்னே இருக்காதா! அப்பா! எத்தனை நாளாய் போட்ட ப்ளான். இன்று நடக்கப் போகிறதென்றால் உற்சாகம் வராதா!
இரண்டுநாள் தாடி (!) கலைந்த தலையுடனும், லுங்கியுடனும் இருந்தவன், அம்சமாய் மாற அரைமணி நேரம் ஆனது… வாவ்! எனக்கே என்னைப் பிடித்தது.
கடிதத்தை மறக்காமல் எடுத்துக் கொண்டேன்…
லவ் லெட்டர் கொடுக்க இத்தனை பில்டப்பா???
வெய்ட் வெய்ட் லவ் லெட்டர் என யார் சொன்னது…. நீங்களே முடிவு செய்து விடுவதா?
உஷாவை கடத்தப் போறேம்பா… கடத்தப் போறேன்!
வ்..வ்வாட் கடத்தப் போறியா? உலுலுவாட்டிக்குத்தான சொல்ற! கடத்தப் போவதற்கு இத்தனை அலங்காரமா?
ஆமா! ஏன் கடத்தனும்னா அட்டு பீஸாத்தான் போகனுமா! டிப்டாப்பா போகக்கூடாதா? என்னை என்ன சினிமால வர்ற வில்லன்னு நினச்சீங்களா? இப்பல்லாம் வில்லனுங்க சூப்பரா இருந்து, ஹீரோ ரௌடி மாதிரி இருந்தாதான் படம் ஓடுமாம்! தெரியுமா?
அதைவிடுங்க, எனக்கு எல்லாமே பெர்ஃபெக்ஷனாய் இருக்கனும். கட்டில்லப் பாருங்க, இத்தனை அவசரத்திலும் படுக்கயை எவ்வளவு அழகாய் மடிச்சு வச்சுருக்கேன்னு., கொடிலப் பாருங்க, லுங்கிய மடிச்சு எவ்வளவு நீட்டா தொங்கவிட்ருக்கேன்னு! அட இவ்வளவு ஏங்க, கொலையே செஞ்சா கூட, அதுல ஒரு அழகு இருக்கனும் எனக்கு.
கொலையா? அப்புறம் அந்த லெட்டர்???
நீங்க ரொம்ப அவசரப்படறீங்க! இந்த அவசரம் எனக்கு ஒத்துவராது. அவசரத்தில் அள்ளித் தெளிப்பதென்பது என் ஜாதகத்திலேயே இல்லை! அதுவும் இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம், அவசரம்தான் முதல் எதிரி!
சரி… அவசரப்படலை! நிதானமா கேக்றோம் சொல்லு! எதுக்கு இந்த கடத்தல் வேலை! சீயான் விக்ரம் மாதிரி!
அடடா! ரொம்ப கற்பனைப் பன்றீங்களே! இப்போ என்ன? உங்களுக்கு காரணம் தெரியனும் அவ்வளவுதானே! வெல்!
உங்களுக்கு கோவிந்தாச்சாரி தெரியுமா? கொஞ்சமே கொஞ்சம் லீடிங் லாயர். அவருடைய மேல்மாடி, அதாங்க தலைல இருக்குற மூளை நல்லா வேலை செய்யும். ஆனா மனுஷனுக்கு அதிர்ஷ்டம் கொஞ்சம் கம்மி! கொஞ்சம் பயத்த சுபாவம் வேற. இருந்தாலும் சிட்டில சின்னதா ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கி, அதுல ஆபீஸ். ஹார்ட் ஆப் தி சிட்டில ஒரு மினி பங்களா!
எனக்கு அவர்கிட்ட சில தகவல்கள் வேணும்…கரெக்ட் அந்த தகவல்கள் லிஸ்ட்தான் லெட்டர்ல இருக்கு.
நான் நேர போய் ‘ச்சாரி சார் ச்சாரி சார்’ எனக்கு இந்திந்த தகவல்கள்லாம் வேணும்னு கேட்டாத் தருவாரா.. காதை கொடுங்களேன்… போலீசுக்கு போனைப் போடுவார்…இல்ல நீங்க நைச்சியமா பேசி வாங்கித்தர முடிஞ்சா சொல்லுங்க… உஷா மேட்டரை இந்த செகண்டே ட்ராப் பண்ணிடறேன்… என்ன! முடியாதில்ல…அதனால்தான் உஷா!
பொண்ணு வர்றதுக்கு அஞ்சு நிமிஷம் லேட்டானாலே அவருக்கு அரை உசுரு போய்டும். அரைமணி நேரம் அலறவிட்டா ஹைக் கோர்ட்டையே கொடுத்துருவார்!அதான் எனக்கு வேணும்.
பாத்தீங்களா…பேசிட்டே இருந்தா டைம் ஆகாதா… நான் கிளம்பறேன்! எங்கூடவே வரதுனா வரலாம்… எனக்கு ஒரு ஆட்சேபனையும் கிடையாது? ஆனா ஒன்னு… நான் உடான்ஸ் விடறேன்னு மட்டும் நெனச்சுடாதீங்க.என்ன… வரலையா! பயம்மாருக்கா! … சரி அப்டியே ஓரமா உக்காந்து நடக்கப் போறத வேடிக்கைப் பாருங்க… வரட்டா!!!
3 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
Very nice start sir…..perfectionist Kadathalkarana nice….ha ha
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Archana sasikumar says:
Nice start 👏
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Nice